Saturday, October 31, 2009

தெரிந்துகொள்வோம் - 3


கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர்.

சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.

வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்.

பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது.

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ.

மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.

உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது.

தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.




இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது.

அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது.

பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன.



திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது.

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார்.




பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான்.


உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.



Wednesday, October 28, 2009

நாணயமிக்க சிங்கப்பூரர்கள்... இன்னும் அதிசயம்...

எ. வ. இ. கா. இ-ல (பதிவை கடைசி வர படிச்சா தான் அர்த்தம் புரியும்)
எல்லாப் பதிவர்களும், தனக்கு உள்ளூர இருக்கிற அல்லது உள்ளூர்ல இருக்கிற தகவல்களை சொல்ற மாதிரி நம்ம உள்ளூரவும், உள்ளூர்லையும் உள்ளதை எழுதலாம்னு இந்த பதிவு...



நிறைய பேரு சிங்கப்பூரின் அருமை பெருமையெல்லாம் ஏற்கனவே சொல்லிருப்பாக... இந்த ஊரோட நாணயத்தின் மதிப்பும், நாணயத்துக்கு அவங்க குடுக்குற மதிப்பையும் பத்தி நீங்களும் தெரிஞ்சிகிரலாம்.
இந்த ஊரு நாணயத்தோட இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ. 33 /- (அப்பப்ப கூடும் குறையும்).


ஆனா இவங்க எப்போதும் நாணயத்துக்கு குடுக்குற மதிப்பு மட்டும் குறையலப்பா. இவங்க நாணயத்தைப் பத்தி சொல்லும்போது இவங்களோட தொழில் பக்தியையும் சொல்லியே ஆகனும். நம்ம நாட்டின் தேச பிதா காந்தி(இது சாந்தி இல்லப்பா....பிராந்திய குடிச்சுப்புட்டு படிச்சா சில வளைவுகள் தெரியாது...சில வளைவுகள் நல்ல்லாத் தெரியும்னு வாந்தியெடுத்த வந்தியத்தேவன்["வா"வுக்கு "வ"] சொன்னாரு...), வாடிக்கையாளர்கள் தான் நமது தொழிலின் தெய்வம்னு சொன்னாரு. வழக்கம் போல அவரு சொன்ன எதையுமே கேட்காத நம்ம இதையும் விட்டுட்டோம்.




ஆனா, சிங்கப்பூர்-ல வாடிக்கையாளர மதிப்பாங்க. எந்தவொரு கடையிலையும் போயி பொருள் வாங்கினாலோ அல்லது டாக்சில போயிட்டு பணம் குடுத்தாலோ அவங்க தேங்க்ஸ்-னு மறக்காம சொல்லுவாங்க. சரியான சில்லறைய திருப்பி கொடுப்பாங்க. என்னைக்குமே நம்ம கிட்ட இருந்து கூடுதலா வசூல் பண்ண மாட்டாங்க. சரியான சில்லறை இல்லையினா 5 செண்டோ(பைசா) 10 செண்டோ நமக்கு கூடுதலா சில்லறை தருவாங்க. நம்ம ஊரு மாதிரி வேணுக்கும்னே சின்ன மிட்டாயோ, தீப்பெட்டியோ தர மாட்டாங்க. சில நிரந்தரக் கடைகள்ல....பரவயில்ல இன்னொரு தடவ வரும்போது கொடுங்கன்னு விட்டுருவாங்க...(இது நம்ம ஊர்ல மிகச் சில கடைகள்ல நடக்குது).





எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய இருக்கு. அதுல, ரொம்ப புல்லரிக்க வச்ச சில்லறை மேட்டரு ஒன்னு இருக்கு. ஒரு தபால் கவரும், ஒரு தபால் தலையும் வாங்கினேன். மொத்தம் 46 செண்ட்சு. நான் அந்த கடைக்கு புது வாடிக்கையாளர். ஒரு வயசான அப்பத்தா (ஆமா எத்தனை நாளைக்குத்தான் அம்மா-னு சொல்லுறது). ஆத்தா எங்கிட்ட 45 செண்ட்சு இருக்கு OK வா? இல்லையினா 50 செண்ட்சு தாரேன்னு சொன்னேன். 50 செண்ட்சு கொடுன்னு சொல்லிடுச்சு. என்னடா சிங்கப்பூர்காரனும் மாறிட்டான்னு பார்த்தா...4 செண்ட்சு சில்லறையா கொடுத்துடுச்சு அப்பத்தா...இதுவரை நான் 1 செண்ட் பாத்ததே இல்ல சிங்கப்பூர்ல. என்னத்த சொல்ல...




ஒரு சைனீஸ் உணவகத்துல சாப்பிட்டு $2.80 க்கு பதிலா $100 கொடுத்த எந்த சங்கடமும் இல்லாம $97.20 சில்லறை தாராங்கப்பா......ஆனா, எங்க ஆபீஸ்-ல ஒரு கான்டீன் இருக்கு...அங்க சில்லறை இல்லனா அந்த அக்கா முனங்கிகிட்டே இருப்பாங்க...அவங்க ஒரு தமிழச்சி....(ஏய், நான் பதிவு எழுதுற தமிழச்சிய சொல்லல...அந்த அக்கா நல்லவங்க). சிங்கப்பூர்ல சில்லறை இல்லைனு சொல்லி வாடிக்கையாளரை அலைய விடக்கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்காம்...உண்மையானு தெரியல...(என்ன ஊருடா இது...எது எதுக்கெல்லாம் சட்டம்...) பாருங்க சட்டத்தை எப்படி எல்லாம் மதிக்கிராங்கன்னு. ஆனா இப்படி ஒரு சட்டம் இருக்காது யாருக்கும் தெரியாது....எவ்வளவு நல்லவய்ங்கப்பா.....


நம்ம ஊர்ல இப்படி ஒரு காலம் வருமா? அதைத்தான் "எ. வ. இ. கா. இ" (எப்ப வரும் இப்படி ஒரு காலம் இந்தியாவுல)-னு எழுதியிருந்தேன்....




Sunday, October 25, 2009

உங்கள் வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....?

மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா.


என்னோட
வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி- சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது...



இந்த
பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவரு மாதிரி இருக்காரு. ஆனா அவரு பதிவுல ஒரு இளமை புத்துணர்ச்சி கிடைக்குதுப்பா. அவருடைய அனுபவ அறிவு நமக்கும் உதவலாம். முடிஞ்சா அவரு பக்கம் போயி பாருங்க. அய்யா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு...:-) உண்மையிலே தான்.


பதிவுகள்
- எப்படி படம் போடுறதுன்னு நமக்கு நல்லாத் தெரியும். அதான்பா, சும்மா ஒன்னும் இல்லாத சப்பை மேட்டரை பல பில்ட்-அப் குடுத்து அதுக்கு தலைப்ப கவர்ச்சியா வச்சு அம்புட்டு பேரையும் கூப்புடுறது. (ஏய் யாருப்பா அது, இப்ப நீ மட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காயின்னு சொல்றது). ஆனா எப்படி பாட்டு போடுறதுன்னு இப்ப நான் சொல்றேன். ஏற்கனவே யாரும் சொல்லிருக்கலாம். இருந்தாலும் நானுஞ் சொல்லுறேன். நம்ம பதிவு மொக்கையா இருந்தாலும், சிலருக்கு பாட்டுக் கேட்ட சந்தோஷமாவது இருக்கட்டும். :-)




கீழ உள்ள gadjet இணையத்துல கிடைச்சது தான். நான் ஒரு சில மாறுதல் பண்ணிருக்கேன்.

கீழ
உள்ள வெள்ளைக்காரனோட எழுத்துக்கள புடிச்சுகிட்டு போயி நாம "blogger account"- "login" பண்ணிட்டு, "layout"- "page elements"- அமுக்கி, அதுல "Add a Gadjet"- தொறந்து அதுக்குள்ளே "HTML/JavaScript" ரூமுக்குள்ளே "content"-க்கு கீழ சிறை வச்சிடுங்க...ஆமா. அவன் அதுக்குள்ளே கிடந்தாத்தான் பாட்டுப்படுவான். "Title"- அவனுக்கு பேரு வச்சிடுங்க.


இதுல
, height, width- உங்க ப்ளாக் அளவுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கங்க. அப்புறம் உங்க ப்ளாக்ல இது சைடுல தெரியும். கீழ்நோக்கு அம்புக்குறியை(ஏய் dropdown menu-வை சொல்லறேன் ராசா) அமுக்கி உங்களுக்குத் தேவையானதை தேர்ந்து எடுத்துக்கங்க.


அதுல
சிலது நம்ம அரசாங்க அதிகாரிங்க மாதிரி வேலை செய்யாது. ஏன்னு என்னைய கேக்கக்கூடாது. ஏன், அவங்களையே (ரேடியோக்காரங்களை) நம்ம கேட்க முடியாது. சம்பளம் வாங்குற நம்ம அதிகாரிகளையே கேட்க முடியலை...இவங்க இலவசமாத்தானே நமக்கு குடுக்குறாங்க. அப்புறம் எப்படி நம்ம தட்டி கேட்க முடியும்? போயி இலவசமா பொட்டில பாட்டுக் கேளுங்க...கேளுங்க....கேட்டுக்கிட்டே இருங்க...



<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&up_myautoplay=true&up_myplayerheight=70&up_myplayerwidth=200&up_mycolor=%23FFFFFF&synd=open&w=200&h=150&border=%23ffffff%7C0px%2C1px+solid+%23004488%7C0px%2C1px+solid+%23005599%7C0px%2C1px+solid+%230077BB%7C0px%2C1px+solid+%230088CC&output=js"></script>


Friday, October 23, 2009

உங்க பதிவுல பின்னூட்டம் போடுவதுல சிக்கலு-ங்கோ...

டும் டும் டும் ....டுரூம்ம் ...




இதனால பதிவர்களுக்கெல்லாம் சொல்லிக்கிறது என்னான்னா....

பல பேரு நல்ல எழுதுரீங்கோ....படிக்க படிக்க இன்றேஸ்டா இருக்குது...பல பேருக்கு பின்னூட்டம் போடலாம்னு கீழ குனிஞ்சு பாத்தா..."post a comment" -ல பின்னூட்டம் போட முடியல...

இதுனால நிறைய பேரு உங்களுக்கு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிருப்பங்கோ...பின்னூட்டம் தான் நமக்கு விருது மாதிரி-ங்கோ....

பயப்பாடாதீங்கோ....உடனே உங்க "set up" (ஏய் நான் அந்த செட் அப்-ப சொல்லலைப்பா) சேஞ்சு பண்ணிடுங்கோ.....எல்லா தோசமும் விலகி உங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு.....


நீங்க "blogger" account user-னா உடனே "settings"-க்கு போயி...."comments"-ஐ அமுக்கி..."Comment Form Placement"-ல "Full page" அல்லது "Pop-up window"-ல கரும்புள்ளி குத்திடுங்கோ....

அது மாதிரி இன்னொரு மேட்டரு....எதுக்குப்பா கமெண்ட்ஸ் போடும்போது "word verification"? அதையும் மாத்திடுங்கோ.... இன்னும் சில பேறு "Adult Content"-ஐ "yes"-னு போட்டு வச்சிருககாங்கோ...ஆனா உள்ள அப்படி ஏதும் மேட்டரு இல்ல...இதுவும் தேவையான்னு பாத்துக்கங்கோ...


அடுத்த பதிவ போடுறதுக்குள்ள மேல சொன்ன பரிகாரத்தை செஞ்சிடுங்கோ....உங்களுக்கு பின்னூட்டத்துல நல்ல காலம் பொறக்கட்டும்னு தண்டோரா போட்டு சொல்லிக்கிறேன்....

விளம்பரக்கார பதிவர் தண்டோராவுக்கு இது ஒரு விளம்பரம் ஆகிவிட்டது....அதுனால அண்ணாச்சி நீங்க எனக்கு தர்றதா இருக்க விளம்பர செலவு தொகைய....(கூப்புட்டு வச்சு அடிச்சுராதீங்கப்பா) என்னோட வங்கி கணக்குல சேர்த்துடுங்கோ.... அப்படியில்லயினா பரிசல், கேபிள், நர்சிம் எல்லாரையும் பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி ஆயிடும் ஆமா... ஒரு ஃபுல்-க்கு எவ்வளவு செலவுன்னு நீங்களே கணக்கு பண்ணிக்கங்கோ....





Thursday, October 22, 2009

உள்குத்து கவிதைகள் - 2




காதல் - கண்

கண் இல்லாத
காதலுக்கு
எத்தனையோ
காதலிகள்
தயார் - ஆனால்
கண்ணே
இல்லாத
காதலிக்கு
எத்தனை
காதல்கள்
தயார்?...







இன்றைய இதயங்கள்


இரண்டு ஒலிகள் - என்
இதயத்திலே
....
லப்
- ஒருவனுக்கு / ஒருத்திக்கு
டப்
- ஒருவனுக்கு / ஒருத்திக்கு







அம்மண சிலைகள்

அம்மணமாய் இருப்பதோ நாங்கள்
அவமானப்பட்டுக்

கொள்வதோ நீங்கள் - எங்கள்
இச்சைகள்
இறந்துவிட்டன - ஆனால்
இம்சைகள்
மட்டும் மீண்டும் மீண்டும்
ரசனைகளின்
பேரில் உங்கள் கைகளால்.....


லேகியம் விற்பன்னர்

வாலிப, வயோதிக அன்பர்களே!
உங்களுக்கு
ஆண்மை குறைவா?
ஆம்பிளையா
என்ற சந்தேகமா? - நான்
லேகியம்
விற்கிறேன்...
என்
மனைவி - எனை
நாலு
காசு சம்பாதிக்க
துப்பில்லாத
- நீயெல்லாம்
ஆம்பிளையா
எனக் கேட்டதால்....





Saturday, October 17, 2009

என்ன ச(த)ரித்திரமடா நமக்கு சூனாபானா ......?


சொந்த
நாட்டில் சோறா இல்ல? ஈழம் சுற்றி முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் சொந்தத்தை பார்ப்பதாக கூறிவிட்டு எதிரி போட்ட எச்சி சோத்தை திங்க...?



பள்ளிக்கூடத்துல படிக்கும்போது வரலாற்று பரீட்ச்சைக்கு படிக்காம போனவன், பக்கம் பக்கமா எழுதுவான் இவனுக்கு தெரிஞ்ச வரலாற்றை....அது பக்கத்தை நிரப்ப மட்டும் தான்னு தெரிஞ்சே செய்வான். ஆனா கதர் வேட்டி கட்டிய இந்த வரலாற்று அரசியல் வியாதிகள் தான் வாழும் கால வரலாற்றின் பக்கங்களை நிரப்ப எத்தனை நாடகங்கள் அதில் எத்தனை நடிகர்கள் வெட்டியாக?




இதுவரை எத்தனை முறை நம் அரசியல் வியாதிகள் நம் தேசமான ஈழத்திற்கு சென்று வந்திருக்கிறார்கள்? எதாவது பயன் உண்டா? போதாகுறைக்கு சில அதிகாரிகளும் இதில் அடக்கம். செத்த வீட்டுக்கு போனா சோறு போட மாட்டாங்க, காரியம் முடிஞ்சு போனா கறியும் சோறும் கிடைக்கும்-னு போன கூட்டமா இது? சாரி உங்க பாஷையில குழு.....



ஈழம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதையெல்லாம் கூட ஒதுக்கி வைத்து விடுங்கள். அங்கு சாகும் சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்களை எல்லாம் பார்க்கும் போது உனது பிள்ளையோ, சகோதரியோ நினைவில் வர வேண்டாமா? ஓட்டுக்கு ஓடு தூக்கும் திருவாளர் நீங்கள், காரியம் ஆகவேண்டும் என்றால் காலைப் பிடிப்பீர்கள். அவனுக்கு கால் இல்லாதது அப்போதாவது உங்களுக்கு தெரிய வேண்டாமா?




மனித உரிமைக் குழுக்களே, உங்களிடமும் மானுடம் பொய்த்து விட்டதா? உங்கள் சக்தி உள்ளூர் காவல் துறையிடம் மட்டும் தானா? ஒரு திருடனை அடித்து கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றதை கூப்பாடு போட்டு கண்டித்த நீங்கள், ஒரு மனித இனமே, வயது, பால் வேறுபாடின்றி துன்புறுத்தப்பட்டு கொள்ளப்படுகிறார்களே அது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டதா அல்லது நீங்களும் காணாமல் போய்விட்டீர்கள?



தீவிரவாதம் என்ற ஒற்றைப்போர்வையில் அனைத்தையும் போர்த்தி மெளனம் என்ற முத்தரை குத்தி ஒரு இனமே அழிந்து போக துணைபோய்விட்ட குற்ற உணர்வு உங்களை வாட்டவில்லையா? தலைக்கு மேல தீவிரவாத குண்டுகள் பொழிந்த போதிலும் அது தீவிரவாதம்தான் என இன்னும் நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் நீங்கள், காலுக்கடியில் உரிமைபோர் தொடுத்த எம் சொந்தங்களை உயிர்பிச்சை கேட்க்கும் இழிநிலைக்கு தள்ளிய பெருமை உங்களைத் தவிர யாருக்குப் பொருந்தும்?



அண்டை நாட்டானுக்கு பயந்து, சொந்த நாட்டில் சொத்தைப்பல் வீங்கிகளாய் அறிக்கை விட அஞ்சுகிறீர்களே! இது நியாயமா? உளியின் ஓசை கேட்ட உங்களுக்கு இந்த உயிரின் ஓசை கேட்காமல் போனதே! தமிழனின் வரலாற்றில் உங்களுக்கு கருப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தமிழ் திரைப்படங்களில் காட்டும் கடைசி நிமிடங்களைப்போல நீங்களும் திருந்தி சுபம் போட அழைக்கின்றோம். வாருங்கள் (மீண்டும் தமிழனின் கால்களை அல்ல....)!




Thursday, October 15, 2009

உள்குத்து கவிதைகள்


டவுசர்

கால் மறைக்க
ஆண்களுக்கு.....
கால்வாசி
மறைக்க
பெண்களுக்கு .....

கேவலம்

ஓட்டுப்போட துணியில்லாமல்
வறுமையில் வாழ்வது கேவலமல்ல...
ஒட்டுத் துணியோடு
வசதியாய் வாழ்வதே கேவலம் ...


பரிகாரம்

ஆண்டவனைத் தொழு
ஆலயம் செல்
பரிகாரம் செய்திடு - உன்
பரம தோஷங்கள் கழியட்டும்....

வரி விழுந்த வயிறுகளுடன்
வழியெங்கும் பிச்சைபுகும் - உன்
வயதான தாய்க்கு - உனை
பெற்ற பாவம் கழிவதற்கு....


போலி பக்தர்கள்(க்கு மட்டும் பொருந்தும்)

தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...







Monday, October 12, 2009

பதிவுலகத்தில் பார்த்தவை (நீங்களும்தான்) ....

பதிவுலக படைப்பாளிகளுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்.


இந்த பதிவுலகம் நமக்கு கிடச்ச பெரிய வரப்பிரசாதம்னு தாங்க சொல்லணும். இதுல, நம்ம சிந்தனை, மொக்கை, நமக்கு தெரிந்தவை, நம்மில் தோன்றிய கேள்விகள், நகைச்சுவை, நாம் பிரசவித்த கவிதை, கதை இன்னும் பற்பல விஷயங்களை எழுதுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு...


பலரின் கொள்கைப் பிரச்சாரங்களும் நடந்துகிட்டு தான் இருக்கு. இதுல வசதி என்னான்னா நம்மளும் எதிர் கருத்து, எதிர் கொள்கை, எதிர் கவுஜ, எதிர் பதிவு போட்டு நம்ம மனச ஆத்திக்கலாம். இதுல அரசியல் நடவடிக்கைகளை (இப்பவெல்லாம் சினிமா விமர்சனங்களுக்குக் கூட) விமர்சனம் செய்தால் ஆட்டோ வரும், ஆம்புலன்சு வரும்னு ஒரு மிரட்டல் வேற... விமர்சன சுதந்திரத்தை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுங்கப்பா.


இந்த மிரட்டலுக்கு பயந்து பல பேரு அரசியல் பத்தி எழுதுறதே இல்ல. எல்லோரையும் எல்லாத்தையும் எழுத விடுங்கப்பா. நம்ம ஊர்ல கருத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் இருக்குங்குங்கிற செத்துக்கிட்டு இருக்க உண்மைய சொல்லி அவுகளுக்கு தைரியமும், ஆதரவும் குடுங்கய்யா. இங்க எழுத வர்றவங்க எல்லாம் பிரபல எழுத்தாளர்கள் இல்ல. அவங்க எழுத்து நடையோ, கருத்துக்களோ நமக்கு முரண்பட்டதா இருக்கலாம். முடிஞ்சா ஆலோசனை சொல்லுங்க ( அது தானே இலவசமா முடியும்). இல்லையினா நாகரீகமான முறையில விவாதம் நடத்துங்கப்பா. அவனவன் எழுதுவது அவனவனுக்கு மதிப்பு மிக்கது தான். எல்லாப் பிரசவங்களும் அழகிகளையோ, அறிவாளிகளையோ கொடுத்துரதில்ல. (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே :-) )


அப்புறம் பதிவர்களுக்குள்ள பல குழு குழுவா இருந்துகிட்டு, அந்த குழு பதிவர் எழுதுறதை மட்டும் படிச்சிட்டு, ஒட்டு போட்டுட்டு, ஒட்டு போட்டாசின்னு பின்னூட்டம் போடுறது எனக்கு நம்ம தமிழக அரசு விருதை தான் ஞாபகப்படுத்துது. ஒட்டு போடுறது நம்ம கடமை. அதை நீங்க விரும்பி படித்த பொழுதுபோக்குப் பதிவுகளுக்கோ, அறிவுப்பூர்வமான பதிவுகளுக்கோ மறக்காம போட்டுடுங்க. பதிவுலக உரிமைய பயன்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு நாகரீகமான எதிர்ப்பைத் தெரிவியுங்கள். அய்யா மூக்குடைக்கிற வேலைய விட்டுருங்க...நல்ல வேலை இந்த தமிழ் பதிவுலகில் நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதிக்கிரதைத் தவிர வேற ஒரு சம்பாத்தியமும் இல்ல. அப்படி இருந்தா, பல கொலை சம்பவங்கூட நடக்குமோன்னு அதிர்ச்சியா இருக்குய்யா.


பதிவுலக நண்பர் டாக்டர் தேவா சொன்னது மாதிரி எல்லா துறையில இருந்தும் பதிவுகள் வரணும். அதைப் படித்து நம் அறிவை விசாலப் படுத்திகொள்ளனும். எங்க அடுத்த குழு பதிவரோட பதிவுக்கு போனா அவருடைய ஹிட்ஸ் கூடிருமோன்னு குள்ள நரித்தனமா யோசிக்கக்கூடாது. :-) எல்லா தளங்களுக்கும் போயி படிச்சிட்டு நம்ம அறிதலை அதிகப் படுத்திக்கிரலாம். இல்லையினா, அந்த பதிவரோட அறியாமையா தெரிஞ்சுகிரலாம். பலருக்கு சில துறைகளில் இன்னும் அறியாமை இருப்பது ஒன்னும் அதிர்ச்சியான விஷயம் இல்லங்க.


இந்த பதிவுலகத்துல, நான் நிறைய பேருடைய தளங்களுக்கு சென்று படித்திருக்கிறேன். நேரமின்மையால் பின்னூட்டம் இடாமல் வந்துருக்கிரேன். அதற்க்கு மன்னிக்கவும். உதாரணமா, கீழ உள்ள பதிவர்களின் தளங்கள் என்னை பல வழிகளில் கவர்ந்தது. அய்யா, நிறைய பேருடைய தளங்களை படிச்சிருந்தாலும், அவங்க பேருங்க விடுபட்டிருக்கலாம். அதனால, நீங்க பிரபல பதிவர் இல்லையின்னு நினைச்சுகாதீங்க. நான் பிரபல வாசிப்பாளரா இல்லேங்கிரதை ஒத்துக்கிறேன் (எழுத்துக்கள் சரி தானே ;-) )


இவங்க ஆபாசமா எழுதுனாலும், அறிவுப்பூர்வமா எழுதினாலும் அவங்களோட எழுத்து நடை, கருத்தை சொல்லும் விதம், மொழியாண்மை (இறையாண்மை மாதிரி தாங்க :-) ) எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இவங்களோட பேருகள நான் எந்த வரிசைப்படியும் எழுதலப்பா... இத வச்சு கும்மியடிக்க ஒரு கூட்டம் சேர்ந்துடக்கூடாது பாருங்க....அதான் பாதுகாப்பா சொல்லிடுறேன்.


ஞானி, வினவு, தமிழச்சி, கிரி, விசா பக்கங்கள், பிச்சைப்பாத்திரம், தண்டோரா, வாலு, டவுசர் பாண்டி, பைத்தியக்காரன், கேபிள் சங்கர், புலவன் புலிகேசி, ஜாக்கிசேகர், உளறுவாயன், டாக்டர் தேவா, பரிசல், தாமிரா, லக்கிலுக், கதிர், பாமரன், நையாண்டி நைனா, கார்க்கி பாவா, வடகரை வேலன், குசும்பன், எவனோ ஒருவன், பின்னோக்கி, உண்மைத்தமிழன், butterfly surya, மங்களூர் சிவா, ஆசிப் மீரான், சாத்தான் குளத்து வேதம், குப்பைத்தொட்டி, pappu, குறை ஒன்றுமில்லை, கார்த்திகேயனும் அறிவுத்தேடலும், சந்தன முல்லை, கிருஷ்ணமூர்த்தி, ஜெஸ்வந்தி, ஊடகன், பாலாஜி, கதிர்-ஈரோடு, பிரபாகர், மாரனேரி, கோவிக்கண்ணன், விதூஷ், ரம்யா, அருணா டீச்சர், நட்புடன் கார்த்திக், ஞானசேகரன், அமுதா கிருஷ்ணா, ஸ்ரீராம், ராஜூ, Mouthayen, கலையரசன், hayyram, கபிலன், Robin, துபாய் ராஜா, ஃபிக்ஸ்/Suffix, டயானா சதா'சக்தி'நாதன், கோமதி அரசு, இன்னும் பல தோழிகள் அருமையாக சமையல் குறிப்புகள், அழகுக்குறிப்புகள் குறித்து எழுதுகிறார்கள். அவை அனைத்தும் எம் குடும்ப பெண்களின் பார்வைகளில் என்பதையும் மகிழ்வோடு கூறுகிறேன்.


மேற்குறிப்பிட்ட மற்றும் மனதில் உங்கள் கருத்துக்கள் இருந்தும் மதியில் உங்கள் பெயர்கள் இல்லாத பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.