சொந்த நாட்டில் சோறா இல்ல? ஈழம் சுற்றி முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் சொந்தத்தை பார்ப்பதாக கூறிவிட்டு எதிரி போட்ட எச்சி சோத்தை திங்க...?
பள்ளிக்கூடத்துல படிக்கும்போது வரலாற்று பரீட்ச்சைக்கு படிக்காம போனவன், பக்கம் பக்கமா எழுதுவான் இவனுக்கு தெரிஞ்ச வரலாற்றை....அது பக்கத்தை நிரப்ப மட்டும் தான்னு தெரிஞ்சே செய்வான். ஆனா கதர் வேட்டி கட்டிய இந்த வரலாற்று அரசியல் வியாதிகள் தான் வாழும் கால வரலாற்றின் பக்கங்களை நிரப்ப எத்தனை நாடகங்கள் அதில் எத்தனை நடிகர்கள் வெட்டியாக?
இதுவரை எத்தனை முறை நம் அரசியல் வியாதிகள் நம் தேசமான ஈழத்திற்கு சென்று வந்திருக்கிறார்கள்? எதாவது பயன் உண்டா? போதாகுறைக்கு சில அதிகாரிகளும் இதில் அடக்கம். செத்த வீட்டுக்கு போனா சோறு போட மாட்டாங்க, காரியம் முடிஞ்சு போனா கறியும் சோறும் கிடைக்கும்-னு போன கூட்டமா இது? சாரி உங்க பாஷையில குழு.....
ஈழம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதையெல்லாம் கூட ஒதுக்கி வைத்து விடுங்கள். அங்கு சாகும் சிறு பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்களை எல்லாம் பார்க்கும் போது உனது பிள்ளையோ, சகோதரியோ நினைவில் வர வேண்டாமா? ஓட்டுக்கு ஓடு தூக்கும் திருவாளர் நீங்கள், காரியம் ஆகவேண்டும் என்றால் காலைப் பிடிப்பீர்கள். அவனுக்கு கால் இல்லாதது அப்போதாவது உங்களுக்கு தெரிய வேண்டாமா?
மனித உரிமைக் குழுக்களே, உங்களிடமும் மானுடம் பொய்த்து விட்டதா? உங்கள் சக்தி உள்ளூர் காவல் துறையிடம் மட்டும் தானா? ஒரு திருடனை அடித்து கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றதை கூப்பாடு போட்டு கண்டித்த நீங்கள், ஒரு மனித இனமே, வயது, பால் வேறுபாடின்றி துன்புறுத்தப்பட்டு கொள்ளப்படுகிறார்களே அது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டதா அல்லது நீங்களும் காணாமல் போய்விட்டீர்கள?
தீவிரவாதம் என்ற ஒற்றைப்போர்வையில் அனைத்தையும் போர்த்தி மெளனம் என்ற முத்தரை குத்தி ஒரு இனமே அழிந்து போக துணைபோய்விட்ட குற்ற உணர்வு உங்களை வாட்டவில்லையா? தலைக்கு மேல தீவிரவாத குண்டுகள் பொழிந்த போதிலும் அது தீவிரவாதம்தான் என இன்னும் நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் நீங்கள், காலுக்கடியில் உரிமைபோர் தொடுத்த எம் சொந்தங்களை உயிர்பிச்சை கேட்க்கும் இழிநிலைக்கு தள்ளிய பெருமை உங்களைத் தவிர யாருக்குப் பொருந்தும்?
அண்டை நாட்டானுக்கு பயந்து, சொந்த நாட்டில் சொத்தைப்பல் வீங்கிகளாய் அறிக்கை விட அஞ்சுகிறீர்களே! இது நியாயமா? உளியின் ஓசை கேட்ட உங்களுக்கு இந்த உயிரின் ஓசை கேட்காமல் போனதே! தமிழனின் வரலாற்றில் உங்களுக்கு கருப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தமிழ் திரைப்படங்களில் காட்டும் கடைசி நிமிடங்களைப்போல நீங்களும் திருந்தி சுபம் போட அழைக்கின்றோம். வாருங்கள் (மீண்டும் தமிழனின் கால்களை அல்ல....)!
13 comments:
ரௌத்திரம்
ஆதங்க பதிவு அருமை...
- Venkat
நிதர்சனம்.
ஜெயலலிதா முதல்வரா இருந்த திட்டலாம்.
கருனாநிதிள்ள முதல்வர் எவனுக்கும் இங்க உரைக்காது.
கோபம் கக்கும் வரிகள்.
உணர்வுகள்.
நல்ல படைப்பு. சிறந்த கருத்துக்கள். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்குறோம். முடிந்தால் தினமும் எழுது பணி செய்க அதன் முலம் தமிழ் வளரட்டும். தமிழன் தலை நிமிரட்டும்
ரௌத்திரம் //
பழகச் சொல்லியவனே பாரதி தானே ! :-). வருகைக்கு நன்றி சார்.
2 //ஆ"தங்க" பதிவு அருமை...
- Venkat //
வாங்க வெங்கட். ஆ"தங்க" பதிவு அருமை என பெருமைப் படுத்தியதற்கு நன்றிகள்.
பின்னூட்டம் போடுற அளவுக்கு வந்தாச்சு. எப்போ பதிவு போடுறது?
3 //ஜெஸ்வந்தி said...
நிதர்சனம் //
வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள் தோழி!
4 // அஹோரி said...
ஜெயலலிதா முதல்வரா இருந்த திட்டலாம்.
கருனாநிதிள்ள முதல்வர் எவனுக்கும் இங்க உரைக்காது. //
தங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
அம்மாவுக்கும் அடுத்து உண்டு தலை :-) ! எல்லாருமே திருடங்க தான்.
5 //r.selvakkumar said...
கோபம் கக்கும் வரிகள். //
உண்மைதான் தலைவா. ரொம்ப நாள் பொத்தி வச்சது. பொறுக்க முடியல :-(
6 //ஸ்ரீராம். said...
உணர்வுகள்.//
நன்றி நண்பா! நம் இனம் அவர்கள். ஆம் மனிதர்கள்....
இதெல்லாம் பார்த்து மனம் வெம்புதலை தவிர வேறேதும் செய்ய இயலாது நண்பா... மனம் நொந்து இயல்பு மாறத்தான் முடிகிறது. கோபம், ஆதங்கம்... வேறெதுவும் செய்ய இயலாத நிலை.
பிரபாகர்...
மனக் குமுறல் மட்டும்தான் நம்மிடமிருந்து...வேறென்ன செய்ய.......
நமது மனக்குமுறல்களை இதன் வாயிலாகவும் வெளிப்படுத்துவோம். உலகில் இது ஏற்படுத்தும் அதிர்வுகள் ரொம்ப முக்கியம். எல்லாத்துக்கும் முடிவு உண்டு. சிறு துளிகள் தான் பெரு வெள்ளம்.
We all feel we sad for what happened in tamilelam. Now at least, If the srilankan government gives eqal rights to tamils that is enough. Other wise, the war will continue.
Post a Comment