கணித மேதை ராமனுஜம் வீட்டில் இருக்கும்போது தன தாயுடன் ஆடு-புலி விளையாட்டு ஆடுவார்.
முதலைக்கு வாழ்நாளில் எத்தனை பற்கள் விழுந்தாலும் முளைத்துவிடும்.
சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் இருந்தது.
உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி "ஸ்பினோடயூன்". நியூஜிலாந்து தீவின் கரையில் உள்ளது.
1690-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா".
இதுநாள் வரை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வராத ஒரே மாநிலம் - மேகாலாயா.
வீரமாமுனிவர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொள்வார்.
பூரானுக்கு நாற்பது கால்கள்.
கீரியும் - பாம்பும் போல தேளும் - எட்டுக்கால் பூச்சியும் இயற்கையிலே பரம எதிரிகள்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குதிரைகள் காட்டுப்பூனைகள் அளவிற்கே இருந்தனவாம்.
பாம்பு நுனி நாக்கினால் வாசனையை நுகர்கிறது.
நட்சத்திர மீனை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், ஒவ்வொரு சிறிய துண்டும் ஒரு முழு நட்சத்திர மீனாக வளரும் சக்தி உடையதாம்.
புலிகள் கடுமையான சூரிய ஒளியை விரும்பாது.
புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் வரும்.
சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.
யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.
Tsetse fly - இந்தப் பூச்சி கடித்தால் ஏற்படும் நோய் என்ன தெரியுமா? தூக்கம்தான். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
4 comments:
1960-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா".////
1860?
நல்லாருந்தது!
//Tsetse fly
என்னங்க பயமுறுத்துரீங்க..அந்த பூச்சி எப்படி இருக்கும்னு சொல்லுங்க..பயந்துவருதே :)
அது நம்ம ஊர்ல இல்ல. அது Zimbabwe, Tanzania, Nigeria பக்கம் இருக்கு. google-ல "Tsetse Fly"- னு தேடுங்க...நம்ம ஆளு எப்படி இருப்பார்னு தெரியும். அவரு நம்ம ஈ-க்கு அண்ணன் தான்....
Post a Comment