Monday, November 30, 2009

ஆஸ்திரேலியாவுக்கு அடி ஆள் வேண்டுமா? :-)

தமிழ் வலையுலகப் பதிவர்களே! மற்றும் வாசகர்களே!

தங்களுக்கு என் அன்பு வணக்கம். நமது பதிவர்களும் வாசகர்களும் எழுத்து நடை அல்லது கருத்துக்களின் மேல் பல்வேறு விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் கொண்டிருப்பினும் அன்பால் இணைந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இத்தளம் ஒரு சமுதாய முச்சந்தியாகவும் பயன்படுகிறது. எழுத்துக்கள் எதிர்த்து அடித்தாலும், கருத்துக்கள் காயப் படுத்தினாலும், நெஞ்சங்கள் நெருக்கமாகவும், கைகள் கோர்ப்பதற்காகவே காத்திருப்பதாகவும் உள்ளதை இப் பதிவுலகம் பலமுறை நிருபித்துள்ளது. அந்த வகையில் நானும் உங்களோடு இணைந்திருப்பதில் அலாதி ஆனந்தம் தான்.


இப்பதிவுலகில் எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் பல தேசங்களில் பரவியிருப்பது நம் மிகப் பெரிய பலம் தான். அந்த பலத்தின் பயனாக நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதும், பெற்றுக்கொள்வதும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

அந்த வகையில் ஒரு உதவி கோரி இதை எழுதுகிறேன். எனது சகோதரர் ஒருவர் ஆஸ்திரேலியா-வில் உயர் கல்வி பயில விரும்புகிறார். அதற்காக சில ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று, அக்கல்வி பயில கடக்க வேண்டிய பல படிகளில் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

அவருக்குள்ள சில சந்தேகங்களான, ஆஸ்திரேலியாவின் கல்வி முறை, அதன் பயன். செலவு நடைமுறைகள், பாதுகாப்பு, தங்குமிடங்கள் மற்றும் நிதி தேவை பற்றியனவற்றைப் பற்றி அங்குள்ள நண்பர்களுடன் உரையாடி தெரிந்துகொள்ள விரும்புகிறார். இது பற்றிய தகவல்களைத் தர நம் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் முன் வந்ததால் மிக மிகிழ்ச்சியடைவேன்.

தங்களது தொலைபேசி எண்களைத் தர விரும்பினால் எனது thisaikaati@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

"மக்களே இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையின்னு ஒட்டு போடாம போயிடாதீங்க. நீங்க எல்லாம் ஒட்டு போட்டாத்தான் பல வாசகர்களை சென்றடையும். நிறைய நண்பர்கள் எனக்கு தொடர்புக்கு கிடைப்பாங்க" :-)


மிக்க நன்றியுடன்

ரோஸ்விக்

டிஸ்கி: ஆஸ்திரேலியா-ல இருக்கிற இந்திய மாணவர்களை அடிக்கிறதா செய்திகளைப் பார்த்ததுனால, இவனும் (அ)படிக்க கிளம்பிட்டானோ என்னவோ?? :-) தலைப்பும் அப்படி வச்சாத்தானே, தலைப்புச் செய்திக்கு இது வரும்.17 comments:

Anonymous said...

voted

yasavi

பத்மஹரி said...

ரோஸ்விக்,
என்னுடைய நண்பர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றனர்.அவர்களிடம் உங்களுக்கான தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்! நன்றி.

பின்னோக்கி said...

எனக்கு யாரையும் தெரியாது. ஆனா ஓட்டுப் போட்டுட்டேன்

ஸ்ரீராம். said...

ஆனாலும் ரொம்பத் துணிச்சல்தான்...தற்காப்புக்கு சிலம்பம், கராத்தே எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டுதானே இந்த முயற்சி எல்லாம் செய்யறார் உங்க சகோதரர்?
நான் எப்பவுமே எப்படியும் ஓட்டு போட்டுடுவேன்..

Anonymous said...

நண்பரே , நன் ஆஸ்திரேலியாவுல தன் இருக்கேன்.

தொடர்பு கொள்ளுங்கள் : 0425878892

Anonymous said...

சிங்கப்பூரில் இருந்து டயல் செய்ய +61 425878892

டவுசர் பாண்டி said...

//இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையின்னு ஒட்டு போடாம போயிடாதீங்க.//

தல நீங்க பெரிய ஆள் தான் பா !! கடைசீல வெச்சீங்களே ஒரு பஞ்சு !! ஆத்தாடி அசந்து பூட்டேம்பா !!

டவுசர் பாண்டி said...

அய்யோ !! சொல்ல மறந்து
பூட்டேம்பா !!
ஒட்டு போட்டாச்சி !!
போட்டாச்சி !!

ரோஸ்விக் said...

yasavi - மிக்க நன்றி :-)

பத்மஹரி - மிக மிக நன்றி அன்பரே! உங்கள் நண்பர்களின் தொலைபேசி எங்களை அவர்கள் பகிர்ந்துகொள்ள விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும். நான் சிங்கையில் இருந்து தொடர்பு கொள்கிறேன். :-)


பின்னோக்கி - வாங்க தல. உங்க ஓட்டே பெரிய உதவிதானே. மிக்க நன்றி.


ஸ்ரீராம் - மிக்க நன்றி நண்பா! அவனுக்கு கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... :-)
உங்க(எங்கள்) ஒட்டு நமக்கு எப்போதும் உண்டுங்கிற தைரியத்துல தானே நான் தொடர்ந்து எழுதுறேன். :-))


ஆஸ்திரேலியா நண்பரே! தங்களை கண்டிப்பாக தொலை பேசியில் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றிகள்.


டவுசர் பாண்டி - நம்ம ஆளு வந்து இன்னாமா ஹெல்பு பண்ணிக்கிரே...நீ பெர்ய ஆளு தான் வாத்யாரே. நமக்கு தொடர்ந்து கொரல் குடுத்துக்கின்னுக்கிராபா....நொம்ப டாங்க்சு...

ப்ரியமுடன் வசந்த் said...

voted

ஆ.ஞானசேகரன் said...

ஓட்டு போட்டாச்சு

Thirumalai Kandasami said...

Unable to hear songs..Please check..

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் & ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பர்களே!


Thirumalai Kandasami - Sorry nanba. Autoplay has been switched off. Player is located at the right side of this blog. You can click that play button and listen the songs as usual. :-)

Thirumalai Kandasami said...

Yeah,Thanks,I know.
Everyday i played it by manually but today i am unable to see that Icon(?).Will you please ,check it again? and let me know.

ரோஸ்விக் said...

thala, I didn't change anything. :-) I couldn't check it from my office. Let me check that from home sometime and I will update you by your gmail. :-)

may be on Sunday / Monday...(because I will be out of station on Saturday)

thiyaa said...

நல்வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

தியாவின் பேனா - மிக்க நன்றி. :-)