Thursday, April 8, 2010

ரயில் - தாலாட்டும் மற்றொரு தாய்...

ரயில் - இந்த மூன்றெழுத்திலும் மூச்சிருக்கும். எப்போதும் ஓடி ஓடியே மூச்சிறைக்கும். தடக் தடக் என்ற இதயத் துடிப்பும் இருக்கும். இதன் இதயமும் இரும்பால் தான் இருக்கும். அதனாலோ என்னவோ முரட்டு பலம் கொண்டவன். பல, பலகுரல் மன்னர்கள் பழகிய முதல் குரல் இந்த ரயில் ஓசையாகத் தான் இருக்கும். நகரங்களில் நேரம் குறிப்பிட்டு, இந்த நேரத்திற்கு இந்த ரயில் வருமென்பர்... கிராமப் புறங்களில், குறிப்பிட்ட ரயில் வருவதை வைத்து இது தான் நேரம் என்பர்.

சேவல் கூவி பொழுது விடிந்ததை அறியும் கிராமங்கள் போல், இதன் சங்கு சப்தம் கேட்டு விடியலை அறியும், கிராமங்களும், சிறு நகரங்களும் உண்டு. கணவன் அலுவலகம் கிளம்பும் நேரம், மதிய உணவுக்கு உலை கொதிக்க வைக்கும் நேரம், பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம் எல்லாமே, கடிகாரம் பார்க்காமல் உணர்த்தப்படும் இந்த ரயிலோசையால். நடு நிசியில், கூவும் சரக்கு ரயிலின் ஓசை கேட்டு விழித்த தம்பதிகள் தம் வாரிசுக் கணக்கில் ஓன்று கூட்டிவிட்ட கதைகளும் இருக்கக் கூடும் ரயிலடி ஓர வீடுகளிலும், கிராமங்களிலும்.

காலையில் சுட்ட வடைகளில் சில காய்ந்து கிடக்கும் மாலையில் வரும் பல்லவனுக்காக. கல்லூரி கும்பல்கள் கலாட்டாக்கள் செய்யும்போதெல்லாம், இதன் செயின் இழுத்து வழி (பறி)மரித்த திருடர்கள் ஆகிப்போவார்கள். காதலும், காமமும் இதன் கழிப்பறைகளில் தங்கி பல ஊர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் பல மொழிகளிலும். பலரின் சபலங்களையும், சல்லாபங்களையும் இதன் ஒவ்வொரு பெட்டிகளும் பல முறை(த்துப்) பார்த்திருக்கும். இன்னும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது ரயிலும் ரயில் பயணங்களும்.

பனங்குடி எனும் கிராமம் அருகில் உள்ள எமது வயலோரத்தில், ரயில்கள் கடக்கும் போதெல்லாம், நான் இதில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற கனவு என் அப்போதைய நினைவுகளைக் கடத்திப் போவதுண்டு. என் தந்தையிடம் கேட்கும்போதெல்லாம், நீ பெரியவனாகி படித்து வேலைக்குப் போனால், இதில் அடிக்கடி பயணிக்க வேண்டியிருக்கும் என்று சொல்வதுண்டு. அடம்பிடித்து ஒரு முறை குடும்பத்தார் அனைவருடனும் ரயிலில் இடம் பிடித்தோம் ஒரு நாள். வேளாங்கண்ணி செல்வதற்காக, காரைக்குடியிலிருந்து நாகபட்டினம் செல்லும் பயணிகள் ரயிலில் தான் எனது முதல் பயணம். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி இடம் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சி. எனக்கும், எனது தம்பிகளுக்கும் தலை கால் புரியவில்லை. ரயில் நின்று கொண்டிருக்கும் போது காலி இடங்களில் எல்லாம் உக்கார்ந்து பார்த்தோம். நகருகையில் வீராப்பாய் கை பிடிக்காமல் நின்று பயணம் செய்ய முயற்சித்தோம்.

அதற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து, கல்லூரியில் படிக்கும் பொது இரண்டு முறைகள் கல்லூரி நண்பர்களோடு திருச்சியிலிருந்து காரைக்குடி வரை பயணித்தேன் அதே ஆர்வம் குறையாமல். அதில் என்னோடு வந்த நண்பர்களுக்கு இதுவே முதல் முறை. என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். "டிக்கெட் வாங்காம ஏறுனா எபுட்ரா கண்டுபுடிப்பாய்ங்க?", "ரயில் கக்கூசுக்கு எங்க இருந்துடா தண்ணி வருது??", போன்ற வில்லங்க கேள்விகள்.

சில முறைகள் திருச்சியிலிருந்து சென்னைக்கு வியாபார நிமித்தமாக, பணக்கார நண்பன் ஒருவனுடன் பயணித்துள்ளேன். அவன் டிக்கெட் பரிசோதகர்களிடம் மிக எளிதாகப் பழகிவிடுவான் அடிக்கடி சென்று வருவதால். எந்த நிலையத்தில் விற்கும் டீ, காஃபி நன்றாக இருக்கும், எந்த நிலையத்தில் வடை, போலி நன்றா இருக்கும் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி. அவனது அன்பில் ஒரு முறை ஏ.சி பெட்டியில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இறுக்கமான மனிதர்கள், தொலைபேசியில் கூட சுருக்கமாகவே பேசி வந்தனர். ஏனோ, அந்த பயணம் எனக்கும் பிடிக்கவில்லை. வழக்கமாக என்னோடு பயணிக்கும் காற்றும், நிலவும், கடந்து செல்லும் மரங்களும், பாலங்களும் காணமுடியாமல் கானல் ஆகிப்போயிருந்தது. வசதியானவர்களுடன் சென்ற அந்த பயணம் எனக்கு வசதியாக இல்லை. அந்தக் குளிரிலும் நான் உணர்ந்த தனிமை எனக்கு தனலாகவே தெரிந்தது.

அதன் பிறகு நெடுந்தூரப் பயணமாக என் உறவினர்களுடன் கல்கத்தா சென்றேன். போகும் வழியில் பல மாநிலங்கள், பல மொழிகள், பல்வேறு உடை மற்றும் உருவங்களை கடந்து செல்லும் வாய்ப்பு அது. எனது அம்மாச்சி மற்றும் எனது சித்தப்பாவுடன் சென்றதால், சுதந்திரமாக உலாவவும் முடியவில்லை. அருகாமையிலிருந்த இளவயது பெண்ணுடன் அலாவவும் முடியவில்லை. இது தான் முதன் முறையாக முன்பதிவு செய்து தொடர்ந்த பயணம். கல்கத்தாவிலிருந்து, மேற்குவங்க மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பயணித்த போது, காலுறை முதல், தலை குல்லா வரை, தனி மனிதனின் தேவைகளை விற்பனை செய்வதைப் பார்த்தது ஒரு நல்லா அனுபவம்.

அதன் பிறகு, ஹைதராபாத்திலும், திருவனந்தபுரத்திலும் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும்போதும், திரும்பும்போதும் முன்பதிவு செய்தே தொடர்ந்தேன் என் பயணங்களை. ஒவ்வொரு முறையும், நான் பயணிக்க வேண்டிய பெட்டியில் ஏறும் முன் அதில் ஒட்டப்பட்டிருக்கும் பயணிகள் பட்டியலை பல முறை பார்ப்பதுண்டு. என் பயணத்தை உறுதி செய்ய அல்ல. முதலில் எனக்குப் பக்கத்து இருக்கைகளில் ஏதேனும் இளநங்கை இருக்கிறாளா?? குறைந்த பட்சம் அந்த பெட்டியில் எங்காவது ஒரு அழகிக்கு இடம் கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதையே ஆராயும்.

ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். சிலர் இருக்கும் காலி இடங்களில் எல்லாம் தம் பொருளை பரப்பி வைத்திருப்பார். சிலர் ஏதாவது படித்துக் கொண்டும், படிப்பது போல் நடித்துக்கொண்டும், சிலர் எதையாவது தின்று கொண்டும் இருப்பார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வழியனுப்ப வந்தவரிடம், இதுவே முதலும் கடைசியும் அவரை சந்திக்கும் வாய்ப்பு போல பேசிக்கொண்டிருப்பார். சிலர் பரிசோதகர்களுக்கு கை குவித்தும், சிறு அளவில் பொருள் குவித்தும் தங்கள் பயண இருக்கைகளை உறுதிப்படுத்த முயன்று கொண்டிருப்பார். சுடப்பட்ட பஜிஜிகளும், வடைகளும் வியாபாரிகளின் தட்டுக்களில் பாதி தூரமும், என் போன்றவர்களின் வாய் வெட்டுக்களில் பாதி தூரமும் பயணிக்கும்.

எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும். முன்பதிவு செய்து தரும் அதிகாரிக்கு இது தெரியாது போலும். பஞ்சையும், நெருப்பையும் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்ய வைத்து விடுவார். முன்பதிவு செய்யப்படாத இந்த திடீர் காதல் பயம் தொற்றாமலும், பணம் வற்றாமலும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும். இளம் பையன்கள் எப்போதும் பயணத்திற்கு என்று ஒரு பழைய பேண்டும், டீ-ஷர்ட்டும் வைத்திருப்பார் போலும். ஆனால், இளம் பெண்களோ, மல்லிகைப் பூக்களோடும், மணக்கும் வாசனைத் திரவியத்தொடும், மனம் தொடும் பவ்வியத்தொடும் பயணம் தொடங்குவார்கள். இதனாலோ என்னவோ, நம்மவர்களுக்கு பெரும்பாலும் காதல் இங்கு கைகூடுவதில்லை.

சில பெண்கள் இருப்பார்கள், ஏறியவுடன் இரண்டு ரொட்டித் துண்டுகளைத் தின்றுவிட்டு, ஒரு காஃபி அருந்திவிட்டு மேல்படுக்கைக்கு சென்று ஒரு ஆங்கில நாவல்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். என் பயணத்தின் பொது அப்படிப்பட்ட பெண்களை நான் விரும்புவதில்லை. சிலர் மட்டுமே இயல்பாக இருப்பார்கள். அம்மா கொடுத்தனுப்பிய தயிர் சாதத்திற்கு பிரபல பேக்கரியின் பக்கோடா கடித்துக் கொண்டிருப்பார்கள். தூரப்பார்வை இருப்பது எப்படி ஒரு குறைபாடோ அது போல, ஓரப்பார்வை இல்லாத பெண்ணும் ஒரு குறைப்பாடு என்றே எனக்குத் தோன்றும். இன்னும் சிலர் உண்டு கண்ணாலும், கைகளாலும் ஏதோ சைகை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களது நடவடிக்கைகளைப் படித்துப் பாருங்கள் ஓர் பேரனுபவம் கிடைக்கும். இது போன்ற கள்ளத்தனங்கள் தான் அந்த காலி இடத்தை ஜாலி இடமாக மாற்றும்.


நெடுந்தூரப் பயணங்களில் தன் சட்டையைக் கழற்றி ரயில் பெட்டியின் தரைப் பகுதியை துடைக்கும் சிறுவர்களைக் காணும்போதெல்லாம் பரிதாபம் வரும். அவன் நம்மை தொட்டு காசு கேட்கும்போதெல்லாம் அவன் ஏழ்மையை ஏளனம் செய்துவிடும் நாம் உடுத்தியுள்ள சலவைத் துணிகள். திருநங்கைகளின் காசு கேட்டு கைதட்டும் ஓசை, அவர்களின் முறை தவறும் அணுகுமுறைகள் மட்டும் எனக்கு, இளம் ஆணாக இருப்பதை நினைத்து பீதியைக் கிளப்பும்.


ஆனந்த விகடனும், குமுதமும், கல்கியும், பாக்யாவும், இந்தியா டுடே-வும் இன்னும் பல ஆங்கில புத்தகங்களும் சிலருக்கு ரயிலை விட வேகமாக தூரம் கடத்திப் போகும். வயதானவர்களுக்கு கீழ் இருக்கையை வேண்டுமென்றே தரமறுக்கும் மனிதர்களைப்பர்க்கும் பொது கதவின் வழியேனும் இவர்களை தள்ளி விடுவோமா என்ற கொலைவெறி தலைக்கேறும். ஒரு முறை வயதான தாத்தாவும், பாட்டியும் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு பயணம் செய்ய இருந்தார்கள். எனக்கும் அவர்கள் இருந்த பெட்டியில் தான் இருக்கை. தாத்தா, பாட்டியிடம் "ஒக்க லோயறு பெர்த்து வுந்தி. தாண்ட்லோ நுவ்வு படுக்கோ. நாக்கு தேவுடு இஷ்த்தாடு" என்றார். எதார்த்தமாக எனக்கு சைடு லோயர் பெர்த். மனமுவந்து வேண்டுமென்றால் நீங்கள் இங்கு படுத்துக் கொள்ளலாம் என்று அந்த தாத்தாவிடம் கூறினேன். அவர் அடைந்த ஆனந்தத்தை கண்டு நான் பேரானந்தம் அடைந்தேன். உடனே அவர் பாட்டியிடம், "சூசாவா, தேவுடு இ ரூபம்லோ வச்சி மனக்கு இச்சாடு" என்று புன்னைகையோடும், நன்றியோடும் கூறினார். ஒரு வழியாக நான் அன்று அவர்கள் முன் கடவுள் அவதாரம் எடுத்துவிட்டேன்.

எனது கைக்குழந்தையோடு, நான் செய்த ரயில் பயணமும் மறக்க முடியாதது. ரயில் நின்றுவிட்டால், அவள் விழித்துக்கொள்வாள். தொடர்ந்து பயணித்தால், ஆழ்ந்து உறங்குவாள். அப்போது மீண்டும் ஒருமுறை, ரயில் அனைவருக்கும் மற்றொரு தாய் என அறிந்தேன். தாலாட்டும் மடி, தட்டிக்கொடுக்கும் தடக் தடக்... அனைத்தும் சுவாரஸ்யமே.




44 comments:

ப.கந்தசாமி said...

ரோஸ்விக்,
அனுபவித்து எழுதியுள்ளீர்கள். இந்தப்புதுமையை எப்போதும் விடாதீர்கள்.

Chitra said...

தூரப்பார்வை இருப்பது எப்படி ஒரு குறைபாடோ அது போல, ஓரப்பார்வை இல்லாத பெண்ணும் ஒரு குறைப்பாடு என்றே எனக்குத் தோன்றும்.

.......ஹா,ஹா,ஹா,ஹா......
ரயில் சத்தத்தில் இதய துடிப்பை பொருத்தி, ஒவ்வொரு அசைவுகளையும் சுவாசித்து, மனதின் உணர்வுகளில் மூழ்கி எழுதப்பட்ட அருமையான பதிவு. அந்த ரயில் பயணங்களை மீண்டும் நினைவுப் படுத்தியமைக்கு நன்றி.

பிரபாகர் said...

தம்பி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் யாவும் மிக அழகு. அனுபவித்து எழுதியிருக்கிர்கள். மிக அருமை ரோஸ்விக். உங்களின் ஓவ்வொரு பருவத்திலும் ரயிலோடு உள்ள தொடர்பினை மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..

//நகரங்களில் நேரம் குறிப்பிட்டு, இந்த நேரத்திற்கு இந்த ரயில் வருமென்பர்... கிராமப் புறங்களில், குறிப்பிட்ட ரயில் வருவதை வைத்து இது தான் நேரம் என்பர்//

ரயில் புழக்கமில்லாத பேருந்து மட்டுமே இருக்கும் கிராமத்திலிருந்து வந்தவன். சிறு வயதில் பஸ் சப்தத்தை வைத்தே என்ன பஸ் என சொல்லுவேன், மணி என்ன என்பதோடு. ’சின்ன வயதில் பிரபு சத்தத்த வெச்சே என்ன பஸ்ஸு, என்ன நேரம்னு சொல்லுவான்’என பெரிசுங்க இன்றும் சொல்வார்கள். கல்லூரி முடித்து வேலைக்காக இண்டர்வியூ செல்லும் வரை நமக்கும் ரயிலுக்கும் ரொம்ப தூரம்!

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரபாகர் said...
ரயில் புழக்கமில்லாத பேருந்து மட்டுமே இருக்கும் கிராமத்திலிருந்து வந்தவன். சிறு வயதில் பஸ் சப்தத்தை வைத்தே என்ன பஸ் என சொல்லுவேன், மணி என்ன என்பதோடு. ’சின்ன வயதில் பிரபு சத்தத்த வெச்சே என்ன பஸ்ஸு, என்ன நேரம்னு சொல்லுவான்’என பெரிசுங்க இன்றும் சொல்வார்கள். கல்லூரி முடித்து வேலைக்காக இண்டர்வியூ செல்லும் வரை நமக்கும் ரயிலுக்கும் ரொம்ப தூரம்!
//

வானம்பாடிகள் சார்.. நீங்க கண்டிப்பாக இவருக்கு உதவ வேணும்..

எப்படியாவது ரயில காமிச்சு, தொட்டு பார்க்க அனுமதிக்குமாறு, உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

பித்தனின் வாக்கு said...

ரோஸ்விக்கு. மிக அருமையான பயணக் கட்டுரை. என்னமே தெரியல்லை, எனக்கு பஸ் பயணம்தான் மிகவும் பிடிக்கும். தட தடக்கும் சத்தம் பிடிப்பது இல்லை என்பதாலே என்னமே. ஒரு முறை நான் பெங்களூரில் இருந்து மேற்க் கொண்ட பயணம் எனது இரயில் வாழ்க்கையில் மறக்க முடியாது. அதுல இருந்து இந்த ஓரப்பார்வை மற்றும் கைவித்தைகளை கவனிப்பது இல்லை.

இரயிலில் வரும் திண்பண்டங்கள் எல்லாம் வாங்கித் திண்ணப் பிடிக்கும், இரயில்வே காண்டின் அயிட்டங்களைத் தவிர.

நல்ல பதிவு ரோஸ்விக்.

சைவகொத்துப்பரோட்டா said...

ரயில் பயணம் மிக சுகமானது,
எனக்கும் மிகவும் பிடித்தமானது.

Cable சங்கர் said...

ரோஸ்விக் அருமை. நல்ல வரிகளை எடுத்து போட்டு பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். பாதி பதிவை எடுத்து போட வேண்டியிருப்பதால் வேறு வழியில்லாம வெறும் பாராட்டோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அருமை

நாடோடி said...

ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்யும் அனுப‌வ‌மே சுக‌ம் தான்.... ஒவ்வொரு அசைவுக‌ளையும் கூர்ந்து க‌வ‌னித்து எழுதியுள்ளீர்க‌ள்...

மங்குனி அமைச்சர் said...

//ஏ.சி பெட்டியில் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இறுக்கமான மனிதர்கள், தொலைபேசியில் கூட சுருக்கமாகவே பேசி வந்தனர். ஏனோ, அந்த பயணம் எனக்கும் பிடிக்கவில்லை.///

அவனுக எல்லாம் மேதாவி மாதிரியே திரிவானுக , அப்புறம் ரோஸ் அனுபவிச்சு அழகா எழுதி இருக்க

க.பாலாசி said...

//ஆனந்த விகடனும், குமுதமும், கல்கியும், பாக்யாவும், இந்தியா டுடே-வும் இன்னும் பல ஆங்கில புத்தகங்களும் சிலருக்கு ரயிலை விட வேகமாக தூரம் கடத்திப் போகும். //

இப்டித்தாங்க எனக்கும்...

எப்பாடி எவ்ளோ அனுபவப்பூர்வமா, உணர்வுப்பூர்வமா எதியிருக்கீங்க... படிக்கும்போதே மலைப்பா இருக்குங்க...

பாபு said...

ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்யும் அனுப‌வ‌மே சுக‌ம் தான்
நல்ல பதிவு ரோஸ்விக்.

மணிஜி said...

/எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும். முன்பதிவு செய்து தரும் அதிகாரிக்கு இது தெரியாது போலும். பஞ்சையும், நெருப்பையும் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்ய வைத்து விடுவார். //

ரசித்தேன் தம்பி..

குலவுசனப்பிரியன் said...

வெகு அழகு.
//ரயில்கள் கடக்கும் போதெல்லாம், நான் இதில் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற கனவு என் அப்போதைய நினைவுகளைக் கடத்திப் போவதுண்டு.//
ரயில் சத்தம் கேட்டு, எங்கே வருகிறது என்று அனிச்சையாக ரயில் பெட்டிக்குள்ளிருந்தே எட்டிப் பார்த்ததுண்டு.

அன்புடன் அருணா said...

ரயில் பயணங்கள் சுவாரஸ்யமானவை...அதே சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - ரொம்ப நன்றிங்க ஐயா... இந்த நேரத்துல தூங்காம உக்காந்து பதிவுகளை படிக்கிறீங்களா?? :-)

ரோஸ்விக் said...

Chitra - உண்மைதான் சித்ரா. பொண்ணுகளோட ஓரப்பார்வையில எத்தனை பேறு ஹீரோ ஆகியிருக்காங்க... :-)

மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

பிரபாகர் - ரொம்ப நன்றி அண்ணே... உங்களுக்கு பட்டாப்பட்டி பதில் சொல்லி இருக்கான் பாருங்க... :-))

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - யோவ், யப்பா என்னா நக்கலு... நீ மட்டும் நேர்ல கிடச்ச... :-))

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - அப்புடி என்னாண்ணே நடந்தது உங்க பெங்களூரு ரயில் பயணத்துல... ??

ஓரப்பார்வை அனுபவிச்சு பாருங்கண்ணே தெரியும்... :-))

ரோஸ்விக் said...

சைவகொத்துப்பரோட்டா - மிக்க நன்றி நண்பரே! சில ரயில் பயணங்கள் மிகவும் இனிமையானதா அமையும்... :-)

ரோஸ்விக் said...

Cable Sankar - நல்ல வரிகளை மைன்ட்-ல வச்சுக்கங்கண்ணே... படம் எடுக்கும்போது கூப்பிட்டா ஓடி வந்து வசனம் எழுதி தருவேன்... :-))

மிக்க நன்றி அண்ணே!

ரோஸ்விக் said...

நாடோடி - ரொம்ப நன்றிங்க ஸ்டீபன். :-)

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - ரொம்ப நன்றி மங்கு! :-)

ரோஸ்விக் said...

க.பாலாசி - உணர்ந்ததுல கொஞ்சமாவது வரணும்னு எழுதுனேன் பாலாசி... மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

பாபு - மிக்க நன்றி பாபு. தங்களின் முதல் பின்னூட்டம் இது. மகிழ்ச்சி.

ரோஸ்விக் said...

மணிஜீ...... - மிக்க நன்றி அண்ணே! சென்னை வரும்போது தங்களை சந்திக்கிறேன். :-)

ரோஸ்விக் said...

குலவுசனப்பிரியன் - மிக்க நன்றி அண்ணே! இந்த ரயில் பயணங்கள் மேல பலருக்கும் இந்த ஈர்ப்பு உண்டு. :-) (இது தங்களின் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி.)

ரோஸ்விக் said...

அன்புடன் அருணா - மிக்க நன்றி அக்கா... :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு ரோஸ்விக்.

Jerry Eshananda said...

உங்களோடு கூட பயணிப்பதில் சந்தோசம்.

vasu balaji said...

எனக்கு வாழ்வளித்து சோறூட்டும் தாயவள். இவளுக்கு உயிர் கொடுக்கும் எங்கள் கதையும் இதைப்போல் சுவாரசியமே. மிக்க நன்றி ரோஸ்விக்.

Veliyoorkaran said...

Saaaaaaaaaaar...............!!!

சத்ரியன் said...

//நடு நிசியில், கூவும் சரக்கு ரயிலின் ஓசை கேட்டு விழித்த தம்பதிகள் தம் வாரிசுக் கணக்கில் ஓன்று கூட்டிவிட்ட கதைகளும் இருக்கக் கூடும் ரயிலடி ஓர வீடுகளிலும், கிராமங்களிலும்.//

ரோஸ்விக்,

உன் குசும்புக்கு அளவு கோலே இல்லியா சாமி?

சத்ரியன் said...

//னது அம்மாச்சி மற்றும் எனது சித்தப்பாவுடன் சென்றதால், சுதந்திரமாக உலாவவும் முடியவில்லை. அருகாமையிலிருந்த இளவயது பெண்ணுடன் அலாவவும் முடியவில்லை. //

அந்த பொண்ணோட ‘அலாவ’ விட்ருந்தா மட்டும் இந்தியாவோட பொருளாதாரத்த நிமித்தி வெச்சிட்டிருப்பீங்க....!

என்னா பீலிங்க்கி...!

சத்ரியன் said...

//முதலில் எனக்குப் பக்கத்து இருக்கைகளில் ஏதேனும் இளநங்கை இருக்கிறாளா?? குறைந்த பட்சம் அந்த பெட்டியில் எங்காவது ஒரு அழகிக்கு இடம் கொடுக்கப் பட்டிருக்கிறதா என்பதையே ஆராயும். //

ம்ம்ம்... உனக்கு முன்பதிவு குத்துட்டு, அப்புறம் எப்படி அந்த பெட்டியில ‘அழகான’ இள நங்கைய உள்ள விடுவாங்க..?

கேக்குவோம்ல....

சத்ரியன் said...

//எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை //

// பஞ்சையும், நெருப்பையும் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்ய வைத்து விடுவார். //

பாத்துக்குங்க மகா ஜனங்களே! நம்ம ஐய்யாவோட கண்டுபிடிப்ப...!

சத்ரியன் said...

மிக அருமையான நடையில் ... அற்புதமான பகிர்வு.

ரோஸ்விக் said...

T.V.ராதாகிருஷ்ணன் - நன்றி ஐயா... :-)

ரோஸ்விக் said...

ஜெரி ஈசானந்தன். - என்னோட அயநித்ததற்கு மிக்க நன்றி சார்... :-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - சுவாரஸ்யமா வாழ்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி பாலா அண்ணே... மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

Veliyoorkaran - வாங்க ராசா நல்லா இருக்கீங்களா?? கொஞ்சம் அந்த போர்வையை தூக்கி உங்க மூஞ்சியக் கொஞ்சம் காமிங்களே.

ரோஸ்விக் said...

சத்ரியன் - ஏய் விருந்தாளி வந்திருக்காக சேர் எடுத்துப் போடுங்கப்பா... :-))

எனக்குக் குசும்பா போங்கண்ணே வெக்க வெக்கமா வருது...
அண்ணே அது சேட்டு பொண்ணுண்ணே... அட்லீஸ்ட் என் பொருளாதாரத்தையாவது நிமித்திருப்பேன்... :-)
முன்பதிவு பண்ணப் போகும்போது ரொம்ப அழகாப் போயிருந்தேன்... பொறாமை புடிச்ச ஆளு எனக்குப் பக்கத்துல கிழவிகளாப் போட்டுட்டாரு...
இந்த மகா ஜனங்க பயங்கரமான ஆளுங்க அண்ணே... என்னைய விடப் பெரிய பெரிய கண்டுபிடுப்பு எல்லாம் கண்டுபுடிச்சவணுக... நீங்க சூதானமா இருங்கண்ணே.. :-)

தங்களின் வருகைக்கும், நையாண்டிக்கும் மிக்க நன்றிண்ணே...

கிரி said...

ரோஸ்விக் நீங்க கூறி இருப்பது பெரும்பாலும் நானும் நினைத்தது :-) ரயிலில் போகலாம் என்பதற்காகவே சென்னையில் படிக்க ஒத்துக்கொண்டேன்! :-) ரயில் பற்றி எழுதுவது என்றால் சுவாராசியம் தான்.. இப்பவும் எனக்கு ரயிலில் செல்வது என்றால் ரொம்ப பிடிக்கும்.

சரி! திசைகாட்டி வைத்து இருக்கீங்க.. ஆனா அதுல ஒரு திசையும் இல்லையே! ;-)

ரோஸ்விக் said...

கிரி - ஓ அதுக்காகத் தான் சென்னையில படிச்சிங்களா?? :-)

நாங்க எல்லாத் திசையையும் காட்டுவோம். நீங்க உங்களுக்கு சூலம் இல்லாத திசையாப் பார்த்துப் போங்க.. :-)))