Monday, May 31, 2010

பார்மாலிட்டி எனும் சம்பிரதாயம் ...

பார்மாலிட்டி எனும் சொல்லுக்கு சம்பிரதாயம் சரியான சொல்லா?? வேற ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே!

நம்ம ஊர்ல கொஞ்ச ஆளுங்க இருப்பாங்க... எதாவது ஒரு காரணம் சொல்லி சண்டை பிடிக்கிறதுக்கு. அவங்க எதாவது ஒரு வழில நமக்கு உறவுக்காரரா இருப்பாங்க. அதான் கஷ்டம். நட்புகளுக்குள்ள பெரும்பாலும் பார்மாலிட்டிகள் பார்க்கிறதில்ல. அப்படி அதை எதிர்பார்க்க ஆரம்பிச்சா அப்புறம் அது நட்புமில்ல... அந்த நட்பு அத்தோட நமக்கில்ல...

தேவையில்லாத பார்மாலிட்டி எதிர்பார்க்கிற ஆளுங்களைப் பார்க்கும்போது, கோபம் வந்தாலும், இன்னும் மாறாம இருக்காங்களேன்னு ஒரு பரிதாபம் வேற ஏற்படும். எதுக்கெடுத்தாலும் ஒரு குறையைச் சொல்லி குத்தவச்சுருப்பாங்க. அதைக் குத்தமாவே எப்போதும் வச்சிருப்பாங்க.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லம் கிளம்பி ஒரு காரோ, வேனோ எடுத்து எங்கையாவது குலசாமி கோயிலுக்கு போவாங்க... அடுத்த வீதில இருக்கிற உறவுக்காரவங்களுக்கிட்ட சொல்லிட்டுதான் போவாங்க... அவங்க கிளம்பி போனவுடனே, அந்தப் பகுதில இருக்கிற ஒரு வீடு இல்லாமப் போயி... “நாங்களும் அவங்க சொந்தக்காரங்க தானே... பார்மாலிட்டிக்காகவாவது எங்களை கூப்பிட்டு இருக்கலாம்ல... கூப்பிடவேயில்லைங்க...”-னு பொலம்பீட்டு வந்திருவாங்க...

இன்னும் சில ஆளுங்க இருக்காங்க... கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து சொல்லுங்கன்னு அவங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க வேலைப்பளு காரணமாக்கூட பார்த்திருக்கமாட்டாங்க. வேற எங்கையாவாது பொண்ணு அமைஞ்சு, ஒப்புதல் குடுத்திருந்தா... அதைக் கேள்விப்பட்டு... பொண்ணு முடிக்கும்போது என்கிட்ட சொல்லலை...-னு குத்தம் சொல்றது.

கல்யாணப் பத்திரிக்கை எனக்கு கொடுக்கும்போது கவர்ல எம் பேரைப் போடும்போது, பேருக்கு முன்னால ”திரு”-ன்னு போடலை, பேருக்குப் பின்னால “அவர்கள்”-ன்னு போடலை... அதனால அவன் வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன்னு முடிவு பண்ணுவாங்க. ஆனா, எனக்குத் தெரிஞ்சு இப்பவெல்லாம் நண்பர்கள் தங்களுக்குள்ள இந்த பார்மாலிட்டி பார்ப்பதில்லை. விடு மச்சி நீ பத்திரிக்கையெல்லாம் கூட அனுப்பவேண்டாம். தேதி, மண்டப விபரம் மட்டும் சொல்லு அது போதும் அப்படின்னு பெருந்தன்மையா இருக்காங்க.

ஒரு சில விஷயங்கள்ள அந்த சம்பிரதாய முறைகளையோ, மரியாதைகளையோ எதிர்பார்த்தா சரி. எதற்கெடுத்தாலும் அதையே புடுச்சு தொங்கிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். சின்ன சின்ன விழாக்களை சுருக்கமா செய்யலாம்னு குடும்பத்தார் முடிவு பண்ணிருப்பாங்க. ஒவ்வொரு உறவுக்காரர்களும் எனக்கு சொல்லலை, ஒரு பேச்சுக்கு கூட என்னைக் கூப்பிடலை-னு சொன்னா... அந்த விழா எப்படி சுருக்கமா முடியும்?? அதையும் கொஞ்சம் யோசிக்க வேணாமா??

மற்ற உறவுகளை விடுங்க... அவங்க நம்ம கூட மனவருத்தமா இருந்தா பெரிசா ஒன்னும் நேரடிப்பாதிப்பு இருக்காது. சம்பந்தம் போட்ட இடங்கள்லையும், மருமகள், மருமகன்கிட்டையும் இருந்து இதே பார்மாலிட்டியை எதிர்பார்த்தா, நேரடியா நம்ம மகன் - மருமகள், மகள் - மருமகன் இவர்களது உறவுகள்-ல கூட விரிசல் வரலாம். சம்பந்த உறவுகளிடம் நல்ல உறவு இல்லையென்றால், நம் சந்ததிகளும் உறவுகளை துயரங்களாகவே நினைப்பாங்க.

நான் சில இடங்கள்-ல பார்த்திருக்கிறேன். என் மருமகன்(ள்) எனக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கார்(ள்)... நான் ஊர்ல இருந்து வரும்போது மருமகள் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேசனுக்கு என்னை வரவேற்க வரலை. நான் குளிக்கிறேன்னு சொன்னேன்... ஒரு பேச்சுக்குக்கூட சுடுதண்ணி போட்டுத்தரவான்னு கேட்கலை... அப்புடி இப்புடின்னு என்னத்தையாவது சொல்லி முக்கி முனங்கி மனசுகள்-ல சஞ்சலங்களை எளிதா ஏற்படுத்திடுவாங்க. இது தேவையாண்ணே??

இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்?? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை முறை, வசதி, கால அவகாசம் இவைகளைப் பொறுத்து ஒரு வாழ்க்கைத் திட்டம் இருக்கும். அதன்படி சில முடிவுகளின் படி செயல்படுவாங்க. அதன்படி செயல்பட விடுங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எல்லா எதிர்பார்ப்புகளையும் உதறித்தள்ளிட்டு, உறவுகளைக் கொண்டாட வாங்க சாமிகளா. உங்க புள்ளை குட்டிகளையாவது இந்த பார்மாலிட்டி கருமத்தை விட்டொழிச்சிட்டு வாழப் பழக்கிவிடுங்க. பெரும்பாலான இடங்கள்-ல இந்த பார்மாலிட்டியால உறவுக்கார மாமன், மச்சான்களோட பகையா இருந்துகிட்டு, பழகுகிற நண்பர்களை மட்டும் மாமா, மச்சான்னு கூப்பிட்டு மகிழ்ந்துகிட்டு இருக்கிறோம். நல்ல உறவுகளை நாம் பெற்றிருந்தால், நம்மளோட கடைசி ஊர்வலத்துல எல்லோருமா சேர்ந்து நல்லா நமக்கு பார்மாலிட்டி பண்ணி அனுப்புவாங்க. இல்லையினா, அன்னைக்கும் அவனுகளுக்குள்ள பார்மாலிட்டி எதிர்பார்த்துகிட்டு வீதிக்கு ஒரு ஆளா விலகி நிப்பாங்க...

என்னா அண்ணே, மாமு, மச்சான்ஸ், அக்கா, தங்கச்சி, அத்தாச்சிமார்களே சரிதானே! :-)
22 comments:

தருமி said...

வயசாகி, அடிப்படு நொந்து போன பெருசு எழுதினது மாதிரில்ல தெரியுது ..
ரொம்ப அனுபவம் ...!

துளசி கோபால் said...

சடங்கு

ILLUMINATI said...

ஏன்ப்பு ரோசு....
வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்து இருந்தாங்கலாமே? இல்ல சும்மா கேட்டேன்... :)

தமிழ் உதயம் said...

பார்மாலிட்டி எனும் சம்பிரதாயம் ...

சில நேரம், இது தொல்லையாக தெரியும். ஆனால் அவை அன்பு தொல்லை.

தமிழ் உதயம் said...
This comment has been removed by the author.
கிரி said...

தருமி ஐயா இப்படி ரோஸ்விக்கை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! :-))))

vasu balaji said...

சரிதான்

தேவன் மாயம் said...

இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்??///

நல்ல கேள்வி ரோஸ்விக்!!!

பனித்துளி சங்கர் said...

////////////இப்படி எதாவது குற்றம் கண்டுபிடிச்சுகிட்டே இருந்தா எப்படி மக்களே வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்?? ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை முறை, வசதி, கால அவகாசம் இவைகளைப் பொறுத்து ஒரு வாழ்க்கைத் திட்டம் இருக்கும். அதன்படி சில முடிவுகளின் படி செயல்படுவாங்க. அதன்படி செயல்பட விடுங்க. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.///////

சிந்திக்கத் தூண்டும் வார்த்தைகள் . சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு, ஆனா இதுதான் நடைமுறை.

நாடோடி said...

ந‌டைமுறை ய‌தார்த்த‌த்தை அழ‌காக‌ ப‌திவு செய்துள்ளீர்க‌ள்..

ரோஸ்விக் said...

தருமி - நன்றி தருமி ஐயா...

அதான் நேர்ல பார்தீங்களே! எனக்கு வயசு ரொம்ப கம்மிதான்... எங்க அப்பா கத்துக்கொடுத்த அனுபவம் தான்.

தங்களை சிங்கையில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

பிரபாகர் சாரை கேட்டதாக சொல்லவும். :-)

ரோஸ்விக் said...

துளசி கோபால் - ஓ ஆமால்ல...அப்படியும் சொல்லலாம்ல...

நன்றி துளசி கோபால்.

ரோஸ்விக் said...

ILLUMINATI - டேய் உன்னை உதைக்கனும் படவா... எங்க சொந்தக்காரங்க அப்படி இருந்தா எனக்கு சொந்தக்காரரா இருக்கமாட்டாங்க... :-)

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - நன்றி தமிழ் உதயம்.

எப்போதும் அன்பா இருக்காம... அன்புத்தொல்லையாகவே இருந்தா ச்ச்சங்கட்ட்ட்டமா இருக்காது... :-)

ரோஸ்விக் said...

கிரி - லூஸ்ல விடுங்க கிரி. தருமி ஐயா, நம்ம வயசுக்கு திரும்பீட்டார்...

சந்தடி சாக்குல நீங்க எனக்கு சின்னப்பைய்ன்னு மட்டும் சொல்லி கலவரப்படுத்தாதீங்க...

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நன்றி பாலா அண்ணா.

ரோஸ்விக் said...

தேவன் மாயம் - நன்றி தேவா சார்.

ரோஸ்விக் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - நன்றி சங்கர்.

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - நன்றி சார். ஒரு சிலவை மட்டும் நடைமுறையில் இருந்தால் பரவாயில்லை. எதுக்கெடுத்தாலும் வீம்பு பிடிச்சுகிட்டே இருந்தா எப்புடீ?? :-)

ரோஸ்விக் said...

நாடோடி - நன்றி ஸ்டீபன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்மாளிடிக்கு கமென்ட் போட்டாச்சு.