Friday, July 9, 2010

உடையும் பிம்பங்கள்...

ஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே. அந்த பிம்பத்திற்கு நாம் ஒரு உருவம் கூட உருவாக்கி வைத்திருப்போம். அந்த பிம்பத்திற்கான இயல்புகள் மற்றும் பண்புகள் நம்மாலேயே கற்பனையில் கலந்து பிசையப்பட்டு அந்த கற்பனை உருவத்தோடு பொருத்தி வைத்திருப்போம்.

இது அனைவருக்கும் இயல்பானதே. சில சமயங்களில் நாம் கேட்கும் கதைகளுக்கும், சம்பவங்களுக்கும் கூட, சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.

சில சமயங்களில் நாம் உருவாக்கிய பிம்பத்திற்கும், நிஜத்திற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை நாம் நேரில் சந்திக்கும்போது ஏற்படும் ஆனந்தம் அளவிட முடியாதது. சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு வெளிப்படையாகச் சொல்லக்கேட்டிருப்போம். இன்னும் சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். இத்தகைய நற்செயல்கள் நாம் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்திற்கு வலு சேர்க்கும்.
 
சில சமயங்களில் இந்த கற்பனை பிம்பம் போல, நிஜத்தின் செயல்பாடுகளும், உருவமும் இல்லாமல் பொய்த்துவிடுகிறது. இந்த பிம்பம் உடைபடுதல் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனால் பலருக்கு அதிர்ச்சியானதாகும். இந்த பிம்பம் உடைதலின் வெளிப்பாடுதான் "ச்சே இவரை என்னமோன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்புடி இருக்காரே!?", "இவரு நான் நினைச்ச மாதிரி இல்லை", "இப்பத்தான் தெரியுது இவரோட உண்மையான முகம்" என்ற புலம்பல்களும், அலுத்துக்கொள்ளுதலும்.


இந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும். சகித்துக்கொள்ளுதல் எனும் பண்பு நம்மிடம் இல்லாத போதுதான் உறவுகளில் சிக்கலும், மன இறுக்கமும் அதிகமாகிறது. நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது. எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கும் அசாத்திய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?

இந்த பிம்பங்கள் உருவாவது எப்படி இயற்கையோ, அதுபோலத் தான் உடைதலும்! எல்லா மனிதனும், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நல்லவனாகவோ, ஒரே மாதிரியாகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும். நல்லது/கெட்டது - சரி/தவறு என்பவை ஒவ்வொருவருக்குள்ளும் அந்தந்த சூழ்நிலைகள் உருவாக்கும் கோட்பாடுகளே. வழக்கம்போல பெரும்பான்மையே வெற்றிகரமானதாக / வெற்றிபெற்றதாகக் கருதப்படும். அதுதான் சரியா? அதுவும் சரியா? அதுவே சரியா? என்பவை கேள்விக்குறிகளாகவே தொங்கிக்கொண்டிருக்கும்.

இந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை. பல்வேறு பாத்திரங்களுக்குள் பொறுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்போல அவன் இல்லை / நான் விரும்பியது போல அவன் இல்லை என்பது தான் நமது முரண்பாடுகளின் முச்சந்தி. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை", "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!

பொறுப்பு துறப்பி: இவ்வளவு சீரியசாக இருக்கும் இந்த பதிவை படித்து என்மீதான பிம்பம் உங்களில் உடைபட்டால் திசைகாட்டி பொறுப்பல்ல.


(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க) - (பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)




54 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருப்பா உம்மை அடிச்சது?...

எல்லா பயபுள்ளைகளும் ஒரு மாதிரிதான் சுத்திக்கிட்டு இருக்காங்க...


ஆமா..இந்த பிம்பம்..பிம்பமுனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே.. அப்படீனா என்னாய்யா?...

( செம்மொழி மாநாடு நடத்தினாலும்..நடத்தினாங்க.. இலக்கியவாதிக தொல்லை தாங்க முடியுலப்பா..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பொறுப்பு துறப்பி:
//

அப்பிடீடீடீடீடீடீடீடீடீடீனா?..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்)
//

அப்ப பிரபல பதிவர்னு ஆயிட்டேனு சொல்லு....

அய்யா.. சிங்கை பதிவர்களே....இதுக்கு ஏதாவது போஸ்ட் கொடுத்து , திசைகாட்டியை திருப்பிவைக்கமுடியமா ?

உதவினால், தனயனாவேன்...

:-)

ஜெய்லானி said...

பட்டா நீ போட்ட அடியில இன்னும் வெளியூரின் பதிவை எதிர் பார்கிறேன்..ஹ..ஹா

பிரபாகர் said...

உற்சாகம் தருவதாய் இருக்கிறது தம்பி... படித்த விஷயம் தான் என்றாலும் பச்சென மனதில் பற்றிக்கொண்டுவிட்டது. இதுபோல் இன்னும் நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்...

ஜெய்லானி said...

//(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு..//

தல அதை நாங்க சொல்லனும்..நீங்களே சொல்லிக்க கூடாது .

ILLUMINATI said...

//பிசையப்பட்டு//

பயபுள்ள வீட்ல ஏதோ பிரச்சனை போல இருக்கு.அதான் பொலம்பிகினே இருக்கு...

யோவ்,என்னையா ரொம்ப நாள் எதிர்பார்த்து காத்து இருந்த கொழுந்தியா மொக்கையா போயடுச்சோ? ;)

//குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை//

//நாம் உருவாக்கிக்கொண்ட பிம்பங்களின் மீதான அதிகமான பற்றுதலே இச்சிக்கல்களை அறியாமலே வளர்த்துவருகிறது.//

//சூழ்நிலைகள் தாமாகவே நமக்கு முகமாற்றம் செய்துவிடும்./

ஹீ ஹீ,confirmed.... ;)

//திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின்//

ஓஹோ,மேட்டர் அப்டி போயிருச்சா? ;)

//பொறுப்பு துறப்பி//

அது என்னய்யா அது பருப்பு நொறுக்கி?

//பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி...//

மச்சி,அந்த அலும்ப செய்யுறது நானு..ஹீ ஹீ ஹீ...
பயபுள்ளைக்கு இன்னும் தெளியல போல..

// மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன் //

வசதியா போச்சு மச்சி...
மாசம் மாசம் வித விதமா கலாய்க்கலாம்... :)
ஐ,ஜாலி,ஜாலி....

Rettaival's Blog said...

என்ன ரோஸு...வெளியூரையும் பட்டாபட்டியையும் நேர்ல பார்த்துட்டியா?

ILLUMINATI said...

ஆங்!புரிஞ்சு போச்சு.இது வெளியூர்காரனுக்கு உன் அனுபவத்த வச்சு நீ கொடுக்குற எச்சரிக்கை. :)

Prathap Kumar S. said...

ஆமா போன மாசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்க-?

ஏதோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் பிரியுது ஆனா என்னன்னுதான் புரியல தலைவா....

நாடோடி said...

ஓண்ணும் புரிய‌ல‌.... எல்லோருக்கும் புரியிர‌ மாதிரி ஒரு ப‌திவை சீக்கிர‌ம் போடுங்க‌..

Thenammai Lakshmanan said...

"குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" இவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இவற்றை கடைபிடித்தாலே நாம் இன்பமாக வாழலாமே!//

நல்லா இருக்கு ரோஸ்விக்

தருமி said...

//"அப்புடியே நான் நெனைச்சது மாதிரி // நீங்க (மோசமா)இருக்கீங்கன்னு இதுக்குத்தான் என்னைப் பார்த்ததும் சொன்னீங்களா ??? :(

vasu balaji said...

இமேஜை வளர்த்துகிட்டு திட்டுறவங்களும் உண்டு. வளர்த்துவிட்டு கவுக்கறவங்களும் உண்டு. என்ன செய்ய:(

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு ரோஸ்விக்.

கருப்பு பூனை said...

இந்த பதிவுக்கு என்னிடமிருந்து மூன்று பதில் உள்ளது..

* என் சங்கத்து ஆள அடிச்சவ எவன்?

* பாஸ் அதுக்குதான் அலைபேசில கடல பொட்டுட்டு நேர்ல போய் பாக்குர பிகர் அப்படி தான் இருக்கும்...

* எப்பவும் ஒருத்தர பத்தி நம்மளுடைய எதிர்பார்ப்புகள் அதிகமான , அதனால ஏற்படுகிற ஏமாற்றங்களும் அதிகமாக இருக்கும்..


நல்ல பதிவு உஙகள் இதயத்திலிருந்து...வாழ்த்துக்கள்..

அன்புடன் நான் said...

இயல்பு மீறிய நடத்தைகள் தான் ... பிம்பங்கள் உடைவதற்கான...காரணம்.

எதிலும் இயல்புமீறாதிருந்தால்.... எல்லாம் சரியாகவே இருக்கும்.

ஆமா, நீங்க நல்லதுதானே எழுதியிருக்கிங்க .... ஏன் ஆளாளுக்கு கிண்டல் பண்ணுறாங்க.... பொறாமை!

ஈரோடு கதிர் said...

ரோஸ்விக்

நல்ல இடுகை

|| வானம்பாடிகள் said...

இமேஜை வளர்த்துகிட்டு திட்டுறவங்களும் உண்டு. வளர்த்துவிட்டு கவுக்கறவங்களும் உண்டு. என்ன செய்ய:(||

என்னா கெட்ட பழக்கம் இது..

கம்பெனி சீக்ரட்ட சொல்லிக்கிட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி இதை காப்பி பண்ணி கமெண்டு போட்டேன்னு வையி... மவனே இந்த பதிவை மாச மாசம் மீள்பதிவு போட்டுருவேன்//

ரோஸ்விக் தல எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. இந்த பட்டாபட்டிய போட்டு தள்ளுங்க. பாருங்க பயபுள்ள ஏதாவது MRT பக்கத்துல இல்லைனா கலாங் ஏரியாலதான் சுத்திகிட்டு திரியும்.....

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. -
செம்மொழி மாநாட்டுல எனக்கு இலவசப்பொருள் எதுவும் கிடைக்கல பட்டா... அதான் நான் போட்டு தாக்கிட்டேன்.


//ஆமா..இந்த பிம்பம்..பிம்பமுனு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே.. அப்படீனா என்னாய்யா?...
//

பிம்பம் என்பது "ரம்பம்" மாதிரி ஒரு பொருள் "கம்பம்" மாதிரி ஒரு ஊர் பின்னணியோடு கற்பனையில் வருவது....

ரோஸ்விக் said...

பொறுப்பு துறப்பி - Disclaimer (டிஸ்கி)

ரோஸ்விக் said...

பிரபாகர் - நன்றி அண்ணா!

ரோஸ்விக் said...

ஜெய்லானி - யாரும் நம்மள சம்மட்டியால அடிச்சிரக்கூடாதுன்னு தான் உஷாரா நானே சொல்லிட்டேன் தல. :-)

ரோஸ்விக் said...

ILLUMINATI - இவனை யாருயா உள்ள விட்டது... ? தக்காளி நீ மட்டும் என் கையில சிக்குனேன்னு வையி... மவனே சூப்பு தாண்டியோவ். :-)

ரோஸ்விக் said...

Rettaival's - அவனுகள நேர்ல பார்த்தா இப்படி அறிவுப்பூர்வமா எப்புடியா எழுத முடியும்....? கனவுல பார்த்ததுக்கே இந்த மாதிரி பதிவு வருது... என்ன பண்ணுறது...? :-))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரோஸ்விக் said...

பொறுப்பு துறப்பி - Disclaimer (டிஸ்கி)

//

எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை டிஸ்கி..

அத விட்டுட்டு..என்னமோ பொறுக்கி துறக்கினி அசிங்கமா பேசிக்கிட்டு..

ஏம்பா.. இவ்வளவு மெய்ணூட்டமா(?) வார்த்தைய அள்ளி வீசியிருக்கையே..உம்மை செம்மொழி மாநாட்டுக்கு கூப்பிடலே?..

அப்புறம் எப்படி கட்சி ...சாரிப்பா...மாநாடு உருப்படும்?

ரோஸ்விக் said...

நாஞ்சில் பிரதாப் - வெரி குட் பிரதாப். நீங்க ரொம்பத் தெளிவா இருக்கீங்கன்னு அர்த்தம். :-)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Rettaival's said...

என்ன ரோஸு...வெளியூரையும் பட்டாபட்டியையும் நேர்ல பார்த்துட்டியா?
//


எவ்வளவு நக்கலா சொல்லியிருக்கான் இந்த ரெட்டை...


சே..இந்த பேச்ச கேக்குறதுக்கு, பேசாம குஸ்பு கையில விஷம் வாங்கி குடிச்சிருக்க்லாம்..... ஆங்....

ரோஸ்விக் said...

ILLUMINATI said...
ஆங்!புரிஞ்சு போச்சு.இது வெளியூர்காரனுக்கு உன் அனுபவத்த வச்சு நீ கொடுக்குற எச்சரிக்கை. :)
- அவன் வீட்டு அட்ரஸ் இருந்தா குடு இலுமு... வெளியூர்க்காரன் பதிவு போடுற வரைக்கும் இந்த பதிவை கடிதமா எழுதி முதல்வரை விட்டு அனுப்ப சொல்லுவோம். (இந்த காலத்துல அவரு ஒருத்தர் தானடே கடிதம் எழுதுறாரு...)

ரோஸ்விக் said...

நாடோடி - வந்திடுவோம் தலை... :-)

ரோஸ்விக் said...

thenammailakshmanan - அப்பாடா இந்த வரிகளையாவது புரியிற மாதிரி எழுதி இருக்கனே...:-)))
நன்றி அக்கா...

ரோஸ்விக் said...

தருமி - அனுபவம் உள்ள ஆளுங்களும் நம்ம பதிவை படிக்கிறாங்கங்கிரத்தை மறந்துட்டு சொல்லிபுட்டேன். நீங்க கபக்குன்னு புடிச்சிட்டீங்க... :-))
எப்புடி இருக்கீங்க ஐயா....?

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நீங்க தலையில கைவச்சுகிட்டு உக்காந்திருக்கிற ஸ்டையிலப் பார்த்தா ரொம்பப் பேரு கவுத்திருப்பாய்ங்க போலத் தெரியுதே அண்ணே! :-)))

திட்டுரவங்கள லூஸ்ல விடுங்க... நம்ம ஒன்னும் பண்ண முடியாது... :-)

ரோஸ்விக் said...

சே.குமார் - நன்றி குமார் அண்ணே! :-)

ரோஸ்விக் said...

கருப்பு பூனை -
* அப்ப சங்கம் ஆரம்பிச்சிட்டோமா?? :-)))

* கடலை போடுற கொடுப்பினை இல்லாமப் போச்சுண்ணே... வைத்தெரிச்ச்சலை கெளப்பாதீங்க... :-)

* மிகச் சரி...

நன்றி தலைவரே!

ரோஸ்விக் said...

சி. கருணாகரசு - வார இறுதில நம்ம பசங்களுக்கு சரக்கடிக்காம தலை சுத்தட்டும்னு இப்படி எழுதினா... அவனுக சரியாப் புரிஞ்சுக்கலை... :-)

எழுத்து நடை எளிதாகப் படிக்க முடியாத படி இடறலாய் இருப்பதை தெரிந்தும் இதைப் பதிவிட்டேன்... அதுனால அப்படித் தான் தலைவரே இருக்கும்.

ரோஸ்விக் said...

ஈரோடு கதிர் - நன்றி கதிர்.
ஓ கம்பெனி சீக்ரட்ல இதுவும் இருக்கா?? :-))

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - கவலையே படாதீங்க ரமேஷ்... இது மாதிரி நாலு பதிவு தொடர்ந்து போட்டாப் போதும் நம்ம பட்டாபட்டி, உங்க போட்டாவுக்குப் பின்னாடி இருக்கிற அந்த நட்சத்திர விடுதில இருந்து குதிச்சு அவுட் ஆயிடும்...

எதோ நீங்களாப் பாத்து எனக்கு பணத்தை செட்டில் பண்ணிடுங்க... :-)

Jey said...

பெரிய கும்மியே ஓடிருக்கு.

முத்து said...

(ரொம்ப நாள் கழிச்சு வந்து எழுதும்போது இவ்வளவு சீரியஸா எழுதுறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு... பொறுத்துக்கங்க////////////


அவனா நீயி!!!!

முத்து said...

பொறுப்பு துறப்பி:



அம்மாடியோவ்!! நான் வரலை இந்த ஆட்டைக்கு

முத்து said...

பொறுப்பு துறப்பி:



அம்மாடியோவ்!! நான் வரலை இந்த ஆட்டைக்கு

முத்து said...

இந்த பிம்பங்களை எப்போதும் திடமான நிலையில் உருவாக்கி விடாதீர்கள். திரவநிலையிலோ, அரை திரவநிலையிலோ இருப்பின் உடைதல் சாத்தியமில்லை.////////////


அதாவது நியூ வாட்டர் மாதிரி கரெக்டா ரோஸ்

முத்து said...

இந்த பிம்பங்கள் உருவாதலும், உடைதலும் எல்லா வகையான உறவுகளுக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய தருணங்களில் தான் சகிப்புத்தன்மை நம்மை காக்கும்./////////////////////

சகிப்பு தன்மையை வளக்குறதுக்கு நம்ம நித்தி மாதிரி நெருப்பு குண்ட யாகம் எதாவது செய்யனும்மா

முத்து said...

சிலர் வாய்விட்டு "அப்புடியே நான் நெனைச்சது மாதிரி இருக்கீங்க"-ன்னு////////////////////


என்னை பார்க்கிறவர்கள் அனைவரும் இதே தான் சொல்லுகிறார்கள்

எப்படி டா டோமர் நான் நினைச்ச மாதிரியே இருக்கன்னு கேட்க்குறாங்க

முத்து said...

சில சமயங்களில் அவர்களது சொற்களும் செயல்களும் நாம் எதிர்பார்த்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கும். //////////////////


இது என்னவோ உண்மை தான்

ஒரு புல் உள்ளே விட்டேன் வையி
பொறுப்பு துறப்பி:
என்னா பிஸ்கோத்து சும்மா ரவுண்டு கட்டி முச்சந்து பொறுக்கி
பத்தி கூட என் கிட்ட காலி

முத்து said...

ஒருவரை நேரில் பார்க்காமல் நாம் பழகும்போதோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்ப்படும்போதோ அவரைப்பற்றிய பிம்பம் நம் மனதில் உருவாவது இயற்கையே.///////////


சமிபமாய் காதல் கோட்டை படம் பார்த்தியா ஒரே பீலிங்

முத்து said...

சுற்றுப்புறத்தை நமது மனதே கற்பனை செய்து ஒரு திரைப்படம்போல மனத்திரையில் ஓட்டிக்கொண்டிருக்கும். இந்த சுவாரஸ்யம் இல்லையெனில் நமது ரசனையும், கற்பனையும் வறண்டுவிடும்.//////////////


அதான் வறண்டு போயி கிடக்கே சுறா படம் பார்த்துமா தெரியல

முத்து said...

49

முத்து said...

50

முத்து said...

1,2,3, மைக் டெஸ்டிங்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

மலேசியவில் இருந்து வாழ்த்துகள். நன்றாக எழுதுகிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள்.

ரோஸ்விக் said...

நன்றி ஜெய். :-)

நன்றி முத்து... :-) பின்னி பெடெலெடுத்துட்டியே ராசா :-))

ரோஸ்விக் said...

மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர் KSM :-)