- நன்றி யூத்ஃபுல் விகடன்
நம்மில் எத்தனை பேருக்கு காண்டமும் நமது வாழ்வும் பற்றி தெரியும்? எத்தனை வகை காண்டங்கள் மனித வாழ்வில் குறுக்கிடுகின்றன? பல வகையான காண்டங்கள் நம்மை நோயிலிருந்தும், உயிரிழப்பிலிருந்தும் காக்கின்றன. அனால் நம் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க விடாமல், நம்மை வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளுகின்ற எத்தனையோ வகை காண்டங்கள் இவ்வுலகில் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.
புராண காலத்திலிருந்தே இந்த காண்டங்கள் குறிப்பிடப்பட்டு பட்டு இருக்கின்றன. நம்மில் சிலர் இது பற்றி படித்தோ அல்லது தங்கள் வாழ்வில் உணர்ந்தோ வந்திருக்கிறோம்.
* பால காண்டம்
* அயோத்திய காண்டம்
* ஆரணிய காண்டம்
* கிட்கிந்தா காண்டம்
* சுந்தர காண்டம்
* யுத்த காண்டம்
- இவையாவும் ராமாயணத்தில் கூறப்பட்ட காண்டங்கள் ஆகும். ஒவ்வொரு காண்டமும், அந்தந்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளையும், வாழ்க்கை முறைகளையும் விளக்குவனவாக உள்ளன.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு மனிதனும் சில காண்டங்களில் வாழ்ந்தோ, அல்லது அவற்றை கடந்தோ வந்து கொண்டிருக்கிறான். அவற்றில் எனக்குத் தெரிந்த சில காண்டங்களைப் பற்றி கூறவே இப்பதிவு.
பண காண்டம் - மனிதன் தான் வாழ்வதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்க்காக உருவாக்கப்பட்ட இந்தப் பணம் எதோ சூட்சுமத்தால் அவனின் வாழ்வை மறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை தேடித் தேடி வாழ்க்கையைத் தொலைக்கச் செய்தது.
அரசியல் காண்டம் - மனிதகுலம் தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தமக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அனைவருக்கும் பத்திரமான ஒரு வாழ்விட வசதிகளை உருவாக்கித் தரவும் ஏற்படுத்தப்பட்டதுதான் அரசாங்கம். அனால், அரசியல் சாசனங்களையும், பதவிகளையும் பயன்படுத்தி, தனக்கும் தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கும் வசதியான வாழ்விடங்களைப் பத்திரம் போட்டுக் கொள்ளவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதையும் அடிப்படை கொள்கைகளாக ஏற்படுத்திகொண்டது நமது அரசியல் கட்சிகள்.
ஜாதி-மத காண்டம் - ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்பதில், ஒருவனே தேவன் - அவன் நான் வழிபடுவனே ! என்று மனித மனங்களில் விஷ மருந்து பாய்ச்ச போட்டி போட்டுக்கொண்டு வேஷம் பல போட்டுத் திரியும் மதம்பிடித்த இந்த மாக்கள்(மாடுகள்) குலத்தை மட்டும் ஒன்றாக இணைத்துக்கொள்ள தயங்குவதேன்? ஜாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் மனித குலத்தைப் பிரித்தாளும் இந்த கருப்பு ஆடுகள் வெளியேறிய வெள்ளையர்களைவிட மோசமானவர்கள்.
கல்வி விற்பனைக் காண்டம் - முறையான கல்வியை இலவசமாகக் கற்றுக் கொடுத்தால், அறிவை வளர்த்து அளப்பரிய சாதனைகள் செய்து இவ்வுலகம் போற்ற வாழ்ந்து, தனது தேவைகளையும், தன்னைச் சார்ந்தவர்கள் தேவையும் பூர்த்தி செய்து கொள்வான். அனால், இன்று கல்வி விற்கப்பட்டு, அன்னதானங்கள் மூலமாகவும், இலவசங்கள் மூலமாகவும் நம்மை அறியாமல் நம்முள் வாழ்க்கைத் தர வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
கலாச்சார காண்டம் - நாம் செய்த அற்ப இன்பம் தரக்கூடிய செயல்களை நமது இளைய தலைமுறையினறோ அல்லது நம் சந்ததியோ செய்து அனுபவித்திடக் கூடாதெனவோ, நமக்குக் கிடைக்காத வாய்ப்பை அவர்கள் பெற்று அனுபவித்திடக் கூடாதெனவோ ஒரு குழுவும், எதிலுமே எல்லை மீறி இன்பம் காண்போம் வா என ஒரு குழுவும் கலாச்சாரத்தைப் பந்தாடிப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பர்களே! நம் சந்ததிகளுக்கு ஒழுக்கத்தையும் அதன் பயன்களையும் கற்றுக் கொடுங்கள். நம் கலாச்சாரம் காக்கப்படும்.
பெண்ணிய காண்டம் - பெண்ணை அடிமைப்படுத்தும் ஆண்கள் ஒருக்காலும் சந்தோசமோ வெற்றியோ பெற முடியாது. அடிமைத் தனத்திலிருந்து வெளியேறுவதாக எண்ணி, தாமே தமக்கு அடங்காமல் திரியும் பெண்களுக்கு விடுதலை விடுகதை ஆகிவிடும். ஆணும் பெண்ணும் சமம் - அடிமை சங்கிலிகள் அறுத்தெறிவோம். அன்பால் இணைவோம். பண்பால் அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம். உங்கள் உண்மையான உரிமைகளுக்கு விடுதலை வேண்டுங்கள். உடைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டு, விபச்சார விளம்பரங்களாக விலை போக உங்கள் விடுதலையை பயன்படுத்தாதீர்கள். உடை குறைப்பதே எங்கள் விடுதலை என ஒரு கூட்டமும், அப்படிப்பட்ட பெண்களை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துவோரை எதிர்த்துப் பேசுவதே விடுதலை என ஒரு கூட்டமும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் வெவ்வேறு திசைகளில் விடுதலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆணுக்கும், அவன் விரும்பும் பெண் தான் வாழ்வின் மையம் என்பதை உணருங்கள். வாழ்வில் வெற்றி கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட காண்டங்களையும், இன்னும் உங்களுக்குத் தெரிந்த காண்டங்களையும் முறையாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றியும் இன்பமும் பெறுங்கள்! வாழ்வியல் அபாயம் தவிருங்கள்!
11 comments:
யப்பா! தலை சுத்துது
எப்படியெல்லாம் யோசிக்கறீங்கய்யா...
காண்டம்,காண்டம்னு நல்லா கெளப்பறீங்க காண்டை... :))
வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி ராஜா! இந்தப் பதிவுக்கு மட்டும் அதிகபட்சமா இது வரைக்கும் 200 ஹிட்ஸ். என்ன பன்றது வரலாற்றுக் காண்டங்கள் மேல மக்களுக்கு அவ்வளவு ஈடுபாடு. :-))
காண்டத்தை கண்டோம், படித்தோம். நல்லா இருக்குங்க.
NYS THOUGHT ROSE...
CONGRATS...(I CAME THIS SIDE VIA YOUTH VIKATAN)
காண்டத்தை கண்டோம், படித்தோம். நல்லா இருக்குங்க.//
வருகைக்கு நன்றி suffix! காண்டத்தை prefix ஆக்கி கண்டு, படித்து & வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்!
தங்களின் பத்து வரங்களும்...எனது வேண்டுதல்கள்.
NYS THOUGHT ROSE...
CONGRATS...(I CAME THIS SIDE VIA YOUTH VIKATAN)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி Dyena! உங்களுள்ளும் உங்கள் பெயரிலும் உள்ள "சக்தி" உங்கள் வலைப் பதிவிலும் வானொலித் தொகுப்பிலும் தெரிகிறது....வாழ்த்துக்கள்!!
குட் ப்ளாக்ஸ் -ல் இரண்டாவது முறையாக இடம் பெற செய்த விகடன் குழுமத்திற்கு நன்றிகள்!
கருத்துப் பதிவில் ஆதங்க உணர்வுகள் கற்பவரை கண்டிப்பாக சென்றடையும். வாழ்த்துக்கள்.
சூப்பர்!!!
காண்டங்களால் ஆனது நமது வாழ்வு:-)
ரோஸ்விக் இப்படி இந்துதர்மத்தின் ராமாயணத்தை கேலி செய்வது தவறு.www.aanmigakkadal.blogspot.com
Post a Comment