இந்த பதிவுலகில் என் முதல் நடையை உரைநடையாய் பதிவு செய்கிறேன். என்னை வாழ்த்தவும், வழி நடத்தவும் பண்பு உள்ளங்களை அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
இது நாள் வரை பதிவுலகை வாசித்தும், சுவாசித்தும் வந்த நான்...நிறைய யோசித்து என் முதல் அடி எடுத்து வைக்கிறேன்.
விஞ்ஞானம் தந்த இந்த புதுவுலகை நம் மெய்ஞானம் கொண்டு, நம் அறிவு சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து விவாதம் செய்வோம் எனவும், வாதம், ஒரு பக்க-வாதம் தவிர்ப்போம் எனவும் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்கிறேன்.
இந்த உலகில், பதிவிடுவதும், பின்னூட்டமிடுவதும் கத்தி மேல் நடப்பது போன்றது என்பதை உணர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்க கத்தியோடு நடப்பது அல்ல என்பதை புரிந்து, தன் பக்க கருத்துகளை உரிமையோடு எடுத்து சொல்ல அனுமதிப்போம்.
ஏற்கத்தகாத கருத்துக்களை கூறியிருப்பின், அதை நாகரிகமாகவும், பக்குவமாகவும் மறுத்து சொல்ல வேண்டிய மனப்பாங்கு நமக்கு வேண்டுமென நான் விரும்புகிறேன்.
இந்த பதிவுலகம், நமது தனிப்பட்ட கருத்துக்களை பிறர் மீது திணிக்க உருவாக்கப்பட்ட தளம் அல்ல என்பதை, அனைத்து பதிவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இத்தளத்தில் பதிவு செய்யபடுபவை அனைத்தும் அப்பதிவர் அறிந்த, அனுபவித்தவற்றின் மீதான அவரின் கோணப்பார்வையே! ( அது கோணல் பார்வையாகவும் இருக்கலாம். ;-) )
இத்தளத்தின் மூலம், நாம் வாழும் பூவுலகில் சில விழிப்புணர்வுகளையும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் மற்றும் உபயோகமான ஆலோசனைகளையும் பதிவு செய்வோம். அக்கருத்துக்கள், சமுதாயம், காதல், காமம், உணர்வுகள், உணவுகள், தொழில்நுட்பம் மற்றும் இதர வகையை சார்ந்ததாகவும் இருக்கலாம்.
இப்பதிவுலகில், தனக்கென ஒரு குழு உருவாக்குவது, அவர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுவது, வாக்களிப்பது என்பது நாம் அன்றாடம் காணும் அநாகரீக அரசியல் வாதிகளையும் அவர்களின் கீழ்த்தரமான அரசியலையும் போன்றது என்றே நான் எண்ணுகிறேன்.
நம் பொன்னான நேரங்களை, பலரை புண்ணாக்க செலவிட வேண்டாம். அரசியல் ஒரு சாக்கடை என பல அறிவாளிகள் ஒதுங்கி விட்டதுபோல, இந்த பதிவுலகையும் ஆக்கிவிட நாம் காரணமாக இருக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
கடைமை அறிந்து காரியம் செய்வோம்! மடைமைகள் களைந்து மானுடம் வெல்வோம்!
7 comments:
Welcome.
விக்டர் வாழ்த்துக்கள் .. :-)
விக்டர்
அடடா ... யார் அந்த கிரி? பார்க்காமல் விட்டு விட்டேனே :)
நண்பா இன்று தான் சற்று நேரம் கிடைத்தது. முதல் தடத்தைப் பார்க்க உள்ளே வந்தேன். மற்றொரு ஆச்சரியம் நான் பதிவுலகத்தை கற்றுக் கொண்டதற்கு காரணம் எவனோ ஒருவன் என்ற இந்த நண்பர் தான் .
Post a Comment