Thursday, June 10, 2010

நான் மதுரை வியாபாரி....- புனைவு

மதுரை ஒரு தூங்கா நகரம்.

அங்க நடக்கும் வகைவகையான வியாபாரம்.

நிறைய கடைகளின் வரலாறு பழசு.

ஒவ்வொரு முதலாளியோட அப்ப்ரோச்சும் ஒவ்வொரு தினுசு.

அங்க உள்ள மீனாச்சி அம்மன் கோயிலு தான் அந்த ஊரு வர்த்தக மையம்.

நாலு திசைக்கும் ஒவ்வொரு வாசலிருக்கும்.

ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வாசனை இருக்கும்.
 
பிளைவுடு கடை, இரும்பு பைப்பு கடை, பிளாஸ்டிக் சாமான் கடை, எலக்ட்ரிக்கல் சாமான் கடை, டைல்சு கடை, புத்தகக்கடை, பூக்கடை, ஹார்டுவேர் கடை, அண்டர்வேர் கடை, துணிக்கடை, தூபக்கடை, சாக்கடை, பேக் கடை, கேக்கு கடை, டீ கடை, பெயிண்டு கடை, பொட்டிகடை, போட்டோக்கடை, ஸ்டிக்கர் கடை, ஸ்பீக்கர் கடை, பழக்கடை, பட்டாணிக்கடை, பரோட்டாக்கடை, பாவாடைக்கடை, சிடி கடை, பீடி கடை, கண்ணாடிக்கடை அதுக்கு முன்னாடியும் கடை, டாஸ் மாக் அதுக்கு அடுத்தாப்புல சங்கு மார்க்கு.


அரிசி மண்டி, புண்ணாக்கு மண்டி, எண்ணை மண்டி, பழக்கமிஷன் மண்டி...

எல்லாச் சாமானையும் ஏத்திட்டுப் போக தினுசுதினுசா வண்டி....

இப்படிப்பட்ட மதுரைக்குள்ள போக உங்களுக்கு மனசுவரல??

வாங்க வடக்குமாசி வீதிக்குள்ள... ம்ம்ம்... இதான்ணே எங்கடை... சும்மா உள்ள வாங்க. பரவாயில்லைணே செருப்போடையே வாங்க....


டேய் முருகா... அண்ணனுக்கு அந்த ஸ்டூலை எடுத்துப்போடு...

அண்ணே அப்புடியே ஓரமா உக்காந்து எங்க பொழப்பு எப்புடி ஓடுதுன்னு பாருங்க... உங்களுக்கும் பொழுது போனது மாதிரி இருக்கும்.

முருகா எல்லாரும் டீ சாப்டிகளாடா?

இன்னும் இல்லைண்ணே...

சரி... எல்லாருக்கும் டீ சொல்லு... அண்ணனுக்கும் சேர்த்து... அண்ணே டீயா, காப்பியாண்ணே?

அண்ணனுக்கு காப்பியாம்டா முருகா... நல்லா ஸ்ட்ராங்கா போடசொல்லு...

டேய் குமாரு, நம்ம மினிடாரை கடை வாசல்ல போடாதைன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்றது? ரோட்டுக்கு அந்த சைடு பார்க்கின் பக்கமாப் போட வேண்டியதுதானே... இங்குன போட்டீன்னா ரோட்டுல போறவன் எல்லாம் ட்ராபிக் ஆகுதுன்னு பூல் பூல்னு ஆரனடிச்சிட்டு போவான். பெரிய தலைவலிடா...

இல்லைண்ணே.... இந்த சத்தவுடத்துக்குள்ள எடுத்து அங்கிட்டு போட்றேன்...
டேய் என் செல்போனு அடிக்குது பாரு... எங்க குடோனுக்குள்ள வச்சிட்டம்போல எடுத்துட்டு வா... யாருன்னு பாரு...


இந்தாங்கண்ணே செவகங்கை பாலாண்ணே அடிக்கிறாரு...

ஹலோ அண்ணே சொல்லுங்கண்ணே... ஆமாணே கடையிலதான் இருக்கேன்... வாங்க வாங்க... இங்கதான் இருப்பேன். இப்ப எங்க நிக்கிறீக?... ஓ சரி... சரி... அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க... வாங்க... ஓகேண்ணே.. பை...

ஏண்டா... நேத்து ராத்திரி குஜராத்துல இருந்து கக்கூஸ் கோப்பை லோடு வந்துச்சே... எல்லாத்தையும் பத்தரமா எறக்கீட்டிகளா? எத்தனை ஒடைஞ்சுச்சு?

எறக்கியாச்சுண்ணே... இந்த தடவை அவ்வளவா ஒடசல் இல்ல...

சேட்டு கெடக்கமாட்டானே... இன்னைக்கே காசுக்கு போன் அடிச்சிருவானே....! முருகா இன்னொரு ஸ்டூலை எடுத்து இங்குட்டு போடு... செவகங்க பாலாண்ணே வாராரு... அண்ணே அண்ணே வாங்கண்ணே... எப்புடி இருக்கீக?

நான் நல்லாத்தான் இருக்கேன் மொதலாளி... நீங்க எப்புடி இருக்கீக?

எங்கண்ணே ஒரே அலச்ச... அதான் போனவாரங்கூட கலெக்சனுக்கு வரல... அதுனால வேற பணம் பூராம் மொடங்கி கெடக்கு... ஒருவாரம் தேங்கிப்போனாலே பெரட்டல் உருட்டலுக்கு ஆகமாடேங்குதே... என்னணே ஹார்ட்வேர் சரக்கெல்லாம் ஆர்டர் போட்டாச்சா?

முருகா பாலாண்ணே டீ சாப்புடமாட்டாரு... நிறைய சிரப் ஊத்தி ஒரு சர்பத் போட்டு வாங்கிட்டு வா...

ம்ம். இப்பத்தாண்ணே ஜெயபுஷ்பத்துல போட்டுட்டு வாரேன். அப்புடியே உங்களை பாத்துட்டு, உங்க கடையில கொஞ்சம் படம்போட்ட டைல்சும், அஞ்சாறு கக்கூஸ் கோப்பையும் ஆர்டர் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்.

நல்லதுண்ணே... நீங்க மூணு நாளைக்கு முன்னாடி சொல்லிருந்த பாத்ரூமுக்கு போடுற ஆறுக்காறு கோல்டன் பிரவுன் டைல்சும் பத்து பெட்டி ரெடியா இருக்குண்ணே... ஆர்டரை சொன்னா, ஒண்ணா இன்னைக்கு சாயந்தரமே உங்க ஊரு ரபீக் ராஜா லாரி சர்வீசுல போட்டு விட்டுரலாம்.

ரொம்பவெல்லாம் ஒண்ணுமில்லண்ணே கிச்சன்-ல ஓட்டுறதுக்கு ஃப்ரூட்ஸ், வெஜிட்டபில்சு படம் போட்ட டைல்சு இருவது இருவது பீசும், புதுசா வந்துருக்குல்ல கண் திருஷ்டி படம் அதுல ஒரு பத்து பீசும் போடுங்க... அப்புடியே வெஸ்டன் டாய்லட்டு கோப்பை மாடில வைக்கிற மாடல் மூனும், தரையில வைக்கிறது மாதிரி ஒரு அஞ்சும் சேத்து போடுங்க...

சரிண்ணே வேற வேற கலர்ல கலந்து போட்டுடுறேன். அண்ணே, இப்ப புதுசா சிம்ரன் டிசைன் பாத்ரூம் வால்டைல்சு வந்திருக்குண்ணே.. அதுல ஒரு பத்து பீசு போட்டு விடவா...?

அட போங்கண்ணே... இன்னும் எங்க ஊருபக்கம் பாத்ரூம்ல வால்டைல்சு போடுறதுக்கே ரெடியாகமாட்டெங்கிறாய்ங்க... இதுல வேற சிம்ரன் டிசைனு.. அதெல்லாம் வேணாம்னே...

இருங்கண்ணே போன் அடிக்குது... ஆஹா சேட்டு அடிச்சிட்டானே... "ஹான் ஜி.. போலியே ஜி... அச்சா ஹே... கேசா ஹே... ம்ம்ம் ஆகையா... ஆகையா... மணி??... யா ரெடி ஹே... ரெடி ஹே... ஹமாரே செக்... கல் கிளியர் ஹோஹையா... அச்சா... அச்சா... ஓகே சேட்ஜி... ஓகே.. பை...". சேட்டாய்ங்க ரொம்பத் தெளிவா இருக்காய்ங்கண்ணே... சரக்கை அனுப்பிட்டு உடனே காசுக்கும் போன் அடிச்சிர்றாய்ங்க...

இந்தாங்கண்ணே சர்பத்து...

பார்றா முருகா... உங்க மொதலாளி எங்கிட்ட இருந்து வசூல் பண்ணுறதுக்காகவே... ஹிந்தி எல்லாம் பேசுறாரு... ஹஹா...ஹாஹா...

இல்ல பாலாண்ணே... உங்க நக்கலு இருக்கே... யப்பா சாமி... ஆனா, ஒண்ணுணே போனவாரமும் வசூலுக்கு லயனுக்கு போகததால பணத்துக்கு என்னடா பண்ணுறதுன்னு கையை பெசஞ்சுகிட்டு இருந்தேன்... கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி நீங்க வந்தீங்க... ஹாஹா... ஹாஹா... வேற என்னணே பண்ணுறது... இப்புடித்தான் பொழப்ப ஓட்டவேண்டியதா இருக்கு... இல்லையினா இந்த மதுரையில நம்மளும் ஒரு வியாபாரியா ஓட்ட முடியுமாண்ணே?உங்களுக்கே தெரியும். என்னோட கஸ்டமர்கள் எங்கிட்ட இல்லாத பொருளை கேட்டாக் கூட நான் இங்க மதுரையில இருந்து வாங்கி அனுப்பி விடுவேன். அதுல நமக்கு லாபமெல்லாம் வேணாம்ணே... அந்த காசு ரெண்டு நாளைக்கு நம்ம கையில உருண்டு பெரண்டா போதும். ரொட்டேசனுக்கு ஆகிப்போயிருதுல்ல... அது போதும் நமக்கு.


ஆமா ஆமா ஞாபகம் இருக்கு... நான் மொத மொத உங்ககிட்ட அந்த மாதிரி வேற சரக்கு கேக்கும்போது அனுப்பி விடுறேன்னு சொன்னீங்க. என்ன என்ன பொருள்தான் நீங்க விக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, "மனுசனை தவிர மத்த எல்லாம் விப்பேன்னு" குசும்பா சொன்னீங்க.

ஆமாண்ணே அப்புடி பண்ணலையினா எனக்கு ஏதுண்ணே இந்தக்கடை? கூலிக்கு இன்னொருத்தர்கிட்ட வேலை பாத்துக்கிட்டு இருந்த எனக்கு, இப்புடி ஒழைக்காம இருந்திருந்தா எப்புடி இந்த ஸ்தானம் கெடைக்கும்? நீங்களே சொல்லுங்க?

சரிண்ணே நான் கெளம்புறேன்... நம்ம அயிட்டங்களை இன்னைக்கு ராத்திரியே ரபீக் ராஜா லாரி சர்வீசுல ஏத்திவிட்டுருங்க. போய்ட்டுவாறேன்.


போயிட்டுவாங்க பாலாண்ணே... நான் அனுப்பிவிட்டுறேன்... டேய், பாலாண்ணே சரக்கை இன்னைக்கு ஏத்திவிட மறந்துராதீகடா..

அடடே! நீங்க வேற ஒக்காந்து என் வாழ்க்கையை பாத்துகிட்டு இருந்தீகளே! ஒன்னும் போரடிக்கலையே? ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது... இந்த மதுரையிலன்னு இல்லண்ணே எல்லா ஊர்லயும் இதான் நெலம... நீங்க வேண்ணா இன்னொரு டீ சாப்புடுரீகளா? என்னது கெளம்புரீகளா? சரிண்ணே போய்ட்டு வாங்க. இன்னொரு நாள் பாப்போம்.




64 comments:

ப.கந்தசாமி said...

தம்பி, புனைவுன்னு பாத்தாலே பயமாயிருக்கு, தம்பி, இனிமேக்கொண்டு இப்படி போடாதீங்க, என்னைப்போல பெருசுகளுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப்போகுது.

நானும் மருதையில ஒத்தக்கடையில அஞ்சு வருஷம் வேலை பாத்தமில்ல. கோயலைச்சுத்தி எல்லாக் கடைகளையும் பாத்திருக்கமில்ல.

நல்லா கோளாறா எழுதியிருக்கீங்க, தம்பி

Unknown said...

இந்த பூக்கடையை வைத்து ஏதும் புனைவு எழுதுளைங்க்களா ???

ஜெய்லானி said...

புனைவு பேர கேட்டாலே சொம்மா மெர்சிலா கீது பா இப்ப இன்னான்றே !!

ஜெய்லானி said...

//"மனுசனை தவிர மத்த எல்லாம் விப்பேன்னு" குசும்பா சொன்னீங்க.//

கேட்டுட்டு பக்கத்திலேயே அதுக்கும் கடை போட்டுட போறாய்ங்க...

dheva said...

//அலோ......ஆரு......அட ரோஸ்விக் அண்ணணா....! அம்ம ஊர் பாசையில கலக்கிப்புட்டீகண்ணே....சிவசங்கை பாலாண்ணே சொன்னாரு....வடக்கு மாசி வீதியில நம்ம பெரியப்பு கடைக்கு வந்தீகன்னு.....டைம் கிடைச்சா....காளையார் கோவில் சன்னதி தெருல இருக்க அம்ம கடைக்கும் வாங்கண்ணே.....அட ஒரு நாத்தாச்சும் வாங்காப்பு.....என்னமாச்சு வாங்கி வைக்கிறேன்....இருந்து சாப்பிடு கீப்பிட்டு போங்க.....

வீட்ல எல்லாம் சும்மாயிருக்காகள்ள

கலக்கல் ரோஸ்விக்....! ஊர் ஏக்கத்தை அதிகமாக்கீட்டீங்க....! ரபீக் ராஜா.....லார் பேர கேட்டது.....சின்ன வயசுல டேய்.... நான் தாண்டா...பஸ் டிரைவர்...என் பஸ் பேரு ரபீக் ராஜானு விளையாடினது எல்லாம் ஞாபகம் வருது.....(அவெங்ஞ...பஸ்ஸும் வச்சிருக்காய்ங்கண்ணே..)!

மண்ணின் மணம்... கலக்கல் ரோஸ்விக்!

dheva said...

//அலோ......ஆரு......அட ரோஸ்விக் அண்ணணா....! அம்ம ஊர் பாசையில கலக்கிப்புட்டீகண்ணே....சிவசங்கை பாலாண்ணே சொன்னாரு....வடக்கு மாசி வீதியில நம்ம பெரியப்பு கடைக்கு வந்தீகன்னு.....டைம் கிடைச்சா....காளையார் கோவில் சன்னதி தெருல இருக்க அம்ம கடைக்கும் வாங்கண்ணே.....அட ஒரு நாத்தாச்சும் வாங்காப்பு.....என்னமாச்சு வாங்கி வைக்கிறேன்....இருந்து சாப்பிடு கீப்பிட்டு போங்க.....

வீட்ல எல்லாம் சும்மாயிருக்காகள்ள

கலக்கல் ரோஸ்விக்....! ஊர் ஏக்கத்தை அதிகமாக்கீட்டீங்க....! ரபீக் ராஜா.....லார் பேர கேட்டது.....சின்ன வயசுல டேய்.... நான் தாண்டா...பஸ் டிரைவர்...என் பஸ் பேரு ரபீக் ராஜானு விளையாடினது எல்லாம் ஞாபகம் வருது.....(அவெங்ஞ...பஸ்ஸும் வச்சிருக்காய்ங்கண்ணே..)!

மண்ணின் மணம்... கலக்கல் ரோஸ்விக்!

பிரபாகர் said...

மண் மணத்தோட இயல்பா இருக்கு. கடைகள்ல பக்கத்துல இருந்து பாத்திருப்பீக போலிருக்கு! அருமை.

பிரபாகர்...

Unknown said...

புனைவுகள் வரவேற்கப் படுகின்றன...

இப்படிதான் நாமளும் யாவாரம் பாத்தோம் ரோட்டேசனுக்கு ஆகுன்னு அங்க வாங்கி இங்க வித்து இப்ப கடன்ன ஒரு பயஞ்சு லட்சம் நிக்குது
என்னத்த சொல்ல...

மாதேவி said...

மதுரை கலக்கல்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவு சூப்பர் அப்பு..

ஆமா எதுக்கு பொனைவுனு சொல்லிக்கினு இருக்கீங்க...

பயபுள்ள , மதுரையில..தெருவீதிஉலா போன காட்சி கன்ணுக்கு முன்னாடி விரியுது...

வாழ்க..மதுரைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “ அண்ணன் அஞ்சாநெஞ்சன் “....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யா.. சரியாக 10 ஆவது பின்னூட்டம் இட்ட எனக்கு, மண்ற்கேணி மூலமாக, ஆஸ்திரேலியா டிக்கெட் எடுத்து அனுப்ப முடியுமா?...

அன்புடன்..
உங்கள் நலம்நாடும் பட்டாபட்டி...

Chitra said...

ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது..


....... வாய்ப்பேச்சு ஓகே. ஆனால் உழைப்பு என்று ஏதோ சொல்றீகளே....... நான் உருப்பட்டாப்புலத்தான்

Mahi_Granny said...

மதுர வியாபாரி நெல்லைக்கும் ஒரு நடை போயிட்டு வாங்க . அருமையான நடை

எல் கே said...

nalla irukuneee

vasan said...

ம‌துரையில‌ இப்ப‌ல்லாம், வினைல் போஸ்ட‌ர் தொழில்த‌ன்
ஜெக‌ஜோதிய‌ ந‌ட‌க்குதின்னாங்க‌!! ம‌ற்ற‌ சோலியும் வ‌ழக்கமா
பாக்குறாக‌ளா? அப்ப‌ச் ச‌ரி.
ஸ்டூல்ல‌ உக்காந்து காபி குடிச்ச‌ மாதிரி
அனுப‌விக்க‌ வைத்துவிட்டீர்க‌ள், வார்த்தைக‌ளால்.

Paleo God said...

// பரவாயில்லைணே செருப்போடையே வாங்க...//

இதுலயே நுணுக்கிட்டீங்க.:))
அருமை ரோஸ்விக்.

நாடோடி said...

ம‌துரை ம‌ண்வாச‌னை ந‌ல்லாவே இருக்குது ரோஸ்விக்...

Jey said...

மருத பேச்சு நட நல்லருக்குண்ணே.

ஈரோடு கதிர் said...

ஆஹா... அருமை

MUTHU said...

ரோசு கலக்கிட்ட

ILA (a) இளா said...

நாங்களே கடையில உக்காந்திருந்த மாதிரி இருந்துச்சுங்க.

vasu balaji said...

அண்ணே! டைல்ஸ் இன்னும் வந்து சேரலிங்கண்ணே:))

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - வாங்க ஐயா... புனைவு இவ்வளவு பயத்தை கிளப்பும்னு நினைச்சுப்பாக்கலையே...
மதுரையில நல்லா ஆட்டம் போட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க...
நன்றி ஐயா.

ரோஸ்விக் said...

SUPPURATHINAM - அடுத்து உங்களுக்காக வேணும்னா ஒரு புனைவை போட்டுருவோம். :-)

ரோஸ்விக் said...

ஜெய்லானி - என்ன சாமி... புனைவுன்னா எல்லாரும் இப்புடி பயபுடுரீக... :-))

நம்ம ரெண்டுபேரும் பார்ட்னரா சேர்ந்து மனுசக் கடை போடுவமா??
நன்றி ஜெய்லானி.

ரோஸ்விக் said...

dheva - ஆஹா ஊரு ஞாபகம் வந்திருச்சா தேவா! :-) அம்ம கடைக்கு ஒரு நாள் வந்துட்டாப் போச்சு...
ரபீக் ராஜா பஸ் வித்தாச்சு... இப்போ சோலைமலை-ங்கிற பேருல ஓடுது...
நன்றி தேவா.

ரோஸ்விக் said...

பிரபாகர் - நன்றி அண்ணா... நிறைய அனுபவம் இருக்கு...

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - ஆமா தோஸ்த்து... வியாவாரத்துல உஷாரா இருக்கணும்... இல்லையினா தூக்கி சாப்புடுப்புட்டு போயிருவாய்ங்க...
நன்றி செந்தில்.

ரோஸ்விக் said...

மாதேவி - மதுரை எப்போதுமே கலக்கல்தான் மாதேவி... நன்றி.

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - நன்றி பட்டா...
புனைவுக்கு நீயுமா பயப்புடுறே??
நெசாமாவாயா சொல்றே?....
மதுரைக்கு சுதந்திரமா...??? அது எப்பையா கெடைச்சுச்சு??

10 வது பின்னூட்டத்துக்கு இந்த தடவை மணற்கேணி பரிசு வழங்காதுயா... ரூல்ஸை மாத்திட்டோம்.

ரோஸ்விக் said...

Chitra - எனக்கும் வாய்ப்பேச்சு தான் சித்ரா... உழைப்பை ரெண்டு வாரமா தேடிக்கிட்டு இருக்கிறேன்... :-)))
நன்றி சித்ரா.

ரோஸ்விக் said...

Mahi_Granny - நெல்லைக்கு ஏற்கனவே ஒரு நடை போய்ட்டு வந்துட்டேன்... திரும்பவும் உங்க விருப்பத்துக்காக நம்ம அண்ணாச்சி கடைக்கு போய்டுவோம்...
நன்றி மகி.

ரோஸ்விக் said...

LK - தேங்சுண்ணே... :-)

ரோஸ்விக் said...

vasan - ஆமா சார்... அந்த ஊர்ல எல்லா வியாபாரமும் கொடிகட்டி பறக்கும். வினைல் போஸ்டர் எண்ணிக்கை அந்தப் பக்கம் கவுரவத்தின் சின்னமா போச்சு... "அஞ்சாநெஞ்சன்" மட்டுமில்ல... "அய்யம்பட்டி நோன்ஜானும்' போஸ்டர்ல ஜொலிக்கிராணுக.
நன்றி சார்.

ரோஸ்விக் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ - நிஜமாவாண்ணே! :-) நன்றி சங்கர் அண்ணா..

ரோஸ்விக் said...

நாடோடி - மண்ணு மனத்தா சரி ஸ்டீபன். நன்றி. :-)

ரோஸ்விக் said...

Jey - நன்றி ஜெய். :-)

ரோஸ்விக் said...

ஈரோடு கதிர் - நன்றி கதிர் :-)

ரோஸ்விக் said...

MUTHU - நன்றி முத்து... :-)

ரோஸ்விக் said...

ILA(@)இளா - அந்த உணர்வை உண்மையிலே குடுத்திருந்தா ரொம்ப மகிழ்ச்சி இளா... :-) நன்றி.

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - இன்னும் வரலையாண்ணே... உங்க கடைப்பையனை விட்டு ரபீக் ராஜா லாரி சர்வீஸ்ல கேட்டுட்டு வரச்சொல்லுங்க... வர வர ஒழுங்கா சரக்க எறக்க மாட்டேங்கிறாய்ங்க போலையே...
நன்றி பாலாண்ணே...

ILLUMINATI said...

கலக்கல் ரோசு!கதை சொன்ன நடை அருமை.

அண்ணாமலை..!! said...

நல்ல புனைவு!
நல்ல கட்டுரைக்கு
உங்க ஊர்க்காரனின் வாழ்த்துகள்ங்கோவ்!

ILA (a) இளா said...

சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்படியே கடை வீதில போய் உக்காந்துட்டு வந்த உணர்வு......எங்க அப்பா பஞ்சு வியாபாரி (கோயம்புத்தூர்) .... சின்னதுல அவர் கூட கடை வீதி பஞ்சு புரோக்கர்க கடைக்கு போனப்ப நடந்தது தான் கண்ணு முன்னால வந்தது... எப்படிங்க இப்படி எதார்த்தமா எழுதறீங்க... அருமை...

ரோஸ்விக் said...

sinhacity - எனது தளம் இடம்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி :-)

ரோஸ்விக் said...

ILLUMINATI - நன்றி இலுமு. :-)

ரோஸ்விக் said...

அண்ணாமலை..!! - நன்றி நண்பரே! பாசக்காரய்ங்க... :-)

ரோஸ்விக் said...

ILA(@)இளா - எனது இந்த புனைவை உங்கள் தளத்தில் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி இளா. ரொம்ப நன்றி... :-)

ரோஸ்விக் said...

அப்பாவி தங்கமணி - உங்களுக்கு அந்த உணர்வுகளை இந்த வரிகள் தந்திருந்தால் ரொம்ப சந்தோசம் அப்பாவி? தங்கமணி ;-)
தானா வருதுங்க அம்மணி...
நன்றி தோழி.

Veliyoorkaran said...

பங்காளி...புனைவுன்னா என்னாயா...? பூனை மாதிரி அது ஒரு பூச்சியா...?? :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Veliyoorkaran said...

பங்காளி...புனைவுன்னா என்னாயா...? பூனை மாதிரி அது ஒரு பூச்சியா...?? :)

//

இருக்காது மச்சி.. இப்படியிருந்தா..அது பேர்ல ஒரு கட்சி ஆரம்பிச்சிருப்பானுகளே..

இது வேற என்னவோ மேட்டர் போல தெரியுது..

எந்த ஒரு பிரபல பதிவரை கேட்டாலும் சொல்ல மாட்டீங்கிறாங்க...

ரெட்டைக்கு ஒரு போணை போட்டு கேளு..ஏன்னா , நம்ம குரூப்ல நாலெழுத்து படிச்சவன் அவந்தான்...

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் போடுகிறேன் , (சாரி ரோஸ் ஒரு வாரம் நான் லீவு அதுதான் லேட் )

☼ வெயிலான் said...

கலக்கலா இருக்குது ரோஸ் விக்!

Kousalya Raj said...

நான் ரொம்பவே லேட், மதுரை தமிழ் அட்டகாசம் , மதுரைல ஒரு ரவுண்டு வந்த மாதிரி இருக்கு. நன்றி

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா நீ இன்னும் தூங்கி முளிக்கலையா ???, அடுத்த பதிவ போடு

'பரிவை' சே.குமார் said...

ரோஸ்விக் அண்ணே...

நம்ம மதுர பேச்சு வழக்குல கலக்கிட்டீங்கள்ல... அட ஊருக்கு வந்தப்போ மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தேன் தெரிஞ்சிருந்தா கடைக்கு வந்திருப்பேனே... நல்ல ஜிகர்தாண்டாவா வாங்கி கொடுத்திருப்பீங்கள்ல. தெரியாம போச்சேன்னே... நம்ம வூட்டுக்காரம்மா வீடு மதுரைதான் அடுத்த தடவை வரும்போது கடைக்கு வாரேண்ணே. ஜிகர்தாண்டா மறந்துடாதீங்க. அப்புறம் நாங்க கோவக்காரனாயிடுவோம். தெரியுமுல்ல.

ரோஸ்விக் said...

Veliyoorkaran - புனைவுன்னா பூனையா, புழுவான்னு ஒரு பதிவு போட்டு சொல்றேன் மச்சி...

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - மங்கு நீயாவது பரவாயில்லை... ஒரு வாரம் தான் லீவு.
நான் மாசக்கணக்குல லீவு மாமு. :-)
பொழைப்புதான்யா முக்கியம்.

ரோஸ்விக் said...

வெயிலான - ரொம்ப நன்றி தலைவரே... :-) ரொம்ப மகிழ்ச்சி.

ரோஸ்விக் said...

Kousalya - ரொம்ப நன்றி கௌசல்யா... :-)

ரோஸ்விக் said...

ஜெய்லானி - விருதுக்கு ரொம்ப நன்றி ஜெய்லானி.

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - ரொம்ப பிசி மங்கு... ஒரு முக்கியமானா முயற்சில இருக்கேன்.

ரோஸ்விக் said...

சே.குமார் - குமார் அண்ணே! ஜிகிர்தண்டா மட்டுமில்லண்ணே, வடை, பஜ்ஜி எல்லாம் உண்டு... வாங்க...
என்ன ஒன்னு எனக்கு அங்க கடை இல்ல... :-)
ஆனால், நான் மதுரை போனா இதெல்லாம் வாங்கித்தர எனக்குத் தெரிஞ்ச நிறைய கடைகள் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் போயி... வயித்த ரொப்பிகிட்டு வந்திருவோம். சரியா! :-)