Wednesday, July 14, 2010

நாம் ஏங்கும் புதுவுலகம்...!!!

அண்ணே! நாம இந்த உலகத்துல நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா? இல்ல நம்மளைப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோமா?-னு சரியாப் புரியலைண்ணே.

ஆனா ஒன்னுண்ணே... எப்போதும் நம்ம ஏதாவது ஒன்னுக்கு ஏங்கிக்கிட்டே இருப்போம். நம்ம அறிவு மூலமாகவும், அறிவியல் மூலமாகவும் நாம கண்டுபிடிச்ச பல கண்டுபிடிபுகளால நமக்கு கண்ணு போனதும், மூலம் வந்ததும் உண்மைதான்.

இப்ப உள்ள வாழ்க்கை முறையால, நானும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்-னு நம்ம எல்லாரும் மனசால பல மைல் தூரம் ஓடிக்கிட்டும்... மணிக்கணக்கா உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டும் போராடிக்கிட்டே இருக்கோம். இதுல அப்பப்ப வாழ்க்கை போரடிக்குதுன்னு ஒரு புலம்பல் வேற.

நம்ம வாழ்க்கையை சுத்தியும், வாழுமிடத்தை சுத்தியும் நம்மளே பல குப்பைகளை குமிச்சு வச்சுகிட்டு மனசுக்குள்ளே குமைஞ்சுகிட்டு இருக்கோம். ஆத்தா அப்பன்கிட்ட பேசுறதுக்குக்கூட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிற நிலைமையிலதான் நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

வாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம். நாம பயன்படுத்துகிற பொருட்கள்-ல பிரச்சனையினாலும், நாம் நிறுவனங்களிடமிருந்து பெரும் சேவைகள்-ல சந்தேகம்னாலும் தொடர்புக்கு நிறைய வாடிக்கையாளர் சேவைகள் அதுவும் இலவச தொடர்பு எண்ணில்...  நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு (அதற்கு மேற்பட்ட) தொடர்பு எண்கள் இருந்தும் தொடர்புகொள்ள நேரமில்லாமல் இருப்பது வெட்கக்கேடானது தான்.

நிறைய இருக்குன்னு சொல்றதுக்கு... நேரமில்லை... (இத்தோடவா விடப்போறேன்... அப்பப்ப சாவடிப்பேன்). நீங்க மறந்துடாம, சோம்பேறியா இருந்துடாம, இந்தப் படத்தைப் (ஒன்பது பாகத்தையும்)பாருங்க... முக்கியமா கீழ வரும் Sub Title - ஐப் படிங்க.

இந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது!

பிரபலப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்தப் படத்தை தங்கள் தளத்திலும் அறிமுகப்படுத்துங்க. நிறைய நண்பர்கள் கண்டு களி(ழி)க்கட்டும். :-)


http://www.youtube.com/watch?v=C5CmMm_SRpM

http://www.youtube.com/watch?v=wbfKRx1glD4&feature=related

http://www.youtube.com/watch?v=dsh4IXjTeQU&feature=related

http://www.youtube.com/watch?v=9HEkEavkZJY&feature=related

http://www.youtube.com/watch?v=FMqOmb96SA0&feature=related

http://www.youtube.com/watch?v=x7YvR8rjV3k&feature=related

http://www.youtube.com/watch?v=EBvesLTYNDY&feature=related

http://www.youtube.com/watch?v=9dK3wVFMnS8&feature=related

http://www.youtube.com/watch?v=S28DaG-IJq8&feature=related

நன்றி இப்படத்தை இணையம் மூலம் பகிர்ந்த நண்பருக்கு!23 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒண்ணுமே புரியல தல. இருங்க பட்டா கிட்ட கோனார் நோட்ஸ் வாங்கிட்டு வரேன்..

Unknown said...

வூட்டுக்குப் போனதும் பாக்கிறேன் தல

vasu balaji said...

பார்க்கிறேன். பகிர்தலுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

பார்க்கிறேன். பகிர்தலுக்கு நன்றி.

தேவன் மாயம் said...

ரோஸ்விக்!!!பார்க்கிறேன்!!

தேவன் மாயம் said...

வாழ்க்கையில முன்னேறனும், முன்னேறனும்னு பல வழிகளையும், வலிகளையும் கண்டுபிடிச்சுட்டு... நம்ம வாழ்க்கைய தொலைச்சுப்புட்டோம்///

உண்மை ரோஸ்!

கிரி said...

நித்தியானந்தர் கூட!! டிஸ்கசன்ல இருந்தீங்களா! வரவர ஒரே தத்துவமா வந்துட்டு இருக்கு! :-))

நாடோடி said...

பார்க்கிறேன்.... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரோஸ்விக் தம்ம்ம்ம்ம்பிபிபிபிபி...

வர வர பிரபல பதிவர்மாறி எழுதா ஆரம்பிச்சுட்டீங்க...


ஆமா.. இந்த படத்தில..”இயற்கைய எப்படி சீரழிச்சிட்டோம்” என்பதை அழகா சொல்லியிருக்காங்க..


இப்ப மேட்டர்..
இந்த படத்தில... காய் , கனி என இயற்கையா சாப்பிடும் வேற்றுலகவாசிக்ள், பூமிக்கு வந்து ..நிலமைய பார்த்து ...தலை தலையா அடிச்சுக்கிட்ட விதத்தை அருமையா சொல்லியிருக்காங்க....


இதே காண்டி நான், இந்த படத்தை எடுத்திருந்தா, அவர்களையும் இயற்க்கையா(?) நடிக்க வெச்சு..மினிமம் 10 ஆஸ்கார் அவார்ட் வீட்டுக்கு எடுத்துப்போயிருப்பேன்..


ஹீரோயினா?..

ரஞ்சிதா தான்..ஹி..ஹி..

மங்குனி அமைச்சர் said...

ரோஸு ஓபனாக மாட்டேங்கிது

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - என்னய்யா நான் எழுதுனது புரியலையா? இல்லை படத்துல பேசுறது புரியலையா?
படத்துல Sub title-ஐ பாரு.
நான் எழுதுனது புரியலனா... பட்டாகிட்ட கேட்காதை... அதுக்குப் பதிலா நீ திரும்பவும் ஒன்னாங்கிலாஸ்-ல இருந்து படிக்கலாம். :-)

ரோஸ்விக் said...

முகிலன் - கண்டிப்பா பாருங்க தல. ரசிக்கும்படியாத் தான் இருக்கும். :-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - பார்த்திட்டு வந்து சொல்லுங்கண்ணே! :-)

ரோஸ்விக் said...

சே.குமார் - பார்த்து ரசிங்க நண்பா! :-)

ரோஸ்விக் said...

தேவன் மாயம் - கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் சார். என்ன நேரம் ஒதுக்குவது தான் சிக்கல். :-)

ரோஸ்விக் said...

கிரி - அண்ணே! இப்போ நித்தியானந்தரைவிட ரஞ்சிதாதான் ரொம்ப பிரபலம். அதுனால discussion with Ranjitha. :-)

(அப்பறம் எப்போதான் நானும் ஆசிரமம் கட்டுறது...?)

ரோஸ்விக் said...

நாடோடி - நெசமா பாருங்க தல... அருமையா இருக்கும். :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. -

//ரோஸ்விக் தம்ம்ம்ம்ம்பிபிபிபிபி...//

பார்த்து சாமி பி.பி ஏறிடப்போகுது :-)

//இதே காண்டி நான், இந்த படத்தை எடுத்திருந்தா, அவர்களையும் இயற்க்கையா(?) நடிக்க வெச்சு..


ஹீரோயினா?..

ரஞ்சிதா தான்..ஹி..ஹி..
///

நல்ல வேளை, இந்த கதை உன் கையில சிக்கல... :-))

//மினிமம் 10 ஆஸ்கார் அவார்ட் வீட்டுக்கு எடுத்துப்போயிருப்பேன்..//

என்னய்யா பஃபே சிஸ்டத்துல ஃபிரை பண்ணி கொட்டி வச்சிருக்குற மாதிரி சொல்ற..!!! :-)))

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - என்னய்யா சொல்ற...?? ;-)

ரெப்ரெஷ் பண்ணுயா...
இரு இரு... உன்னைய ரெப்ரெஷ் பண்ணிக்க சொல்லலையா... ப்ரௌசெரை - ரெண்டு மூணு வாட்டி ரெப்ரெஷ் பண்ணு... :-)

ILLUMINATI said...

பார்க்குறேன் ரோசு.ஆனா எப்பன்னு தெரியாது. :)

ரோஸ்விக் said...

கண்டிப்பா பாரு மச்சி.

'பரிவை' சே.குமார் said...

hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

Karthick Chidambaram said...

பார்க்கிறேன். பகிர்தலுக்கு நன்றி