Wednesday, December 9, 2009

ஆட்டோ மீட்டருக்கு சூடு வைப்போம் வாங்க...

மக்கா, நம்ம ஊர்ல எதுக்கு பயப்படுரமோ இல்லையோ ஆட்டோவுக்கு மட்டும் ரொம்பவே பயப்படுவோம். அய்யய்ய...அரசியல் வியாதிகளை தாக்கி நம்ம பதிவு எழுதும்போது சொல்லுவாங்களே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு நான் அதை சொல்லலை. அதுக்கெல்லாம் நம்ம பயந்தா பதிவு எழுத எதுக்கு வரனும்???

நான் சொன்னது, ஆட்டோக்காரன் போடுற மீட்டருக்கு பல பேரு பயப்படுவாங்க. சென்னையில மட்டுமில்லாம, இந்தியாவின் பெரிய நகரங்கள்ல ஓடுற ஆடோக்கள் எல்லாம் அதை ஓட்டுற டிரைவருக்கு சொந்தமானது இல்ல. சில லோக்கல் அரசியல் பெரிய (தறு) தலைகளுக்கும், காவல்துறையைச் சார்ந்த துரைகளுக்கும் சொந்தம். ஐயா நான் சில நல்ல முதலாளிகளை இங்க குறிப்பிடல. அப்படி நல்ல வழில பொழைக்கிரவங்க மனசு வருத்தப் படாம போயி சாப்பிட்டிட்டு பொழைப்ப பாருங்க.

இப்படி பல ஆட்டோக்களுக்கு முதலாளியா இருக்கிறவங்க அந்த ஆட்டோவை ஓட்டத் தெரிந்த(?) சிலருக்கு வாடகைக்கு விடுவாங்க. சவாரி வருதோ வரலையோ அது பத்தி அவங்களுக்கு கவலை இல்ல. ஆனா கொடுக்க வேண்டிய தொகைய சரியா கொடுத்திடனும். இப்படி ஒரு முதலாளிக்கிட்ட வேலை பாக்குற பல ஆட்டோ டிரைவருங்க அவங்களுக்கு அடியாள் வேலை பார்ப்பது உபரி பலன். எல்லாம் முதலாளி விசுவாசம் தான். இப்படி சில பல அடிபொடிகளோட இருக்கதால இயல்பாவே அவருக்கு அரசியல் பலமும் வந்துடும்.

ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பகல்ல ஒருத்தரும், இரவுல ஒருத்தரும் கூட ஓட்டி பிழைப்பாங்க. பெரும்பாலான நகரங்கள்ல ஆட்டோவுக்கு மீட்டர் போட்டு ஒட்டுரதில்ல. அரசு விதிய(?) கடை பிடிக்காம வாழ்வது தானே நம்ம விதி...! இப்படி முறையா ஓட்டி சம்பாதிக்கிற காசு கட்டுபடியாகுறதில்ல... சிலருக்கு கட்டுபடி ஆனாலும் அந்த வருமானம் போதிய அளவு இல்ல..(இந்த போதிய அளவுக்கு எப்போதுமே உயர் எல்லை என்பதில்லை). அதுனால, நம்ம குதர்க்கமா யோசிக்கிற புத்திய வச்சி கண்டுபிடிச்சது தான் இந்த மீட்டருக்கு சூடு வைக்கிற வேலை.

சில சமயம் நம்ம மக்கள் மீட்டர தொட்டு பாத்துட்டு... என்னப்பா மீட்டர் ஆம்ப்லேட் போடுற அளவுக்கு சூடா இருக்கு... அப்படின்னு நக்கலா கேக்குறது உண்டு. நம்மள்ள பல பேரு இவங்க என்ன ஒவ்வொரு சவாரி முடிஞ்ச உடனே பீடி, சிகரட்ட பத்த வச்சு சூடு வைப்பாங்கலோனு நினைப்பதுண்டு. ஆனா, சூடு என்பது சரியான வார்த்தை இல்ல. அது "ஜூட்".

ஆட்டோ மீட்டருக்கும், ஆட்டோ சக்கரத்திற்கும் இடையே ஒரு வயரு இருக்கும். இது சில பல பற்ச்சக்கரங்களின் மூலம் தொடர்ந்து இயங்கி நம்ம ஆட்டோ மீட்டர்ல காசு எவ்வளவு கொடுக்கணும்னு காட்டும். இந்த பற்ச்சக்கரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுல இருக்கணும். அதன் மூலம், ஆட்டோ இயங்க ஆகும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் கணக்கிடப்பட்டு குறைந்த பட்ச கட்டணம், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப் படனும்.

இந்த பற்ச்சக்கரங்கள் பெரிதாக(அதாவது குறிப்பிடப் பட்ட அளவில்) இருந்தால் மீட்டரின் கட்டணம் உயர சிறிது நேரம் பிடிக்கும். இந்த பற்ச்சக்கரங்களின் அளவுகளை நம்ம மெக்கானிக் உதவியுடன் சிறிய அளவுகளில் மாற்றி அமைத்தால் அந்த பற்ச்சக்கரத்தின் சுற்றும் நேரம் குறைந்து மீட்டரில் பணம் கூடுதலாக காண்பிக்கும். இதற்கு "ஜூட்" வைத்தல் என்று பெயர். அதாவது ஜூட் என்றல் வேகமாக. இதைத் தான் நம்ம...முக்கியமா சென்னை மக்கள் அவர்களது தமிழில் (ஸ்டைலில்) "சூடு" என்று மாற்றிவிட்டார்கள். இந்த ஜூட் வைக்கும் கலையை(?) அந்த ஆட்டோ முதலாளிகளும் அறிந்து கொண்டு இதை ஊக்கப் படுத்துகின்றனர். இதனால், வழக்கமாக வசூலிக்கும் நாள் வாடகையை விட கூடுதலாக ஓட்டுனர்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். அந்த டிரைவர்களுக்கு ஏமாற்று வழியில் கிடைத்த இந்த பணம் இப்போது கிடைப்பதில்லை. எல்லாம் முதலாளிகள் வசம். அதனால் தான் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களில் மீட்டர் போட மறுக்கிறார்கள். டிஜிட்டல் மீட்டர் வைக்குமாறு அரசாங்கம் வற்புறுத்தினாலும்(?) தங்களின் அரசியல் செல்(லா)வாக்குகளால் அதை கடைபிடிப்பதில்லை.


இப்படி புதுப்புது மாறுதல்களை அரசாங்கம் செயல்படுத்தினால், புதிய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து அந்த துறை சார்ந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகா(ர)(வியாபா)ரிகளுக்கும் கப்பம் மொத்தமாக வந்துவிடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாறுதலை கடைபிடிக்காத ஆட்டோ ஒட்டுனர்களிடமிருந்தும் தவணை முறையில் அங்காங்கே ரோடுகளில் மறித்து தண்டனைத் தொகையாக எந்த அரசு ரசீதுகளும் இல்லாமல் வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

ஐயோ நான் ஜூட்... அட ஒட்டு போட்டுட்டு நீங்க ஜூட்டுங்கப்பா... :-)
11 comments:

VISA said...

இவ்வளவு நாளா இந்த சங்கதி எனக்கு தெரியாது. நல்ல தகவல். நானும் சூடு சூடுன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

vasu balaji said...

இப்ப வாய்ல இருக்குற பல்லுல ஜூட் வைக்கிறாங்க போல. முன்னல்லாம் இவ்வளவு வாடகைன்னா வேணாம்பான்னா கம்னு போவாய்ங்க. இப்ப திட்டிட்டில்ல போறான்.=))

Nan said...

மீட்டருக்கு பின்னாடி இவ்வளவு விஷயமா .. கலக்குங்க பங்கஸ்

க.பாலாசி said...

//சிறிய அளவுகளில் மாற்றி அமைத்தால் அந்த பற்ச்சக்கரத்தின் சுற்றும் நேரம் குறைந்து மீட்டரில் பணம் கூடுதலாக காண்பிக்கும். இதற்கு "ஜூட்" வைத்தல் என்று பெயர்.//

இதுல இவ்வளவு வேலையிருக்கா....பயனுள்ள தகவல்தான்...(நானும் ஒரு ஆட்டோ வாங்கணும்..)

புலவன் புலிகேசி said...

தல நானும் சூடுன்னுதான் நெனச்சிட்டிருந்தேன்....நல்லா சொன்னீங்க போங்க..

ரோஸ்விக் said...

VISA - புது புது சங்கதி தெரிஞ்சுக்கிரதுதான் வாழ்க்கை தல.
:-) மிக்க நன்றி.


வானம்பாடிகள் - அண்ணேன்! நீங்க சொல்றது உண்மை தான். அவய்ங்க எங்க தான் படிச்சிட்டு வருவாய்ங்களோ அந்த வார்த்தைகள...:-)

Nan - பங்காளி, மீட்டருக்கு பின்னாடி பல மேட்டர் இருக்குது...:-)

க.பாலாசி - நண்பா ஆட்டோ வாங்கின பிறகு மீட்டர் போடாம என்ன கூட்டிகிட்டு ஊர் சுத்தி காமிங்க...:-)


புலவன் புலிகேசி - தல இது மாதிரி ஒரு மீட்டர் சிஸ்டம் நம்ம அப்றைசலுக்கு வச்சா ரொம்ப நல்ல இருக்கும். நம்மளும் சூடு வச்சிடலாம். :-)

Chitra said...

இப்படி புதுப்புது மாறுதல்களை அரசாங்கம் செயல்படுத்தினால், புதிய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடமிருந்து அந்த துறை சார்ந்த அரசியல் வியாதிகளுக்கும், அதிகா(ர)(வியாபா)ரிகளுக்கும் கப்பம் மொத்தமாக வந்துவிடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மாறுதலை கடைபிடிக்காத ஆட்டோ ஒட்டுனர்களிடமிருந்தும் தவணை முறையில் அங்காங்கே ரோடுகளில் மறித்து தண்டனைத் தொகையாக எந்த அரசு ரசீதுகளும் இல்லாமல் வசூலிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. .....................சந்தேகம் என்ற பெயரில், இப்படியா விஷயங்களை அம்பலம் ஆக்குறது? நடப்பதை பாத்து உங்க ரத்தம் சூடாகி போவது தெரிகிறது.

வால்பையன் said...

இது தான் மேட்டரா!?

விளக்கமா சொன்னதுக்கு நன்றி தல!

ஸ்ரீராம். said...

மீட்டரை மீட்டர் போட்டு அளந்துட்டீங்க பாஸ்...

ரோஸ்விக் said...

Chitra - ரொம்ப நன்றிங்க...
அமெரிக்காவை தன் பதிவுல கதிகலங்கடுச்ச புள்ள நம்ம ஆட்டோ மேட்டருக்கும் விட்டு வைக்கலையே! :-)


வால்பையன் - வாங்க தல. அப்ப நம்ம ரெண்டு ஆட்டோ வாங்கி சூடு வச்சிருவமா?? :-)

ஸ்ரீராம். - பாசு... நம்ம மீட்டர் போட்டு அளந்தா... அந்த ஆடோக்காரங்க கிலோமீட்டர் அளவுல அநியாயம் பன்றாங்க.. :-)

கிரி said...

எனக்கு ஆட்டோ என்றாலே கடுப்பு தான்.. அதென்னமோ எனக்கு ஆட்டோ ல போன ஓட்டுனர் கூட எப்போதும் சண்டை தான்.. இந்த இம்சைக்கு பயந்து நடந்தே போனாலும் போவேனே தவிர ஆட்டோல போக மாட்டேன்.