Tuesday, March 8, 2011

கருணைக்கொலை தேவையா? இல்லையா?

நேற்று வெளியான நீதிமன்றத்தீர்ப்பு என்னைப் பொறுத்தவரையில் அதிர்ச்சியையே அளிக்கிறது.

”சோகன் லால் பார்த வால்மீகி” எனும் காமுகன் ஒருவனால் தனது 25-வது வயதில் கற்பழிக்கப்பட்டு இன்று வரை கடந்த 37 வருடங்களாக ”அருணா ஷான்பாக்” தன் சுயநினைவு இழந்து படுத்த படுக்கையில் உள்ளார். தற்போது அவருக்கு 62 வயது. 

இவர் தனது சுயநினைவை இழந்து உயிர்வாழும் இந்த தருணத்தில் மிகுந்த சிரமமான வாழ்வையே வாழ்ந்து வருகிறார். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவன், நீதிமன்றம் வழங்கிய ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு இன்று எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வருவதைக் கூட அருணா அறிந்திருக்க மாட்டார்.



ஒரு உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை எனும் ஏதோவொரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை என்னளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியை நிரபராதி எனக்கூறி தண்டனைகளில் இருந்து விடுவித்த போது உறுத்தாத மனசாட்சிகள் இந்த கருணைக்கொலை அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் விந்தை.

எல்லா உறவுகளும், ஏன் அவரது உறுப்புகளும் கூட வழக்கமான பணிகளிலிருந்து விலகிய நிலையில் இருக்கும் அவரால் எவ்வாறு சாந்தமான  வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? நமது செயல்படும் மூளைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் கூட சிந்தித்து செயல்படாமல் போனது ஏன்?

சமீபத்தில் வெளியான “மந்திரப் புன்னகை” திரைப்படத்தில் கூட ஒரு வசனம் வரும்... “வயசான காலத்துல சாவைத்தவிர வேறு என்ன சுதந்திரம் நம்மால் கொடுத்துவிட முடியும்?”-னு. அது உண்மையென்றே எனக்குப்படுகிறது. இந்த அருணாவுக்கு நாம் வேறு என்ன நல்லது செய்துவிடமுடியும் அவரைக் கருணைக் கொலை செய்வதைவிட?

கருணைக்கொலைக்கு யாரேனும் விண்ணப்பித்தால், தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ, ஐந்து அல்லது பத்து நபர் கொண்ட குழுவை உருவாக்கி, இந்த விண்ணப்பத்தில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? இந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதால் யாருக்கு என்ன் லாபம்? என்பதை ஆராய்ந்து ஒரு தீர்ப்பு வழங்கலாமே!

விதாண்டாவாதத்திற்காகவும், ஏதோ சில நம்பிக்கைகளுக்காகவும் இந்த நீதிமன்றத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பே, எனது உறவில் ஒரு வயதான மூதாட்டி எந்த நினைவுமில்லாமல், உறுப்புகளும் சரிவர இயங்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுற்றபொழுதும் நான் இந்த கருணைக்கொலையைத் தான் ஆதரித்தேன். என்னதான் அவரைக் குளிப்பாட்டி, வீட்டுத் திண்ணையில் படுக்கவைத்தாலும், தானாகவே உருண்டு வீதியில், மாட்டு சாணத்திலும், மூத்திரத்திலும் பிரண்டு கிடப்பார். வெயில், மழை எதுவும் அவருக்குத் தெரியாது. சில நேரம் மாடு தன் காலால் அவரை உதைத்து, மிதித்து, கொம்புகளால் குத்தியது கூட உண்டு. அவரது உயிரை நாம் பிடித்து வைத்திருந்து என்ன மயிரைக் கண்டோம்?

என்ன செய்ய வாழும்போது கஞ்சி ஊத்தாமல், செத்தவுடன் பூவிலே பாடையும், மேளதாளங்களுடன் அடக்கம் செய்யும் தேசத்தில்தானே நாம் வாழ்கிறோம்.

நாட்டாமைகளா கொஞ்சம் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க...  வாழ்கிறவனுக்கு நல்ல வாழ்க்கைத்தரமும், பாதுகாப்பும் கொடுத்திட உங்க சட்டங்களை, அதிகாரங்களைப் பயன்படுத்துங்க....

இன்னும் அதிக விபரங்களுக்கு - http://blog.balabharathi.net/?p=408





15 comments:

Chitra said...

என்ன செய்ய வாழும்போது கஞ்சி ஊத்தாமல், செத்தவுடன் பூவிலே பாடையும், மேளதாளங்களுடன் அடக்கம் செய்யும் தேசத்தில்தானே நாம் வாழ்கிறோம்.

நாட்டாமைகளா கொஞ்சம் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க... வாழ்கிறவனுக்கு நல்ல வாழ்க்கைத்தரமும், பாதுகாப்பும் கொடுத்திட உங்க சட்டங்களை, அதிகாரங்களைப் பயன்படுத்துங்க....

......இந்த பதிவை வாசிக்கும் போது பெருகி வந்த கண்ணீரை தடுக்க முடியல.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்கிறவனுக்கு நல்ல வாழ்க்கைத்தரமும், பாதுகாப்பும் கொடுத்திட உங்க சட்டங்களை, அதிகாரங்களைப் பயன்படுத்துங்க....//
ப்யன்படுத்தவேண்டும்.

vasu balaji said...

இதுக்கு சொன்ன விளக்கம் இருக்கே..அவ்வ்வ்வ்வ்

Paleo God said...

ப்ச் என்னவோ போங்க :((

ஜோதிஜி said...

நானும் படித்தேன். வறுமையில் முதுமை. ஆதரவற்ற நிலையில் உடல் பிணிகள் போன்றவற்றால் அல்லல்படும் பெரியவர்களை உறவினர்களை பார்த்துக் கொண்டு மனத்தை கல்லு போல் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் நோய்களுடன் போராடிக் கொண்டு வாழும் அந்த வாழ்க்கையை பார்க்கும் போது பயம் தான் வருகின்றது. கருணைக் கொலை. சொல்லும் போது எளிதாகத்தான் இருக்கிறது. நம்மால் முடியுமா? என்று யோசிக்கவே பயமாய் இருக்கிறது. நீங்கள் சொன்ன மூத்திரத்தில் புரண்டு... நானும் பார்த்துள்ளேன். இந்த பதிவின் சாரத்தை விட மற்றொரு விசயம் தான் நினைவுக்கு வருகின்றது. நடிகர் சிவகுமார் அடிக்கடி இளம் நடிகர்களுக்கு சொல்வது. இரத்தம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டால் அத்தனைக்கும் விளைவுகள் உண்டு என்று நெருங்கிய வட்டாரத்தில் சொல்வாராம். இது போன்ற வயதானவர்களைப் பார்க்கும் ஒரு வைராக்கியம் தான் ஒவ்வொரு நாளும் வருகின்றது. அடக்க வேண்டிய கோபத்தை, வாழ வேண்டிய முறைப்பாடுகளை இவர்களை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 70 வயது கிழவி 30 000 சதுர அடி நிறுவனத்தை தினமும் கூட்டித் துடைக்கும் போது அவர் பெற்ற பிள்ளைகள் மேல் அத்தனை கோபமாக வருகின்றது. இவர்களைப்போன்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்று மனம் ஆதங்கப்படுகின்றது. தாத்தா இறக்கும் போது சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. தூங்கும் போது நான் செத்து விடுவேன் என்றார். அதே போல் காலையில் எழுப்பிய போது இறந்து கிடந்தார். நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. உங்கள் பதிவின் தாக்கம் பல விதமாக யோசிக்க வைத்து விட்டது. எஞ்சிய காலம் ஷங்கர் சொல்வது போல் ப்ச் என்று சொல்ல வைக்கின்றது.

vinthaimanithan said...

ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவியலாத கையாலாகாத்தனமும், நடுத்தர வாழ்க்கைச்சூழலின் விலங்குகளும் மனதை அழுத்த, கூசிப்போய் நிற்கிறேன். வேறென்ன சொல்ல?

R. Gopi said...

தீர்ப்பில் கருணைக்கொலை ஏன் வேண்டாம் என்பதற்கு நிறைய காரணங்களை சொல்கிறார்கள்.

சமயமிருக்கும்போது படித்துப் பார்க்கவும். நன்றி.

http://www.supremecourtofindia.nic.in/outtoday/wr1152009.pdf

Rettaival's Blog said...

நச்சுன்னு நாலு வார்த்தை எழுதியிருக்கே!

கருணைக்கொலையை காரனம் காட்டி நிறைய கிரிமினல் குற்றங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது! எல்லோரையும் அணு அணுவாகக் கொல்வதற்குத்தான் அரசியல் சட்டங்கள் நம் நாட்டில் உள்ளது. மொத்தமாகப் போட்டுத் தள்ளுவதற்கு அல்ல!

Veliyoorkaran said...

@@@Rettaival's said...
கருணைக்கொலையை காரனம் காட்டி நிறைய கிரிமினல் குற்றங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது!///

வயதாகிவிட்டது மண்டையில் மசுரு கொட்டி விட்டது என்ற காரணத்தை காட்டி அண்ணன் அழகிரி அவர்களும் தளபதி ஸ்டாலின் அவர்களும் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று தலைவர் கலைங்கரையே கொன்று விடும் அபாயம் இருப்பதால் நாங்கள் இந்த பதிவை கடுமையாக எதிர்க்கிறோம்...! - இப்படிக்கு திராவிட முன்னேற்ற கழகம். (உட்கட்சி கூதல் அரசியல் கட்சியின் உள்குத்து தொண்டன்..):)

'பரிவை' சே.குமார் said...

படிக்கும் போது மனசு கனக்கிறது....

//@வெளியூர்க்காரன் : வயதாகிவிட்டது மண்டையில் மசுரு கொட்டி விட்டது என்ற காரணத்தை காட்டி அண்ணன் அழகிரி அவர்களும் தளபதி ஸ்டாலின் அவர்களும் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்று தலைவர் கலைங்கரையே கொன்று விடும் அபாயம் இருப்பதால்...//
ஐயா கலிஙகரு அவுங்க ரெண்டு பேரையும் மேல அனுப்பிட்டு ஆட்சிய விடாம புடிச்சிக்குவாருங்கோ...

Anonymous said...

கொடுமைகளிலும் கொடுமை நாம் நேசித்தவர்கள் நம் கண் முன் கஷ்டப்படுவது தான்.

ஸ்ரீராம். said...

//"என்ன செய்ய வாழும்போது கஞ்சி ஊத்தாமல், செத்தவுடன் பூவிலே பாடையும், மேளதாளங்களுடன் அடக்கம் செய்யும் தேசத்தில்தானே நாம் வாழ்கிறோம்"//

அவ்வளவுதான் ஆள் அவுட், இனி வரமாட்டான் என்ற சந்தோஷம்தான் காரணமோ...!

பார்த்துக் கொள்ள ஆள் இருக்கிறார்கள் என்றால் சரி என்று விட்டு விட வேண்டியதுதான். அருணா சம்பவத்தோடேயே சகோதரர் இருவரைக் காட்டினார்களே பார்த்தீர்களோ...

மைதீன் said...

எந்தன் புத்தியோ நீங்கள் எழுதியதை படித்ததும் கருணைக் கொலை சரிதான் என்கிறது.ஆனால், மனமோ அதை கற்பனை பண்ணி ஐயோ வேண்டாம் என்று அலறுகிறது..

TamilTechToday said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

ரோஸ்விக் said...

நன்றி Chitra
நன்றி இராஜராஜேஸ்வரி
நன்றி வானம்பாடிகள்
நன்றி 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
நன்றி ஜோதிஜி
நன்றி விந்தைமனிதன்
நன்றி Gopi Ramamoorthy
நன்றி Rettaival's
நன்றி Veliyoorkaran
நன்றி சே.குமார்
நன்றி "குறட்டை " புலி
நன்றி ஸ்ரீராம்
நன்றி மைதீன்