தமிழகத்தின் சாபக்கேடுகளில் முதன்மையான ஒன்று இங்கு உருவாகிய கழகங்களின் கலகங்கள். இதற்கு உரமிட்டு வளர்ப்பது நம் மக்களின் ஜடத்தனமும், எதிர்ப்புநிலை காட்டத்தெரியாத மடத்தனமும். அமைதியாகவே இருப்பது அகிம்சை ஆகிவிடாது. அது அநியாயங்களுக்குத் துணை போனதற்கு சமம். அதைத்தான் நாம் பலகாலமாக செய்துவருகிறோம்.
இரு பெருங்கழகங்களும் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடிப்பதும், ஆட்சியில் இல்லாதபோது சட்டசபைக்குக்கூட வராமல் அறிக்கைவிட்டே அரசியல் நடத்துவதுமே வழக்கமாகிவிட்டது. இவர்களது கொள்கைகள் என்பதை இவர்கள் கைகள் கொள்ளும் அளவாகவேப் புரிந்து கொள்ளவேண்டியதாயிருக்கிறது. தமக்கானதாய் தொலைகாட்சி சேனல்களும், சில பல ஆதரவுப் பத்திரிக்கைகளையும் வைத்துக்கொண்டு பத்தினி வேசம் போட்டு பொதுமக்களை பைத்தியக்காரர்களாகவே வைத்திருப்பது இவர்களின் பலம்.
திரைத்துறை பின்னணியை வைத்துக்கொண்டு இவர்கள் அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ இவர்களால் திரைமறைவு வேலைகளில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்த இரு கயவர் கும்பலில் ஒருவரை தேந்தேடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் நாம். ஒருவர் கதையெழுதி நாடகங்களில் நடித்த அனுபவத்தால் காட்சிக்கு காட்சி விறுவிறுவென திருப்புமுனைகளை வைத்து, கொள்கைகளை அடகு வைத்து, மணிக்கொருமுறை நரம்பில்லா நாக்கை சுனாமியிலும் வேகமாக இங்குமங்கும் பிரட்டி, பிதற்றி அரசியல் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு கருப்பு சட்டைபோட்ட காவல்காரர்களும் உண்டு. பலவிதமான அறிக்கைகளை தயாராக எழுதி வைத்துவிட்டு பொருத்தமானதை பொருந்தும் நேரத்தில் வெளியிடுவதற்காகவே பெரியாரல்லாத வேறு பாசறைகளிலும் பயின்று வந்திருக்கிறார்கள் போலும்.
நடிகை ஜெயலலிதா, படப்பிடிப்பின்போது இடையிடையே கிடைக்கும் சிறு ஒய்வுநேரத்தைப் போன்று தமிழக அரசியலையும் நினைத்துக்கொண்டிருக்கிறார். இடைவேளையில் ஜூஸ் குடிப்பதும், நிழலில் இளைப்பருவதும் பழக்கதோஷமாகிவிட்டதால் கொடநாடு ஓய்வும் அவசியமாகிப்போனது. படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களிடமும் மற்றவர்களிடமும் முரண்டு பிடிப்பதும், அவர்களை ஏசுவதும், அவமரியாதையாக நடத்துவதும் சதை வியாபாரத்தில் சரிப்படலாம். அந்தக் கதை இங்கு எடுபடுமா அரசியலில்? திமிர்பிடித்த நடிகையாகவே நடித்து பழக்கப்பட்டதை அரசியலில் ஒதுக்க அம்மையாருக்கு மனமில்லை போல.
அம்மையாரும், அய்யாவும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்லவர்கள் என்று நினைத்து, தேர்தலில் யாரும் வெற்றியடையச் செய்வதில்லை. ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை. அதுமட்டுமில்லாமல் இருவரும் தேர்தலின் கடைசி நேரங்களில் நடத்தும் நாடகங்களுக்கான பாராட்டுதலாக அந்தந்த நாடகக் கம்பெனிகளுக்குப் போய்ச்சேர்ந்துவிடுகிறது. இது துரதிர்ஷ்டமே.
நடிகையின் நர்த்தனம் பார்க்க நன்றாகயிருக்கலாம். நடிகையின் பாதமும் புண்ணாகும் என்பது குறைந்தபட்சம் அந்த நடிகைக்காவது தெரிந்திருக்க வேண்டும். பொது'மா'க்களில் பெரும்பாலோருக்கு மதம் போல கட்சி இரத்தமும் ஊட்டியே வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் என்ன அட்டூழியம் செய்தாலும் எதிர்த்து ஒரு கேள்விகூடக் கேட்பதற்கு ரத்தத்தின் ரத்தங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ மனம் வந்துவிடாது. புதிதாக எவர் வந்தாலும் ஓராயிரம் கேள்விக் குடைச்சல்களைக் கொடுத்து வாய்ப்பளித்துவிடப் போவதில்லை. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்ற எங்கள் வார்த்தைகளில் மட்டும் என்றுமே மாற்றம் இருக்காது.
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இவர்கள் வந்தால் மட்டும் என்ன செய்து கிழித்துவிடப்போகிறார்கள் என்ற கேள்வியை மட்டும் வாய்கிழிய அடுத்தவன் காது கிழிய கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாம் வாக்களிக்கும் புதியவர்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி செயல்படாமல் போகலாம். அதை அவர்களின் செயல்பாடை வைத்துதான் முடிவு செய்யமுடியும். அவ்வாறே அவர்களின் செயல்பாடு திருப்தியளிக்காவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் கழகங்களுக்கும், புதிதாய் தோன்றும் கழகங்களுக்குமாவது ஒரு பாடமாயிருக்கட்டுமே.
பொதுமக்களே அவர்கள் நர்த்தனம் ஆடட்டும், நாடகம் இயற்றட்டும், நமக்கு எங்கேபோனது புத்தி?
20 comments:
அவர்களை ஏசுவதும், அவமரியாதையாக நடத்துவதும் சதை வியாபாரத்தில் சரிப்படலாம். அந்தக் கதை இங்கு எடுபடுமா அரசியலில்?
//
இந்த “சதை” என்ற வார்த்தைக்காக,
இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன்....
செயலலிதா எங்கள் குலசாமி..
கால்ல விழுந்து கும்பிட்டு, சாபவிமோஷனம் வாங்கிக்குங்க..
கலைஞர் எங்கள் தெய்வம்.. அவரை பற்றி பேசியதையும் வன்மையாக கண்டிக்கிறேன்...
இந்த பதிவுக்காக, சிங்க பதிவர்கள் மூலம், உங்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக்கூடாது?..
ஹி..ஹி.. 2000 ரூபாய் காசு... செயலாலிதா ஆடிய... அது என்னா வார்த்தயா ?..
ஆங்.. நர்த்தனம்..
அதனால கிடைக்காம போயிடுமேனு , தலையில துண்டைப்போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கோம்.. நீரும் கூட சேர்ந்து பயமுறுத்திரியே..!!!
நடிகையின் நர்த்தனம் பார்க்க நன்றாகயிருக்கலாம்
//
என்னா ஒரு நெஞ்சுரம்யா உமக்கு..
அந்தம்மா ஆட, நீர் பார்க்க..
ம்.. நல்லாத்தான் இருக்கு.. ஹி..ஹி
பேசாம, இந்தியாவை, இலங்கை கூட இணைச்சிரலாமா?...
யோச்னை பண்ணிச்சொல்லி.. அப்பால நான் , நீரா கூட பேசி, முடிச்சுக்கொடுக்கேன்...
//வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை//
என்ன செய்வது. நம் ஊழ்வினை. மற்றபடி நல்ல அலசல். துவைத்துக் காயப் போட்டு விட்டீர்கள்.
yes sir,I totally agree with u,but the situation is not suitable for the new comers whereas either one of the evils get retired...
வைகோ,விஜயகாந்த் தலைமையில் மூன்றாம் அணி அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
இப்போதைய நிலையில் ஒன்று ஊழல் பிசாசு,மற்றொன்று ஆணவப் பிசாசு.இரண்டில் எது வந்தாலும் அடி விழுவதென்னவோ நமக்காக தான் இருக்கும்.இந்த முறை ஒரு வலுவான மூன்றாம் அணி அமைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.அப்படி அமைந்தால்,அதை ஆதரிப்போம்.
/ ஒருவேளை நாம் வாக்களிக்கும் புதியவர்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி செயல்படாமல் போகலாம். அதை அவர்களின் செயல்பாடை வைத்துதான் முடிவு செய்யமுடியும். /
இது சரியான வாதம். மதிமுக தனியா நின்னா அதுக்குதான் என் ஓட்டு. அவங்க ஜெயிச்சாலும் சரி டெபாசிட் இழந்தாலும் சரி.
ILLUMINATI said...
வைகோ,விஜயகாந்த் தலைமையில் மூன்றாம் அணி அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்.
இப்போதைய நிலையில் ஒன்று ஊழல் பிசாசு,மற்றொன்று ஆணவப் பிசாசு.இரண்டில் எது வந்தாலும் அடி விழுவதென்னவோ நமக்காக தான் இருக்கும்.இந்த முறை ஒரு வலுவான மூன்றாம் அணி அமைய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.அப்படி அமைந்தால்,அதை ஆதரிப்போம்.
**********************************************************************
நாடு நட்டுக்கும் மச்சி! வில்லனுங்க கைல இருந்தாலாவது ஏதோ அடியாளுங்களாவது பொழைப்பானுங்க... காமெடியனுங்க கைல நாடு போகவே கூடாது!
ஜெய் உங்கள் ஆசையில் மண் தான்.வைகோவுக்கு அவ்வளவு தன்மானமெல்லாம் கிடையாது! ஜெயலலிதாவை ஆதரித்து வீர உரை ஆற்றப்போகிறார் பாருங்கள்! கேட்டவுடன் கக்கா வரும்!
//அமைதியாகவே இருப்பது அகிம்சை ஆகிவிடாது.//
நச்-சென்று சொல்லியிருக்கிறீர்கள்! கையாலாகாத்தனமா அஹிம்சை?
//ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை//
உண்மை. மாற்றாக கருதப்பட்ட கட்சிகளும், தங்கள் தனித்துவத்தை இழந்து, இரு பெரிய திராவிடக்கட்சிகளுக்குப் பல்லக்கு தூக்குவதாலும், தேசீய கட்சிகள் தம்மை வளர்த்துக்கொள்ள சற்றும் முயற்சி செய்யாமல் அசட்டையாக இருப்பதும் இந்த செய்வினைக்கான உந்துதல்கள்.
//நமக்கு எங்கேபோனது புத்தி?//
இருக்கிற புத்தியும் பேதலித்துவிடுமோ என்ற பயம் மட்டுமே மிச்சம் இப்போது!
'அமைதியாகவே இருப்பது அகிம்சை ஆகிவிடாது. அது அநியாயங்களுக்குத் துணை போனதற்கு சமம்.' மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரோஸ்விக்.எல்லார் மனதிலும் பதியவேண்டிய வார்த்தை.
அன்புடன்,
அமுதவன்.
வேற வழி? இருவருமே கலை கூத்தாடிகள் .என்ன செய்வது நம் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது . இப்படிக்கு சிங்கை நண்பன் .
\\நீங்கள் நல்லவர்கள் என்று நினைத்து, தேர்தலில் யாரும் வெற்றியடையச் செய்வதில்லை. ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை. \\ Bitter truth.
"நாடு நட்டுக்கும் மச்சி! வில்லனுங்க கைல இருந்தாலாவது ஏதோ அடியாளுங்களாவது பொழைப்பானுங்க... காமெடியனுங்க கைல நாடு போகவே கூடாது!"
உண்மை.....
The most interesting article reading Give both knowledge Give both good content, good photos, I really like it. Thank you for the information. pg
Post a Comment