Friday, March 26, 2010

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...


புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நமது உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் திரைப்படக் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

நமது வாழ்கை முறைகளால், நாம் நமக்கே வைத்துக் கொண்டுவரும் இந்த சூனியத்தைப் பற்றி நம் பதிவர்களில் சிலர் கூடப் பதிந்துள்ளனர். உலக உருண்டை ஒரு உள்ளங்கையில் இருப்பது போல சில படங்கள் பார்த்திருப்போம். உண்மையிலேயே இந்த உலகத்தின் அழிவும் அதை காப்பதும் நம் ஒவ்வொருவரின் கைகளில் தான் உள்ளது. சுனாமி, பெருவெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கடலோர கிராமங்கள் கடலில் மூழ்குதல் போன்ற இயற்கை சீரழிவுகளால் நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.

நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).

இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.

கடல் நீர்மட்டம் உயர்வது பெரும் ஆபத்தானது. தற்போதைய நிலவரப்படி கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 mm உயர்ந்துகொண்டிருக்கிறது. 18 -ம் நூற்றாண்டில் 2cm, 19 -ம் நூற்றாண்டில் 6cm மட்டுமே உயர்ந்த கடல் நீர்மட்டம், கடந்த நூற்றாண்டில் மட்டும் 19cm உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டுக்குள் இது ௦0.8meter-க்கும் 1 .5 meter-க்கும் இடைப்பட்ட அளவில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மட்டம் 1meter-ஐ நெருங்கும்போது உலகின் பெரு நகரங்களான லண்டன், நியூயார்க் மற்றும் டோக்யோ போன்றவை மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

நமது சரித்திரம் தொடர வேண்டுமென்றால், சமுத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நம் வாழ்வியல் சங்கதிகள் எதிர்காலத்திலும் ரசிக்கப்பட வேண்டுமென்றால், சந்ததிகள் நலமாய் வாழவேண்டும். கீழ் உள்ள படங்களை பெரிதாக்கி பாருங்கள் நமது தற்கொலையின் பாதச் சுவடுகள் தெரியும்.

விலங்குகள் கூட தனக்கு ஆபத்து என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???

இன்னும் பல (அ)சுவாரஸ்யமான தகவல்களோடு, இதே தலைப்பில் விரைவில்....
32 comments:

துபாய் ராஜா said...

சிந்திக்க வேண்டிய சிறப்பான கருத்துக்கள்.

பிரபாகர் said...

புள்ளிவிவரங்கள்லாம் பலமா இருக்கு...

தேவையான ஒரு இடுகை. சொன்னதுபோல் இன்னும் நிறைய தாருங்கள்...

பிரபாகர்...

Rettaival's Blog said...

ரோஸ்விக்...நேரம் கிடைத்தால் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோரின் "Inconvenient Truth" பாருங்கள். நாம் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் உள்ளோம் என்று இன்னும் தெளிவாகும்!

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் விள‌க்க‌ங்க‌ள் அருமை.. க‌ண்டிப்பாக‌ அனைவ‌ரும் இதை உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

Rettaival's Blog said...

நாம் எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் இயற்கையை கற்பழித்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா ரோஸ்விக்! இன்னும் நிறைய தகவல்களோடு வாருமய்யா.. ஆவலுடன் காத்திருக்கிறேன்!

தங்க முகுந்தன் said...

இயற்கையின்பால் தாங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்.

அருமையான கட்டுரைக்கு நன்றிகள்!

Chitra said...

தகவல்கள் தொகுப்பும் புகைப்படங்களும் பாராட்டுக்குரியவை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சொர்க்க பூமியை பாலைவனமாக்கி, நமது முன்னோர்கள் நமக்கு தந்துவிட்டார்கள்..

அந்த பாலைவனத்தை, ” சுடுகாட்டாக்கியோ”.. இல்லை ”சுந்தர பூமியாக்கியோ”,
அடுத்த தலைமுறைக்கு தருவது நம் கடமை..

.( அடுத்த தலைமுறை என நான் குறிப்பிடுவது யாரையோயில்லை.. உங்கள் பேரன் பேத்திகளைதான் மக்கா....)

எதைக்கொடுக்கலாம் என சிந்தியுங்கள் மக்களே.

சைவகொத்துப்பரோட்டா said...

சிந்தித்து செயல் பட வேண்டிய தருணம் இது, நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

Paleo God said...

ரோஸ்விக் தேவையான பதிவு.
தொடருங்கள்.

--

உங்க சிங்க(கை) அன்புக்கு மிக்க நன்றி..:)) நெகிழ்ச்சி.:)

malarvizhi said...

நல்ல கருத்தை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் . படங்கள் மிகவும் அருமை.நினைத்து பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்.நன்றி.

ஜெய்லானி said...

//நம்மில் பலர் இன்று வரை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இவையெல்லாம் நம்மக்கு ரத்தம் அல்ல... தக்காளி ஜூஸ்.//

ரூம் போட்டு யோசிக்க வேண்டிய கேள்வி !!

ஜெய்லானி said...

அதிகபடியான ஏஸி , வாகனங்களை உபயோகிப்பதை குறைத்தாலே பாதி பிரச்சனை தீரும். மீதிக்கு மரங்களை வளர்கனும். useful rose.

ஸ்ரீராம். said...

பயமுறுத்தும் உண்மைகள்....

KATHIR = RAY said...

பனி மலைகள் உருகும்போது நீர் ஆவியாகி கொண்டு தான இருக்கிறது அப்போது பூமி முற்றிலும் மூழ்கிவிடும் என்ற அபாயம் இல்லை அல்லவா. அழிவு நிரந்தரம் முன்பு கண்ணுக்கு தெரியாமல் நடந்து வந்தது இப்போது நமக்கு புலப்படுகிறது அவ்ளோதான் சுழற்சி நடந்து கொண்டு தான் இருக்கும் . இதை நாம் அப்டியே ஏற்று கொள்ளத்தான் வேண்டும் இதனை தடுக்கவோ தவிர்கவோ இயலாது. மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கே செல்கிறோம்

Veliyoorkaran said...

விலங்குகள் கூட தனக்கு என்றால் உரத்து குரலெழுப்பும். தம்மை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நாம்???///

இதான் கேள்விங்கற பேர்ல செருப்ப சாணில தொட்டு அடிக்கறது...!!..

இருயா சானிய துடைச்சிட்டு வந்துடறேன்..!!

vasu balaji said...

good one rosewick. continue pls.

க.பாலாசி said...

அந்த படம் மிக பொருத்தமுங்க....

ரோஸ்விக் said...

KATHIR = RAY said...
பனி மலைகள் உருகும்போது நீர் ஆவியாகி கொண்டு தான இருக்கிறது அப்போது பூமி முற்றிலும் மூழ்கிவிடும் என்ற அபாயம் இல்லை அல்லவா. அழிவு நிரந்தரம் முன்பு கண்ணுக்கு தெரியாமல் நடந்து வந்தது இப்போது நமக்கு புலப்படுகிறது அவ்ளோதான் சுழற்சி நடந்து கொண்டு தான் இருக்கும் . இதை நாம் அப்டியே ஏற்று கொள்ளத்தான் வேண்டும் இதனை தடுக்கவோ தவிர்கவோ இயலாது. மண்ணில் இருந்து வந்தோம் மண்ணிற்கே செல்கிறோம்.
//தவறான புரிதல்... உங்களுக்கான பதில் விளக்கம் அடுத்த பதிவில் விரைவில்.... :-)

மாதேவி said...

படங்களுடன் தகவல்கள் நன்று. தொடருங்கள்.

மதுரை சரவணன் said...

நல்லக் கருத்துக்கள். உலக அழிவை போக்க நாம் பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

////புவி வெப்பமயமாதல், சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றம் இவற்றால் வரும் பாதிப்புகள் பற்றி பல இடங்களில் பேச்சு அடிபடுவதை நாம் கேட்டும், ஒரு ஜவுளிக்கடையின் விளம்பரத்திற்கு வரும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை./////


அதிலும் அந்த படம் கலக்கல் நண்பரே!!
பகிர்வுக்கு நன்றி!!!

மங்குனி அமைச்சர் said...

என்னா பன்றது தல , எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டானுக

பனித்துளி சங்கர் said...

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

அருமையான சிந்தனை .
தொடர்ந்து எழுதுங்கள் .

ரோஸ்விக் said...

துபாய் ராஜா - நன்றி நண்பரே!

பிரபாகர் - நன்றி அண்ணே! தொடர்ந்து படியுங்கள். சிறப்பாக இருக்கும்.

ரெட்டைவால்'ஸ் - நன்றி ரெட்டை. கண்டிப்பாக பார்க்கிறேன்... இன்னும் பல தகவல்களை விரைவில் வெளியிடுகிறேன்.

நாடோடி - நன்றி நண்பா... ஆம் அனைவரும் உணரவேண்டும்.

தங்க முகுந்தன் - தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

Chitra - பாராட்டுக்கு நன்றி. ஆம் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன் இதற்காக. :-)

பட்டாபட்டி.. - நன்றி பட்டு... அப்புடி கேளுங்க. :-)

சைவகொத்துப்பரோட்டா - நன்றி நண்பரே!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ - நன்றி அண்ணே. சிங்கம் கர்ஜிக்கிதா?? :-) விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

malarvizhi - மிக்க நன்றி மலர்விழி. தொடர்ந்து எழுதுகிறேன். படியுங்கள். :-)

ஜெய்லானி - நன்றி நண்பரே! அனைவரும் விழிப்புணர்வு அடைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம். நீங்கள் சொல்வது மட்டும் பத்தாது. தவிர்க்கவேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது.

ஸ்ரீராம். - நன்றி நண்பரே!

Veliyoorkaran - நன்றி வெளியூரு. என்னய்யா இன்னும் நீ சாணிய துடைக்கலையா?? :-)

வானம்பாடிகள் - நன்றி பாலா அண்ணே! தொடருகிறேன். :-)

க.பாலாசி - நன்றி நண்பரே! :-)

மாதேவி - தொடருகிறேன். நன்றி மாதவி.

Madurai Saravanan - உலகைக் காக்க நாம் இணைவோம். நன்றி வாத்தியாரே! :-)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - நன்றி நண்பரே! பல முறை எனது ஒரே பதிவை படிப்பீர்களோ?? ;-)

மங்குனி அமைச்சர் - நன்றி மங்கு. மொதல்ல நீர் கேளுமய்யா :-)

ரோஸ்விக் said...

ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. இந்த பதிவை பார்த்து ஒரு 10 பேர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் அது எனக்கு கிடைக்கும் விருதாகக் கருதுவேன். மிக்க நன்றி.

இந்த பதிவிற்கு எதிர் வாக்களித்த அன்பு நண்பர் எங்கிருந்தாலும், 16 -ம் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். உலகின் மீதுள்ள உங்களின் அக்கறை நன்று. நீங்கள் எதிர் வாக்கு அளியுங்கள் தவறில்லை. ஒருவேளை என் மேல் கோபமோ, மாற்றுக் கருத்தோ கொண்டிருந்தாள், பேசி தீர்த்துவிட்டு, இனிமேல் தொடர்ந்து எதிர் வாக்கு அளிக்கலாம். :-)

புலவன் புலிகேசி said...

தொடருங்கள்...விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம்ம் கடமை...இந்தப் பதிவை இந்த வார டரியலிலும், இந்த வாரப் பதிவராக உங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளேன்...

தங்க முகுந்தன் said...

பனிகளுக்கு மத்தியில் வசிக்கும் நான் எப்படி உதவலாம்? சொல்லுங்கள்!

அன்புடன் அருணா said...

பொறுப்பான பதிவு!பூங்கொத்து!

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.


தங்க முகுந்தன் - தங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே. எனக்குத் தெரிந்த சில தீர்வுகளை இந்த பதிவின் மூன்றாம் பாகத்தில் தெரிவித்துள்ளேன். முடிந்தால் பின்பற்றவும். :-)


அன்புடன் அருணா - தங்களின் பூங்கொத்துக்கு நன்றி. தங்கள் பள்ளியிலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். :-)

பனித்துளி சங்கர் said...

//////♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ - நன்றி நண்பரே! பல முறை எனது ஒரே பதிவை படிப்பீர்களோ?? ;-)////நல்ல பதிவுகளை எத்தனை முறை படித்தாலும் தவறில்லை !

சாந்தி மாரியப்பன் said...

நல்லா சொல்லியிருக்கீங்க.. இன்னும் சொல்லுங்க.இளம் தலைமுறையிலிருந்து இந்த விழிப்புணர்வு ஆரம்பிக்க வேண்டும்.