Sunday, January 10, 2010

கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்...


பொறுப்பி-1 - இது சிங்கைப் பதிவர்கள் சிலரின் மலேசிய இன்பச் சுற்றுலா.

பொறுப்பி-2 - நாங்கள் அங்கு கண்ட நம் முன்னோர்களான குரங்குகளைப் பற்றி இந்தப் பதிவில் ஒரு வரியே சொல்ல முடிந்த வருத்தத்தாலும்... நம் முன்னோர்களை சிறப்பிக்கும் வகையிலும் மட்டுமே இந்த தலைப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்பி-3 - இச்சுற்றுலாவில் கலந்து இன்பம் பெற்ற அன்பு பதிவர்களுக்கும்... இந்த இடுகையின் தலைப்பிற்கும் நேரடி சம்பந்தமில்லை (முன்னோர்களுடனான சம்பந்தம் தவிர) .

பக்கத்துல உள்ள நாடுகளை சடுகுடு விளையாட்டுல கோட்டைத் தொடுற மாதிரி குடுகுடுன்னு போயி பார்க்க முடியுங்கிறது தான் சிங்கையில் உள்ளவங்களுக்கு உள்ள ஒரு பெரிய கொடுப்பினை. அப்புடித் தாங்க நம்ம சிங்கைப் பதிவர்களில் நான்(ரோஸ்விக்), வெற்றி கதிரவன், ஜெகதீசன், அப்பாவி முரு மற்றும் சென்னையிலிருந்து வந்திருந்த அவரது நண்பர் பிரேம் குமார் அனைவரும் மலேசியாவில் உள்ள கோத்தா திங்கி (Kotta Tinggi)-க்குப் போனோம். யாருணே திட்டுறது... அந்த ஊருப் பேரை தமிழ்ல அப்படித் தான் எழுதீருந்தாங்க. இந்த சுற்றுலா மிகக் குறைந்த செலவில்(ஏறத்தாழ S$20), அதிக அலைச்சல் இல்லாமல் மிகவும் இன்பம் தரும் வகையில் இருந்துச்சு.

காலையில 9 மணிக்கு சிங்கப்பூர் Woodlands Interchange-ல இருந்து டவுன் பஸ்சுல மலேசியாவுக்குக் கிளம்புனோம். எங்கே காலச் சாப்பாடுக்கு நம்மள அலையவிட்டுருவானுகலோனு மூணு சுவையில பன்னு வாங்கிட்டுப் போனேன். கடைசியா நமக்கு பன்னு கொடுத்துட்டாய்ங்க... மலேசியா எல்லையில உள்ள ஜோகூர் பாரு (Johar Bharu) போயி சேர்ந்தவுடனே, ஏல மக்கா நேரம் ஆச்சு வாங்க சீக்கிரமா கோத்தா திங்கிக்குப் போகலாம்னு சொன்னேன். ங்கொக்கா மக்கா நான் ஜோகூர் வந்துருக்குறதே திங்கிறதுக்குத் தான். எவனாவது சீக்கிரம் கிளம்புன்னு சொன்னீங்க, அப்புறம் மத்தியான சாப்படு வரைக்கும் இங்கே இழுத்துக் கடத்திருவேன்னு ஞானப் பித்தன்கிட்ட இருந்து மிரட்டல் வந்தது.

நான் பல முறை மலேசியா போயிருந்தாலும், இந்த ஊருக்கு இது தான் முதல் முறை. இறங்கி ரெண்டு வீதி தாண்டிப் போனா ஏதோ நம்ம மதுரை பக்கம் நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு... ஒரு கோயிலு, நிறைய பூக்கடை, சாம்பிராணி, ஊதுபத்தி இன்னும் பல பூஜை சாமான்கள் விக்கிற கடை நிறைய இருந்தது. பத்தடிக்கு ஒரு கைரேகை, ஜோசியம் பாக்குற நம்ம ஆளுக. பாவம்ணே உங்களுக்கு நல்ல காலம் வருது, உங்க வாழ்கையில பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகுதுன்னு எல்லோருக்கும் சொல்லிவிட்டு... அவங்க மட்டும் இன்னும் ஒரு ஒட்டுத் துணிய விரிச்சுகிட்டு பிளாட் ஃபார்ம்ல உக்காந்து இருக்காங்க.

அஞ்சு பேரும் ஒரு சாப்பாட்டுக் கடைக்குள்ள புகுந்து, சாப்பிட்டிட்டு வெளிய வரும்போது, யானை புகுந்த கரும்புத் தோட்டம் மாதிரி அந்த ஹோட்டல் இருந்துச்சு... இவ்வளவு சாப்பிட்டும் கடைசியா பில்லு சும்மா RM. 24 (மலேசியா ரிங்கிட்டு) (சிங்கை வெள்ளி 10) தான் வந்துச்சு. அப்புடியே ஓடிப் போயி ஒரு பஸ்ஸைப் பிடிச்சு 45 நிமிடப் பயணத்துல கோத்தா திங்கி நகரை அடைந்தோம். போற வழி முழுவதும் பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் வலைவுகளுடனான பச்சைபசேல்-னு மரம் செடிகள். மிக அருமை. பெரும்பாலான மலாய்காரங்களுக்கு, ஆங்கிலம் அதிகம் தெரியாதுண்ணே. எவ்வளவு பஸ் டிக்கெட்டுன்னு கேட்டா மலாய்ல பதில் சொல்ல... நாங்க திணறிபோயி கடைசியா கால்குலேட்டர்தான் உதவுச்சு...

ம்ம்ம்... சொல்லவே இல்லையே... கோத்தா திங்கில ஒரு அருவி இருக்கு. அதுல போயி குளிச்சு ஆட்டம் போட்டு வரத்தான் இந்த பயணம். நகர் பகுதியில இருந்து அருவி இருக்கிற இடத்துக்கு 15 நிமிடம் கார்ல போகணும். இரண்டு தமிழ் பேசும் இந்திய வம்சாவளி ஓட்டுனர்களின் காரை வாடகைக்கு எடுத்து சென்றோம். அங்கயும் பேரம் பேசணும்ணே... அந்த அருவி இருக்கிற இடத்துக்கு நுழைவாயில் கட்டணமும் உண்டு(RM. 10). கண்ணில் படும்படியா எங்கள் உடை மற்றும் நொறுக்குத் தீனி பைகளை வைத்துவிட்டு நங்கு நங்குன்னு கொட்டும் அருவியில குளித்து ஆட்டம் போட்டோம். அப்பத் தானே நம்ம முன்னோர்கள் நம்மள சந்திக்க வந்தாங்க... தாவித் தாவி வயித்துல ஒரு குட்டியையும் தூக்கிகிட்டு இது போன்ற உணவு பைகளை குறி வைத்து அவய்ங்க போட்ட ஆட்டம் தாங்கலண்ணே... (அப்பாடா தலைப்பு வச்சதுக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு...)


ஆசை தீர ஆட்டம் போட்டுட்டு... அருவியின் மேல் பகுதிக்கு போனோம்னே. அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு பெரிய கூட்டமே, நீச்சல் குளம் போல இருக்கிற பகுதிகள்ல நீந்தி விளையாடிகிட்டு இருந்தாங்க. அப்பத்தானே புரிஞ்சது கீழ குளிக்கும்போது எதுக்கு நமக்கு குளிரலைன்னு... அங்க ஒரு பெரிய அருவி இருந்தது. ஆனால் அதன் அடிப் பகுதியின் ஆழம் அதிகம் என்பதால் அங்கு குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. நாங்களும் நல்ல நீந்தி குளிச்சோம்ணே... அங்க இருந்த மீன் குஞ்சுகள் இலவசமாவே எங்கள் பாதங்களுக்கு மசாஜ் பண்ணி விட்டுச்சுண்ணே. கால்ல இருந்த அழுக்கு பூராம் போயிடுச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டோம்... அப்பாடா இன்னும் ஒரு மாசத்துக்கு குனிஞ்சு குளிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு... :-))











அந்த அருவி அழகோட போட்டோ எடுக்கனும்னு கல்யாண உடைகளோட சில தம்பதிகள் வந்திருந்தாங்கண்ணே. சில வெளிநாட்டு தேனிலவு ஜோடிகளும் இருந்தாங்க... எப்படி கட்டி புடிச்சுகிட்டே நீச்சல் அடிக்கிறதுன்னு அவங்க நாடுகள்ல சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறதுன்னு நினைக்கிறேன்ண்ணே. அப்படி நம்ம நாட்டுல எதுவும் பயிற்சி பட்டறைகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கண்ணே... நம்ம இளம் பதிவர்களுக்கு உதவியா இருக்கும். :-)










திரும்ப ஜோகூர் பாரு வந்து மாலை 4.30 மணியளவில் மதிய உணவு என்ற பேரில் மிகுந்த சுவையுடன் இருந்ததால சில பல கொத்து பரோட்டாகளையும், புட்டு வகைகளையும் வயிற்றுக்குள் அமுக்கி (வயிறாரனு சொல்ல முடியாது... ஏன்னா வயிறு அழும் அளவுக்கு) திரும்ப சிங்கை வந்து சேர்ந்தோம். இந்த ஊரு ஹோட்டல்கள்ல சாப்பாட்டு அயிட்டம் சொன்ன உடனே... தண்ணி எதுவும் சொல்லீட்டிங்களானு கேட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல. அண்ணன் முரு தயவால காப்பி, பால் இவற்றை இங்கு பொதுவா தண்ணின்னு சொல்லுவாங்கனு புரிஞ்சுகிட்டேன். அவற்றை குடிச்சதுக்கப்புறம் முழுவதும் புரிஞ்சுகிட்டேன். :-) அங்க உள்ள தியேட்டர்ல போயி Avatar படம் 3D-ல பாக்கலாம்னு... தியேட்டர்ல இருந்த பொண்ணுகிட்ட அண்ணன் முரு போயி இந்தப் படம் பார்க்க கண்ணாடி தருவீங்களானு கேட்க... நாங்க அந்த பொண்ணு போட்டிருந்த கண்ணாடியத்தான் கேட்டமோனு நினச்சு ஹா...ஹா..னு சிரிச்சிட்டு.... நீங்க வேணும்னா வேட்டைக்காரன் பாருங்கன்னு சொல்ல... உன் 3D-யும் வேணாம் ஒன்னும் வேணாம் போ-D -னு தலை தெறிக்க ஓடி வந்துட்டோம்.

வாய்ப்பு அமைஞ்சா நண்பர்கள் கூட்டத்தோட இந்த இடத்துக்குப் போயி சந்தோசமா கும்மி அடிச்சிட்டு வாங்கண்ணே. உடல் அழுக்கு மட்டுமல்ல... மனக்கசடுகளும் போன மாதிரி இருக்கும்.




30 comments:

Chitra said...

சென்ற முறை, அந்த பக்கம் வந்த போது, இந்த அருமையான இடம் மிஸ் பண்ணிட்டோம். Next time for sure.

பிரபாகர் said...

காதுல புகை.... வேறென்ன சொல்ல... பாஸ்போர்ட் தயாரா இல்லாம வர முடியல...

அற்புதமா இருந்துச்சி அனுபவங்கள்...

பிரபாகர்.

பிரபாகர் said...

தமிழ்மணத்தில சேர்த்து ஓட்ட போட்டுட்டேன். தமிழிஷ் சேர்த்துட்டு சொல்லுங்க.

பிரபாகர்.

ஜெகதீசன் said...

ஓ... யாரெல்லாம் போயிருந்தீங்க?

சி தயாளன் said...

நல்லது..குரங்குகள் நம்மளை விடுறதா இல்லை போல இருக்கே....:-)))

சிவாஜி சங்கர் said...

//கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்// ஹிஹிஹி..

ஆல்கஹால் ஏதும் உண்டா தலைவரே..?

ரோஸ்விக் said...

Chitra - அருமையான இடம். அடுத்த தடவை தவறாமல் போய் அனுபவிங்க.

ஜோசப் பால்ராஜ் said...

//காதுல புகை.... வேறென்ன சொல்ல... பாஸ்போர்ட் தயாரா இல்லாம வர முடியல... //

Repeateeeeeiii

அப்பாவி முரு said...

ஜெகு பாய்,

கண்ணை மூடி எதை அனுபவிக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

ரோஸ்விக் said...

பிரபாகர் - ஆமா அண்ணே! நீங்க நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள். எப்போதும் தயாராக இருங்க. :-)

அப்பாவி முரு said...

// Sivaji Sankar said...
//கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்// ஹிஹிஹி..

ஆல்கஹால் ஏதும் உண்டா தலைவரே..?//

ஏம்ப்பா? ஏனிந்த கொலைவெறி...

வேணும்ன்னா வீட்டுக்கு வா!!!

ரோஸ்விக் said...

ஜெகதீசன் - அது தான் முதல்லையே பொறுப்பி-ல சொல்லிட்டேன்ல... நமக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லன்னு. அப்புறம் ஏண்ணே இன்னும் பயப்படுறீங்க?? :-))

ரோஸ்விக் said...

’டொன்’ லீ - ஆமா, அவை கட்டளை தளபதி எங்கே என்று விசாரித்தன. :-)))

ரோஸ்விக் said...

Sivaji Sankar - அய்யய்யோ... அதெல்லாம் கிடையாது தல. நம்மகிட்ட "ஆல்" இருக்கும் "ஹால்" இருக்கும்... ஆனா "ஆல்கஹால்" இருக்காது.

ரோஸ்விக் said...

ஜோசப் பால்ராஜ் - பாஸ்போர்ட் தயாரா வச்சுகிட்டு, ரெண்டு பெரும் sponser பண்ணினா நாங்க என்ன வரமாட்டம்னா சொல்றோம்?

ரோஸ்விக் said...

அப்பாவி முரு - அண்ணே! முதல் தடவை குளிச்சிட்டு வெளில வந்தப்ப எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு. ஞாபகம் இருக்கா?
அத இந்த தடவ கேக்கல... இப்பத் தெரியுதா அவரு கண்ணை மூடி என்ன அனுபவிக்கிறார்னு?? :-)))

ரோஸ்விக் said...

//அப்பாவி முரு said...
// Sivaji Sankar said...
//கோத்தா திங்கியில் கொட்டமடித்த மங்கிகள்// ஹிஹிஹி..

ஆல்கஹால் ஏதும் உண்டா தலைவரே..?//

ஏம்ப்பா? ஏனிந்த கொலைவெறி...

வேணும்ன்னா வீட்டுக்கு வா!!!//



10 சிங்கை வெள்ளி கட்டணமாக செலுத்தினால் அண்ணனின் வீட்டு முகவரி தரப்படும். :-)

அப்பாவி முரு said...

//10 சிங்கை வெள்ளி கட்டணமாக செலுத்தினால் அண்ணனின் வீட்டு முகவரி தரப்படும். :-)//

அண்ணே அப்பிடியே என்னோட முழு கண்டிசனையும் சொல்லீடுங்க...

புலவன் புலிகேசி said...

ம் நல்ல அனுபவம் தல..ஏக்கத்துடன் புலவன்

குசும்பன் said...

//எப்படி கட்டி புடிச்சுகிட்டே நீச்சல் அடிக்கிறதுன்னு அவங்க நாடுகள்ல சிறப்பு பயிற்சி பட்டறைகள் நடைபெறுகிறதுன்னு நினைக்கிறேன்ண்ணே. //

கல்யாணம் ஆன புதுசில் அப்படிதான் நம்ம பயபுள்ளைங்க பொண்ணு பக்கத்தில் நின்னு ஜார்ஜ் ஏத்திக்கிட்டே இருப்பானுங்க...சில வருடம் போனதும் அப்புறம் பாருங்க!:)

அப்பாவி முரு said...

//குசும்பன் said...

கல்யாணம் ஆன புதுசில் அப்படிதான் நம்ம பயபுள்ளைங்க பொண்ணு பக்கத்தில் நின்னு ஜார்ஜ் ஏத்திக்கிட்டே இருப்பானுங்க...சில வருடம் போனதும் அப்புறம் பாருங்க!:)//

நம்மாளுங்க வேணுமானால் அப்படி இருக்கலாம், பெரும் பாலான சீன மக்கள் கட்டிப்பிடி வைத்தியப்படியே தானிருப்பார்கள்...

பித்தனின் வாக்கு said...

நல்லா எழுதியிருக்கிங்க, மிகவும் அருமை. நன்றி ரோஸ்விக்.

ஸ்ரீராம். said...

உங்கள் சந்தோஷத்தில் 'எங்கள்' சந்தோஷமும் பங்கு கொள்கிறது. கண்ணுக்குத் தெரியாத தமிழ்மணத்தில் எப்படி ஓட் போடுவது?

ரோஸ்விக் said...

அப்பாவி முரு - அவசரப் படாதீங்கண்ணே. நுழைவுக்கட்டணம் கட்டிட்டு உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் கதவ சாத்திட்டு கண்டிசனை சொல்லுங்க அண்ணே.
என்னாண்ணே பொழைக்கத்தெரியாத ஆளா இருக்கீங்க... :-)

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - கவலைப் படாதீங்க தல. ஒரு நாள் வாய்ப்பு உங்கள் கதவை தட்டும்.

ரோஸ்விக் said...

குசும்பன் - அண்ணே இவய்ங்கள அவ்வளவு மட்டமா எடை போட்டுடாதீங்க. அண்ணன் முரு பதில் சொல்லிருக்கிறாரு பாருங்க.
இவங்க அதகமான புள்ள குட்டிகளோட இருக்க மாட்டாங்க. ஆனா புள்ள மாதிரி இருக்கிற குட்டிக கூட இப்படித்தான் இருப்பாங்க.

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - பாராட்டுகளுக்கு நன்றி தலைவா. :-)

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நன்றி தல "எங்கள்" எங்கள் சந்தோசத்தில் பங்கு கொண்டதற்கு. :-)
தமிழ்மணம் என்ன பிரச்சனைன்னு தெரியலயே தல. இங்க சரியத் தான் இருக்குது.

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள். நானும் அந்த இடங்களுக்கு சென்று பார்க்கவேண்டும்போல் இருக்கின்றது.

கிரி said...

//இறங்கி ரெண்டு வீதி தாண்டிப் போனா ஏதோ நம்ம மதுரை பக்கம் நுழைஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங்கு.//

அட! இங்க பார்ரா!

நல்லா திங்கு திங்கு ஆடிட்டு வந்து இருக்கீங்க! :-)