Wednesday, July 21, 2010

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... (சொற்சித்திரம்)

மகேசு பேசுறேண்டா. எப்புட்றே மாப்ள இருக்க?

நல்லா இருக்கேன்டா. நீ எப்புடி இருக்க?

இருக்கேன்... நாளும் பொழுதும் ஓடிகிட்டு இருக்கு.

ஆமாடா மாப்ள... நமக்கும் கல்யாணம் காட்சின்னு ஆகி ஒரு புள்ளையையும் பெத்துப்புட்டோம். நாளு அவ்வளவு வேகமா ஓடுது.

அதுபாட்டுக்க ஓடட்டும் விட்றா... அது என்ன ஒத்தப் புள்ளையை பெத்துபுட்டு வயசானவனாட்டம் கணக்கு சொல்லிகிட்டிருக்க... அதுக்கும் ரெண்டு வயசாச்சு... சட்டுபுட்டுன்னு அடுத்த புள்ளைய பெக்குற வழியப் பாருடா...

போடா... அடுத்து ஒன்னை பெக்குறதுக்கு பயமா இருக்குடா...

நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...?


இந்த எகத்தாள பேச்சு மசுத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல. என்னமோ இவரு அஞ்சாறு புள்ளையப் பெத்ததுமாதிரி அள்ளிவிடுவாரு... பெக்குறது பெருசில்லடா... இந்தக் காலத்துல அதுகளை படிக்க வைக்கனுமே... அதான் பயமே...

அதென்னாடா... எல்லாரும் சொல்லி வச்சமாதிரி பெக்குறதே ரெண்டு... அதுகள வளக்கவும், படிக்க வைக்கவும் கஷ்டம்னு பொலம்பிகிட்டு இருக்கீங்க... அந்தக் காலத்துல அஞ்சாறை பெத்து படிக்க வச்சு வளக்கல?

வெண்ணை பெத்தாய்ங்க... பெருசா எங்க படிக்க வச்சாய்ங்க?? எங்கையாவது ஒருசில குடும்பத்துல வசதி இருக்கிறதால நல்லா படிக்க வச்சாங்க...

ஊரு ஒலகத்தை விடுறா... ஒங்க வீட்டுலையும், எங்க வீட்டுலையும் என்ன வசதியாவ இருந்தாய்ங்க...? நீயும், நானும் என்ன படிக்காமையா போயிட்டோம்?

அப்பவெல்லாம், எம்.ஜி.ஆர் கொடுத்த காக்கி டவுசரும், வெள்ளை சட்டையும், எம்.ஜி.ஆர் பல்பொடியும் போதும்டா... புத்தகமும் இலவசமா எட்டாவது வரைக்கும் கொடுப்பாய்ங்க... நம்மளும் கவட்டையில கிழிஞ்ச டவுசரை போட்டுக்கிட்டு, பல்பொடில பாதிய தின்னுபுட்டு... மீதியை வச்சு பல்லு வெளக்கீட்டு பள்ளிகொடத்துக்குப் போயிடுவோம். இப்போ புள்ளைய பள்ளி கொடத்துல சேக்க போயிப்பாரு... நீ போட்டுருக்குற எல்லாத்தையும் உருவுராய்ங்கடி...

இருக்குறவன் ஒழுங்கா இருந்தா செரைக்கிரவன் ஒழுங்கா செரைப்பான்னு சொல்லுவாய்ங்க... அந்த மாதிரி நாட்டை ஆளுரவனும், அதிகாரியும் ஒழுங்கா இருந்தா எல்லாஞ்சரியா இருக்கும்... அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...

நீ சொல்றது அந்தக்காலம்டா... அப்பா செரைக்கிரவன் சுத்தி சுத்தி வந்து செரைச்சான். இப்பா பாரு நாக்காலில ஒக்கார வச்சு அவன் ஒரு எடத்துல நின்னுகிட்டு உன்னைய சுத்தவிட்டு செரைக்கிறான். இப்ப வர்றவங்கதான் முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு போகல்ல பாக்குறானுக.

சுருட்டட்டும் சுருட்டட்டும்டா எங்க போகப்போராணுக? காசு நெறைய இருக்குங்கிறதுக்காக கண்ண மூடாமையேவா வாழப்போறாய்ங்க?? ஒன்னு தெரிஞ்சுக்கடா மாப்புள... வாழ்க்கைங்கிறத வாழணும்டா... ஓடக்கூடாது...

என்னடா தத்துவ மயிரெல்லாம் பேசுற... ம்ம்ம் பெரிய ஆளாயிட்டடா...

பெரிய ஆளெல்லாம் ஆகலைடா... எங்கையா மூணாவது வரைக்கும் படிச்சாரு... எங்கப்பா பத்தாவது வரைக்கும் படிச்சாரு... நான் டிகிரி வரை படிச்சிருக்கேன். இன்னைக்கு நல்லா வேலையில தான் இருக்கேன். அதேமாதிரி உங்கையா அஞ்சாவது வரை படிச்சாரு... ஏதோ உங்க அப்பா கொஞ்சம் நல்லா கஷ்டப்பட்டு படிச்சதால எம்.ஏ வரைக்கும் படிச்சிட்டு வாதியாரானாறு. நீ அவரைவிட கொஞ்சம் அதிகமா படிச்சு எம்.சி.ஏ வரை படிச்ச... இப்போ நல்லா வேலையில இருக்க... இதுக்கு பேருதாண்டா முன்னேற்றம்.

ங்கொய்யால எங்கிட்டோ போயி சரக்கை போட்டுட்டாய்னு நெனைக்கிறேன்...

சரக்கும் போடல... ஒரு மசுரும் போடல... எல்லாங்கலந்ததுதாண்டா வாழ்கை. எல்லாரும் படிச்சு டாக்டராவோ, எஞ்சிநியராவோ போனா... மத்த வேலையெல்லாம் எவன்டா பார்ப்பான். மத்ததெல்லாம் வாழ்க்கைக்கு தேவையில்லாததா என்ன? படிப்பாளி, உழைப்பாளி, அறிவாளி, படைப்பாளி, தொழிலாளி எல்லாரும் சேந்ததுதாண்டா உலகம். இது தான் பெருசு... அதுதான் பெருசுன்னு சொல்லி மத்ததெல்லாம் இளக்காரமா பாக்குறது வீனாப்போனவய்ங்க மனசுதாண்டா..


மாப்ள புல்லரிக்குதுடா... என்னடா என்னென்னமோ சொல்ற... ?

அப்பறமென்னடா மயிரு... நீனே சொல்லு... நம்ம ஆளுகளுக்கு அவன்கிட்ட இருக்கதெல்லாமே பெருசு பெருசா வேணும்... பெரிய வீடு... பெரிய காரு... பெரிய டிவி... பெரிய ஃப்ரிட்ஜு-னு லிஸ்டும் பெருசாவே இருக்கும். ஆனா மனசு மாத்திரம் ரொம்ப சிறுசா இருக்கும். அதமாதிரி மத்த எல்லாமே ரெண்டு அல்லது அதுக்கு மேல வேணும்... ஆனா புள்ளைகுட்டி ஒன்னை பெத்துக்குறதுக்கே அழுது பொழம்புவாய்ங்க... அப்பறம் என்ன மசுத்துக்குடா இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிராய்ங்க...? புள்ள பாக்கியம் இல்லாதவங்ககிட்ட கேட்டா தெரியும் புள்ளையோட அருமை... எதுக்கு ஓடி ஓடி உழைக்கிரம்னே தெரியாம திரியிராய்ங்கடா ரொம்பப் பேரு... அதான் கடுப்பு மசிரா வருது...


டாய் அப்புடியெல்லாம் சொல்லாத... நிறைய காசு பணம் இருந்தாத்தானடா எல்லாத்தையும் அனுபவிக்க முடியுது...

என்ன பெருசா அனுபவிக்கிற? நானும் சோறுதான் திங்கிறேன்... நீயும் அதான் திங்கிற... மிஞ்சிப்போனா நீ வேறமாதிரி சுவையில திம்ப... ஆனா கடைசியில கொழுப்பு வந்துருச்சு... சக்கரை வந்திருச்சுன்னு டாக்டர்கிட்ட போயி பணத்தை கொடுப்ப... அதுக்குத்தான அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்ச...? எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... அதுக்கும் தியானம் பண்ட்றேன்... சாமிகிட்ட போயி தீட்சை வாங்குறேன்... நோய் வெரட்ட மந்திரிக்கிரேன்னு போயி அவனுக கால்ல விழுந்து விழுந்து எந்திரிப்ப... பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...

தக்காலி... எங்கயும் போதி மரத்துல படுத்துகிட்டே ஃபோன் பேசுறியா?

இல்லடா மாப்புள.. நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...? ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. சரி அதை விடு... ஏதோ நீனாவது பேசுறதுக்கு நேரம் ஒதுக்குறேன்னு உன்கிட்ட இதெல்லாம் சொன்னேன். இதுக்குமேல சொன்னா எம் மூஞ்சில குத்து விட்டுருவ...

அட வெண்ணை இந்த வாரம் குத்து வாரம்னு உனக்கும் தெரிஞ்சு போச்சா...??
50 comments:

vasu balaji said...

சிரிக்கச் சிரிக்கச் சொன்னாலும் அத்தனையும் உண்மை. :)

கோவி.கண்ணன் said...

அம்புட்டும் யதார்தம்.

:)

கவினன்[Kavinan] said...

உறைக்கிற உண்மைகளைச் சொல்லியிருக்கிறீர்கள், அருமை.

Chitra said...

நக்கல் வெங்காயதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல... நான் சொல்றதுல கொஞ்சமாவது உண்மையிருக்கா இல்லையா...?


.....கொஞ்சம் இல்லை. நிறையவே உண்மை இருக்குதுங்க, மக்கா! பாராட்டுக்கள்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உண்மைதான் பாஸ்..இனிமேல பட்டாபட்டி போடரதில்லைனு முடிவு பண்ணி மூணு நிமிசம் ஆச்சு..

( எதுக்கு?.. அதை துவைக்க தண்ணி, வாஸ்பேசின்..சாரிப்பா..வாசிங் மெஷின்..துணி காயப்போடும் ஸ்டேண்ட்..Etc..etc..)

Anonymous said...

கலக்கல் நண்பா..பழைய நினைவை கிளறி அப்படியே இன்னைக்கு தேவையான சிந்தனையையும் சொல்லிருக்கீங்க.

Sabarinathan Arthanari said...

:) கலக்கிட்டிங்க.

ஆச்சர்யமான விசயம்: எதேச்சையாக நானும் இன்று கல்வி பற்றி எழுதி இருப்பது தான்.

dheva said...

திணற திணற குத்துறீங்களே...அண்ணே.....!

dheva said...

திணற திணற குத்துறீங்களே...அண்ணே.....!

Jey said...

நாம, சாத்ரணமா, ந்ண்பர்களுகுள்ள பேச ஆரம்பிச்ச விஷயம், நல்ல சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க தல. சூப்பர்.

க.பாலாசி said...

எளிமையான வாக்கியங்களால உண்மையப்பூரா சொல்லிட்டீங்க... சிலநேரத்துல யோசிச்சா என்னடா வாழ்க்கையிதுன்னு தோணும்...

புள்ளைங்கள பெத்து வளர்க்கரதவிட இப்ப அதுங்களை படிக்கவைக்கறதுதான் பெரிய விசயமா இருக்கு... நேத்துகூட வால்பையன் இப்டித்தான் பொலம்பினாரு... என்ன பண்றது...

ILLUMINATI said...

//நீயேண்டா பயப்புட்ற... புள்ளை பெக்கப்போற என் தங்கச்சில பயப்படனும். உன்னைய கட்டிக்கிறதுக்கே அது பயப்புடல. இதுக்கா பயப்புடப் போகுது...? //

ஆமா ரோசு!வாஸ்தவம் தான் மச்சி.ஆனா,நீ கோச்சுக்காத. :)

ILLUMINATI said...

//அவனுக தான் லாட்டரியை சொரண்டக்கூடாதுன்னு தடை போட்டுட்டு மத்த எல்லாத்தையும் சொரண்டிகிட்டு இருக்கானுகளே...//

//எப்ப பார்த்தாலும்... இது வாங்கணும், அது வாங்கனும்னு டென்சனா இருந்துகிட்டே எல்லா வியாதியையும் வாங்கிக்குவ... //

//பாத பூஜை-னு அவனுக கால கழுவி விடுவ... இதுக்குத்தானாடா இவ்வளவு கஷ்டப்பட்ட...? அதுக்கு உன் காலையே ஒழுங்கா ஆற அமர கழுவி வீட்டுல சந்தோசமா இருந்துருக்கலாமேடா...//

உண்மை,உண்மை...
சூப்பர் மச்சி...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))
வெளுத்துக் கட்டி இருக்கிய!
வெண்மை!
உண்மை!

சிவாஜி சங்கர் said...

நல்லாருக்குண்ணே.. வெள்ளந்தியா வெளுத்து கட்டிட்டிய.. :)

Thenammai Lakshmanan said...

ரொம்பப் பேரு வாழ்கையில நிமிந்து நிக்கணும்... நிமிந்து நிக்கனும்னே சொல்லி மனசையும் இறுக்கமாக்கிட்டு எதுக்கும் வளைஞ்சு நெளிஞ்சு... நெளிவு சுழிவா வாழத்தெரியாமத்தான் சின்ன சின்ன கஷ்டம் வரும்போதெல்லாம் ஒடிஞ்சு போயிடுராணுக.. //

ரொம்ப யதார்த்தமான பகிர்வு ரோஸ்விக்.. அருமை.

பிரபாகர் said...

அருமை ரோஸ்விக்... உங்களின் இடுகைகளில் மிகவும் பிடித்தவைகளில் இதுவும் ஒன்று...

கலக்கியிருக்கிறீர்கள் உண்மை, யதார்த்தத்தை கைகொண்டு, அழகான வரிகளால் கையாண்டு. வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

அபி அப்பா said...

அருமை ரோஸ்விக்!!! எதார்த்தம் சொல்லும் போது பேச்சு வழக்கிலே சொன்னா தான் எதார்த்தம். அதை அருமையா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு. சில பேருக்கு மசிறு என்கிற வார்த்தை அதிகமா வந்துச்சோன்னு ஒரு மாதிரி இருக்கலாம். ஆனா ரெண்டு அன்னியோன்யமான நண்பர்கள் பேசிக்கும் போது அது இயல்புதான். அருமை!!

Unknown said...

என்னாத்த நிமுந்து நிக்குறது.. ஊரு உலகமெல்லாம் கேட்டுபோச்ச்சு..
ஹி.. ஹி .. நான் மட்டுந்தேன் நல்லவன் ஆமா ..\\

இன்னயிலருந்து நானும் பட்டாபட்டி போடமாட்டேன் ஆமா ...

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. அருமை. அத்தனையும் உண்மை.

சரளமான நடை நண்பரே.

நாடோடி said...

ர‌சித்து ப‌டிக்கிற‌ எழுத்து ந‌டை... அதில் உள்ள‌ விச‌ய‌ங்க‌ள் சிந்திக்க‌ வேண்டிய‌வை.. அருமை..

ராஜவம்சம் said...

சரியாதான் எழுதிறிக்கீங்க அனா நா சிரிச்சிக்கிட்டே படிச்சேன் ஏன்?

வாழ்த்துக்கள் நன்பரே சூப்பர்.

Unknown said...

தலைவரே டயலாக் டெலிவரி டாப் இப்படியே பிக் அப் பண்ணி நம்மள ஹாப்பி in பீக்ல கொண்டுவந்துரனும்!

'பரிவை' சே.குமார் said...

சிரித்துக் கொண்டே படித்தாலும் அத்ஹ்டனையும் எதார்த்தம்.
அருமை...

மயிரு.... வார்த்தையில விளையாடுதே.... சிவகங்கை பக்கமா?

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - ரொம்ப நன்றி பாலா அண்ணே.. :-) அப்பப்ப சிரிக்க சிரிக்கவும் சொல்லணும்-ல அதான்....

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் - ரொம்ப நன்றி கோவியார்... :-)

ரோஸ்விக் said...

கவினன்[Kavinan] - ரொம்ப நன்றி கவினன்... தங்களின் முதல் பின்னூடத்திற்கும். சிங்கையில் இருக்குறீர்களா?? தொடர்புகொள்ளலாமே!
thisaikaati@gmail.com

ரோஸ்விக் said...

Chitra - நன்றிங்க சித்ரா... :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - அப்பு அப்படி ஒரு முடிவை எடுத்துராதீக... பட்டாப்பட்டி போடுறது உங்களை பாதுகாக்க இல்லை... மத்தவங்களை பாதுகாக்க... :-)))

நன்றி பட்டு... :-)

ரோஸ்விக் said...

padaipali - நன்றி நண்பரே! ஓவிய படிப்பு எப்படி போகுது.. ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து... நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்... :-)

ரோஸ்விக் said...

Sabarinathan Arthanari - நன்றி நண்பரே! :-)
கல்வியின் அவசியம் பற்றியும், அதன் முறைகளில் வரவேண்டிய முறையான மாற்றம் பற்றியும் இன்னும் எழுதுவோம். உலகம் உய்யட்டும்.

ரோஸ்விக் said...

dheva - நன்றி தேவா... உங்களைவிடவா குத்துறேன்... உங்கள் கட்டுரைகள் பல சமுதாய நோக்கோடு இருப்பதில் நண்பன் மற்றும் ஊர்க்காரன் என்ற பெருமையும் எனக்குண்டு.. தொடருங்கள். :-)

ரோஸ்விக் said...

Jey - நன்றி ஜெய்... சாதாரண பேச்சு நடைதான் எனக்கும் பிடிக்கும்... அதனால அப்படி எழுதினேன்..

ரோஸ்விக் said...

க.பாலாசி - ரொம்ப நன்றி பாலாஜி... வாழ்கை ஓரளவு எளிதுதான்... நம்ம நாட்டுல ஆளுரவங்க முறையான திட்டங்கள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் எளிதாக்கலாம்.
அவனுக கொடுக்குற நேரடி மற்றும் மறைமுகமான டார்ச்சர்-ல நமக்கு இந்த மனநிலை வருவது இயல்பாகிவிட்டது. வருந்தவேண்டிய விஷயம்.
வால்பையன் இன்னல்களை எளிதா சமாளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.... :-)

ரோஸ்விக் said...

ILLUMINATI - என் வீடு நிலைமை தெரியாம சொல்றீயே மச்சி... :-))
நன்றி இலுமு...

ரோஸ்விக் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி - நன்றி ஜோதிபாரதி அண்ணா. :-)
பெயரிலே ரெண்டு வெளிச்சம் வச்சிருக்கீங்க... :-)))

ரோஸ்விக் said...

Sivaji Sankar - நன்றி அன்புத்தம்பி சிவாஜி. :-)
ரொம்ப நாளாச்சு சிறகுகள் வந்து... வேலைப்பளுவா?

ரோஸ்விக் said...

thenammailakshmanan - ரொம்ப நன்றி தேனக்கா... :-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - ரொம்ப நன்றி அண்ணா... பிடித்தது போல் அவ்வப்போது எழுதுவதில் மகிழ்ச்சி. :-)

ரோஸ்விக் said...

அபி அப்பா - உங்கள் புரிதலுக்கும் ரொம்ப நன்றி அண்ணா...
மசிரு என்ற வார்த்தை கெட்டவார்த்தை அல்ல... ஒருவனை இழிவாக திட்டுவதற்கு உரிய தமிழ் வார்த்தை. இந்த பதிவில் அந்த நண்பர் வேண்டுமானால் கோபித்துகொள்ளல்லாம்... நாம் அல்ல.
பழங்கால தமிழ்களில் கூட இந்த வார்த்தை பயன்படுத்தி இருப்பார்கள். இன்றும் கிராமங்களில் பெரியவர்கள் போயி தலை மயிரை வெட்டிட்டு வா என கூறக்கேட்டிருக்கிரேன். நாமே அதை நாகரீகமல்லாத வார்த்தையாக மாற்றிக்கொண்டுவிட்டோம். :-)
இருப்பினும் இது பெரும்பாலான கிராம பின்னணி கொண்ட நண்பர்களின் நட்பு பேச்சே இது...

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - நன்றி செந்தில். :-)
ஆகா ஒரு குருப்பாத்தான் கெளம்பிருக்கீகளா... :-)))

ரோஸ்விக் said...

செ.சரவணக்குமார் - ரொம்ப நன்றி சரவணா :-)
எப்புடி வருதோ அப்புடி (ப)புடிக்கிற மாதிரி எழுதீரவேண்டியது தானே... ;-)

ரோஸ்விக் said...

நாடோடி - ரொம்ப நன்றி நாடோடி ஸ்டீபன் :-)

ரோஸ்விக் said...

ராஜவம்சம் - நன்றி நண்பரே!
சிரிச்சுகிட்டே படிச்சதை பார்த்தா நீங்களும் இது மாதிரி ஃபோன் பேச்சுல கதிகலங்கி இருப்பீங்களோ? ;-)

ரோஸ்விக் said...

ஆண்டாள்மகன் - கண்டிப்பா தலைவரே! நக்கல் நடையிலேயே எழுதீருவோம்... :-)

ரோஸ்விக் said...

சே.குமார் - ரொம்ப நன்றி குமார் அண்ணே!
உங்கள் சிறு கவிதைகளை நான் ரசிப்பதுண்டு...
ஆம். நீங்க தேவகோட்டையா??

Karthick Chidambaram said...

:)))

ஜெய்லானி said...

இன்னா ரோஸு ஒரு தினுசாதான் போய்கினு கீற

மங்குனி அமைச்சர் said...

me tha 50

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!