Saturday, March 5, 2011

கோர்ட்டு வாசல் கோகிலவாணி (ஆகாசவாணி எனக்குப் பிடிக்காது)...

ரொம்ப நாள் கழிச்சு எழுதவந்துருக்கேன்... எழுத ஒன்னும் சரக்கில்ல... அதான் அடங்கிட்டான்-ன்னு சிலர்  சொன்னதும்  காதுக்கு  வந்துச்சு... 
சரக்கை (டைப்)அடிச்சு எழுதிப் பிழைக்க நான் இலக்கியவாதியுமில்ல... ஓட்டுக்காக அலைஞ்சுகிட்டு இருக்க அரசியல்வியாதியும் இல்ல..

பதிவு எழுதாம எத்தனை நாள் இருந்தாலும் தினமும் முக்கியமா போகவேண்டியது எல்லாம் முக்காமலே போச்சு. (ச்சீ பட்டாப்பட்டி எபெக்டு). லீவ் லெட்டர் எழுதிப்போடாம லீவு எடுத்தா பிளாக் ஹெட்மாஸ்டர் அடிக்கமாட்டருங்கிற உண்மையும் தெரிஞ்சுபோச்சு. நாங்கெல்லாம் பதிவர்கள்னு பகுமானமா சொல்லிக்கிட்டு திரிஞ்சாலும்... பலபேரு பள்ளிக்கூட பக்கிக மாதிரி சண்டைபோட்டுக்கிட்டுதான் திரியுதுக. சரி எல்லாத்தையும் விடுங்க. எதுக்கு நம்ம பதிவரசியல் பேசிக்கிட்டு... தேசிய அரசியலுக்குப் போயிடுவோம்.

முக்கியமா இந்த பதிவு எழுதவந்ததே நம்ம உச்சநீதி மன்றத்தின் சில நடவடிக்கைகளைப் பாராட்டத்தான்.

ரொம்ப காலமா இந்த நீதித்துறையோட கருப்பு கோட்டுக்குள்ள கவருமெண்டுதான் ஒழிஞ்சிருக்குன்னு நம்ம பொதுஜனம்  நினைச்சதுண்டு. இப்போ, எப்போவாவது அங்கங்க நீதிமன்றம் சரியான விதத்துல கரம், சிரம், புறம் நீட்டும்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குது. அதை எப்போதும் (வாடகைக்காவது) கடைப்பிடித்து நீதியை நிலைநாட்டனும்னு நாங்க விரும்புறோம். நீதித்துறை நீதிபதிகள்தான் ஜனநாயகத்தோட துரை. உங்களில் இனியும் படியவேண்டாம் ஏதும் கறை. நாயகளுக்கு மட்டும்தான் தேவை பொறை.


முதல் பாராட்டு - லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பதவிவகித்த தாமஸ் அவர்களின் பதவி செல்லாது என்று மண்ணுமுட்டிகளுக்கும் உறைக்கும் வண்ணம் உரக்க சொல்லியதற்கு. பள்ளிக்கூட வகுப்புகள்-ல ரொம்ப சேட்டை பண்ணுற பசங்களை வகுப்புத்தலைவராப் போட்டா அவனையும் அடக்கிறலாம், அனைவரையும் அடக்கிறலாம்னு ஒரு முறை பின்பற்றுவாங்க. அதே முறையை இங்கும் பின்பற்றலாம்னு நினைச்சாங்களோ என்னமோ!? மன்மோகன் சிங் அரசியலுக்கு முன்னால எங்கோ பேராசிரியராக இருந்ததாக எப்போதோ படித்த நினைவு. அதனால இருக்குமோ? அவருக்கு இந்த பதவி வழங்கிய இந்த மெத்த படித்த பதருகளை எப்படி தொடர்ந்து நாடாள விடுவது என்று புரியவில்லை.


இரண்டாவது பாராட்டு - ஸ்பெக்ட்ரம் ஊழலை முறையாக விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு கிடுக்குப்பிடி போட்டதற்கு. கொஞ்சிகேட்டாலும், கெஞ்சிக்கேட்டாலும் அந்த பிடியை மட்டும் தளர்த்திராதீங்க எசமான். ஏன் அடிச்சுக்கூடக் கேப்பாய்ங்க. நீங்க அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.

மூன்றாவது பாராட்டு - கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் விவரங்களை குண்டிக்கு அடியில் நாற்காலியாக போட்டு உட்கார்ந்திருக்கும் பதவி வெறிபிடித்த அரசியல் தலைவலிகளை என்னாடா ஆச்சுன்னு ஒரு சவுண்டு விட்டதுக்கு... தொடர்ந்து கேளுங்க. இவனுகளுக்கு காது கொஞ்சம் மந்தம்.
 
இதுமாதிரி சிற்சில இடங்கள்ல பாராட்டும்படியா இருந்தாலும் இன்னும் பல நேரத்துல சட்டத்தோட சட்டைப்பாக்கெட்டு ஒருசில பணம்தின்னும் கருப்பு ஆடுகள்கிட்ட மாட்டிக்கிறது வருத்தமாதான் இருக்கு. எத்தனையோ விஷயங்கள்-ல விசாரணைக்கமிசன் வைக்கிறதும்... அந்தக் கமிசன் கமிசனைவாங்கிகிட்டு போயிடுறதும் நல்லதாத் தெரியலை. ஒருவேளை கமிசன்-ங்கிற பேரு ராசியோ என்னமோ. மொதல்ல அதை மாத்துங்க.

நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்காரியா... சர்க்காரியா-னு என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குது ஆனா கழக உடன்பிறப்புகளே அட அது யாருயான்னு கேக்குற நிலைமையிலதான் அதோட செயல்பாடுகள் இருக்குது.
அதேமாதிரி போபர்ஸ்... போபர்ஸ்-ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாய்ங்க. எங்க அப்பத்தா அது ஏதோ பெரிய மணிபர்ஸ்-னு நினைச்சுகிட்டே வாழ்ந்துக்கிட்டு இருக்குது. அந்த போபர்ஸ் பிரச்னையை பலகாலமா மினிபஸ் மாதிரியே நகத்திக்கிட்டு திரியுது நம்ம நாடு. இதுவரை கிளைமேக்சை காட்டாமலே எல்லா பிரச்சனையையும் ரொம்ப  வருசத்துக்கு  ஒட்டிகிட்டே இருந்தா எப்படி. சட்டுப்புட்டுன்னு சுபம் போடுங்க. அட முடிவு நம்ம மக்களுக்கு சுபமா இருக்கட்டும்.
37 comments:

vasu balaji said...

குவட்டரோச்சிய விட்டுட்டாங்களாம்ல. ஃபோஃபார்ஸ்னா இனி காந்தி செத்துட்டாராம்பாய்ங்க=))

மாணவன் said...

வணக்கம் அண்ணே நலமா?

:)

Veliyoorkaran said...

ரோஸ்விக் ஒழிக...!
திசைகாட்டி ஒழிக...!

காங்கிரஸ் வாழ்க...!
திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க...!

:)

Veliyoorkaran said...

மேல போட்ட கமெண்ட்ட சீரியசா எடுத்துகிட்டு எந்த வென்னையாச்சும் சண்டைக்கும் வந்தால், அவர பட்டாப்பட்டி தலைமையில் ஒரு குண்டர் படை கொடூரமாக தாக்கி அழிக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்..! :)

vinthaimanithan said...

//அந்த போபர்ஸ் பிரச்னையை பலகாலமா மினிபஸ் மாதிரியே நகத்திக்கிட்டு திரியுது நம்ம நாடு.//

அந்த பஸ்ஸை ஷெட்டுல விட்டுட்டாய்ங்களாமுல்ல? குவாட்ரோச்சி புனிதப்புண்ணாக்குன்னு சொல்லி அவுத்து விட்டாச்சாம்.

அப்புறம், தொடந்து எழுதுங்கப்பூ, நீங்களும் ஷெட்டுல போட்றாதீங்க

Veliyoorkaran said...

@கையாலாகாத காங்கிரஸ் அராசாங்கத்தை தமிழகத்திலிருந்து வேரறுக்க போராடுவோம்..தமிழ் ஈழ விரோத மத்திய சர்க்கார் ஒழிக... விடுதலை புலிகளை ஒழிக்க இந்தியாவிலிருந்து சிங்களவனுக்காக போராடிய இத்தாலிய சோனியா காந்தி ஒழிக...ஊழலை கட்டுபடுத்த தவறிய இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கையாலாகாத பிரதமர் மன்மோகன் சிங் ஒழிக...! போபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை இவர்கள் செய்த சாதனைகள் ஊழலில் மட்டுமே...!

மக்களே சிந்திப்பீர்...வாக்களிப்பீர்...!

கடைசி நேரத்தில் இவர்கள் சுயரூபத்தை புரிந்து கொண்டு தன்மானத்துடன் வெளியேறிய திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க...!
தங்க தலைவன் கலைஞர் வாழ்க...!
(டேய் இவ்ளோ ஏத்தி விட்ருக்கேன்...யாராச்சும் சண்டைக்கு வாங்கடா...இன்னிக்கு நான் லீவ்தான்..) :)

Veliyoorkaran said...

@@@Veliyoorkaran said...
காங்கிரஸ் வாழ்க...! ///

இது திராவிட முன்னேற்ற கழக மக்கள் கூட்டனியிலுருந்து காங்கிரஸ் விலகிய செய்தி தெரிவதற்கு முன் போடப்பட்ட கமென்ட் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..! :)

Chitra said...

WELCOME BACK!! Good to see you back in the track. :-)

settaikkaran said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது இடுகையைப் பார்த்து மகிழ்ச்சி! :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>இதுவரை கிளைமேக்சை காட்டாமலே எல்லா பிரச்சனையையும் ரொம்ப வருசத்துக்கு ஒட்டிகிட்டே இருந்தா எப்படி. சட்டுப்புட்டுன்னு சுபம் போடுங்க. அட முடிவு நம்ம மக்களுக்கு சுபமா இருக்கட்டும்.

நியாயமான ஆசைதான்.. ஆனால்..?

Anonymous said...

////// Veliyoorkaran said...
ரோஸ்விக் ஒழிக...!
திசைகாட்டி ஒழிக...!

காங்கிரஸ் வாழ்க...!
திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க...! /////

இளையதளபதி வாழ்க ..,!
எஸ் .ஏ .சி வாழ்க ...,!

ச .மூ .கா .( சந்து முன்னேற்ற கட்சி ) வாழ்க .,!!
தளபதியின் கட்சியை மறந்த வெளியூர்காரன் ஒழிக !!

மைதீன் said...

niyaayamaana pathivu

Anonymous said...

யுவ்ராஜ் சஞ்சைஜி ..,வாழ்க !!!( ஹையையோ இத போன கம்மன்ட்ல போடா மறந்துட்டேனே மந்திரி பதவி போயடும்மா )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கை சிங்கம் எந்திரிச்சிருச்சு..இனி எதிரிகளுக்கு ஆப்புதான். (ஓவரா கூவிட்டனா?)

Rettaival's Blog said...

இதுக்கு தான் அன்னிக்கே சொன்னேன் என்னை பிரதமர் ஆக்குங்கடான்னு... எவன் கேட்டீங்க...அனுபவிங்க!

ரஷ்ய மன்னர் ரெட்டை வாழ்க! ரெட்டை மட்டும் வாழ்க!

Rettaival's Blog said...

வானம்பாடிகள் said...
குவட்டரோச்சிய விட்டுட்டாங்களாம்ல. ஃபோஃபார்ஸ்னா இனி காந்தி செத்துட்டாராம்பாய்ங்க=))
**********************************************************************
குவார்ட்டர் அடிச்சிட்டு இருந்த ஆச்சியை விட்டுட்டு போய்ட்டாங்களா...சொல்லவே இல்லை!

'பரிவை' சே.குமார் said...

WELCOME BACK!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது இடுகையைப் பார்த்து மகிழ்ச்சி....

ILLUMINATI said...

//பலபேரு பள்ளிக்கூட பக்கிக மாதிரி சண்டைபோட்டுக்கிட்டுதான் திரியுதுக. //

ஹாஹா,அதுவும் எப்படியாம்? :)

ILLUMINATI said...

//நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்காரியா... சர்க்காரியா-னு என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குது ஆனா கழக உடன்பிறப்புகளே அட அது யாருயான்னு கேக்குற நிலைமையிலதான் அதோட செயல்பாடுகள் இருக்குது.//

சர்க்காரியா எல்லாம் ஓல்ட் பேஷன் மச்சி.இப்ப கழக உடன்பிறப்புகள் சரக்கு தரியா சரக்கு தரியான்னு இல்ல அலையுறாணுக :)

ஜோதிஜி said...

இங்கு என் தங்கம் பட்டாபட்டி வராத காரணத்தால் கோபத்துடன் வெளிநடப்பு செய்து வேடிக்கைப் பார்க்கின்றேன்.

அல்லோ

அல்லோ

பட்டாபட்டி எங்கிருந்து இந்த தம்பிக்கிட்ட வருமாறு ஏழு பட்டி பஞ்சாயத்தார் சார்ப்பாக அழுகின்றேர்ம்.. ச்சே அழைக்கின்றோம்.


நீதி மன்றம் கடைசி குடிமகனுக்கு சற்று ஆறுதல் அளிப்பது உண்மைதான். ஆனால் 99 தவறுகள் தப்பிப்போய் ஒன்று மட்டும் தான் தப்பிப் போய்விடாமல் தீர்ப்பு இருக்கிறது.

பார்க்கலாம் லிபியா வரிசையில் நம்ம இந்தியாவும் வராதா என்ன?

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - ஆமா பாலா அண்ணே! அந்த கேஸ் எந்த நிதிபதிகிட்ட(எழுத்துப்பிழை இல்லை) மாட்டுச்சோ??

ரோஸ்விக் said...

மாணவன் - நாம் சந்திக்கலாமா?
வாங்க அன்பரே சிங்கைபதிவர்களோடு இணைந்து செயல்படலாமே!

ரோஸ்விக் said...

Veliyoorkaran - அடியேய்! உங்களுக்கு நாங்க யாரும் எதிரி இல்லைலே... நீங்களே ஒருத்தனுக்கொருத்தன் போட்டு செத்துக்குவீங்க பாருங்க...

ரோஸ்விக் said...

பாத்தியா காலையில ஒரு செய்தி... மாலையில ஒரு செய்தின்னு உங்க ஆட்டம் எவ்வளவு விறுவிறுப்பாப் போகுதுன்னு...

ரோஸ்விக் said...

விந்தைமனிதன் - ஆமாண்ணே அந்த குஷ்டரோகி ரொம்பப் புனிதமானவராம்... இப்படி பல கேஸ் தீர்ப்புகள் நம்ம டவுசரை அவுத்ததாலதான், இப்போ சுப்ரீம் கோர்ட்டின் சில நடவடிக்கைகளை பார்த்து கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கிறேன். பார்ப்போம் இனியாவது நீதிபதிகளாக செயல்படட்டும்.

நம்ம நாலாவது தூண் பத்திரிக்கைகள் வாங்கி குடிக்கப் போனதுனால வளர்ந்த விஷக்காளான்கள்-ல பல காவல்துறை, நீதிமன்றம், சட்டமன்றம் இவற்றில் பழுகிப்பெருகி வளர்ந்திருக்கிறது.

Cable சங்கர் said...

நீங்க பதிவெழுத வரணும்னுதான் இவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்காங்க போலருக்கு.

ரோஸ்விக் said...

Veliyoorkaran - அடங்கமாட்டீங்க...???

ரோஸ்விக் said...

Chitra - Thanks Chitra :-)

ரோஸ்விக் said...

சேட்டைக்காரன் - ரொம்ப நன்றிங்க சேட்டைக்காரன். :-)
ஸ்ரேயா எப்படி இருக்கா?? ;-)

ரோஸ்விக் said...

சி.பி.செந்தில்குமார் - நன்றி சி.பி.செந்தில்குமார்

ரோஸ்விக் said...

பனங்காட்டு நரி - இந்த பயலை இன்னமுமா நம்புறீங்க?? :-)))

ரோஸ்விக் said...

நன்றி மைதீன்

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - இப்புடி சொல்லி சொல்லித்தான் ஒருத்தரை கிளப்பிவிட்டுடாங்க.. என்னை விட்டுடுங்க சாமி... :-))

ரோஸ்விக் said...

Rettaival's - யோவ் நீ எப்போ ரஷ்ய மன்னர் ஆனே? சொல்லவேயில்ல... எதுவும் ரஷ்யாக்காரியைப் பார்த்தியா??

ரோஸ்விக் said...

Thanks சே.குமார்

ரோஸ்விக் said...

ILLUMINATI - அவனுக எப்போதுமே அப்படித்தான்யா... பாத்தியா அவனுக பண்ணுன ஊழல்-ல கூட ஸ்பெக்ட்"ரம்" இருக்கு...

ரோஸ்விக் said...

ஜோதிஜி - பட்டாபட்டி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில மும்முரமா இருப்பாரே... அவரு இப்போ இங்க வரமாட்டாரு.... எந்தக்கட்சியோட உயர்"மட்டைக்" குழுல இருக்காரோ தெரியலையே!


ஆமா நம்ம ஆளுங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருக்குன்னு நீங்களும் என்னைய மாதிரியே நம்புறீங்களா?? அதுக்கு இன்னும் 20 வருஷமாவது ஆகும்.