Monday, September 28, 2009

காதல் கரு...


மோதலான வார்த்தைகளின்
மோகத்தில்...
கயல்விழிக் கண்களின்
கலவியில்...
உன்னுள்ளும்
என்னுள்ளும்
உருவான கரு - காதல் !

இதயங்களின் இணைவில்
இரட்டிப்பானது இன்பங்கள்
துன்பங்கள் தூரம் போனது...

காதலோடு

களவில் வாழ்ந்தோம்!
நெஞ்சங்கள் இரண்டும்
நிஜங்களுக்கு அப்பால்...

கனவுகள் அனைத்தும்
காதல் வலைக்குள்...

நடைபயண நட்பில்
நலமாய் வளர்த்தோம்
நம் காதலை...

உதவாக்கரைகளின்
உளறல்கள் கூட
உரமாய் அமைந்தது - நம்
உறவின் வலுவுக்கு...

காதல் கரு உன் வாயில்
பிரசவமாகட்டும்
என நானும்...
என்னில் பிரசவமாகட்டும்
என நீயும்...
வெகுகாலம் வெகுளிகளாய்......



3 comments:

க.பாலாசி said...

//உதவாக்கரைகளின்
உளறல்கள் கூட
உரமாய் அமைந்தது - நம்
உறவின் வலுவுக்கு...//

ம்ம்ம்....அனுபவமோ?

//காதலோடு
களவில் வாழ்ந்தோம்!
நெஞ்சங்கள் இரண்டும்
நிஜங்களுக்கு அப்பால்...//

அழகான வரிகள்...

கவிதை முழுதும் அருமை....

ரோஸ்விக் said...

பாராட்டுக்களுக்கு நன்றி பாலாஜி!

கற்பனைகளில் நாமும் கண்ணன்தான்.... நம்மைச் சுற்றிலும் கனவுகளில் கோபியர் கூட்டம்தான்.
கனவுகள் நனவுகளாயிருந்தால்....ரொம்ப கஷ்டமப்பா....

மா.குருபரன் said...

//கனவுகள் அனைத்தும்
காதல் வலைக்குள்...

நடைபயண நட்பில்
நலமாய் வளர்த்தோம்
நம் காதலை...//

சூப்பருங்க.... நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள்..