என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது...
இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவரு மாதிரி இருக்காரு. ஆனா அவரு பதிவுல ஒரு இளமை புத்துணர்ச்சி கிடைக்குதுப்பா. அவருடைய அனுபவ அறிவு நமக்கும் உதவலாம். முடிஞ்சா அவரு பக்கம் போயி பாருங்க. அய்யா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு...:-) உண்மையிலே தான்.
பதிவுகள்-ல எப்படி படம் போடுறதுன்னு நமக்கு நல்லாத் தெரியும். அதான்பா, சும்மா ஒன்னும் இல்லாத சப்பை மேட்டரை பல பில்ட்-அப் குடுத்து அதுக்கு தலைப்ப கவர்ச்சியா வச்சு அம்புட்டு பேரையும் கூப்புடுறது. (ஏய் யாருப்பா அது, இப்ப நீ மட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காயின்னு சொல்றது). ஆனா எப்படி பாட்டு போடுறதுன்னு இப்ப நான் சொல்றேன். ஏற்கனவே யாரும் சொல்லிருக்கலாம். இருந்தாலும் நானுஞ் சொல்லுறேன். நம்ம பதிவு மொக்கையா இருந்தாலும், சிலருக்கு பாட்டுக் கேட்ட சந்தோஷமாவது இருக்கட்டும். :-)
கீழ உள்ள gadjet இணையத்துல கிடைச்சது தான். நான் ஒரு சில மாறுதல் பண்ணிருக்கேன்.
கீழ உள்ள வெள்ளைக்காரனோட எழுத்துக்கள புடிச்சுகிட்டு போயி நாம "blogger account"-ல "login" பண்ணிட்டு, "layout"-ல "page elements"-ஐ அமுக்கி, அதுல "Add a Gadjet"-ஐ தொறந்து அதுக்குள்ளே "HTML/JavaScript" ரூமுக்குள்ளே "content"-க்கு கீழ சிறை வச்சிடுங்க...ஆமா. அவன் அதுக்குள்ளே கிடந்தாத்தான் பாட்டுப்படுவான். "Title"-ல அவனுக்கு பேரு வச்சிடுங்க.
இதுல, height, width-ஐ உங்க ப்ளாக் அளவுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கங்க. அப்புறம் உங்க ப்ளாக்ல இது சைடுல தெரியும். கீழ்நோக்கு அம்புக்குறியை(ஏய் dropdown menu-வை சொல்லறேன் ராசா) அமுக்கி உங்களுக்குத் தேவையானதை தேர்ந்து எடுத்துக்கங்க.
அதுல சிலது நம்ம அரசாங்க அதிகாரிங்க மாதிரி வேலை செய்யாது. ஏன்னு என்னைய கேக்கக்கூடாது. ஏன், அவங்களையே (ரேடியோக்காரங்களை) நம்ம கேட்க முடியாது. சம்பளம் வாங்குற நம்ம அதிகாரிகளையே கேட்க முடியலை...இவங்க இலவசமாத்தானே நமக்கு குடுக்குறாங்க. அப்புறம் எப்படி நம்ம தட்டி கேட்க முடியும்? போயி இலவசமா பொட்டில பாட்டுக் கேளுங்க...கேளுங்க....கேட்டுக்கிட்டே இருங்க...
<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&up_myautoplay=true&up_myplayerheight=70&up_myplayerwidth=200&up_mycolor=%23FFFFFF&synd=open&w=200&h=150&border=%23ffffff%7C0px%2C1px+solid+%23004488%7C0px%2C1px+solid+%23005599%7C0px%2C1px+solid+%230077BB%7C0px%2C1px+solid+%230088CC&output=js"></script>
20 comments:
தம்பி ரோஸ்விக் அவர்களுக்கு,
என்னுடைய பின்னூட்டத்தைப் பார்த்து உடனே பதில் பதிவு போட்டதற்கு நன்றி பல. இன்னும் முயற்சிக்கவில்லை.
அது சரி.என்னைப்பார்த்தால் அப்படி என்ன வயசானவனாகவா தெரிகிறது. என்ன தம்பி எனக்கு இப்போது 75 வயதுதான் ஆகிறது. இதெல்லாம் ஒரு வயசா? சரிதானே!
அன்புள்ள,
கந்தசாமி.
தம்பிக்கு,
நம்ம கம்ப்யூட்டரில் இருக்கும் பாட்டையே போட முடியுமா?
கந்தசாமி.
என்னோட சிஸ்டத்துக்கு ஸ்பீக்கரே கிடையாது. (எப்புடி..)
படம் சேர்ப்பது பற்றிய உங்களின் பகிர்வு உபயோகமானது. நன்றி...
No. You can not play the songs which you are having in your local machine. But We can add a song (Single file) in the web page where you hosted in the server which is payable. For ex. www.giriblog.com can add one audio file to his web page. That audio file also has to be placed in web hosting server.
Here, our local desktop computer will be called as client. Because We will shutdown once we used for the purpose. Once it shutdown it is no way related to internet. So, your web page can not read any local files if the system is down.
Sever means the computer which will be up and connected with internet always.
Hope this helps you.
பரிசோதனை முயற்சியா radio gadget சேர்த்தாச்சு.
பதிவுக்கு நன்றிங்க!
நல்ல பதிவுங்க பதிவர்களுக்கு...
வருகைக்கு நன்றி பாலாசி. ஸ்பீகர் இல்லையினா என்ன மேல இருக்க குஜிலிங்க மாதிரி காதுல மாட்டுறதா வாங்கிகங்கோ....எப்பூடி...
// சுந்தரா said...
பரிசோதனை முயற்சியா radio gadget சேர்த்தாச்சு.
பதிவுக்கு நன்றிங்க!//
வாங்க தோழி! வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள். நல்லா பாட்டு கேட்டு மகிழுங்கள். வாழ்த்துக்கள்.
//புலவன் புலிகேசி said...
நல்ல பதிவுங்க பதிவர்களுக்கு...//
வாங்க நண்பா! தொடர் ஆதரவிற்கு நன்றி. :-)
நன்றி, ரோஸ்விக் தம்பி, என்னை அண்ணா என்று அழைத்து கௌரவப்படுத்தியதிற்கு சந்தோஷப்படுகறேன். பாட்டு என் பதிவில் நன்றாக கேட்கிறது.
அன்புள்ள அண்ணன் கந்தசாமி.
நண்பரே நான் துபாயில் இருக்கிறேன். எந்த எப் எம் மும் வேலை செய்யவில்லை. வேறு எதும் பாட்டு கேட்க வாய்ப்பு இருக்கா??
நண்பா! என்ன சொல்றீங்க...துபாயில இதுக்கு எதுவும் தடை போட்டாங்களா....அடப்பாவிகளா...நீங்க, என் ப்ளாக்-ல "cheers FM, Shyam, Vettri FM, Sakthi FM" இதெல்லாம் செலக்ட் பண்ணி பாருங்க...அப்புடியும் வெறும் காத்து தான் வருதா....கீழ உள்ள சுட்டிகள முயற்சி பண்ணுங்க.
http://radiotime.com/genre/c_161/Tamil.aspx
http://live.shyamradio.com/index.aspx
இன்னும் வேணும்னா....Google-ல online tamil radio stations -னு தேடிப்பாருங்க.....
i don't like this type of automated radio switched on. i don't like this type of blogs. even if you are writing good.
இரா.சிவக்குமரனுக்கு என்ன வருத்தமோ தெரியவில்லையே?
தம்பி நீங்கள் தொடருங்கள்.
கந்தசாமி
நீங்க சொல்றா மாதிரி speaker off ல வச்சுதாங்க பக்கம் மேயறது...பாட்டு கேக்கரதுல்லாம் தனி நேரமுங்க...பக்கம் மேயும்போது பாட்டு வர்றது பல வகையில தொந்தரவுங்க....
சில வகைகளில் தொந்தரவாக இருக்கலாம். பலருக்கு இது பாடல் கேட்கும் வாய்ப்பாகக் கூட இருக்கலாம். ரொம்ப எதிர்ப்பு இருந்தா எடுத்துருவோம்... :-)
Radio வை நீக்க வேண்டிய தேவை இல்லை ரோஸ்விக்.
Auto Play வை மட்டும் நிறுத்தி வைத்தால் போதும். பாட்டோடு பதிவை ரசிக்க நினைப்பவர்கள் மட்டும் Rado வில் விருப்பபட்ட FM ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
மற்றவர்கள் சத்தமில்லாமல் பதிவை மட்டும் மேய்ந்துவிட்டு செல்லட்டும். பலர் எரிச்சல் அடைவது இந்த ஆட்டோ பிளேயினால் தான் (அதுவும் வேலை நேரத்தில் பிஸியாக இருப்பதாக காட்டிக்கொண்டு இருக்கும் போது)
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும் என்றாலும் மற்றவர்களுக்காக Just change “autoplay=true” to “autoplay=false” in your code.
Bore adikkum nerangalil ungal pathivil thaan paatu ketkiren..Nanri..
Nanri..
சவுதி அரேபியா hits உங்க blog ல் அதிகம் வந்ததுக்கு காரணம் நான் தாங்க..
தினமும் காலை ,மாலை மற்றும் இரவு என மூன்று நேரமும் ,,உங்கள் blog ல் பாட்டு கேட்கிறேன்.
ஒரு வலையுலக நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க...ஏற்கனவே ஆட்டோ ப்ளே நிறுத்தப்பட்டுவிட்டது. மிக்க நன்றி தங்களின் சுட்டிக்காட்டலுக்கு. :-)
Thirumalai Kandasami - தங்களின் தொடர் பயன்பாட்டிற்கு மிக்க நன்றி. தயவுசெய்து தாங்களாக ப்ளே செய்துகொள்ளவும். :-) தொடர்ந்து கேளுங்கள்.
Post a Comment