Monday, October 12, 2009

பதிவுலகத்தில் பார்த்தவை (நீங்களும்தான்) ....

பதிவுலக படைப்பாளிகளுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும்.


இந்த பதிவுலகம் நமக்கு கிடச்ச பெரிய வரப்பிரசாதம்னு தாங்க சொல்லணும். இதுல, நம்ம சிந்தனை, மொக்கை, நமக்கு தெரிந்தவை, நம்மில் தோன்றிய கேள்விகள், நகைச்சுவை, நாம் பிரசவித்த கவிதை, கதை இன்னும் பற்பல விஷயங்களை எழுதுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு...


பலரின் கொள்கைப் பிரச்சாரங்களும் நடந்துகிட்டு தான் இருக்கு. இதுல வசதி என்னான்னா நம்மளும் எதிர் கருத்து, எதிர் கொள்கை, எதிர் கவுஜ, எதிர் பதிவு போட்டு நம்ம மனச ஆத்திக்கலாம். இதுல அரசியல் நடவடிக்கைகளை (இப்பவெல்லாம் சினிமா விமர்சனங்களுக்குக் கூட) விமர்சனம் செய்தால் ஆட்டோ வரும், ஆம்புலன்சு வரும்னு ஒரு மிரட்டல் வேற... விமர்சன சுதந்திரத்தை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுங்கப்பா.


இந்த மிரட்டலுக்கு பயந்து பல பேரு அரசியல் பத்தி எழுதுறதே இல்ல. எல்லோரையும் எல்லாத்தையும் எழுத விடுங்கப்பா. நம்ம ஊர்ல கருத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் இருக்குங்குங்கிற செத்துக்கிட்டு இருக்க உண்மைய சொல்லி அவுகளுக்கு தைரியமும், ஆதரவும் குடுங்கய்யா. இங்க எழுத வர்றவங்க எல்லாம் பிரபல எழுத்தாளர்கள் இல்ல. அவங்க எழுத்து நடையோ, கருத்துக்களோ நமக்கு முரண்பட்டதா இருக்கலாம். முடிஞ்சா ஆலோசனை சொல்லுங்க ( அது தானே இலவசமா முடியும்). இல்லையினா நாகரீகமான முறையில விவாதம் நடத்துங்கப்பா. அவனவன் எழுதுவது அவனவனுக்கு மதிப்பு மிக்கது தான். எல்லாப் பிரசவங்களும் அழகிகளையோ, அறிவாளிகளையோ கொடுத்துரதில்ல. (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே :-) )


அப்புறம் பதிவர்களுக்குள்ள பல குழு குழுவா இருந்துகிட்டு, அந்த குழு பதிவர் எழுதுறதை மட்டும் படிச்சிட்டு, ஒட்டு போட்டுட்டு, ஒட்டு போட்டாசின்னு பின்னூட்டம் போடுறது எனக்கு நம்ம தமிழக அரசு விருதை தான் ஞாபகப்படுத்துது. ஒட்டு போடுறது நம்ம கடமை. அதை நீங்க விரும்பி படித்த பொழுதுபோக்குப் பதிவுகளுக்கோ, அறிவுப்பூர்வமான பதிவுகளுக்கோ மறக்காம போட்டுடுங்க. பதிவுலக உரிமைய பயன்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு நாகரீகமான எதிர்ப்பைத் தெரிவியுங்கள். அய்யா மூக்குடைக்கிற வேலைய விட்டுருங்க...நல்ல வேலை இந்த தமிழ் பதிவுலகில் நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதிக்கிரதைத் தவிர வேற ஒரு சம்பாத்தியமும் இல்ல. அப்படி இருந்தா, பல கொலை சம்பவங்கூட நடக்குமோன்னு அதிர்ச்சியா இருக்குய்யா.


பதிவுலக நண்பர் டாக்டர் தேவா சொன்னது மாதிரி எல்லா துறையில இருந்தும் பதிவுகள் வரணும். அதைப் படித்து நம் அறிவை விசாலப் படுத்திகொள்ளனும். எங்க அடுத்த குழு பதிவரோட பதிவுக்கு போனா அவருடைய ஹிட்ஸ் கூடிருமோன்னு குள்ள நரித்தனமா யோசிக்கக்கூடாது. :-) எல்லா தளங்களுக்கும் போயி படிச்சிட்டு நம்ம அறிதலை அதிகப் படுத்திக்கிரலாம். இல்லையினா, அந்த பதிவரோட அறியாமையா தெரிஞ்சுகிரலாம். பலருக்கு சில துறைகளில் இன்னும் அறியாமை இருப்பது ஒன்னும் அதிர்ச்சியான விஷயம் இல்லங்க.


இந்த பதிவுலகத்துல, நான் நிறைய பேருடைய தளங்களுக்கு சென்று படித்திருக்கிறேன். நேரமின்மையால் பின்னூட்டம் இடாமல் வந்துருக்கிரேன். அதற்க்கு மன்னிக்கவும். உதாரணமா, கீழ உள்ள பதிவர்களின் தளங்கள் என்னை பல வழிகளில் கவர்ந்தது. அய்யா, நிறைய பேருடைய தளங்களை படிச்சிருந்தாலும், அவங்க பேருங்க விடுபட்டிருக்கலாம். அதனால, நீங்க பிரபல பதிவர் இல்லையின்னு நினைச்சுகாதீங்க. நான் பிரபல வாசிப்பாளரா இல்லேங்கிரதை ஒத்துக்கிறேன் (எழுத்துக்கள் சரி தானே ;-) )


இவங்க ஆபாசமா எழுதுனாலும், அறிவுப்பூர்வமா எழுதினாலும் அவங்களோட எழுத்து நடை, கருத்தை சொல்லும் விதம், மொழியாண்மை (இறையாண்மை மாதிரி தாங்க :-) ) எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இவங்களோட பேருகள நான் எந்த வரிசைப்படியும் எழுதலப்பா... இத வச்சு கும்மியடிக்க ஒரு கூட்டம் சேர்ந்துடக்கூடாது பாருங்க....அதான் பாதுகாப்பா சொல்லிடுறேன்.


ஞானி, வினவு, தமிழச்சி, கிரி, விசா பக்கங்கள், பிச்சைப்பாத்திரம், தண்டோரா, வாலு, டவுசர் பாண்டி, பைத்தியக்காரன், கேபிள் சங்கர், புலவன் புலிகேசி, ஜாக்கிசேகர், உளறுவாயன், டாக்டர் தேவா, பரிசல், தாமிரா, லக்கிலுக், கதிர், பாமரன், நையாண்டி நைனா, கார்க்கி பாவா, வடகரை வேலன், குசும்பன், எவனோ ஒருவன், பின்னோக்கி, உண்மைத்தமிழன், butterfly surya, மங்களூர் சிவா, ஆசிப் மீரான், சாத்தான் குளத்து வேதம், குப்பைத்தொட்டி, pappu, குறை ஒன்றுமில்லை, கார்த்திகேயனும் அறிவுத்தேடலும், சந்தன முல்லை, கிருஷ்ணமூர்த்தி, ஜெஸ்வந்தி, ஊடகன், பாலாஜி, கதிர்-ஈரோடு, பிரபாகர், மாரனேரி, கோவிக்கண்ணன், விதூஷ், ரம்யா, அருணா டீச்சர், நட்புடன் கார்த்திக், ஞானசேகரன், அமுதா கிருஷ்ணா, ஸ்ரீராம், ராஜூ, Mouthayen, கலையரசன், hayyram, கபிலன், Robin, துபாய் ராஜா, ஃபிக்ஸ்/Suffix, டயானா சதா'சக்தி'நாதன், கோமதி அரசு, இன்னும் பல தோழிகள் அருமையாக சமையல் குறிப்புகள், அழகுக்குறிப்புகள் குறித்து எழுதுகிறார்கள். அவை அனைத்தும் எம் குடும்ப பெண்களின் பார்வைகளில் என்பதையும் மகிழ்வோடு கூறுகிறேன்.


மேற்குறிப்பிட்ட மற்றும் மனதில் உங்கள் கருத்துக்கள் இருந்தும் மதியில் உங்கள் பெயர்கள் இல்லாத பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.



42 comments:

Robin said...

//பதிவுலக நண்பர் டாக்டர் தேவா சொன்னது மாதிரி எல்லா துறையில இருந்தும் பதிவுகள் வரணும். அதைப் படித்து நம் அறிவை விசாலப் படுத்திகொள்ளனும். // வழிமொழிகிறேன்.

Robin said...

//பதிவுலக நண்பர் டாக்டர் தேவா சொன்னது மாதிரி எல்லா துறையில இருந்தும் பதிவுகள் வரணும். அதைப் படித்து நம் அறிவை விசாலப் படுத்திகொள்ளனும். // வழிமொழிகிறேன்.

Robin said...

நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வாசகர் வட்டம் பெருகும். வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

நண்பரே...

ஒட்டு விஷயமாய் ஒரு சிறிய விளக்கம். ஒட்டு போட்டாச்சு என சொல்வது பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான். நல்ல ஒரு விஷயத்தை படிக்கிறோம், அதை பாராட்டும்போது ஓட்டும் போட்டாச்சு என்று கூறுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன். ஒரு மிக மோசமான ஒன்றுக்கு, அவ்வாறு இட்டிருப்பின் அவரின் ரசனை மாமட்டம் என எண்ணிஇக்கொல்லுங்கள்...இரண்டாவது சில அற்புதமான பதிவுகளுக்கு நெகடிவ் ஒட்டு விழும் தருணத்தில், நாம் பாசிடிவ் ஓட்டுதான் போட்டோம் என சொல்லுதலிலும் தவறில்லை என்பது என் எண்ணம்.

நல்ல பதிவு. ஒட்டு போட்டாச்சி..

பிரபாகர்.

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள்

//அப்புறம் பதிவர்களுக்குள்ள பல குழு குழுவா இருந்துகிட்டு, அந்த குழு பதிவர் எழுதுறதை மட்டும் படிச்சிட்டு, ஒட்டு போட்டுட்டு, ஒட்டு போட்டாசின்னு பின்னூட்டம் போடுறது எனக்கு நம்ம தமிழக அரசு விருதை தான் ஞாபகப்படுத்துது. //

ஆம். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

கோவி.கண்ணன் said...

//அப்புறம் பதிவர்களுக்குள்ள பல குழு குழுவா இருந்துகிட்டு, அந்த குழு பதிவர் எழுதுறதை மட்டும் படிச்சிட்டு, ஒட்டு போட்டுட்டு, ஒட்டு போட்டாசின்னு பின்னூட்டம் போடுறது எனக்கு நம்ம தமிழக அரசு விருதை தான் ஞாபகப்படுத்துது. //

:)

தனக்குத்தானே திட்டம்

Cable சங்கர் said...

நன்றி நண்பரே..

ஈரோடு கதிர் said...

நல்ல இடுகை...

பாராட்டுகள்

கவி அழகன் said...

உண்மை

துளசி கோபால் said...

//மேற்குறிப்பிட்ட மற்றும் மனதில் உங்கள் கருத்துக்கள் இருந்தும் மதியில் உங்கள் பெயர்கள் இல்லாத பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

ஓக்கே . தேங்க்ஸ்.

kiramatthu kallan said...

ரோஸ் விக் அவர்களுக்கு ,
நான் கடந்த ஒரு வருடதக்கு மேல் தமிழ்மணத்தை படித்து கொண்டு வருகிறேன் இதில் அப்படி ஒன்றும் பெரிதாக விசயங்கள் எஆதும் இல்லை
நீங்கள் சொல்வது போல் நானும் ஒரு பிரபல வாசிப்பாளன் ஆம் உயிர்மை காலச்சுவடு தீராநதி போன்ற புத்தகங்களை மிகவும் வாசிப்பேன்

உண்மைத்தமிழன் said...

அட நானும் இருக்கேனா..?

ஆச்சரியமா இருக்கே..!

மணிஜி said...

//அட நானும் இருக்கேனா..?

ஆச்சரியமா இருக்கே..//

Repeataaaaaaaaaaai

கபிலன் said...

ஹைய்யா...நம்ம பேரும் இருக்கு : )
நன்றிங்க ரோஸ்விக்!

பின்னோக்கி said...

ஹைய்யா எம் பேரும் இருக்கு.. :)

நீங்க சொன்ன மாதிரி, இது குழுக்களா பிரிஞ்சு இருக்குறது தேவையில்லை.

நல்லாயிருக்குற பதிவுன்னா, யாரு எழுதியிருந்தாலும் படிக்கலாம்..ஓட்டு போடலாம். நான் அப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு (உங்களையெல்லாம் திருந்த முடியாதுன்னு நீங்க தலையில அடிச்சுக்கிறது தெரியுது :) )

ஸ்ரீராம். said...

Rightly said. ஆனால் நாம் எழுதுவதை படித்தவர்கள் பின்னூட்டம் இட்டால்தான் படித்தார்களா,படித்தவர்களின் அபிப்பிராயம் தெரிந்து கொள்ள முடிகிறது

ஸ்ரீராம். said...

பட்டியலில் உள்ளது பாஸ்டன் ஸ்ரீராம் என்று எண்ணுகிறேன். எனவே நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு அவருக்கு விட்டு விடுகிறேன்!

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ரோஸ்விக்...பின்னூட்டம் போடுபவர்கள் மட்டும் தான் நம் பதிவினை படிப்பவர்கள் என்ற தப்பான என்னோட எண்ணம் போனது இந்த பதிவினை படித்த பின்...

Anonymous said...

//நல்ல வேலை இந்த தமிழ் பதிவுலகில் நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதிக்கிரதைத் தவிர வேற ஒரு சம்பாத்தியமும் இல்ல. அப்படி இருந்தா, பல கொலை சம்பவங்கூட நடக்குமோன்னு அதிர்ச்சியா இருக்குய்யா.//
சரியாகச் சொன்னீர்கள். நல்ல பதிவு!

தினமும் 2 அல்லது 3 பதிவுகளைப் போட்டு அதிக நேரம் பதிவுலகில் செலவிடுபவர்களும், அதிக நண்பர்களைக் கொண்ட குழுக்களை வைத்திருப்போரும் தான் பிரபல பதிவர்கள் என்ற நிலை உள்ளது.
பதிவிட நேரம் இல்லாமல் அவ்வப்போது பதிவிட்டாலும், சிறந்த எழுத்துக்களையும், சொல்லாளுமையும் கொண்ட பதிவர்கள் உள்ளனர். அவர்களை அதிகம் எழுத்ச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான பதிவுலகம் உருவாகும்.
திரு. ஷண்முகப்ரியன் (படித்துறை), திரு. செல்வகுமார் (Selva speaking) போன்றோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

கிரி said...

//இந்த மிரட்டலுக்கு பயந்து பல பேரு அரசியல் பத்தி எழுதுறதே இல்ல.//

உண்மை தான்

//இவங்க ஆபாசமா எழுதுனாலும்,//

என்ன கொடுமை சார் ...இதுல எனக்கு உடன்பாடு இல்லை

நாடோடி இலக்கியன் said...

//அப்புறம் பதிவர்களுக்குள்ள பல குழு குழுவா இருந்துகிட்டு, அந்த குழு பதிவர் எழுதுறதை மட்டும் படிச்சிட்டு, ஒட்டு போட்டுட்டு, ஒட்டு போட்டாசின்னு பின்னூட்டம் போடுறது எனக்கு நம்ம தமிழக அரசு விருதை தான் ஞாபகப்படுத்துது. //

கலக்கல்.

அன்புடன் அருணா said...

அட...நானும் இருக்கேனே!

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்கள்.

வரிக்கு வரி வழிமொழிகிறேன்...

நம்ம சபைப்பக்கம் வந்து (http://rajasabai.blogspot.com) பதிவுகள் படிக்கிறதுக்கு நன்றிகளும்....

ரோஸ்விக் said...

1 //Robin said... வழிமொழிகிறேன்.//
வழிமொழிதலுக்கும், வருகைக்கும் நன்றி !!


2 //பிரபாகர் said...
நண்பரே...
ஒட்டு விஷயமாய் ஒரு சிறிய விளக்கம். ஒட்டு போட்டாச்சு என சொல்வது பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான். நல்ல ஒரு விஷயத்தை படிக்கிறோம், அதை பாராட்டும்போது ஓட்டும் போட்டாச்சு என்று கூறுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன். ஒரு மிக மோசமான ஒன்றுக்கு, அவ்வாறு இட்டிருப்பின் அவரின் ரசனை மாமட்டம் என எண்ணிக்கொல்லுங்கள்.. இரண்டாவது சில அற்புதமான பதிவுகளுக்கு நெகடிவ் ஒட்டு விழும் தருணத்தில், நாம் பாசிடிவ் ஓட்டுதான் போட்டோம் என சொல்லுதலிலும் தவறில்லை என்பது என் எண்ணம்.
நல்ல பதிவு. ஒட்டு போட்டாச்சி..//

உங்களைப் போன்று எழுத்தை பாராட்டி அல்லது விமர்சித்து பின்னூட்டம் போட்டுவிட்டு ஒட்டு போட்டதை சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். சிலரை கவனித்திருக்கிறேன்...ஒட்டு போட்டாச்சு, என்னையும் மறந்துறாதே-ங்கிற மாதிரி இருக்கும் அவர்களின் பின்னோட்டம். அதை தவிர்க்கலாம் என்பது எனது விருப்பம் வாதம் அல்ல. :-)

தங்களின் தொடர் வருகைக்கு நன்றி.

3 //Varadaradjalou .P said...

வாழ்த்துக்கள். ஆம். உங்கள் (ஒட்டு போட்டாச்சு) கருத்துடன் உடன்படுகிறேன். //

வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் மற்றும் கருத்து உடன்பாட்டிற்கும் நன்றிகள். தொடர்ந்து வருக...


4 //கோவி.கண்ணன் said...
:) தனக்குத்தானே திட்டம். //

இதுல எதுவும் உள்குத்து இல்ல தலைவா...நேரடி குத்து தான்....உங்கள் பதிலைத் தான் சொல்கிறேன். ;-)

தங்களின் வருகைக்கு நன்றி.

5. // Cable Sankar said...
நன்றி நண்பரே..

கதிர் - ஈரோடு said...
நல்ல இடுகை... பாராட்டுகள்

கவிக்கிழவன் said...
உண்மை

துளசி கோபால் said...
//மேற்குறிப்பிட்ட மற்றும் மனதில் உங்கள் கருத்துக்கள் இருந்தும் மதியில் உங்கள் பெயர்கள் இல்லாத பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//
ஓக்கே . தேங்க்ஸ்.
//



கேபிள் சங்கர், கதிர் - ஈரோடு, கவிக்கிழவன், துளசி கோபால் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும், புரிதலுக்கும் நன்றிகள்.

ரோஸ்விக் said...

6 //kiramatthu kallan said...

ரோஸ் விக் அவர்களுக்கு ,
நான் கடந்த ஒரு வருடதக்கு மேல் தமிழ்மணத்தை படித்து கொண்டு வருகிறேன் இதில் அப்படி ஒன்றும் பெரிதாக விசயங்கள் எதும் இல்லை. நீங்கள் சொல்வது போல் நானும் ஒரு பிரபல வாசிப்பாளன் ஆம் உயிர்மை காலச்சுவடு தீராநதி போன்ற புத்தகங்களை மிகவும் வாசிப்பேன். //


தங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் தேடுதலுக்கு இந்த பதிவுலகம் இன்னும் தீனி போடாதது வருந்தத்தக்கது. இனிவரும் காலங்களில் அது தீரும் வண்ணம் நாம் இந்தக் களத்தை பலருக்கும் அமைத்துக்கொடுப்போம்.
பிரபல வாசகன் விரும்பும் பிரபல எழுத்தாளன் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.


7 //உண்மைத் தமிழன்(15270788164745573644) & தண்டோரா said

அட நானும் இருக்கேனா..?
ஆச்சரியமா இருக்கே..!//


தங்களின் வருகைக்கு நன்றி தலைவர்களே. நான் உங்கள் பக்கங்களை வாசிப்பவன் தான்.
//அட நீங்கள் வாசிக்கும் வகையில் நானும் இருக்கேனா..? ஆச்சரியமா இருக்கே..// சும்மா தமாசு அண்ணா. அடிக்கடி வாங்க...


8 //கபிலன் said...ஹைய்யா... நம்ம பேரும் இருக்கு :)நன்றிங்க ரோஸ்விக்! //

தங்களின் வருகைக்கு நன்றி.


9 //பின்னோக்கி said...
ஹைய்யா எம் பேரும் இருக்கு.. :)
நீங்க சொன்ன மாதிரி, இது குழுக்களா பிரிஞ்சு இருக்குறது தேவையில்லை.
நல்லாயிருக்குற பதிவுன்னா, யாரு எழுதியிருந்தாலும் படிக்கலாம்..ஓட்டு போடலாம். நான் அப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு (உங்களையெல்லாம் திருந்த முடியாதுன்னு நீங்க தலையில அடிச்சுக்கிறது தெரியுது :) ) //

தங்களின் தொடர் வருகைக்கு நன்றி. உங்களைப் பத்தி தெரியும் தலைவா....நீங்க பலமுறை என் தளத்திருக்கு வந்தும் ஓட்டு போட்டும் சென்று இருக்குறீர்கள். இதில் உங்க கொள்கைதான் எனக்கும்.


10 //ஸ்ரீராம். said...
Rightly said. ஆனால் நாம் எழுதுவதை படித்தவர்கள் பின்னூட்டம் இட்டால்தான் படித்தார்களா,படித்தவர்களின் அபிப்பிராயம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பட்டியலில் உள்ளது பாஸ்டன் ஸ்ரீராம் என்று எண்ணுகிறேன். எனவே நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு அவருக்கு விட்டு விடுகிறேன்! //


தங்களின் தொடர் வருகைக்கு நன்றி. பின்னூட்டம் பெற்று நம் எழுத்தை, கருத்தை பற்றி தெரிந்துகொள்வது என்பது விண்வெளிக்கு சென்று வெற்றியுடன் திரும்ப வருவதைப் போல மகிழ்ச்சியானது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். பலருக்கு நேரமின்மை காரணமாக உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்த ஸ்ரீராம் நீங்க தாங்க....நீங்க என் தளத்தை முன்பு ஒருமுறை வாசித்து பின்னூட்டம் இட்டு சென்றது எனக்கு நினைவுள்ளது....முடிஞ்சா வந்து நன்றிய சொல்லிட்டு போங்க ஆமா....:-)

Unknown said...

நம்ம பதிவ படிக்காததுனால.இன்னும் நல்ல பதிவு போடனும்னு கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி. 'எங்கள்' அனைவருக்கும் சேர வேண்டிய பாராட்டு அது.

ரோஸ்விக் said...

11 //அமுதா கிருஷ்ணா said...
நன்றி ரோஸ்விக்...பின்னூட்டம் போடுபவர்கள் மட்டும் தான் நம் பதிவினை படிப்பவர்கள் என்ற தப்பான என்னோட எண்ணம் போனது இந்த பதிவினை படித்த பின்...//

தோழி! தங்களின் தொடர் வருகைக்கு நன்றி. இங்கு வாசிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகம் இருக்கலாம் என தோன்றுகிறது. மேலும் நேரமின்மையும் பலருக்கு காரணமாக உள்ளது.

12 //Anonymous said...
சரியாகச் சொன்னீர்கள். நல்ல பதிவு!
தினமும் 2 அல்லது 3 பதிவுகளைப் போட்டு அதிக நேரம் பதிவுலகில் செலவிடுபவர்களும், அதிக நண்பர்களைக் கொண்ட குழுக்களை வைத்திருப்போரும் தான் பிரபல பதிவர்கள் என்ற நிலை உள்ளது.
பதிவிட நேரம் இல்லாமல் அவ்வப்போது பதிவிட்டாலும், சிறந்த எழுத்துக்களையும், சொல்லாளுமையும் கொண்ட பதிவர்கள் உள்ளனர். அவர்களை அதிகம் எழுத்ச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான பதிவுலகம் உருவாகும். //

தங்களின் வருகைக்கு நன்றி. தங்களின் கருத்துக்கு நான் மட்டுமல்ல நிறைய வாசகர்களும் உடன்படுவார்கள் என நான் கருதுகிறேன். நிறைய பதிவிட வேண்டும் என்று தூங்காமல் கூட திரிவது ஒரு வியாதியோ எனத் தோன்றுகிறது. அது எனக்கும் வந்துவிடக் கூடாது என தடுப்பூசி தேடிக்கொண்டிருக்கிறேன். :-)
தனி நபர் விமர்சனங்கள் தவிர்ப்போம். நீங்கள் கூறிய இரு நபர்களும் அவ்வாறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மன்னிக்கவும்.

பொதுவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - அதிகமான எண்ணிக்கை கொண்ட காகம் நமது தேசிய பறவை அல்ல.


13 //கிரி said...
//இந்த மிரட்டலுக்கு பயந்து பல பேரு அரசியல் பத்தி எழுதுறதே இல்ல.//
உண்மை தான்
//இவங்க ஆபாசமா எழுதுனாலும்,//
என்ன கொடுமை சார் ...இதுல எனக்கு உடன்பாடு இல்லை.

தங்களின் தொடர் வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி. இந்த தளத்தில் இப்படி தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. நாம் வேண்டுமானால் படிப்பதை, அதற்கு ஆதரவு தருவதை நிறுத்திக்கொள்ளலாம். இணைய பதிவுகள் ஒரு பொதுவான ஊடகம்....தொழில்நுட்பமும், அரசியலும், போர்னோவும் அதில் கலந்திருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லையோடு எழுதுவதை ஆதரிப்போம் என்று சொல்லலாம்....ஆனால் எது எல்லை என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியவில்லை....அவ்வப்போது மீறிக்கொண்டுதான் இருப்பார்கள் சீனாவும், பாகிஸ்தானும் போல.

14 //நாடோடி இலக்கியன் said...
கலக்கல்.//
தங்களின் வருகைக்கு நன்றி.நாடோடி இலக்கியன் உங்கள் முதல்மழையை வாசித்திருக்கிறேன் ஆனால் குறிப்பிட மறந்துவிட்டேன்....மன்னிக்கவும்.


15 //அன்புடன் அருணா said...
அட...நானும் இருக்கேனே! //

தங்களின் வருகைக்கு நன்றி அருணா.
என்ன அருணா அப்படி சொல்லிட்டீங்க...



16 //துபாய் ராஜா said...
அருமையான கருத்துக்கள்.
வரிக்கு வரி வழிமொழிகிறேன்...
நம்ம சபைப்பக்கம் வந்து (http://rajasabai.blogspot.com) பதிவுகள் படிக்கிறதுக்கு நன்றிகளும்.... //

தங்களின் வருகைக்கு நன்றி துபாய் ராஜா. அடிக்கடி வாங்க இந்தப்பக்கம்.

VISA said...

நீங்கள் சொல்வது போல் நானும் பல தளங்களில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவதுண்டு. ஆனால் தொடர்ந்து அவர்களின் எழுத்து நம்மை கவர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

Jackiesekar said...

ஹை என் பேரு கூட இருக்கு...
நன்றி

ஊடகன் said...

ஒரு பதிவாளனாக ஏற்று உங்கள் பதிவில் என்னை இணைத்தமைக்கு முதலில் நன்றி...........

பதிவாலர்களைப்பற்றியான உங்கள பார்வை உண்மையே.......

என்றும் நன்றியுடன் ஊடகன்...........

ISR Selvakumar said...

நல்ல பதிவு. சக பதிவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கக் கூடிய பதிவு.

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு.......வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். எனது பதிவையும் உங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி. உண்மையில் அருமையானப் பதிவு.

ரோஸ்விக் said...

17 //கே.ரவிஷங்கர் said...
நம்ம பதிவ படிக்காததுனால.இன்னும் நல்ல பதிவு போடனும்னு கொடுத்த ஊக்கத்திற்கு நன்றி. //

தங்கள் வருகைக்கு நன்றி! தங்களின் பாப்கார்ன் கவிதையை படித்திருக்கிறேன். ஆனால், மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.


18 // ஸ்ரீராம். said...
நன்றி. 'எங்கள்' அனைவருக்கும் சேர வேண்டிய பாராட்டு அது. //


நன்றி மறவாமல் வந்து சொன்ன ஸ்ரீராம்-க்கு வாழ்த்துக்கள்.


19 //VISA said...
நீங்கள் சொல்வது போல் நானும் பல தளங்களில் பின்னூட்டம் இடாமல் வந்துவிடுவதுண்டு. ஆனால் தொடர்ந்து அவர்களின் எழுத்து நம்மை கவர்ந்துகொண்டு தான் இருக்கிறது. //

நன்றி விசா! கவர்ச்சி உங்கள் எழுத்து நடைக்கு உண்டு என்று நண்பர் கிரி-யுடன் பேசும்போது சொல்லி இருக்கிறேன்.

20 // jackiesekar said...
ஹை என் பேரு கூட இருக்கு...
நன்றி //

ஜாக்கி என் தளம் உங்களுக்குப் புதியது. உங்கள் தளம் எனக்கு பழக்கப்பட்ட இடம். வருகைக்கு நன்றி.

21 // ஊடகன் said...
ஒரு பதிவாளனாக ஏற்று உங்கள் பதிவில் என்னை இணைத்தமைக்கு முதலில் நன்றி...........
பதிவாலர்களைப்பற்றியான உங்கள பார்வை உண்மையே.......
என்றும் நன்றியுடன் ஊடகன்........... //

வாங்க நண்பா! எழுத்தில் வித்தியாசம் இருக்கலாம். மனிதனில் அதைப் பார்க்கக்கூடாது. பிறர் தாகம் தீர்க்க எழுதும் எழுத்தாளர்களை விட, என்னைப் போன்று தன் தாகம் தீர்க்க முற்படுவோர் ஏராளம். அதில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம்.



22 // r.selvakkumar said...
நல்ல பதிவு. சக பதிவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கக் கூடிய பதிவு. //

வருகைக்கு நன்றி செல்வா சார். உற்சாகமாய் உல்லாசமாய் எழுதுங்க :-)

வெண்ணிற இரவுகள்....! said...

நான் சிறந்த பதிவு என்று நினைத்ததெல்லாம் வாக்குகள் வாங்க வில்லை ,,,,,,,,,,,,,,,,
அதில் அரசியல் எழுதி இருப்பதால் ..............................ஏன் என்றே தெரிய வில்லை ....................
வாக்கு பதிவு கூட நம்பகமானதாக உண்டா என்று சொல்ல முடியவில்லை ........
ஏன் அதிக கோவத்துடன் எழுதினால் நிறைய பேர் வருகிறார்கள் ஆனால் வாக்குகள் இல்லை ...நான் ஈழம் பற்றி எழுதினேன் பாரட்டுக்கள் அதிகம் வாக்குகள் இல்லை ........
நான் எழுதும் குப்பைகளுக்கு வாக்குகள் குமிகின்றன என்ன அரசியல் என்றே புரியவில்லை ...
ஈழம் பிரச்சனை பற்றி பேச கூடாது போல .....என்ன சொல்ல மேல் மட்ட அரசியல் ....
வாக்குகள் கம்மி என்றால் வீரியாமான படைப்பு மக்களுக்கு சேர வில்லை என்று எண்ணும்
போது மனசு வலிக்கிறது ............நாமெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டு .....பேசாமல் எழுதுவதை நிறுத்தலாம் என்று இருக்கேன்

Beski said...

என்ன கொடுமை ரோஸ்விக் இது?

ரோஸ்விக் said...

23 //புலவன் புலிகேசி said...
நல்ல பதிவு.......வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள். எனது பதிவையும் உங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி. உண்மையில் அருமையானப் பதிவு //

வாங்க புலவரே! வருகைக்கு நன்றி. வெளிப்படையா இருந்துதான் பார்போமே :-)

24 //
வெண்ணிற இரவுகள்....! said...
நான் சிறந்த பதிவு என்று நினைத்ததெல்லாம் வாக்குகள் வாங்க வில்லை ,,,,,,,,,,,,,,,,
அதில் அரசியல் எழுதி இருப்பதால் ..............................ஏன் என்றே தெரிய வில்லை ....................
வாக்கு பதிவு கூட நம்பகமானதாக உண்டா என்று சொல்ல முடியவில்லை ........
ஏன் அதிக கோவத்துடன் எழுதினால் நிறைய பேர் வருகிறார்கள் ஆனால் வாக்குகள் இல்லை ...நான் ஈழம் பற்றி எழுதினேன் பாரட்டுக்கள் அதிகம் வாக்குகள் இல்லை ........
நான் எழுதும் குப்பைகளுக்கு வாக்குகள் குமிகின்றன என்ன அரசியல் என்றே புரியவில்லை ...
ஈழம் பிரச்சனை பற்றி பேச கூடாது போல .....என்ன சொல்ல மேல் மட்ட அரசியல் ....
வாக்குகள் கம்மி என்றால் வீரியாமான படைப்பு மக்களுக்கு சேர வில்லை என்று எண்ணும்
போது மனசு வலிக்கிறது ............நாமெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டு .....பேசாமல் எழுதுவதை நிறுத்தலாம் என்று இருக்கேன் //

வருகைக்கு நன்றி! பொதுவாகவே ஒட்டு போடுவதில் நம் மக்கள் சோம்பேறிகள் தான். வாக்களிக்கும் உரிமையை கடமையாக செய்திருந்தால் நம் நாடு என்றோ உருப்பட்டிருக்கும். உங்களின் வலியை நானும் பெற்றிருக்கிறேன்.

ஈழம் பற்றி வரும் செய்திகளுக்கு என் ஒட்டு கண்டிப்பாக இருக்கும். பின்னூட்டம் அதிகம் இடுவதில்லை. நேரமின்மை தான். மன்னிக்கவும்.

என்ன செய்ய, விஞ்ஞானத்தை விட விபச்சாரங்கள் தானே விற்பனை ஆகிறது. எழுதுவதை நிறுத்த வேண்டாம். பதிவர் ஊடகனின் பின்னூடத்திற்கு அளித்த பதிலைப் பார்க்கவும்.

25 //
எவனோ ஒருவன் said...
என்ன கொடுமை ரோஸ்விக் இது?//

வாங்க ஏனாஓனா! வருகைக்கு நன்றி. எதைக் கொடுமைங்கிறீங்க...? இப்படி எழுதினதையா? இல்ல உங்க பேரு இங்க இருக்கதையா? ;-))புரியல தலைவா!

Beski said...

ஜாம்பவான்கள் மத்தியில் நானும் இருக்கிறேனே... அதச்சொன்னேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

வெண்ணிற இரவுகள் சொன்னது:
/வீரியாமான படைப்பு மக்களுக்கு சேர வில்லை என்று எண்ணும்
போது மனசு வலிக்கிறது ............நாமெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டு .....பேசாமல் எழுதுவதை நிறுத்தலாம் என்று இருக்கேன்/

எதற்கு இத்தனை அவநம்பிக்கை? ஏன் இத்தனை சுயபச்சாதாபம்?

எது வீரியமானது என்பதை யார் தீர்மானிப்பது? அப்படியே, வீரியமானது என்று பத்துப் பதினைந்து சொறிந்துவிடும் பின்னூட்டங்கள் வந்தால் மட்டும் உண்மையிலேயே அது வீரியமானதாக ஆகி விடுமா?

நீங்கள் எழுதுவதில் முதலில் உங்களுக்கே நம்பிக்கை இருக்க வேண்டும்.எவருக்காகவோ இல்லை, உங்களுடைய மனதோடு பேசுகிற மாதிரி,உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்,அது உண்மையிலேயே வீரியமான எழுத்து!

இங்கே வீரியமான எழுத்துக்கும் விவகாரமான எழுத்துக்குமே நிறையப்பேருக்கு வித்தியாசம் தெரிவதில்லை!

வேலன். said...

நண்பரே...

பதிவு அருமை..தாங்கள் குறிப்பிட்டது வேலன் (அ) வடகரை வேலன் ....
விளக்கமாக தெரிவியுங்கள்.
வேலன் பெயர் தேர்வாகியிருந்தால் சந்தேஷம்...
வடகரைவேலன் என்றால் மிக்க சந்தேஷம்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

கண்ணகி said...

உண்மைதான். ரோசெவிக் பதிவைப் படித்துவிட்டு பின்னுஉட்டம் போடமுடியாமல் வந்திருக்கிறேன். ஆனால் குழு ஓட்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிடித்தால் மட்டும்தான் ஓட்டு போடவில்லை.. ஆனால் பின்னுஉட்டாம் போடுவது வலைப்பதிவரை உற்சாகப்படுத்துகிறது. அதில் கதிர், வால்பையன், வானம்பாடிகள் போன்றோர் நல்ல உதாரணம். உங்கள் பாடல்களை ரசித்துக் கொண்டே பின்னுஉட்டம் போடுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு முதல் ஓட்டு நான்தான் போட்டேன். ஆன்னல் பின்னுட்டம் போடமுடியவில்லை

ரோஸ்விக் said...

//வேலன் - மனப்பூர்வமா மன்னிப்பு கேட்கிறேன் நண்பரே. மேலே குறிப்பிட்டது வடகரை வேலனை.
ஆனால், உங்களையும், உங்களைப் போன்ற தொழில்நுட்பப் பதிவர்களான tvs50, cybersimman, gouthaminfotech, suzmajala இவங்களை குறிப்பிட மறந்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டேன்.
வேலன் என்றல் எனக்கு உடன் நினைவுக்கு வருவது வேலன் போட்டோஷாப். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.


//வாத்துக்கோழி - வருகைக்கும், பாட்டு கேட்டுக்கொண்டே பின்னூட்டம் போட்டதற்கும் நன்றிகள். :-)
நீங்க சொன்ன மூவரும் நல்ல எழுத்துக்கு சொந்தகாரர்கள்.
கதிரும், வானம்பாடிகள் பாலாஜி சாரும் எனக்கு பின்னூட்டங்களிட்டு ஊக்கப் படுத்தியிருக்கிறார்கள்.
வால்பையனின் துடுக்குத்தனமான, சில சமயங்களில் குதர்க்கமான பின்னூடங்கள் பிடிக்கும். அனால், இன்னும் அந்த வாலு நம்ம பக்கம் நீளவில்லை :-)