அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாருங்க மக்கா.
Monday, March 21, 2011
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ
அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாருங்க மக்கா.
Saturday, March 19, 2011
தேர்தல் வாக்குறுதிகள்/அறிக்கைகள் ச்சீ... த்தூ...
ஆரம்பிச்சுட்டாங்கயா. தினந்தோறுமே இவங்க மஞ்சத் துண்டைப் போட்டுக்கிட்டும், பச்சை பர்தாவைப் போர்த்திக்கிட்டும் கொடுக்கிற அறிக்கை தாங்காது. ராசிபலன் பார்க்கிற இவங்களெல்லாம் திராவிடத் தலைவர்கள். ச்சீ த்தூ. உங்களுக்கும் வெட்கமில்லை. எங்களுக்கும் வெட்கமில்லை. இந்த துஷ்டர்கள் அதிகாரத்தில் இருந்தால் துஷ்பிரயோகம் பண்ணாமல் வேறென்ன செய்வார்கள்?
தேர்தல் திருவிழா வேறு வந்துவிட்டது. இந்த ஈன/மான தலைவர்கள் சொகுசு காரில், தெய்வங்கள் தேர்பவனி வருவது போல வரத்தொடங்கி விடுவார்கள். பொரிகளுக்குப் பதிலாக, பொன்னாடைகளும், மாலைகளும், பூக்களும் தூவி தங்களது பக்திகளைப் படையலாக்கத் தொடங்கிவிடுவார்கள். கட்டவுட்டுகளில் மட்டுமே உயர்ந்தவர்கள் இந்த அரசியல் தெய்வங்கள் என்பதை உணராத பக்தப் பதறுகள். இந்த வெள்ளை சட்டை தெய்வங்களைப் பார்க்கும்போது எனக்கு பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் நீங்கள்" என்ற வாசகம் தான் நினைவிற்கு வந்து தொலைக்கும். வெள்ளை சட்டை அணிந்த அனைவரையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த என்னளவில் உயர்ந்த சில மனிதர்களும் இதில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்டு நம்மை அசரடிக்கவரும். இதில் அண்ணாவும், பெரியாரும், எம்.ஜி.ஆரும், காமராஜரும் இந்த அரசியல் தெய்வங்களுடன் நம்மைப் பார்த்து, நம் நிலையைப் பார்த்து ஏளன சிரிப்பு சிரிப்பார்கள். இவர்களின் கடந்தகால தேர்தல் அறிக்கைகளையும் படித்துப் பாருங்கள். எந்த மாற்றமும் அறிக்கையிலும், நாட்டிலும் இருக்காது. பாராளுமன்ற தேர்தல் என்றால் நதிநீர் இணைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நம் மண்டையின் மறதிப்பகுதிகளில் மழுங்கிப் போயிருக்கும் சில மசோதாக்கள் கட்டாயம் இடம்பெறும்.
சட்டமன்ற தேர்தல்களில், கால்வாய் தூர்வாறுதல், கூட்டுக்குடிநீர் திட்டம், சத்துணவில் முட்டை போடும் திட்டம், நெல், கரும்பு ஆகியவற்றிற்கு உரிய விலை நிர்ணயம், தமிழ் வளர்க்கப் பாடுபடுதல் போன்றவை அனைத்து தேர்தல்களிலும் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும். இன்னும் உச்சபட்சக் காமெடியாக மீனவர்களை பாதுகாத்தல், இலங்கைத் தமிழருக்கு அமைதியான வாழ்வு உறுதிப்படுத்தல், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பிடுங்கி தருதல் போன்றவையும் இடம்பெற்றிருக்கும். இவ்வளவு நாள் என்ன புடுங்குனாங்கன்னு தெரியலை.
தமிழர்களை எல்லாம் கொன்று குவித்துவிட்டு தமிழ் வளர்க்கப் பாடுபடுதல், நாட்டை மொத்தமாக சுரண்டிவிட்டு வீட்டை நாட்டுக்கு விட்டுகொடுத்தல், தொலைகாட்சி நிகழ்சிகளின் பேர்களிலும், அதில் வரும் இளம் தொகுப்பாளர்களின் நாவாலும் தமிழைக் கொன்றுவிட்டு தமிழ செம்மொழி என நிரூபிக்கப் பாடுபடுதல், கொடநாட்டில் முடங்கிவிட்டு அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசியல் நடத்திவிட்டு பதவி பெற்றதும் பணம் சம்பாதித்துவிட்டு, பதவியில் இல்லாத போது அதன் சுகம் அனுபவித்தல், ஊழல் வழக்கு தன்மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்த கட்சியின் ஊழலையும் ஆட்சியையும் விமர்சித்தல் இவையெல்லாம் இவர்களின் வித்தைகள்.
மாற்றுக்கட்சி உறுப்பினர்களுக்கு ஆசை காட்டியும், பேரம் பேசியும் தன் பக்கம் இழுக்கும் குதிரை வியாபாரிகள் தான் இவர்கள். இலவசங்களை இனத்திற்கு வழங்கிவிட்டு உணர்வுகளை விலையாய் வாங்கிக்கொண்ட சூத்திரகாரர்கள். வரிப்பணங்களில் இருந்து வழங்கிவிட்டு வாரிசின் பணங்களை வாரி வழங்கியது போன்று மார்தட்டிக் கொள்ளுதல் என்னை பொருத்தவரைக்கும் கேவலம் தான். கல்வியை இலவசமாக வழங்கமுடியாத நீங்களெல்லாம் எதற்கு அரசாள வேண்டும்? ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட பெரியாரின் பாசறை குஞ்சுகள் இன்று ஜாதி வாரியாக தொகுதி ஒதுக்கிடுவது கேவலாமாக இல்லை?
இதுக்கு ஏண்டா நீங்க இவ்வளவு வெள்ளையுஞ் சொள்ளையுமா அலையணும்?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? - என்று
மடியும் எங்கள் அடிமையின் மோகம்? - இன்றெமது
எண்ணிக்கை விலங்குகள் போலும்... - என்றெமது
இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? - என்று
மடியும் எங்கள் அடிமையின் மோகம்? - இன்றெமது
எண்ணிக்கை விலங்குகள் போலும்... - என்றெமது
இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
Thursday, March 17, 2011
ஜெயலலிதா - நடிகை நர்த்தனம் ஆடுகிறாள்
தமிழகத்தின் சாபக்கேடுகளில் முதன்மையான ஒன்று இங்கு உருவாகிய கழகங்களின் கலகங்கள். இதற்கு உரமிட்டு வளர்ப்பது நம் மக்களின் ஜடத்தனமும், எதிர்ப்புநிலை காட்டத்தெரியாத மடத்தனமும். அமைதியாகவே இருப்பது அகிம்சை ஆகிவிடாது. அது அநியாயங்களுக்குத் துணை போனதற்கு சமம். அதைத்தான் நாம் பலகாலமாக செய்துவருகிறோம்.
இரு பெருங்கழகங்களும் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடிப்பதும், ஆட்சியில் இல்லாதபோது சட்டசபைக்குக்கூட வராமல் அறிக்கைவிட்டே அரசியல் நடத்துவதுமே வழக்கமாகிவிட்டது. இவர்களது கொள்கைகள் என்பதை இவர்கள் கைகள் கொள்ளும் அளவாகவேப் புரிந்து கொள்ளவேண்டியதாயிருக்கிறது. தமக்கானதாய் தொலைகாட்சி சேனல்களும், சில பல ஆதரவுப் பத்திரிக்கைகளையும் வைத்துக்கொண்டு பத்தினி வேசம் போட்டு பொதுமக்களை பைத்தியக்காரர்களாகவே வைத்திருப்பது இவர்களின் பலம்.
திரைத்துறை பின்னணியை வைத்துக்கொண்டு இவர்கள் அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ இவர்களால் திரைமறைவு வேலைகளில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இந்த இரு கயவர் கும்பலில் ஒருவரை தேந்தேடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் நாம். ஒருவர் கதையெழுதி நாடகங்களில் நடித்த அனுபவத்தால் காட்சிக்கு காட்சி விறுவிறுவென திருப்புமுனைகளை வைத்து, கொள்கைகளை அடகு வைத்து, மணிக்கொருமுறை நரம்பில்லா நாக்கை சுனாமியிலும் வேகமாக இங்குமங்கும் பிரட்டி, பிதற்றி அரசியல் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு கருப்பு சட்டைபோட்ட காவல்காரர்களும் உண்டு. பலவிதமான அறிக்கைகளை தயாராக எழுதி வைத்துவிட்டு பொருத்தமானதை பொருந்தும் நேரத்தில் வெளியிடுவதற்காகவே பெரியாரல்லாத வேறு பாசறைகளிலும் பயின்று வந்திருக்கிறார்கள் போலும்.
நடிகை ஜெயலலிதா, படப்பிடிப்பின்போது இடையிடையே கிடைக்கும் சிறு ஒய்வுநேரத்தைப் போன்று தமிழக அரசியலையும் நினைத்துக்கொண்டிருக்கிறார். இடைவேளையில் ஜூஸ் குடிப்பதும், நிழலில் இளைப்பருவதும் பழக்கதோஷமாகிவிட்டதால் கொடநாடு ஓய்வும் அவசியமாகிப்போனது. படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களிடமும் மற்றவர்களிடமும் முரண்டு பிடிப்பதும், அவர்களை ஏசுவதும், அவமரியாதையாக நடத்துவதும் சதை வியாபாரத்தில் சரிப்படலாம். அந்தக் கதை இங்கு எடுபடுமா அரசியலில்? திமிர்பிடித்த நடிகையாகவே நடித்து பழக்கப்பட்டதை அரசியலில் ஒதுக்க அம்மையாருக்கு மனமில்லை போல.
அம்மையாரும், அய்யாவும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்லவர்கள் என்று நினைத்து, தேர்தலில் யாரும் வெற்றியடையச் செய்வதில்லை. ஒருவர்மேல் உள்ள வெறுப்பை வேதிவினையால் மற்றொருவருக்கு சாதகமாகச் செய்து மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொள்ளும் செய்வினை. அதுமட்டுமில்லாமல் இருவரும் தேர்தலின் கடைசி நேரங்களில் நடத்தும் நாடகங்களுக்கான பாராட்டுதலாக அந்தந்த நாடகக் கம்பெனிகளுக்குப் போய்ச்சேர்ந்துவிடுகிறது. இது துரதிர்ஷ்டமே.
நடிகையின் நர்த்தனம் பார்க்க நன்றாகயிருக்கலாம். நடிகையின் பாதமும் புண்ணாகும் என்பது குறைந்தபட்சம் அந்த நடிகைக்காவது தெரிந்திருக்க வேண்டும். பொது'மா'க்களில் பெரும்பாலோருக்கு மதம் போல கட்சி இரத்தமும் ஊட்டியே வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் என்ன அட்டூழியம் செய்தாலும் எதிர்த்து ஒரு கேள்விகூடக் கேட்பதற்கு ரத்தத்தின் ரத்தங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ மனம் வந்துவிடாது. புதிதாக எவர் வந்தாலும் ஓராயிரம் கேள்விக் குடைச்சல்களைக் கொடுத்து வாய்ப்பளித்துவிடப் போவதில்லை. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்ற எங்கள் வார்த்தைகளில் மட்டும் என்றுமே மாற்றம் இருக்காது.
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இவர்கள் வந்தால் மட்டும் என்ன செய்து கிழித்துவிடப்போகிறார்கள் என்ற கேள்வியை மட்டும் வாய்கிழிய அடுத்தவன் காது கிழிய கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை நாம் வாக்களிக்கும் புதியவர்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி செயல்படாமல் போகலாம். அதை அவர்களின் செயல்பாடை வைத்துதான் முடிவு செய்யமுடியும். அவ்வாறே அவர்களின் செயல்பாடு திருப்தியளிக்காவிட்டாலும், ஏற்கனவே இருக்கும் கழகங்களுக்கும், புதிதாய் தோன்றும் கழகங்களுக்குமாவது ஒரு பாடமாயிருக்கட்டுமே.
பொதுமக்களே அவர்கள் நர்த்தனம் ஆடட்டும், நாடகம் இயற்றட்டும், நமக்கு எங்கேபோனது புத்தி?
Tuesday, March 8, 2011
கருணைக்கொலை தேவையா? இல்லையா?
நேற்று வெளியான நீதிமன்றத்தீர்ப்பு என்னைப் பொறுத்தவரையில் அதிர்ச்சியையே அளிக்கிறது.
”சோகன் லால் பார்த வால்மீகி” எனும் காமுகன் ஒருவனால் தனது 25-வது வயதில் கற்பழிக்கப்பட்டு இன்று வரை கடந்த 37 வருடங்களாக ”அருணா ஷான்பாக்” தன் சுயநினைவு இழந்து படுத்த படுக்கையில் உள்ளார். தற்போது அவருக்கு 62 வயது.
இவர் தனது சுயநினைவை இழந்து உயிர்வாழும் இந்த தருணத்தில் மிகுந்த சிரமமான வாழ்வையே வாழ்ந்து வருகிறார். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவன், நீதிமன்றம் வழங்கிய ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு இன்று எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வருவதைக் கூட அருணா அறிந்திருக்க மாட்டார்.
ஒரு உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை எனும் ஏதோவொரு நம்பிக்கையை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை என்னளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியை நிரபராதி எனக்கூறி தண்டனைகளில் இருந்து விடுவித்த போது உறுத்தாத மனசாட்சிகள் இந்த கருணைக்கொலை அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் விந்தை.
எல்லா உறவுகளும், ஏன் அவரது உறுப்புகளும் கூட வழக்கமான பணிகளிலிருந்து விலகிய நிலையில் இருக்கும் அவரால் எவ்வாறு சாந்தமான வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? நமது செயல்படும் மூளைகள் இந்த விசயத்தில் கொஞ்சம் கூட சிந்தித்து செயல்படாமல் போனது ஏன்?
சமீபத்தில் வெளியான “மந்திரப் புன்னகை” திரைப்படத்தில் கூட ஒரு வசனம் வரும்... “வயசான காலத்துல சாவைத்தவிர வேறு என்ன சுதந்திரம் நம்மால் கொடுத்துவிட முடியும்?”-னு. அது உண்மையென்றே எனக்குப்படுகிறது. இந்த அருணாவுக்கு நாம் வேறு என்ன நல்லது செய்துவிடமுடியும் அவரைக் கருணைக் கொலை செய்வதைவிட?
கருணைக்கொலைக்கு யாரேனும் விண்ணப்பித்தால், தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ, ஐந்து அல்லது பத்து நபர் கொண்ட குழுவை உருவாக்கி, இந்த விண்ணப்பத்தில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? இந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதால் யாருக்கு என்ன் லாபம்? என்பதை ஆராய்ந்து ஒரு தீர்ப்பு வழங்கலாமே!
விதாண்டாவாதத்திற்காகவும், ஏதோ சில நம்பிக்கைகளுக்காகவும் இந்த நீதிமன்றத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பே, எனது உறவில் ஒரு வயதான மூதாட்டி எந்த நினைவுமில்லாமல், உறுப்புகளும் சரிவர இயங்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுற்றபொழுதும் நான் இந்த கருணைக்கொலையைத் தான் ஆதரித்தேன். என்னதான் அவரைக் குளிப்பாட்டி, வீட்டுத் திண்ணையில் படுக்கவைத்தாலும், தானாகவே உருண்டு வீதியில், மாட்டு சாணத்திலும், மூத்திரத்திலும் பிரண்டு கிடப்பார். வெயில், மழை எதுவும் அவருக்குத் தெரியாது. சில நேரம் மாடு தன் காலால் அவரை உதைத்து, மிதித்து, கொம்புகளால் குத்தியது கூட உண்டு. அவரது உயிரை நாம் பிடித்து வைத்திருந்து என்ன மயிரைக் கண்டோம்?
என்ன செய்ய வாழும்போது கஞ்சி ஊத்தாமல், செத்தவுடன் பூவிலே பாடையும், மேளதாளங்களுடன் அடக்கம் செய்யும் தேசத்தில்தானே நாம் வாழ்கிறோம்.
நாட்டாமைகளா கொஞ்சம் தீர்ப்பை மாத்தி சொல்லுங்க... வாழ்கிறவனுக்கு நல்ல வாழ்க்கைத்தரமும், பாதுகாப்பும் கொடுத்திட உங்க சட்டங்களை, அதிகாரங்களைப் பயன்படுத்துங்க....
இன்னும் அதிக விபரங்களுக்கு - http://blog.balabharathi.net/?p=408
Saturday, March 5, 2011
கோர்ட்டு வாசல் கோகிலவாணி (ஆகாசவாணி எனக்குப் பிடிக்காது)...
ரொம்ப நாள் கழிச்சு எழுதவந்துருக்கேன்... எழுத ஒன்னும் சரக்கில்ல... அதான் அடங்கிட்டான்-ன்னு சிலர் சொன்னதும் காதுக்கு வந்துச்சு...
பதிவு எழுதாம எத்தனை நாள் இருந்தாலும் தினமும் முக்கியமா போகவேண்டியது எல்லாம் முக்காமலே போச்சு. (ச்சீ பட்டாப்பட்டி எபெக்டு). லீவ் லெட்டர் எழுதிப்போடாம லீவு எடுத்தா பிளாக் ஹெட்மாஸ்டர் அடிக்கமாட்டருங்கிற உண்மையும் தெரிஞ்சுபோச்சு. நாங்கெல்லாம் பதிவர்கள்னு பகுமானமா சொல்லிக்கிட்டு திரிஞ்சாலும்... பலபேரு பள்ளிக்கூட பக்கிக மாதிரி சண்டைபோட்டுக்கிட்டுதான் திரியுதுக. சரி எல்லாத்தையும் விடுங்க. எதுக்கு நம்ம பதிவரசியல் பேசிக்கிட்டு... தேசிய அரசியலுக்குப் போயிடுவோம்.
முக்கியமா இந்த பதிவு எழுதவந்ததே நம்ம உச்சநீதி மன்றத்தின் சில நடவடிக்கைகளைப் பாராட்டத்தான்.
ரொம்ப காலமா இந்த நீதித்துறையோட கருப்பு கோட்டுக்குள்ள கவருமெண்டுதான் ஒழிஞ்சிருக்குன்னு நம்ம பொதுஜனம் நினைச்சதுண்டு. இப்போ, எப்போவாவது அங்கங்க நீதிமன்றம் சரியான விதத்துல கரம், சிரம், புறம் நீட்டும்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்குது. அதை எப்போதும் (வாடகைக்காவது) கடைப்பிடித்து நீதியை நிலைநாட்டனும்னு நாங்க விரும்புறோம். நீதித்துறை நீதிபதிகள்தான் ஜனநாயகத்தோட துரை. உங்களில் இனியும் படியவேண்டாம் ஏதும் கறை. நாயகளுக்கு மட்டும்தான் தேவை பொறை.
முதல் பாராட்டு - லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பதவிவகித்த தாமஸ் அவர்களின் பதவி செல்லாது என்று மண்ணுமுட்டிகளுக்கும் உறைக்கும் வண்ணம் உரக்க சொல்லியதற்கு. பள்ளிக்கூட வகுப்புகள்-ல ரொம்ப சேட்டை பண்ணுற பசங்களை வகுப்புத்தலைவராப் போட்டா அவனையும் அடக்கிறலாம், அனைவரையும் அடக்கிறலாம்னு ஒரு முறை பின்பற்றுவாங்க. அதே முறையை இங்கும் பின்பற்றலாம்னு நினைச்சாங்களோ என்னமோ!? மன்மோகன் சிங் அரசியலுக்கு முன்னால எங்கோ பேராசிரியராக இருந்ததாக எப்போதோ படித்த நினைவு. அதனால இருக்குமோ? அவருக்கு இந்த பதவி வழங்கிய இந்த மெத்த படித்த பதருகளை எப்படி தொடர்ந்து நாடாள விடுவது என்று புரியவில்லை.
இரண்டாவது பாராட்டு - ஸ்பெக்ட்ரம் ஊழலை முறையாக விசாரிக்குமாறு சி.பி.ஐ-க்கு கிடுக்குப்பிடி போட்டதற்கு. கொஞ்சிகேட்டாலும், கெஞ்சிக்கேட்டாலும் அந்த பிடியை மட்டும் தளர்த்திராதீங்க எசமான். ஏன் அடிச்சுக்கூடக் கேப்பாய்ங்க. நீங்க அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது.
மூன்றாவது பாராட்டு - கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் விவரங்களை குண்டிக்கு அடியில் நாற்காலியாக போட்டு உட்கார்ந்திருக்கும் பதவி வெறிபிடித்த அரசியல் தலைவலிகளை என்னாடா ஆச்சுன்னு ஒரு சவுண்டு விட்டதுக்கு... தொடர்ந்து கேளுங்க. இவனுகளுக்கு காது கொஞ்சம் மந்தம்.
சரக்கை (டைப்)அடிச்சு எழுதிப் பிழைக்க நான் இலக்கியவாதியுமில்ல... ஓட்டுக்காக அலைஞ்சுகிட்டு இருக்க அரசியல்வியாதியும் இல்ல..

இதுமாதிரி சிற்சில இடங்கள்ல பாராட்டும்படியா இருந்தாலும் இன்னும் பல நேரத்துல சட்டத்தோட சட்டைப்பாக்கெட்டு ஒருசில பணம்தின்னும் கருப்பு ஆடுகள்கிட்ட மாட்டிக்கிறது வருத்தமாதான் இருக்கு. எத்தனையோ விஷயங்கள்-ல விசாரணைக்கமிசன் வைக்கிறதும்... அந்தக் கமிசன் கமிசனைவாங்கிகிட்டு போயிடுறதும் நல்லதாத் தெரியலை. ஒருவேளை கமிசன்-ங்கிற பேரு ராசியோ என்னமோ. மொதல்ல அதை மாத்துங்க.
நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்காரியா... சர்க்காரியா-னு என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குது ஆனா கழக உடன்பிறப்புகளே அட அது யாருயான்னு கேக்குற நிலைமையிலதான் அதோட செயல்பாடுகள் இருக்குது.
நான் சின்னப்புள்ளையா இருந்ததிலேயிருந்து சர்க்காரியா... சர்க்காரியா-னு என் காதுல கேட்டுக்கிட்டே இருக்குது ஆனா கழக உடன்பிறப்புகளே அட அது யாருயான்னு கேக்குற நிலைமையிலதான் அதோட செயல்பாடுகள் இருக்குது.
அதேமாதிரி போபர்ஸ்... போபர்ஸ்-ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாய்ங்க. எங்க அப்பத்தா அது ஏதோ பெரிய மணிபர்ஸ்-னு நினைச்சுகிட்டே வாழ்ந்துக்கிட்டு இருக்குது. அந்த போபர்ஸ் பிரச்னையை பலகாலமா மினிபஸ் மாதிரியே நகத்திக்கிட்டு திரியுது நம்ம நாடு. இதுவரை கிளைமேக்சை காட்டாமலே எல்லா பிரச்சனையையும் ரொம்ப வருசத்துக்கு ஒட்டிகிட்டே இருந்தா எப்படி. சட்டுப்புட்டுன்னு சுபம் போடுங்க. அட முடிவு நம்ம மக்களுக்கு சுபமா இருக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)