(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,
வணக்கம். நலம். நீங்களும் நலமாயிருப்பதாகவே தங்களின் பதிவின் மூலம் அறிய வருகிறேன்.
திருமதி. பார்வதி அம்மா அவர்களின் மருத்துவ உதவியினை வந்தாரை வரவேற்கும் தமிழகத்தின் வாயில் வரை கொண்டுவந்து, திருப்பியனுப்பி... வந்தாரை வாழவைக்கும் தமிழரின் மரபை ஒரு தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு மறுத்ததில் நான் மனிதன் என்ற முறையில் சிறுமையாகவே கருதுகிறேன். இது பற்றி பல பதிவர்கள் தங்களது கருத்துக்களை ஆதரித்து பதிவு செய்துள்ளனர் உங்களைத் தவிர.
அவரை பிராபாகரனின் தாயாராகவோ, தமிழச்சியாகவோ கூட தாங்கள் கருத வேண்டாம். அவளை ஒரு வயது முதிர்ந்த, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பெண் என்பதாக தாங்களும் கருதுவீர்கள் என நினைக்கிறேன்.
மத்த தமிழனுக எல்லாம், இந்த அம்மாவை பிரபாகரன் அம்மாவாவே மட்டும் பார்ப்பானுங்க. அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா, உடனே கொந்தளிச்சுப் போயி தமிழகத்துல கலவரம் பண்ணி சுடுகாடா ஆக்கிடுவானுகன்னு நினைக்கிறீங்களா?? அட போங்க சார். அந்த அளவுக்கு நம்ம ஆளுங் கட்சித்தலைவர்களும் விட மாட்டானுக. எதிர்கட்சி ... ஓ அப்புடி ஒன்னு இருக்கான்னு தெரியலையே.. சரி அதை விடுங்க. இங்க நீங்க நினைக்கிற மாதிரி புலி ஆதரவு தலைவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் தனித்தனி குழுவா செயல்பட்டு எப்பேர்ப்பட்ட போராட்டமா இருந்தாலும் ஆளுக்கொரு பக்கமா இழுத்து சொதப்பிருவாணுக சார். ஆளுங்கட்சிக்கு கவலையே இல்லை.
தமிழன் நண்டு மாதிரின்னு நம்மளே பெருமையா சொல்லிக்கிட்டு திரியிற கூட்டம் தானே சார் நம்ம... (நீங்களும் என்னோட சேர்ந்து இந்த கூட்டத்துல இருப்பீங்கன்னு நல்லாவே தெரியும்). இன்னொரு விஷயம், இதுவரை கலவரம் ஏற்படுத்துற மாதிரி நம்ம நாட்டுல பல கலகங்களை நம்ம கழகங்கள் உருவாக்கிடுச்சு சார். ஆனா அது எல்லாம் அவனுங்க நலனுக்கு செஞ்சுக்குருவானுகளே ஒழிய மக்களுக்கு பயன்படுற மாதிரி அல்லது நாட்டுக்கு விடிவு காலம் பொறக்குற மாதிரி உருப்படியா செஞ்சுரமாட்டாணுக. நம்ம மகா பொது ஜனங்களும் அவ்வளவு வொர்த் இல்ல சார் (ஆமா ஆமா நீங்களும், நானும் அங்க தான் இருக்கோம்).
ஏன் சார்... வீரமாக மரண மடல் எழுதி, இலங்கைப் பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது உடலை காணிக்கையா கொடுத்தானே சார் ஒருத்தன்... அவனை நம்ம கோழையின்னு சொல்ற கூட்டம் தான் சார் இந்த ஆறரைக் கோடி கூட்டம். அவன் என்ன லவ் பண்ணி அப்பனுக்கும், ஜாதி சண்டைகளுக்கும் பயந்தா சார் செத்தான்...?? சாகிறது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை தான். ஆனா அந்த சாவுக்கு நம்மள காவு கொடுக்குற துணிச்சல் நம்மள்ல எத்தனை பேருக்கு சார் வரும். அவன் என்ன சாகும்போது என்னை காப்பாத்துங்க காப்பத்துங்கன்னா செத்தான்?? அவன் எழுதுன கடிதத்தை படிச்சிட்டு எவ்வளவு பெரிய கலவரம் சார் வெடிச்சிடுச்சு நம்ம நாட்டுல?? ஓ இதுல கழகங்கள் கலந்துக்கிரலையில்ல... பாத்தீங்களா நம்ம ஆளுகளோட ஒற்றுமையும், வீரதீரச் செயல்களையும்...
அட போங்க சார்... நம்ம ஆளுங்க இது மாதிரி நடந்துக்கிறதால, அவ்வளவு பக்குவப்பட்டவங்களா?? இல்ல பயந்தாங்கொள்ளிகலான்னு?? பல பேரு புரியாமத் திரியிராணுக. பாத்தீங்களா வழவழன்னு பேசி நானும் தமிழன்னு சரியா நிரூபிச்சிட்டேன். சரி சரி விஷயத்துக்கு வருவோம்... இந்த அம்மாவுக்கு இங்க சிகிச்சை அளித்தால் புலி ஆதரவு தலைவர்கள் பேட்டி கொடுப்பாங்கன்னு சொன்னீங்க... இன்னமுமா சார் நம்புறீங்க? இலங்கை சுற்றுலாவுக்கு இலவச டிக்கெட் அப்புடின்னு இனமானக் கம்பெனி ஒரு விளம்பரம் குடுத்தாப் போதும் சார். ஒரு விக்கெட் காலி. ஒரு தேர்தல் அறிவிப்பு வரட்டும் இன்னொரு டிக்கெட் காலி. அப்புறம் இந்த வைகோ... அவரு பேரை சுருக்குனதுனாலையோ என்னவோ அவர் அரசியல் வாழ்க்கையும் போச்சு சார்... (வைகோ சார் நீங்க திரும்ப கோபால்சாமின்னு வாங்க சார்).
அப்புறம் பிரபலமா / பிராபலமா யாரு சார் இருக்கா?
அந்த பார்வதி அம்மா நல்லாயிருக்கட்டும் சார். ஒருவேளை அவங்க உயிருக்கு இங்க இழப்பு நேர்ந்தால் கலவரம் வெடிக்கும்னா எதிர் பாக்குறீங்க?? அப்புடியே நடந்தாலும், இங்க உள்ள சில மூத்த தலைவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் கூட, நடக்குமே ஒரு வாரத்துக்கு கூத்து... அதை விட ரொம்ப கம்மியா இருக்கும் சார். அப்புடி அவங்க பன்ற கலகத்துக்கு என்னா பேரு சார் நீங்க வைப்பீங்க?? இன்னொன்னு என்னா சொன்னீங்க...? பாதுகாப்புக்குன்னு ஒரு தொகை செலவழிஞ்சிருக்கும்னா... அட போங்க சார்... சிமரன், சிநேகா, நமிதா (கடை) தொறப்புவிழவுக்கு நம்ம அரசாங்கம் செலவழிக்காமையா இருக்கு?? அப்புறம், நம்ம அமைச்சருங்க, கட்சிக்காரன் வீட்டு விஷேஷங்களுக்கு என் காசையும் பயன்படுத்தி வெய்யில்ல கொடுமையா பல கிலோமீட்டர்களுக்கு பாதுகாப்பு போட்டிருப்பானுகலே அதெயெல்லாம் நம்ம ஏன் சார் கண்டுக்கிறது இல்ல?? அவனுகளை அல்லைக்கைகள் தவிர எவனும் சீண்டுறது இல்ல?? அவனுகளுக்கு என்ன உயிர் பயமா?
ஒரு குத்துமதிப்பா யோசிச்சுப் பாருங்க... எதிர்கட்சிக்காரனுக வெட்டுனதுல செத்த கழகக் கோமான்களை விட, உள்கட்சிக்காரனுக வெட்டுக் குத்து தான் சார் அதிகம். அப்போக்கூட நம்ம அவங்க அராஜகத்தைப் பாத்துட்டு உச்சுக் கொட்டியோ, உச்சாப் போயோ நம்ம எதிர்ப்பைக் காட்டிக்கிட்டு இருக்கோம். ஆமா, பிராபகரன் செத்துட்டாரு, எரிச்சுட்டோம், உரிச்சிட்டோம்னு சொன்னானுகளே , அப்போ என்னா சார் இங்க நடந்துச்சு... என்ன தினசரிகளும், மற்ற பத்திரிக்கைகளும் அதிக அளவுல வித்துச்சு... அதைவிட என்னத்தை சார் நாங்க புடிங்கிட்டோம்?? பிரபாகரனை கண்ணுல காட்டாம எரிச்சதுல இவ்வளவு சந்தோசப்படுறீங்க... ஆமா, ஆமா அவருக்கிட்ட நாங்க பாக்க அப்புடி என்ன பெருசா இருக்கு?? பிரபலமே இல்லாத பல பன்னாடைகளுக்கு நினைவு மண்டபம் இருக்கும் பொது அவருக்கும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே... உங்ககிட்ட எதுவும் பணம் கேட்டானுகன்னா சொல்லுங்க சார்... நான் அவனுகள செருப்பால அடிக்கிறேன்.
சரி உங்களுக்கு பிராபாகரன் பிரச்சனையா இல்ல அவரு ஆத்தா பிரச்சனையா?? இல்ல வெள்ளை வேட்டிக்குள்ள வெட்க, மானத்தை அடை காக்குற எங்க தலைவர்கள் பிரச்சனையா??
சூப்பர் சார்... நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை... நமது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை.. சூப்பர்... சூப்பர். இருங்க இருங்க... ஆமா அப்புடிப் பாத்தா, நம்ம நாட்டுல நிறைய, நாட்டு நலனுக்கு பங்கம் விலைவிக்கிரமாதிரி இருக்குறதுங்களை என்ன சார் பண்ணலாம்? என்னது நான் சொல்லவா? அடப் போங்க சார் நான் உங்க பேரன் வயசுள்ளவன் சார். நீங்களே சொல்லிடுங்க...
கேட்க மறந்துட்டனே, நம்ம நாட்டுல முளையிலே கிள்ளி எரிஞ்ச விஷயம் நிறைய இருக்குல்ல... ஐய்யயோ கொஞ்சம் டயம் குடுங்க டிவி-ல ஒரு முக்கிய டான்சு ப்ரோக்ராமு இருக்குப் பாத்துட்டு வந்துடுறேன்.
மருத்துவ உதவி மறுக்கப்பட்டாலும் அது கொலை செய்வதற்கு சமம்னு என் மன சாட்சி சொல்லுது...? நம்ம ஊர்ல இருக்குற கருப்பு கோட்டு சட்டம் என்ன சார் சொல்லுது?? ஓ அதையும், தலைமைச் செயலகம் தான் சொல்லுமோ... நீதி மன்றம் இப்பவெல்லாம் பல நேரங்கள்ல சும்மா வாயசைக்குது சார்... டப்பிங் வேற யாரோ குடுக்குரானுகோ...
அப்புறம் இந்த தர்மத்துக்குப் பொறந்த சு.சாமி என்னமோ சொன்னுச்சாமே! இந்தியா ஒன்னும் தர்மசாலையில்லை-னு, அவங்க தர்ம ஆஸ்பத்திரிக்கு வரல சார். காசு குடுப்பாங்க... இவனுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு குடுக்குறாங்க பாருங்க... அது தான் தர்மத்துக்குப் பன்றது. நான் அந்த ஆளை பார்த்தா சொல்லிடுறேன். நீங்களும் பார்த்தா சொல்லிடுறீங்களா??
சரி சார். இந்த ஜென்மம் தான் எளவெடுத்த ஜென்மமாப் போச்சு... அடுத்த ஜென்மத்துலையாவாது இந்த கழகக் கம்பெனிகள்ல புள்ளையாப் பொறக்கனும்னு எனக்காக வேண்டிக்கங்க சார்.
குறிப்பு : அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.
தம் பெயரும் / தகப்பன் பெயரும் இல்லாத அனானிகளுக்கு ஏற்கனவே இங்கு வாய்ப்பு இல்ல. விரும்புபவர்கள் ஏதோ ஒரு பெயரை தாங்களுக்கு வைத்துக் கொண்டு... தகப்பன் பெயரில் என்னைப் போட்டுக்கொள்ளலாம். அட ஆமாங்க....
அன்புடன்,
ரோஸ்விக்.