Monday, August 10, 2009

திரு. நந்தன் நிலேகனி - அடையாள அட்டை


- நன்றி யூத்ஃபுல் விகடன்


திரு. நந்தன் நிலேகனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அறிவு சார்ந்த ஒருவருக்கு இந்த பதவியை வழங்கிய உயர்திரு. முனைவர் மன்மோகன் சிங்-கிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

திரு. நந்தன் அவர்களே,
உங்களுக்கு அளிக்கபட்டிருக்கும் இந்த பதவி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தனி நபர் அடையாள அட்டை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை அனைவரும் அறிவர். இது உங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். தங்களின் அறிவும், அனுபவமும் இதை எளிதாக முறியடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த அடையாள அட்டை என்பது மிகவும் தரமான, கயவர்களால் எளிதில் உருவாக்க முடியாத ஒன்ற இருக்க வேண்டும். இதில் எந்த விதமான எழுத்து பிழையோ, பெயர்களில் தவறோ இல்லாத வண்ணம் உருவாக்கிட வேண்டும். இந்த அடையாள அட்டை ஒவ்வொரு தனி நபருக்கும் பன்னிரெண்டு இலக்கம் அல்லது அதற்க்கு மேலான இலக்கங்களை கொண்ட குறயீடாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விரல் ரேகைகளை பதிவு பெற்றிருக்க வேண்டும். அந்த அடையாள அட்டையில் புகைப்படம் அச்சிடப் பட்டிருக்க வேண்டும்.

ரேசன் கார்டைப் போல், வருமானத்தின் அடிப்படையிலோ, வேறு எந்தவொரு அடிப்படையுலும் இந்த அடையாள அட்டை வழங்கப் படக்கூடாது. இந்த அடையாள அட்டை ஒருவரை இந்தியன் என அடையாளம் காணவும், அவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் எனவும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த எந்த ஒரு தேவைக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனைவருக்கும் அறிவுறுத்தப் பட வேண்டும்.

இந்த அட்டையும் வழக்கமான ரேசன் கார்டு, பான் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை போல, ரயிலில் பயணம் செய்வதற்கு மட்டும் பயன்படக் கூடாது. அனைத்திற்கும் இது முதன்மையானதாய் அமைய வேண்டும்.

முகங்களையே மாற்றும் இன்றைய உலகில் முகவரி மாற்றம் தவிர்க்க முடியாதது. தற்பொழுது உள்ள நடைமுறையில் மேற்குறிப்பிட்ட எந்தவொரு அட்டையிலும் முகவரியை மாற்றிக்கொள்ள எளிதான முறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அதையும் எளிமைப் படுத்த வேண்டும். சமையல் எரிவாயு சேவை மற்றும் வங்கி கணக்குகள், புதிதாக இடம் பெயர்ந்த முகவரியின் சான்றிதழ்கள் இல்லையென காரணம் காட்டி மறுக்கப் படுகின்றன. இது கண்டனத்திற்கும், கவலைக்கும் உரியது. இந்த புதிய அடையாள அட்டை கொண்டிருப்பவர் இந்த பிரச்சனைகளை அனுபவிக்க கூடாது.

இந்த அடையாள அட்டையில் உள்ள தனித்துவம் பெற்ற அடையாள எண்ணின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஓட்டுனர் உரிமம், இன்னும் பல உரிமங்கள், வரி செலுத்துதல் மற்றும் வங்கி கணக்குகள் இதன் அடிப்படையிலே செயல்படுத்தப் பட வேண்டும்.

இதன் மூலம் திருமணப் பதிவுகள் கட்டாயமாக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தால், திருமணப் பதிவின் பொது ஒருவர் முன்பே திருமணம் ஆனவரா? அவரது முந்தய மனைவி(கள்) முறையாக விவாகரத்து பெற்றுள்ளனரா? அதற்கான காரணம் என்ன? என்ற விபரங்களையும் தெரிந்து கொள்வது எளிதாகும்.

மருத்துவ மனைகள், ஆயுட்காப்பீடு முதலியனவும் இதன் அடிப்படையிலே கையாளப்பட வேண்டும்.

மேற்கூறியவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப் பட்ட ஆலோசனைகள் அல்ல. இவையனைத்தும் எதிர் கால திட்டமிடலின் சிறப்பான அம்சங்களாக நான்/நாம் விரும்பிகின்றவை.

மேற்குறிப்பிட்ட கருத்தக்கள் போக ஆக்கப்பூர்வமான சில கருத்தக்களை பின்னூட்டத்தில் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
8 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

பன்முகத் தகவல்களையும் உள்ளடக்கி ஸ்மார்ட் கார்ட் வழங்கும் திட்டம் யோசனை நீண்ட நாட்களாகவே இருந்தாலும், இதற்கான உறுதி, தகவலை சேகரிப்பது, சரிபார்ப்பது, தவறுகளைத் திருத்துவதில் தாமதமின்மை இப்படிப் பல அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. இப்போது சரியான நபர் ஒருவரின் தலைமையின் கீழ் இந்தப் பணியை ஒப்படைத்திருக்கிறார்கள். பில் கேட்சும், ஓடிவந்து சோனியா காந்தி கையால் விருது வாங்கிக் கொண்டு, அதே நேரம், இந்த வேலையில் தன்னுடைய நிறுவனத்திற்கும் ஒரு சான்ஸ் கேட்டு, துண்டு போட்டுவிட்டுப் போய் இருக்கிறார். இதிலிருந்தே, இந்த வேலையில் எவ்வளவு பணம் புழங்கப் போகிறது என்பதும், ஒரு மாதிரியாக ஊகிக்க முடிகிறது.

வாக்காளர் பட்டியலையே குளறுபடி இல்லாமல், பிழை இல்லாமல், வெளியிட அரசால் முடியவில்லை.பிழைதிருத்தம் செய்வதற்கே, ஒரு நான்கைந்துஐந்தாண்டுத் திட்டங்கள் தேவைப் படும் போல.

அரசின் பொறுப்பின்மை ஒருபுறம் இருக்க, சரியான, உண்மையான தகவலைக் கொடுக்க மக்களுக்கு இருக்கும் தயக்கம் இருக்கிறதே, அது இன்னொரு தடை. இதில் நீங்கள் வேறு, இது இப்படி இருக்கக் கூடாது, இப்படி இருக்கக் கூடாதென நிறைய நிபந்தனைகளை வேறு உங்களுடைய ஆசையாக வெளியிட்டிருக்கிறீர்கள்.

ஆனால், ஏதோ ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா?

ரோஸ்விக் said...

மிகவும் நன்றி! திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களே! இதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், நம் மக்களின் போதிய ஒத்துழைப்பின்மையையும் நான் அறிவேன். இது போன்ற பொறுப்புக்கள் இறுதியாக, நமது அரசு அதிகாரிகளான தாசில்தார், ஆசிரியர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். குறைந்தபட்சம் அவர்களின் கவனக் குறைவுகளாவது தவிர்க்கப் பட வேண்டும். இது எனது பட்டறிவு.

கோமதி அரசு said...

//எதிர்கால திட்டமிடலின் சிறபபான அம்சங்கள்நாம்

விரும்பிகின்றவை//

திசைகாட்டியின் நல்லெண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

திருமதி. கோமதி அரசு,
தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தங்கள் ஆதரவு தேவை.

சசிகுமார் திருமூர்த்தி said...

அருமையான ஆரம்பம்!

இந்திய ஆரசு நல்ல திட்டத்திர்க்குத் தான் விதை ஊன்றி உள்ளது. உணமையைச் சொல்லப் போனால், இது எனது நீண்ட கால எதிர்பார்ப்பு. எதுவாக இருந்தாலும் நல்ல படியாக பயன்பாட்டிற்கு வர வாழ்த்துக்களுடன் நம்பிக்கை வைப்போம்.
- சசி.

ரோஸ்விக் said...

தங்களின் வருகைக்கு நன்றி சசி! சிறப்பான இந்தியாவை உருவாக்குவோம். அடிக்கடி நம்ம பக்கம் வாங்க.

Unknown said...

இந்த திட்டமாவுது விளங்குமா பாக்கலாம் ...

ஜோதிஜி said...

இதை முடிந்தால் பார்க்கவும்.


http://texlords.wordpress.com/2009/08/22/
ஒரு விஐபி யின் அந்தரங்க ரகஸ்யங்கள்