Friday, October 23, 2009

உங்க பதிவுல பின்னூட்டம் போடுவதுல சிக்கலு-ங்கோ...

டும் டும் டும் ....டுரூம்ம் ...
இதனால பதிவர்களுக்கெல்லாம் சொல்லிக்கிறது என்னான்னா....

பல பேரு நல்ல எழுதுரீங்கோ....படிக்க படிக்க இன்றேஸ்டா இருக்குது...பல பேருக்கு பின்னூட்டம் போடலாம்னு கீழ குனிஞ்சு பாத்தா..."post a comment" -ல பின்னூட்டம் போட முடியல...

இதுனால நிறைய பேரு உங்களுக்கு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிருப்பங்கோ...பின்னூட்டம் தான் நமக்கு விருது மாதிரி-ங்கோ....

பயப்பாடாதீங்கோ....உடனே உங்க "set up" (ஏய் நான் அந்த செட் அப்-ப சொல்லலைப்பா) சேஞ்சு பண்ணிடுங்கோ.....எல்லா தோசமும் விலகி உங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு.....


நீங்க "blogger" account user-னா உடனே "settings"-க்கு போயி...."comments"-ஐ அமுக்கி..."Comment Form Placement"-ல "Full page" அல்லது "Pop-up window"-ல கரும்புள்ளி குத்திடுங்கோ....

அது மாதிரி இன்னொரு மேட்டரு....எதுக்குப்பா கமெண்ட்ஸ் போடும்போது "word verification"? அதையும் மாத்திடுங்கோ.... இன்னும் சில பேறு "Adult Content"-ஐ "yes"-னு போட்டு வச்சிருககாங்கோ...ஆனா உள்ள அப்படி ஏதும் மேட்டரு இல்ல...இதுவும் தேவையான்னு பாத்துக்கங்கோ...


அடுத்த பதிவ போடுறதுக்குள்ள மேல சொன்ன பரிகாரத்தை செஞ்சிடுங்கோ....உங்களுக்கு பின்னூட்டத்துல நல்ல காலம் பொறக்கட்டும்னு தண்டோரா போட்டு சொல்லிக்கிறேன்....

விளம்பரக்கார பதிவர் தண்டோராவுக்கு இது ஒரு விளம்பரம் ஆகிவிட்டது....அதுனால அண்ணாச்சி நீங்க எனக்கு தர்றதா இருக்க விளம்பர செலவு தொகைய....(கூப்புட்டு வச்சு அடிச்சுராதீங்கப்பா) என்னோட வங்கி கணக்குல சேர்த்துடுங்கோ.... அப்படியில்லயினா பரிசல், கேபிள், நர்சிம் எல்லாரையும் பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி ஆயிடும் ஆமா... ஒரு ஃபுல்-க்கு எவ்வளவு செலவுன்னு நீங்களே கணக்கு பண்ணிக்கங்கோ....


13 comments:

Jackiesekar said...

போட்டுட்டா போச்சு...

புலவன் புலிகேசி said...

போட்டாச்சு போட்டாச்சு........

வெண்ணிற இரவுகள்....! said...

பயனுள்ள பதிவு

ஸ்ரீராம். said...

பின்னூட்ட உபதேசம் மற்றவர்களுக்கு மட்டும்தானா? 'எங்கள்' கடமை என்றும் தொடர்கிறதே....

ப.கந்தசாமி said...

உங்கள் பதிவில் பாட்டு எப்படி கேக்குதுங்கோ?

ரோஸ்விக் said...

1 jackiesekar -
நல்லா போட்டதுக்கு நன்றி ஜாக்கி!. :-) அப்பா ஜாக்கி காத்து நம்ம பக்கமும் வீசுது!

2 புலவன் புலிகேசி -
தல புலிகேசி! உங்கள் தொடர் ஆதரவிற்கு ரொம்ப நன்றிங்க...உங்க பின்னூட்டம் "போட்டாச்சு போட்டாச்சு" எனக்கு இம்சை அரசனின் குரலிலே ஒலிக்கிறது :-))

3 வெண்ணிற இரவுகள்....! -
வருகைக்கு நன்றி வெண்ணிற இரவுகள் அவர்களே....உண்மை தாங்க. நான் சில பேருக்கு பின்னூட்டம் போடலாம்னு போனா நமக்கு ஆப்பு....அதனால எழுதினேன்.

4 ஸ்ரீராம் -
வாங்க நண்பா ஸ்ரீராம். "engalblogs"-ன் வாழ்க்கைக்குத் தேவையான வரிகள் எப்போதும் தொடர வேண்டும். உங்களது கடமை என்றும் தொடரட்டும். உங்கள் கடமையை, உரிமையாய் எனக்கு அளித்து கொண்டிருப்பதற்கு நன்றிகள்.


5 Dr.P.Kandaswamy -
வாங்க முனைவர் அறிஞர் அய்யா அவர்களே. வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் பக்கங்களை இன்று புரட்டிப்பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. மிக அருமையான பதிவுகள்.

பாட்டு போடுறது ரொம்ப எளிமை அய்யா. அதை இந்த பின்னூடத்திலே சொல்லிடலாம். ஆனா, உங்க பிரபல பதிவர் ஆவது எப்படி பதிவ படிச்ச உடனே...அடடே இதையும் தனி பதிவா போடலாம் போல-னு (குறுக்கு?)புத்தி சொல்லுது....செஞ்சிடுவோம். உங்களுக்கு அதை மெயில்-ளையும் அனுப்பிடுறேன்.

கிரி said...

பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு..

ரோஸ்விக் said...

// கிரி said...
பல பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு.//


எனக்கு இருந்த இந்த பிரச்சனைய தீர்த்து வச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி தல!
வருகைக்கு நன்றிகள்.

Unknown said...

தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி.

ஊடகன் said...

நன்றிங்கோ.............

jeevanbennie said...

Thankyou for your suggestions.

வெற்றி said...

நன்றிங்க....

ILLUMINATI said...

thala,en blog la word verification munnadiye eduthuttene?
vera ethachum prachana irukka enna?
therinjaa sari panna usefula irukkum.