Wednesday, November 10, 2010

கோயம்பத்தூருக்கே குடை பிடித்து நடந்த "என்"கவுண்டர்?

அண்ணே! கோயம்பத்தூர்ல நடந்த என்கவுண்டர் சரியாத் தப்பான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய ஹிட் கவுண்டரைத் தொறந்து வைச்சுகிட்டு நம்மல்ல பல பேரு பதிவு போட்டாச்சு. "என்"கவுண்டர் பண்ணினது (அதனால) சரிதான்னு ஒரு கூட்டமும்.... குடை பிடிக்காம "என்"கவுண்டரை 'நடத்தினது' தப்புன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆக மொத்தம் கோயம்பத்தூர்ல கவுண்டர் எண்ணிக்கையில ஒன்னு கூடிடுச்சு. இதுக்கெல்லாம் PCR Act-ல கேஸ் போடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இந்த என்கவுண்டர் வசதியை நம்ம காவல்துறைக்கிட்ட எளிதா ஒப்படைச்சா, ரொம்ப ஆபத்து இருக்குங்கிறது உண்மை. ஏன்னா இது ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி. இந்த நேரத்துல இதை எவ்வளவுதான் கத்தி கத்தி சொன்னாலும் இந்த கத்தி மேட்டர் எடுபடாது. மனுசங்க மனசு அப்புடி. இங்க இரும்பிலே இதயம் முளைத்த எந்திரர்கள் யாரும் இல்ல. சும்மா எந்த ஆதாரமும் இல்லாம பெட்டி கேசு போடுற காவல் துரைங்க... இதுமாதிரி என்கவுண்டர் அதிகாரத்தையும் கையில வைச்சிருந்தா, சும்மா பொடிப்பசங்களைக்கூட போட்டுத்தள்ளிருவேன் தெரியுமா... போட்டுத்தள்ளிருவேன் தெரியுமான்னு போட்டு வாங்கிடுவாணுக... வில்லா ஹவுஸ் வாங்குற அளவுக்கு.

எனக்குத்தெரிய சென்னை வியாசர்பாடி ஏரியாவுல சில ரவுடிகளின் மிரட்டல் தொல்லை தாங்க முடியாம, பொம்பளைப்புள்ள பெத்து வைச்சிருந்த பல குடும்பம் வேற ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. என்ன பண்றது மானத்தைக் காப்பாத்தணும், மகளைக் காப்பத்தனும், பணத்தைக் காப்பாத்தனும்.... அதுக்கு வேற ஏரியாவுல தான் காஃபி, டீ ஆத்தனும்னு தெரிஞ்சே, அந்த ரவுடிக இவங்களைக் காலி பண்றதுக்கு முன்னாடி, தானாகவே ஏரியாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க. அந்த ரவுடிகளை அரசாங்கம் இந்த மாதிரி என்கவுண்டர்-ல போட்டுத் தூக்கிடுச்சு. அந்த தகவலைக் கேட்ட பல குடும்பம். அப்பாடா-ன்னு ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு. இதுல கொலைகளை கொண்டாடுற மனோபாவம் எங்கையாவது இருக்கானு தேடிப்பாருங்க. அப்படி கொலைகளைக் கொண்டாடும் மனோபாவம் இருந்திருந்தால், அந்த கோயம்பத்தூர் பிஞ்சுக செத்தப்பக் கூட கொண்டாடியிருக்கனுமே! இல்லையில்ல... அப்பா நம்ம ஆளுக இன்னும் சைக்கோவாகலை. நீங்க இங்க மூச்சு விட்டுக்கங்க.

குற்றம் செய்தவனை மனநல மருத்துவரிடம் காட்டவேண்டும், மயிலிறகால் வருட வேண்டும் என்றெல்லாம் சமூக நற்ச்சிந்தனையாளர்கலான நாம் கூறிக்கொண்டிருந்தாலும்.... அந்த குற்றவாளியின் மனநிலையை குறைந்த பட்சம் ஒரு குற்றம் செய்த பிறகே கண்டுபிடித்து மாற்ற முயலும் சூழ்நிலையில் உள்ளோம். இவனது மனநிலையை அறிந்துகொள்ள/ இவனுக்கு சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆராய்ச்சி எலிகளா?

இந்த என்கவுண்டர் அபாயத்தால், பொதுப்படையான புது ரவுடிகள் உருவாவது வெகுவாகக் குறைந்துதான் உள்ளது. ஆனால், உருவான சில ரவுடிகள் வட/தென் பகுதியின் கழகச் செயலாளர்களாகவும், அமைப்புத் தலைவர்களாகவும் வெள்ளை வேட்டிக்குள் விறகுக்கட்டைகளாக வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அதிகார பலம் இருப்பதால், உடல் பலமுள்ள தண்டங்கள் முண்டங்களாக கையாள்(ல்) வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் பலர் சட்ட மன்றம், பாராளு மன்றங்களில் "மேற்பார்வையாளராக" பணியாற்றுகிறார்கள். (முதல்ல ரெண்டு மன்றத்தோட பேருகளை மாத்தனும்டா சாமி... நமக்கு அசிங்கமா இருக்கு).

இது குறித்த விவாதங்களின் போது நித்தியானந்தாவிற்கு இதே தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? என்று கேட்டிருந்தார்கள். நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம் என்றால், அதில் சட்டத்திற்கே வேலையில்லை. அவர் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் புரிந்திருந்தால், குற்றங்களின்படி அவருக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதுவும் விரைவாக. நமது கையாலாகாத அரசுகளும் அவரையோ, பாதிரி ராஜரத்தினத்தையோ கடுமையாகத் தண்டித்தால், வாக்கு வங்கிகளான காவி மதமும், வெள்ளையாடை மதமும், வாக்கு சீட்டில் குத்த வேண்டியதை நமது பின் சீட்டில் குத்திவிடுவார்களோ என்ற கழிச்சலுடனே அணுகுவார்கள் என்பது நமது துரதிர்ஷ்டம். அந்தக் காரணங்களினால்தான் பெரியவாக்களும் இன்னும் மிகவும் சவுகரியமாக வாழை இலையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் சட்டமும், காவல் துறைகளும், ஆளும்(?)கட்சிகளும் வளைஞ்சு கொடுத்துப்போகுது... என்னத்தையாவது வாங்கிக்கிட்டு. உங்க விருப்படி இதை ஜனநாயகம்னோ இல்ல பணநாயகம்னோ நீங்க வைச்சுக்கலாம்.

தேர்தல் முடிவுகளை மட்டும் உடனே தெரிஞ்சுக்க வருஷா வருஷம் ஏதாவதொரு முன்னேற்றத்தை கொண்டுவருகிற நம்ம அதிகாரிகளும், அதுக்கு ஒத்துழைக்கிற அதிகாரிகளும், இந்த நீதித்துறையில ஒரு மாற்று வழியைக் கொண்டுவந்து வழக்குகளை விரைவா நிறைவேற்றி, தண்டணைகள சரியா வழங்க என்ன ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க? ஒரு FIR எழுதுற காவலர்கிட்டையும், கோர்ட்டு அலுவல்களை கவனிக்கிற காவலர்கள்கிட்டையும் அதிலிருக்கிற கஷ்டங்களை கேட்டுப்பாருங்க. அதை ஏன் இன்னும் நம்மளால எளிமைப்படுத்த முடியல? தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் கூட, சம்பந்தமில்லாம பல வருடங்களுக்கு இழுத்தடித்து, பல சமயங்களில் ஏனோதானோ என்ற தண்டனைகளையும் கொடுத்தால் (போபால் வழக்கு ஒன்னு போதுமா நம்ம லட்சணம் தெரிய) இது போன்ற என்கவுண்டர் கொலைகளைக் கொண்டாடத்தான் செய்யும் இவ்வுலகம்.

என்னதான் தண்டனைகளைக் கொடுத்தாலும் குற்றங்களை இல்லாமல் அழிக்கமுடியாது என்பது பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், குற்றங்களைக் குறைக்கமுடியும் என்பது என் திண்ணம். என்னாண்ணே பண்றது... வீட்டுப்பாடம் செய்யலையினா வாத்தியாரு அடிப்பாருன்னு இருந்தாத்தான் நம்ம செய்யுவோம். இல்லை இல்லை அடிக்கலையினாலும் நான் என் அறிவு வளர்ச்சிக்காக செய்வேன் அப்படிங்கிற சொம்பு எத்தனை யோக்கியவான்கள்ட்ட இருக்குன்னு எனக்கு தெரியாது. தண்டனைகளால குற்றங்களைக் குறைக்ககூட முடியாதுன்னு நீங்க நம்புனா, பக்கம் பக்கமா, அதுல பல உட்பிரிவா தண்டணைகள விவரிக்கிற சட்டப்புத்தகங்கள் எதுக்குன்னு ஒருதடவை கேட்டுச் சொல்லுங்க.

என்கவுண்டர்களை எப்போதும் நம்ம ஆதரிக்கக்கூடாது தான். அதுக்கு மாற்றா என்னாண்ணே பண்ணலாம்? நீதி ஏண்ணே நியதியா எப்போதும் இருக்க மாட்டேங்குது? ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது - என்பது ஒரு பெரிய பாராட்டக்கூடிய கொள்கைதான். நிரபராதியைக் காப்பாத்துறேன்னு ஒவ்வொரு குற்றவாளியாத் தப்பிக்க விட்டுட்டு, தேசத்தில அமைதி சீர் குழைஞ்சிருச்சுன்னு சோறு குழைஞ்சது மாதிரி எளிதா சொல்லிட்டுப் போறதுல யாருக்கு லாபம். ஹெல்மெட் போடலையினா காவல் துரைக்கு (எழுத்துப் பிழையில்லை) இருபது ரூபாயாவது தண்டம் அழுகனுமேன்னு தன் தலையைக் காப்பத்துற தறுதல ஜாதி தானே நம்ம. நம்மகிட்ட தண்டனை வரும் வரும்னா... மூல வியாதிக்காரன் முக்கிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கும். காலம் கடந்து கிடைக்கும் நீதியும் ஒரு அநீதி தானே!

மொத்தத்துல காவல்துறையே இது போன்ற என்கவுண்டர் நடத்துவது மிக மிக ஆபத்தானது. நீதித்துறையும் மிக விரைவாக செயல்பட்டு, கடுமையான தண்டனைகளை வழங்கவேண்டும். நீதித்துறையின் செயல்பாடுகளிலும், காவல்துறையின் குற்றம் தவிர்க்கும் அடிப்படைப் பணிகளிலும் அரசியல்வியாதிகள் மூக்கை மட்டுமல்ல எதையுமே நுழைக்கக்கூடாது (துண்டுச்சீட்டு உட்பட). மக்களிடம் தவறுகள் குறைவதற்கான விழிப்புணர்வையோ, நல்லெண்ண மனநிலையோ வளர்க்க தேவையான வழிகளைக் கண்டு நடைமுறைப்படுத்தலாம். குற்றம் செய்தவர்களை கடுமையாகத் தண்டிப்பது எந்த ஆண்மைக்கும் இழுக்காகாது. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் தவறுகள் செய்தால் கண்டிச்சு வளருங்க சாமிகளா. அங்க தண்டனை தேவையில்ல. ஆனா, தேசம்னு வந்துட்டா தண்டிச்சே ஆகணும். இங்க வைச்சு ஊலலால்லா பாடிக்கிட்டு இருக்கமுடியாது கூடாது.


இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம் போல இட்டுக்கட்டப்பட்ட கதையை காவல்துறை அவிழ்த்துவிட்டாலும், அவர்களின் இந்த துரித தண்டனைக்கான மர்மம் விளங்கவில்லை. இந்த ஆயுதத்தை காவல்துறையிடம் வழங்கும் முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! எனவே, இதைக் கொண்டாடியவர்களை அரபுதேச குடிமகன்களாக எப்படி முத்திரை குத்தி புறந்தள்ளமுடியும்?

தண்டிக்காம விட்டா மட்டுமல்ல, காவல்துறையிடம் என்கவுண்டர் வசதிகள் ஒப்படைக்கப்பட்டால் கூட வலியது மட்டுமே வாழும். மற்றவர்களுக்கு "வலி"யது மட்டுமே மிஞ்சும்.
33 comments:

Chitra said...

இந்த என்கவுண்டர் வசதியை நம்ம காவல்துறைக்கிட்ட எளிதா ஒப்படைச்சா, ரொம்ப ஆபத்து இருக்குங்கிறது உண்மை. ஏன்னா இது ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி.


......கசக்கும் நிஜங்கள். ம்ம்ம்ம்......

ரோஸ்விக் said...

பொது அறிவுக்கு... :-)

எந்த ஒரு விலங்கிடப்பட்ட கைதியும் தப்பிச்சென்றால் கூட, காவல்துறைக்கு சுட்டுப்பிடிக்க அனுமதியில்லை. எனக்குத்தெரிந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விலங்கில்லாமல் தன்னை காவல்துறை பல இடங்களுக்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து செல்கிறார்கள். இது எனது உயிருக்கு ஆபத்து. எனவே கோர்ட்டு எனக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லுமாறு, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு விலங்கிடப்படவில்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பொது அறிவுக்கு... :-)

எந்த ஒரு விலங்கிடப்பட்ட கைதியும் தப்பிச்சென்றால் கூட, காவல்துறைக்கு சுட்டுப்பிடிக்க அனுமதியில்லை. எனக்குத்தெரிந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விலங்கில்லாமல் தன்னை காவல்துறை பல இடங்களுக்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து செல்கிறார்கள். இது எனது உயிருக்கு ஆபத்து. எனவே கோர்ட்டு எனக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லுமாறு, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு விலங்கிடப்படவில்லை.
//ஓ..நோட் பண்ணிட்டேன் பிரதர்..

ரோஸ்விக் said...

நன்றி சித்ரா.

என்னாயா பட்டபட்டி... நீ என்ன அமெரிக்காவுல இருக்கியோ? இந்த நேரத்துல கமெண்ட்டு போடுற... சந்தேகமா இருக்கே!

எண்ணங்கள் 13189034291840215795 said...

காவல்துறையிடம் என்கவுண்டர் வசதிகள் ஒப்படைக்கப்பட்டால் கூட வலியது மட்டுமே வாழும். //

மிக சரி.

எல் கே said...

எங்கேயோ படித்த ஞாபகம் ஒரு முறை, குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரை விலங்கிடக் கூடாது என்று மனித உரிமை கமிசன் கூறியதாக..

சரியாக நினைவில்லை

கோவி.கண்ணன் said...

ரோஸ்விக்,

குழந்தைகளின் கொலையும் அதன் பிறகான என்கவுண்டர் இப்படி பட்டாசு வெடிக்கும் விழாவாக மாறியதில் எனக்கு வருத்தம் தான். ஒரு துக்கம் கொடுஞ்செயல் அதன் தொடர்ச்சி விழாவாக மாற்றியது நமக்கெல்லாம் வெட்க்கக் கேடுதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியா சொன்னீங்க

sathishsangkavi.blogspot.com said...

//
இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் சட்டமும், காவல் துறைகளும், ஆளும்(?)கட்சிகளும் வளைஞ்சு கொடுத்துப்போகுது...//

இதுதாங்க நம்ம நாட்டு நிலைமை...

நமது சட்ட அமைப்பை மாற்ற வேண்டும் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் அப்ப தான் குற்றங்கள் குறையும் என்பது என் கருத்து

Unknown said...

//தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் கூட, சம்பந்தமில்லாம பல வருடங்களுக்கு இழுத்தடித்து, பல சமயங்களில் ஏனோதானோ என்ற தண்டனைகளையும் கொடுத்தால் (போபால் வழக்கு ஒன்னு போதுமா நம்ம லட்சணம் தெரிய) இது போன்ற என்கவுண்டர் கொலைகளைக் கொண்டாடத்தான் செய்யும் இவ்வுலகம்.//

மிக மிக சரி.

Unknown said...

மிகதெளிவான பார்வையும், அதற்கான நையாண்டி எழுத்துக்கும் என் பாராட்டுக்கள். என்கவுண்டர் இதற்கு முன்னெலாம பல குற்ற செயல்களை புரிந்துவிட்டு ஆதாரங்களை அழித்துவிடும், அல்லது சிறையில் இருந்துகொண்டே தன் நெட்வொர்க்கை நடத்தும் ரவுடிகளை கொல்ல மட்டுமே இருந்த செயல் வடிவம். ஆனால் மோகன்குமார் என்கவுண்டரில் சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.. குற்றத்தின் பின்னணியில் கண்டிப்பாக சில பெரிய தலைகள் இருக்கிறது ..

'பரிவை' சே.குமார் said...

என் கவுண்டரை காவல்துறை கையில் எடுக்கக் கூடாதுதான். நாம் குடைபிடிக்கவோ, பிடிக்காமலோ நடுநிலைமையில் இருக்க முடியும் ஏனைன்றால் நாம் இருப்பது ஜனநாயக நாடு...

ஆனால் அந்த பிஞ்சுகளை கொன்ற கொடூரனை அன்றே கொன்றிருக்க வேண்டும். இதற்காக தப்பி ஓட நினைத்தான் தற்காப்புக்கு சுட்டோம் என்ற என் கவுண்டரின் அரைத்தமாவுப் பின்னணியை நாமெல்லாம் நம்புவோம் என்ற நம்பிக்கையில் எல்லா என் கவுண்டரின் முடிவிலும் காவல்துறை சொல்வது நம்மை செம்மறி ஆடாக நினைத்துத் தானோ...?

வலியது வாழும் மற்றவர்களுக்கு வலியே மிஞ்சும் என்ற உங்கள் கருத்து முற்றிலும் உண்மை...

நேர்மையான, சிறப்பான பார்வை.
வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான கருத்துக்கள் ரோஸ்விக்!

பனித்துளி சங்கர் said...

பொது அறிவுக்கு... :-)

எந்த ஒரு விலங்கிடப்பட்ட கைதியும் தப்பிச்சென்றால் கூட, காவல்துறைக்கு சுட்டுப்பிடிக்க அனுமதியில்லை. எனக்குத்தெரிந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விலங்கில்லாமல் தன்னை காவல்துறை பல இடங்களுக்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து செல்கிறார்கள். இது எனது உயிருக்கு ஆபத்து. எனவே கோர்ட்டு எனக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லுமாறு, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு விலங்கிடப்படவில்லை.
//


அப்படியா !

பனித்துளி சங்கர் said...

/////இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம் போல இட்டுக்கட்டப்பட்ட கதையை காவல்துறை அவிழ்த்துவிட்டாலும், அவர்களின் இந்த துரித தண்டனைக்கான மர்மம் விளங்கவில்லை. இந்த ஆயுதத்தை காவல்துறையிடம் வழங்கும் முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! ////////////

சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . அனைத்திற்கும் நாம்தான் காரணம்

Unknown said...

பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் தேங்க முக்கிய காரணம் யார்..... வழக்கறிஞர்கள்தான்...
வழக்கறிஞர்கள் வழக்குகளை வருமானம் தரும் சொத்தாக பார்க்கின்றனர். வழக்கு விரைவாக் முடிந்தால் வருமானம் போச்சு..

எனக்கு தெரிந்த நண்பர் .. தன் வழக்கு விசாரணை நாளில் தன் வழக்கறிஞரை சந்தித்து விட்டு,.நீதி மன்ற வாசலில் காத்து இருந்தார்...

இவரின் வழக்கறிஞர்... தன் உதவியாரிடம் சொல்லி, இவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .. என்று வாய்தா வாங்கி இருக்கிறார்.

இது போல் பல உள்ளது...
விரைவான நீதி வழக்கறிஞர்களின் கைகளில் உள்ளது.

- அது சரி... PCR ஆல.. ரொம்ப பாதிக்க பட்டீங்களோ....

ரோஸ்விக் said...

நன்றி - பயணமும் எண்ணங்களும்

LK - இந்த தகவல் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை நண்பரே! விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் - நன்றி கோவியார். இரண்டும் வருந்தத்தக்க செயல்தான். இருப்பினும், நமது காவல்துறை மட்டும் நீதித்துறையும் செய்யும் காலதாமதம் மற்றும் அலட்சியமும் இந்த என்கவுண்டரை மக்கள் கொண்டாடும் படி ஆக்கிவிட்டது.

ரோஸ்விக் said...

சங்கவி - நன்றி நண்பரே! எனது கணிப்பும் அதேதான்.

ரோஸ்விக் said...

நன்றி - ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ரோஸ்விக் said...

நன்றி - இசைப்பிரியன்

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - நன்றி அண்ணே! பெரியதலைகள் என்னைக்கு உருண்டிருக்கு... அதுக்காக எத்தனை தலைகளை வேணும்னாலும் காவு வாங்குவாங்க.

ரோஸ்விக் said...

சே.குமார் - நன்றி குமார் அண்ணே

ரோஸ்விக் said...

நன்றி - பன்னிக்குட்டி ராம்சாமி

ரோஸ்விக் said...

நன்றி - !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

ரோஸ்விக் said...

Vinoth - நீங்கள் சொல்வதும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் இருக்கிறது.

PCR - ஆல் இதுவரை நான் பாதிப்படையவில்லை. எங்கள் அருகாமை கிராமங்களில் இதை சொல்லியே பலரை வேறு பிரச்சனைகளில் மிரட்டுவார்கள்.

Rettaival's Blog said...

இந்த விஷயத்தில் பட்டாபட்டியின் கருத்து தான் என்னோடதும். (பட்டாபட்டியோட கருத்து என்னன்னு கேக்கறியா....என்னா தெனாவெட்டுபா உனக்கு?)

Jaleela Kamal said...

சரியாக விளக்கி இருக்கீங்க.
பெண்குழந்தைகள் வைத்திருப்பவர்களை நினைத்தாலே ரொம்ப கவலையாக இருக்கு,

//தேர்தல் முடிவுகளை மட்டும் உடனே தெரிஞ்சுக்க வருஷா வருஷம் ஏதாவதொரு முன்னேற்றத்தை கொண்டுவருகிற நம்ம அதிகாரிகளும், அதுக்கு ஒத்துழைக்கிற அதிகாரிகளும், இந்த நீதித்துறையில ஒரு மாற்று வழியைக் கொண்டுவந்து வழக்குகளை விரைவா நிறைவேற்றி, தண்டணைகள சரியா வழங்க என்ன ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க?//
\முற்றிலும் உணமை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செத்த நீ.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...

http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html

Thenammai Lakshmanan said...

தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! எனவே, இதைக் கொண்டாடியவர்களை அரபுதேச குடிமகன்களாக எப்படி முத்திரை குத்தி புறந்தள்ளமுடியும்?

// ம்ம் சரிதான்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ப்ளாக் விலைக்கு வருவதாக சொன்னாங்க..

விற்கப்போறீங்களா?

அணுகவும்.
புறம்போக்கு நிலத்தை, ஆட்டைய போடுவோர் சங்கம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விழுந்து கும்பிடவா என் காலை தேடுறீங்க... வேணாம்ணே!!! :-)
//

சே.. இன்னைக்கு நிலைமையில ஒவ்வொரு ஓட்டும், ஒரு பவுன் தங்ககாசு பாஸ்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. இங்கன பிரபாகர், பிரபாகர்னு ஒரு ப்ளாக்கர் இருந்தாரே..

வித்துட்டீங்களா?.. ஆளே காணோம்?...