Wednesday, October 28, 2009

நாணயமிக்க சிங்கப்பூரர்கள்... இன்னும் அதிசயம்...

எ. வ. இ. கா. இ-ல (பதிவை கடைசி வர படிச்சா தான் அர்த்தம் புரியும்)
எல்லாப் பதிவர்களும், தனக்கு உள்ளூர இருக்கிற அல்லது உள்ளூர்ல இருக்கிற தகவல்களை சொல்ற மாதிரி நம்ம உள்ளூரவும், உள்ளூர்லையும் உள்ளதை எழுதலாம்னு இந்த பதிவு...



நிறைய பேரு சிங்கப்பூரின் அருமை பெருமையெல்லாம் ஏற்கனவே சொல்லிருப்பாக... இந்த ஊரோட நாணயத்தின் மதிப்பும், நாணயத்துக்கு அவங்க குடுக்குற மதிப்பையும் பத்தி நீங்களும் தெரிஞ்சிகிரலாம்.
இந்த ஊரு நாணயத்தோட இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ. 33 /- (அப்பப்ப கூடும் குறையும்).


ஆனா இவங்க எப்போதும் நாணயத்துக்கு குடுக்குற மதிப்பு மட்டும் குறையலப்பா. இவங்க நாணயத்தைப் பத்தி சொல்லும்போது இவங்களோட தொழில் பக்தியையும் சொல்லியே ஆகனும். நம்ம நாட்டின் தேச பிதா காந்தி(இது சாந்தி இல்லப்பா....பிராந்திய குடிச்சுப்புட்டு படிச்சா சில வளைவுகள் தெரியாது...சில வளைவுகள் நல்ல்லாத் தெரியும்னு வாந்தியெடுத்த வந்தியத்தேவன்["வா"வுக்கு "வ"] சொன்னாரு...), வாடிக்கையாளர்கள் தான் நமது தொழிலின் தெய்வம்னு சொன்னாரு. வழக்கம் போல அவரு சொன்ன எதையுமே கேட்காத நம்ம இதையும் விட்டுட்டோம்.




ஆனா, சிங்கப்பூர்-ல வாடிக்கையாளர மதிப்பாங்க. எந்தவொரு கடையிலையும் போயி பொருள் வாங்கினாலோ அல்லது டாக்சில போயிட்டு பணம் குடுத்தாலோ அவங்க தேங்க்ஸ்-னு மறக்காம சொல்லுவாங்க. சரியான சில்லறைய திருப்பி கொடுப்பாங்க. என்னைக்குமே நம்ம கிட்ட இருந்து கூடுதலா வசூல் பண்ண மாட்டாங்க. சரியான சில்லறை இல்லையினா 5 செண்டோ(பைசா) 10 செண்டோ நமக்கு கூடுதலா சில்லறை தருவாங்க. நம்ம ஊரு மாதிரி வேணுக்கும்னே சின்ன மிட்டாயோ, தீப்பெட்டியோ தர மாட்டாங்க. சில நிரந்தரக் கடைகள்ல....பரவயில்ல இன்னொரு தடவ வரும்போது கொடுங்கன்னு விட்டுருவாங்க...(இது நம்ம ஊர்ல மிகச் சில கடைகள்ல நடக்குது).





எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய இருக்கு. அதுல, ரொம்ப புல்லரிக்க வச்ச சில்லறை மேட்டரு ஒன்னு இருக்கு. ஒரு தபால் கவரும், ஒரு தபால் தலையும் வாங்கினேன். மொத்தம் 46 செண்ட்சு. நான் அந்த கடைக்கு புது வாடிக்கையாளர். ஒரு வயசான அப்பத்தா (ஆமா எத்தனை நாளைக்குத்தான் அம்மா-னு சொல்லுறது). ஆத்தா எங்கிட்ட 45 செண்ட்சு இருக்கு OK வா? இல்லையினா 50 செண்ட்சு தாரேன்னு சொன்னேன். 50 செண்ட்சு கொடுன்னு சொல்லிடுச்சு. என்னடா சிங்கப்பூர்காரனும் மாறிட்டான்னு பார்த்தா...4 செண்ட்சு சில்லறையா கொடுத்துடுச்சு அப்பத்தா...இதுவரை நான் 1 செண்ட் பாத்ததே இல்ல சிங்கப்பூர்ல. என்னத்த சொல்ல...




ஒரு சைனீஸ் உணவகத்துல சாப்பிட்டு $2.80 க்கு பதிலா $100 கொடுத்த எந்த சங்கடமும் இல்லாம $97.20 சில்லறை தாராங்கப்பா......ஆனா, எங்க ஆபீஸ்-ல ஒரு கான்டீன் இருக்கு...அங்க சில்லறை இல்லனா அந்த அக்கா முனங்கிகிட்டே இருப்பாங்க...அவங்க ஒரு தமிழச்சி....(ஏய், நான் பதிவு எழுதுற தமிழச்சிய சொல்லல...அந்த அக்கா நல்லவங்க). சிங்கப்பூர்ல சில்லறை இல்லைனு சொல்லி வாடிக்கையாளரை அலைய விடக்கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்காம்...உண்மையானு தெரியல...(என்ன ஊருடா இது...எது எதுக்கெல்லாம் சட்டம்...) பாருங்க சட்டத்தை எப்படி எல்லாம் மதிக்கிராங்கன்னு. ஆனா இப்படி ஒரு சட்டம் இருக்காது யாருக்கும் தெரியாது....எவ்வளவு நல்லவய்ங்கப்பா.....


நம்ம ஊர்ல இப்படி ஒரு காலம் வருமா? அதைத்தான் "எ. வ. இ. கா. இ" (எப்ப வரும் இப்படி ஒரு காலம் இந்தியாவுல)-னு எழுதியிருந்தேன்....





15 comments:

கோவி.கண்ணன் said...

ஸ்கேன் செய்யப்பட்ட பணத்தின் படத்தை வெளி இடுவது சட்டப்படி குற்றம், விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பணப் படத்தில் 'Specimen' என்று எழுதி இருக்கும், அதை பயன்படுத்தலாம். ப்டத்தை மாற்றுங்கள்.

ஒரு பள்ளிச் சிறுவன் இரண்டு வெள்ளி தாளை ஸ்கேன் செய்தது தெரியவர அவன் மீது சிங்கை காவல்துறை ஒழுங்கு முறை மீறியதாக நடவெடிக்கை எடுத்தது.

ஸ்ரீராம். said...

"ஜாய் புல் சிங்கப்பூர்...."

குப்பை போடாத ஊரா, சண்டை போடாத பேராசை இல்லாத ஆட்டோவா, சில்லறை சரியாத் தர்ற பாஸ், கடைகள் இருக்கற ஊரா, நேரத்துக்கு வர்ற பாஸ், ரயில்...இன்னும் என்னென்னவோ ஆசைகள்...
ஆயினும்,
"சொர்க்கமே என்றாலும்....."

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் -

நன்றி நண்பரே! தனிப்பட்ட பணமாக இருப்பின் 'Specimen' எனக் குறிப்பிடப்பட வேண்டும் என நினைக்கிறேன். அவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான். இருந்தாலும், எதற்கு வம்பு :-) . தங்களின் உடனடி சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள்.

'Specimen' added :-)

பிரபாகர் said...

பெரியண்ணன் சொல்றதுல அர்த்தம் இருக்கும் ரோஸ்விக்... மாத்திடுங்க... சிங்கப்பூர்ல இருக்கோம்னு பெருமையா இருக்கு...

பிரபாகர்.

பிரபாகர் said...

தமிழ்மணம் ஓட்ட நீங்களும் போடுங்களேன்...

ரோஸ்விக் said...

ஸ்ரீராம் -க்கு...

மரணித்த பிறகு சொர்க்கத்துக்கு போகனும்னு தான் ரொம்ப பேரு நல்லவய்ங்களா இருக்காய்ங்க...நீங்க சொர்க்கம் இப்படித்தான்னு நம்ம ஊர சொன்ன அப்புறம் நல்லவனாவே இருக்க மாட்டாய்ங்க....:-))) தமாசு...

நம்ம ஊரு நமக்கு எப்போதுமே நமக்கு சொர்க்கம் தான்...இந்தியாவுல வேற ஊர்ல இருந்தாலும் பல பேருக்கு நம்ம பால்யகாலம் கழிந்த ஊரு தான் சொர்க்கமா இருக்கும்...


பிரபாகர்-க்கு....
நண்பரே இன்னும் உங்களையெல்லாம் சந்தித்ததில்லை....அனால், பெரியண்ணன் பற்றியும், உங்களைப்பற்றியும், இன்னும் சில சிங்கைப்பதிவர்கள் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். விரைவில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். :-)

ஓ...தமிழ்மணத்தில நம்ம பதிவ இணைச்சாலே நம்ம ஓட்டு நமக்கு விழுகாதா...நான் அதிகமா Tamilish தான் பயன்படுத்துகிறேன். தகவலுக்கு நன்றி. இன்று முதல் என் ஓட்டையும் பயன்படுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி.

Muniappan Pakkangal said...

Nice info Rosewick.

VISA said...

நம்ம ஆளுங்க கிட்ட அதெல்லாம் வராது. தேங்க்ஸ்ன்னு நம்ம ஆட்டோகாரன் கிட்ட சொன்னா நம்மள ஏதோ ஐ.டி. இல்ல கால் சென்டர்ல வேல பாக்குறவன் பேக்குன்னு நெனச்சு இன்னும் பத்து ரூபா குடு சார்ன்னு ஆரம்பிச்சிடுவான். அதனால இங்க எல்லாம் கொஞ்சம் கெட்ட வார்த்தையோடு ஆரம்பிச்சா தான் மதிப்பானுங்க மாங்கா மடையனுங்க.

Beski said...

//நம்ம ஊர்ல இப்படி ஒரு காலம் வருமா? //

எனக்கு நம்பிக்கையே இல்ல. 70 ரூபா பீருக்கு கரெக்டா 70 ரூபா கொடுத்தாலும் இன்னும் 2 ரூபா கொடுங்கன்னு கேட்டு வாங்குற ஊரு இது. பின்னனி அதிகாரிகள்.

என்னத்தச் சொல்ல?

ஆ.ஞானசேகரன் said...

உண்மையான பகிர்வு... வாழ்த்துகள்

வடுவூர் குமார் said...

பலர் என்னிடம் சிங்கை ,துபாய் & மஸ்கட் இவற்றில் எது சிறந்தது என்று கேட்பார்கள் ,சந்தேகமில்லாமல் சிங்கை யை கூறுவேன் .

ரோஸ்விக் said...

Muniappan Pakkangal - க்கு, தங்களின் வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி. தங்களின் ஈழம் பற்றிய கட்டுரை மிக அருமை. வாழ்த்துக்கள்.

---> * * * <---

VISA - க்கு,

நன்றி.
நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே!...என்றாவது திருந்துவார்களா என பார்ப்போம். அவய்ங்களுக்காகவே சில நேரங்களில் நம்ம இயல்பை மாற்றி பேச வேண்டியிருக்கிறது...


---> * * * <---


எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் - க்கு,

நன்றி.
வேதனையான விஷயம் தான்....நாகரீகப் பிச்சை வாங்கிகள். :-(


---> * * * <---

ஆ.ஞானசேகரன் - க்கு,

நன்றி நண்பரே...நீங்களும் இதை இங்கு அனுபவித்திருப்பீர்கள் என நம்புகிறேன். :-)


---> * * * <---

வடுவூர் குமார் - க்கு,

நன்றி நண்பரே.
பரவாயில்லையே!! உங்கள் அனுபவம் சரியாகத்தான் இருக்கும். :-)

கிரி said...

//பதிவை கடைசி வர படிச்சா தான் அர்த்தம் புரியும்//

அப்ப நேரா கடைசிக்கு போய்டுவோம்! :-) சும்மா லுலுலாயிக்கு

இது பற்றி என்னோட சிங்கை பதிவில் எழுதி இருக்கிறேன்

panasai said...

சில்லறைக்கு அலைய விடக் கூடாதுன்னு சட்டமா? இவ்ளோ வருஷம் இங்கே இருக்கேன், தெரியாதே.. நல்ல பதிவு நண்பரே..
-பனசை நடராஜன், சிங்கப்பூர் -

Joe said...

//
நம்ம ஊர்ல இப்படி ஒரு காலம் வருமா? அதைத்தான் "எ. வ. இ. கா. இ" (எப்ப வரும் இப்படி ஒரு காலம் இந்தியாவுல)-னு எழுதியிருந்தேன்....
//

நூறு வருஷம் கழிச்சு நடக்கலாம் (?!?)