"ப்ரொடெஸ்டென்ட்" இயக்கத்தை நிறுவியவர் 'மார்டின் லூதர்'
பைபிளில் குறிப்பிடப்படும் மிக வயதான மனிதனின் பெயர் மெதுசீலா. வயது 969 ஆண்டுகள்.
நியூசிலாந்தில் உள்ள இராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.
"அமைதிக் கடல்" சந்திரனில் உள்ளது.
கங்காருவினால் தனது வாலை தரையில் படாமல் உயர்த்திக் கொண்டு தாவ முடியாது.
"கேரா" என்பதிலிருந்து 'கேரளம்' வந்தது. 'கேரா' என்றால் தேங்காய் என்று அர்த்தம்.
"சகாரா பாலைவனம்" ஆண்டுதோறும் தெற்கே 50 கி. மீ. தொலைவு வளர்வதாக கூறப்படுகிறது.
தாயின் வயிற்றில் குழந்தையொன்று கருத்தரித்த 18வது நாளிலேயே அதன் மூளை வளரத்தொடங்கி விடுகிறதாம்.
"பாம்பாய் கக்கூஸ்" என்றழைக்கப்படும் நவீன கழிவறை 11ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்தது.
பல்துலக்க பயன்படும் பிரஷ் 1780-ம் ஆண்டில் "வில்லியம் அட்டீஸ்" எனும் தோல் வியாபாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
"கிளாஸ் ஸ்நேக்" என்பது கண்ணாடியோ, பாம்போ அல்ல. அது ஒரு வகைப் பல்லி.
"பிரெய்ரி டாக்" என்பது நாய் இனத்தைச் சேர்ந்தது அல்ல. அது கொறிக்கும் விலங்கினம்.
"லேடி பர்டு" என்பது பறவை அல்ல. அது ஒரு வண்டு.
"பிளையிங் பாக்ஸ்" என்பது நரி அல்ல. அது ஒருவகை வெளவால்.
விமானத்தைக் கண்டுபிடித்த "ரைட் சகோதரர்கள்" இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.
தைவானில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் பின் மண்டையில் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இரண்டரை சென்டிமீட்டர் மழை பெய்ய மேகத்திலுள்ள நீரின் அளவு 25,000 டன்களாகும்.
உலகளவில் மருத்துவக் கல்லூரியில் "சாரணர் இயக்கம்" உள்ளது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மட்டுமே.
உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
12 comments:
நயம்மிகு தகவல்கள்
வித்தியாசமான தகவல்கள்
"உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்". ஆனால் எந்த நாட்டிலும், ஒரு மலையாளி யைப்போலவோ, ஒரு பஞ்சாப் சிங் கைப்போலவோ ஒற்றுமை யாய் இருப்பதில்லை.
//"உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்". ஆனால் எந்த நாட்டிலும், ஒரு மலையாளி யைப்போலவோ, ஒரு பஞ்சாப் சிங் கைப்போலவோ ஒற்றுமை யாய் இருப்பதில்லை.//
முற்றிலும் உண்மை!
ஆமா, ரைட் பிரதர்ஸ் ஒரு வேளை Gayவா இருந்திருப்பாங்களோ?
அருமையான பதிவு , இது போல நிறைய போடுங்கள் உருப்படியான டைம்பாஸுக்கு உதவும்.
நன்றி
பயனுள்ள தொகுப்பு நண்பரே!
பயனுள்ள தகவல்கள்.
பின்னோக்கி
Mouthayen
கலையரசன்
hayyram
கபிலன்
Robin
தங்களின் வருகைக்கு நன்றிகள் பலப்பல. . .
Mouthayen - தங்களின் கருத்தை வழிமொழிகிறேன். நம் தலைமுறையிலாவது ஒற்றுமையாக இருக்க முயல்வோம்.
கலையரசன் - தங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை...:-) அவங்க பறக்குறதுக்கு ஆசைப் பட்டதுனால இருக்குறதை மறந்துட்டாங்களோ?
பயனுள்ள அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பயனுள்ள அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.//
தோழியின் வருகைக்கு நன்றிகள்! அடிக்கடி வருக....ஆலோசனைகள் தருக!!
//விமானத்தைக் கண்டுபிடித்த "ரைட் சகோதரர்கள்" இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.//
Surprised!
எங்கிருந்து மகனே இதெல்லாம் எடுக்கிறீங்க?நல்ல,தகவல்கள்!
Post a Comment