Friday, January 29, 2010

பேர் வைக்கும் பேறுபெற்றோர் - விகடன் பிரசுரம்

வழக்கம்போல சில பல வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருக்கும்போது (படித்துக் கொண்டிருக்கும்போதுன்னு சொல்லக்கூடாதோ??), "ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!"- னு ஒரு பதிவுத் தலைப்பை பார்த்தேன். ஆஹா, யாரோ ஒருத்தரு இன்னும் பேரு இல்லாம... வலைத்தளங்களும் எழுத வந்து ரொம்ப சிரமப்படுறாரேனு, சுட்டியை அமுக்கி உதவலாமுனு த(க)ளத்துல இறங்குனேன். சுட்டியைப் பார்த்த உடனே தான் தெரிஞ்சது நம்ம ரவிபிரகாஷ் அண்ணனோட "விகடன் டைரி"-னு.

ஆத்தாடி, அண்ணாத்தையே பேரு வைக்கிறதுல கில்லாடின்னு தெரிஞ்சுச்சு. இவரு எதோ உட்டாலக்கடி பதிவு போட்டிருப்பாரோனு முழுசா படிச்சுப் பார்த்தா... அந்தப் பதிவுல அருமையான ஒரு சந்தர்ப்பத்தை வாசக பெருமக்களுக்குக் கொடுத்திருந்தாரு.அதாவது பெரிய மனுசங்க சொன்ன தத்துவ மொழிகளை, நம்ம அண்ணே எளிமையா புரியிறமாதிரி கொஞ்சம் கொஞ்சம் மாத்தி அவள் விகடன்-ல "பத்துவம்"-னும், விகடன்ல "டிக்... டிக்... டிக்..."-னும் தொகுத்திருந்தாரு. பல வாசகர்கள் விரும்பிக்கேட்டதால அத ஒரு தனி புத்தகமா போட்டுரலாம்னு முடிவுபண்ணி அதுக்கான வேலையில விகடன் பிரசுரம் இறங்கிடுச்சு.

தத்துவமெல்லாம் புத்தவ(க)மா வந்தாலும், தலைப்புக்கு தலைய சொரியவேண்டியதாப் போச்சாம். (அண்ணன் சொன்னாரு நானும் நம்பிட்டேன்). நம்ம வாசகப் பெருமக்களுக்கு இந்த அறிய (அதாங்க தலைய சொரிய) வாய்ப்பைக் கொடுத்து நம்மகிட்டையே அன்பா வாயைப் புடுங்கிட்டாரு. பத்தோட ஒன்னு பதினொன்னு அத்தோட ஒன்னு நான் ஒன்னுனு நானும் போட்டியில குதிச்சுப்புட்டேன்.

அரசியல்வாதிங்க ஊருக்குள்ள அதிசயமா புகுந்தா... பெத்த புள்ளை மட்டுமில்லாம செத்த கிழவனையும் தூக்கிகிட்டு ஓடுவாய்ங்க. எதுக்கு? பேரு வைக்கவா?? அட போங்கப்பு... அங்கயும் கொஞ்சம் வசூலு தான். அதுமாதிரி அண்ணேன் கேட்டுருவாரோனு கடகடத்த மனசோட கடைசி வரை படிச்சா... அட அவுக நமக்கு அந்த பொஸ்தகத்தை இலவசமா, அன்பளிப்பா தாரேன்னு சொன்னாக. விடுவமா நாங்க...??

பேருன்னு சொன்னா நூறா எழுதிக்கொடுக்குறது? நறுக்குன்னு நாலு... நானும் எழுதி வச்சேன். பொசுக்குன்னு அதுல மூன போட்டிக்குன்னு பொத்தி வச்ச்சாக.

1) அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு
2) தங்க மொழியில் தங்கிய மொழிகள்
3) விழிதிறக்கும் (பொன்)மொழிகள்
4) பொன்மொழிகள் என்மொழியில்


நம்ம பதிவர்கள் பல பேரும் பலத்த போட்டியில் நிற்க... தோழி கிருபாநந்தினி, அண்ணன் பின்னோக்கி மற்றும் நான் (ரோஸ்விக்) எழுதிய தலைப்புகளை, கடைசியா பரிந்துரை பண்ணியிருந்தாங்க. கிருபாநந்தினி (அதாங்க படித்துறை பதிவர்) சொன்ன புதுமொழி நானூறு (நான் பொன்மொழி நானூறு-னு சொல்லியிருந்தேன்) இறுதியாக முடிவு செய்யப்பட்டது. அண்ணன் பின்னோக்கி - "எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்"-னு தலைப்பிட்டிருந்தார். அது "எனர்ஜி டானிக்" என சிறிது திரித்து எடுத்துக்கொள்ளப் பட்டது. (எனர்ஜி டானிக்-னு நீங்க வேற எதையும் சொல்லலையில அண்ணே! )

ஹைய்யா...பேர் வெச்சாச்சு!-னு அண்ணே ரவிபிரகாஷும் முடிவை அறிவிச்சிட்டாரு. இப்ப அந்த புத்தகத்தோட பேரு தோழி கிருபாநந்தினி -யின் பரிந்துரையை சிறிது திருத்தி "புதுமொழி 500"-னு வச்சிருக்காங்க... புத்தகம் வெளி வந்த உடனே எல்லாரும் வாங்கி படிங்க மக்கா... :-)

ரவிபிரகாஷ் அண்ணே வாய்ப்பளித்து, புத்தகம் அனுப்பும் உங்களுக்கும், விகடன் நிறுவனத்தாருக்கும் நன்றிகள்.
23 comments:

பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

பெயர் சூட்டி புத்தகத்தை
பரிசாக பெற்றிட்டான்
பெயர் வைக்கும் சிங்கத்திடம்
பாசம் நிறை தம்பியவன்...

அப்பு, நாம தூக்க கலக்கத்துல இருக்கோம்ல, இப்படித்தான் சந்தோஷத்துல புலம்புவோம்...

வாழ்த்துக்கள் ரோஸ்விக்...

பிரபாகர்.

malarvizhi said...

பதிவு நன்றாக உள்ளது.

புலவன் புலிகேசி said...

ம் படிச்சிருவோம்

ஸ்ரீராம். said...

உங்கள் தெரிவில் நாலாவது பொருத்தமாகப் பட்டது. மூன்றாவதும் ஓகே. ஆனால் நான் சொல்லி என்ன பயன்..அவிங்கதான் பேர் வச்சி போட்டாங்களே...

தமிழ் உதயம் said...

நானும் கலந்துக்க நெனைச்சு மறந்து போனேன். வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

congrats

ரிஷபன் said...

வாழ்த்துகள்

வானம்பாடிகள் said...

vaazhthugal roswick

ரோஸ்விக் said...

பிரபாகர் - அஹா இதுக்கு ஒரு கவிதையா??
ரொம்ப டேன்க்சு அண்ணா . :-)

ரோஸ்விக் said...

malarvizhi - தங்களின் பாராட்டுக்கு நன்றி அக்கா. :-)

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - நன்றி தல. :-)

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நம்ம வைச்ச பேரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் மகிழ்ச்சி. முடிவு அவங்க தான் பண்ணனும்.
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி தல.

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - அடடா வடை போச்சே! நீங்களும் வந்தா அப்புறம் போட்டி கடுமையா ஆகியிருக்கும் :-)))

ரோஸ்விக் said...

அண்ணாமலையான் - Thanks Friend. :-)

ரோஸ்விக் said...

ரிஷபன் - நன்றி அன்புத் தம்பி. :-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - வாங்க பாலா அண்ணே. ரொம்ப நாளாச்சு..:-)
ரொம்ப நன்றிணே.

பிரியமுடன்...வசந்த் said...

ada வாழ்த்துகள் பங்கு மூவருக்குமே,,,,

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

பத்மநாபன் said...

சிங்கை நண்பருக்கு வணக்கம் ,
வலையுலகத்துக்கு புதியவன் . .. நானும் உங்களை போல் இந்த ''பேர் வைக்கும் '' போட்டியின்
சக பங்காளன் .. உங்களுடைய அதிர்வெண்ணை ஒட்டியே .. நானும் ''மொழி 400 '' என்று வைத்திருந்தேன் குறிப்பெல்லாம் ஸேம் , ஸேம், ஜஸ்ட் நழுவி விட்டது. ஒரு விந்தை கவனித்தீர்களா... எல்லா பெயரிலும்
சின்ன சின்ன வித்தியாசங்கள் ( எடிட்டர் வேலையை காட்டி விட்டாரா என்று தெரியவில்லை ) தெரிந்தவரை ஆச்சர்யம் தான். போட்டியை வைத்து அழகாக பதிவு போட்டுவிட்டீர்கள்...அடுத்த போட்டியில் சந்திப்போம்
அப்புறம் பரிசு பெற்ற படித்துறை பதிவாளர் .. தங்கச்சி கிருபாநந்தினி .. அண்ணன் அல்ல .. ஆனா பதிவு போடறதிலே அக்கா கிருபாநந்தினி...

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் - நன்றி பங்கு. :-)

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - நன்றி நண்பரே. :-)

ரோஸ்விக் said...

பத்மநாபன் - நன்றி பத்மநாபன். ஆமாம் நானும் பார்த்தேன்... சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே. அடுத்து போட்டி நடந்தால் தெரியப்படுத்தவும். :-) முடிந்தால் பங்குபெறுகிறேன்.

கிருபாநந்தினி - தவறை மாற்றிவிட்டேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள். :-)