நாளும் கிழமையும் சரியில்ல...நாளைக்கு எழுதலாம்னா....மனசுல வந்ததையெல்லாம் மரமண்டை மறந்து போகுமே...பொட்டி தட்டுற வேலையத் தானே பொழுதூக்கும் பாத்துக் கிடக்கு.....எடுத்த டாப்பிக்கை எழுதிப்புட்டு மத்த வேலையை மறுநாளு பாப்போம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்....
எந்த படிப்பை படிச்சா எளவெடுத்த கடன அடைக்க்கலாம்னு....அய்யா கலாம் ரேஞ்சுக்கு குடும்பத்தோட யோசிச்சு...இந்த படிப்ப படிச்சு முடிச்சாச்சு....வேலை கிடைக்கிறதுக்குள்ள ஸ்பெஷல் கோர்ஷா படிச்சதுல....அப்பன் வேட்டிய தவிர எல்லாமும் கட்டணமா கரைஞ்சு போச்சு.....
படிச்சத பண்ணி பாக்க கம்ப்யூட்டர் வேணும்னு...பட்டா போட்ட இடத்தை பத்திரம் போட்டு வித்தாச்சு....இந்த தொர படிச்ச துறையில தொட்டது மட்டுமல்ல....கெட்டதுக்கும் இங்கிலீஷ்-ல பேரு...கம்ப்யூட்டர்-ங்கிறான், கீபோர்ட்-ங்கிறான், மௌஸ்-ங்கிறான், சாப்ட்வேர்-ங்கிறான்....அப்பப்பா....
மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டு, ஆபீஸ்-ல சின்ன சின்ன சித்து விளையாட்ட காமிச்துக்கே....நம்ம என்னமோ மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபீஸ்-ல வேல பாக்க தகுதியானவன்னு ஊருக்குள்ள புரளிய கிளப்பி விட்டுறாங்க..... இன்டர்நெட் சென்டெர்-ல ஈமெயில் அட்ரஸ் கிரியேட் பண்றதப் பார்த்த பொதுசனம் நமக்கு என்னமோ யாஹூ-லையும், ரெட்டிஃப்-லையும் மூலதனப் பங்கு இருக்கதால.....நமக்கு ஃப்ரீ-யாக் கொடுக்குறதா நினச்சது அந்தக்காலம்.....
முதன்முதலா ஒரு வேலை வாங்குறதுக்குள்ள....மூஞ்சி மொகரையெல்லாம் முத்திப்போகுது.....இன்டர்வியு-ல எப்போதுமே படிச்ச டெக்னாலஜி-ல படிக்காத பக்கமாப் பார்த்து எப்புடித்தான் கேள்வி கேப்பாங்களோ தெரியல....ஒருவழியா செலக்ட் ஆயி....(அதுக்குள்ள ஆயி போக வச்சிருவாங்க அது வேற மேட்டரு) அந்த கம்பெனி-ல வேலைக்கு போனா...நம்ம சொத்த வித்து படிச்ச டெக்னாலஜி எல்லாம் சொத்தை-னு சொல்லிப்புட்டு....புத்தம் புது டெக்னாலஜி-ய பொழுதுக்குள்ள படிக்க சொல்வாங்க...அந்த டெக்னாலஜி-யோட ஆயுசு ஆறு மாதமோ ஒரு வருசமோ தெரியாது....
ப்ராஜெக்ட் மோடு-ல இருந்தா ஆம்புளைக்கும் எக்ஸ்பெக்டடு டெலிவரி டேட் சொல்லுவாங்க இந்த பீல்டு-ல.....ப்ராஜெக்ட் ஆரம்பத்துல மீட்டிங்-னு கூட்டிகிட்டு போனா, டேமஜர் பேசுவார்....நம்ம எல்லாம் மண்டைய ஆடனும்....ப்ராஜெக்ட் முடிவுல நம்ம பேசிக்கிட்டே இருப்போம்...அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு கேள்வி மேல கேள்வியா....வருசக் கடைசியில அப்புரைசல் வரும்....அதுல எதாவது ஏறும்னு நினச்சா....எதுவுமே ஏறாது உங்க பிபி-யைத் தவிர....டேமஜருகிட்ட சார் சார் கொஞ்சம் கூட்டிகொடுங்க-னு சொன்னா (ஏய் சம்பளத்த தாப்பா)......அவரு அது என்னோட வேலையில்லன்னு சொல்லிட்டு போயிடுவாரு.....
இந்த வேலை பாக்குறவங்களுக்கு பல்லு வலி-ல இருந்து பக்கவாதம் வரை வர்றது எல்லாருக்கும் தெரியும்....நம்மள பாத்து வைத்தெரிச்சல் படுறவங்களுக்கு.... எப்படி தெரியும் நம்ம கண் எரிச்சல்?....மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி இப்படி பல வலிகளை சன்மானமா வாங்குறோம் நம்ம சம்பளத்தோட....இந்த வேலையில சம்பளம் கூட தான்....ஆனா, எங்களால கிராமத்து பக்கம் குடியிருந்து வேலைக்கு போக முடியலே....பாதி சம்பளத்துக்கு மேல வீட்டு வாடகையா போறது யாருக்கு புரியுது?....கடன அடைக்க இந்த வேலைக்கு அனுப்புன பெத்தவங்களுக்கு தெரியுமா? நாங்க பெரிய கடனாளியா ஆனது....நாகரீகமா கையில கலர் கலரா கடன் அட்டைய வச்சிருக்கது..... தாலிய அடகு வச்சு வாழ்க்கை நடத்துனது அந்தக் காலம். இப்ப தாம்பத்தியத்த அடக்கி வச்சிட்டு வாழுறது இந்தக் காலம்-னு ரொம்ப பேரு பொலம்புராங்கப்பா....
இந்த துறையால நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்ந்தவங்க நிறைய....இவங்களால தான் விலைவாசி ஏறிபோச்சுங்கிறது முழுவதும் உண்மையில்ல.....ஏதோ சில பேரு அடிப்படையாகவே, நல்ல பொருளாதார வசதியோட இருக்கவங்க பண்ற ஊதாரி செலவுகளுக்கும், ஆடம்பரத்துக்கும் எல்லோரையும் பலி சுமத்தக் கூடாது....இன்னும் இந்த துறையில உள்ளவங்கள்ல நிறைய பேரு நாகரீகமா உடுத்துன கடனாளிகள் தான்....
பணம், பணம்னு சொல்லி அதையே நோக்கி பிணத்தை கூட ஓட வைச்ச குற்றம் யாரால வந்தது.....? இந்த அவலத்துக்குப் பின்னால ஒட்டு மொத்த சமுதாயமும் தன்னோடோ இயல்பை தொலைச்சிட்டு நிக்கிறத நிறைய பேரு உணராது தான் வருத்தமா இருக்கு.... இந்த துறையில நமக்கு வாய்ப்புகள் கிடைக்கலனா.... வேலையில்லா திண்டாட்டம் நம்ம கழுத்த நெரிச்சிருக்கும்....ஜவுளித்துறை, மோட்டார் வாகன உற்பத்தி, கட்டிடத்தொழில் மற்றும் பிற தொழில்களோட வளர்ச்சிக்கு இது உதவிருக்கு.....இத நம்ம மறுக்க முடியாது....
நம்ம வைகைபுயல் வடிவேலு ஒவ்வொரு படத்துலயும், தன்னை பெரிய ஆளா காட்டிக்கிறதா நினச்சு அடி வாங்கி திரிவார்ல... அது மாதிரி தான் இந்த துறையில வேலை பாக்கிற ஆளுகளும்....அவர எப்போதும் உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வப்பாங்கள்ள அது மாதிரி தான் நம்ம சமுதாயமும்.....எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.....விட்டுருங்க அண்ணே!!!
11 comments:
//தாலிய அடகு வச்சு வாழ்க்கை நடத்துனது அந்தக் காலம். இப்ப தாம்பத்தியத்த அடக்கி வச்சிட்டு வாழுறது இந்தக் காலம்-னு ரொம்ப பேரு பொலம்புராங்கப்பா....//
கொஞ்சம் சிந்திக்க வச்சுபுட்டீங்க தோழரே... தொடர்ந்து எழுதுங்கள்..
//மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டு, ஆபீஸ்-ல சின்ன சின்ன சித்து விளையாட்ட காமிச்துக்கே....நம்ம என்னமோ மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபீஸ்-ல வேல பாக்க தகுதியானவன்னு ஊருக்குள்ள புரளிய கிளப்பி விட்டுறாங்க....//
ஹா ஹா ஹா..
இந்த ஊரு இன்னுமா நம்மை நம்பிட்டு இருக்கு ;-)
உங்கள் பக்கம் உள்ள வாதத்தை திறமையாக எடுத்து வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இங்கேயே Transliteration Page வைத்துள்ளதும் பாராட்டுக்குரியது.
last paragraph...நிஜமா யோசிக்க வைக்குது...IT --- என்றாலே எதோ மேலுலக மக்கள் என்ற எண்ணம் மாற வேண்டும்..
கலக்குங்க பாஸ்
//தாலிய அடகு வச்சு வாழ்க்கை நடத்துனது அந்தக் காலம். இப்ப தாம்பத்தியத்த அடக்கி வச்சிட்டு வாழுறது இந்தக் காலம்-னு ரொம்ப பேரு பொலம்புராங்கப்பா....//
கொஞ்சம் சிந்திக்க வச்சுபுட்டீங்க தோழரே... தொடர்ந்து எழுதுங்கள்..//
வருகைக்கு நன்றி நண்பா!. உங்கள் பதிவுகளில் பல என்னைக் கவர்ந்தவை....வாழ்த்துகள்.
// கிரி said...
//மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டு, ஆபீஸ்-ல சின்ன சின்ன சித்து விளையாட்ட காமிச்துக்கே....நம்ம என்னமோ மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபீஸ்-ல வேல பாக்க தகுதியானவன்னு ஊருக்குள்ள புரளிய கிளப்பி விட்டுறாங்க....//
ஹா ஹா ஹா..
இந்த ஊரு இன்னுமா நம்மை நம்பிட்டு இருக்கு ;-
//
வாங்க தலைவா....இது உங்களுக்கும் நடந்துருக்கும்னு நினைக்கிறேன்....தொடர் வருகைக்கு நன்றி....
//ஸ்ரீராம். said...
உங்கள் பக்கம் உள்ள வாதத்தை திறமையாக எடுத்து வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். இங்கேயே Transliteration Page வைத்துள்ளதும் பாராட்டுக்குரியது//
வாங்க அன்பரே! வருகைக்கும், பாராட்டுக்களும் நன்றிகள்....அடிக்கடி வாங்க.... :-)
//அமுதா கிருஷ்ணா said...
last paragraph...நிஜமா யோசிக்க வைக்குது...IT --- என்றாலே எதோ மேலுலக மக்கள் என்ற எண்ணம் மாற வேண்டும்..///
ஆமா தோழி! சண்டியரா நடிச்சு நடிச்சே இப்ப நம்ம பயலுக பல பேரு பல விதமான சாக்கடைகள்ள....என்ன பண்ண...?
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி....
//நட்புடன் கார்த்திக் said...
கலக்குங்க பாஸ்///
வாங்க காதலின் காதலா! :-) வருகைக்கு நன்றி...உங்களைப் போல் நண்பர்களின் ஆதரவுடன் கலக்கிடுவோம்.....
சரியா சொன்னீங்க தலைவா.....நம்மக் கஷ்டம் யாருக்குத் தெரியும்.....
//அது மாதிரி தான் இந்த துறையில வேலை பாக்கிற ஆளுகளும்....அவர எப்போதும் உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வப்பாங்கள்ள அது மாதிரி தான் நம்ம சமுதாயமும்.....//
உண்மை தான் ...............
பதிவு நன்று...........
தொடருங்கள் தலைவா.............
சரியா சொன்னீங்க தலைவா.....நம்மக் கஷ்டம் யாருக்குத் தெரியும்.....
ஊடகன் said...
//அது மாதிரி தான் இந்த துறையில வேலை பாக்கிற ஆளுகளும்....அவர எப்போதும் உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வப்பாங்கள்ள அது மாதிரி தான் நம்ம சமுதாயமும்.....//
உண்மை தான் ...............
பதிவு நன்று...........
தொடருங்கள் தலைவா........... //
தங்களின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி தலைவர்களே.
அப்பா, என்ன மாதிரி கஷ்டப்படறவங்க இந்த துறையில ரொம்ப பேரு இருக்காங்க ...ம்ம்ம் :-)
நம்ம வாழ்க்கை கஷ்டம் தான்பா.
அருமை அருமை, கலக்கீடீங்க நண்பரே. மண்டைல அடிச்ச மாதிரி இருக்கு.
Post a Comment