Monday, January 4, 2010

தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?-2

இதன் பகுதி-1 மிகுந்த ஆதரவளித்த அன்பர்களுக்கு மிக்க நன்றி.
படிப்பு என்பதும் செட்டில் ஆகவேண்டும் என்பதும் ஓரிரு வருடங்களில் நிறைந்துவிடுவது அல்ல. அது ஆயுள் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கு. அதை திருமணத்திற்கு பிறகும் தொடரலாம். :-)


பொதுவாகவே இந்திய முழுவதும் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளனர். இருப்பினும் இப்போது நாம் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லாடும் அளவிற்கு அல்ல. முன்பு சமுதாய அமைப்புகளில் குடும்பங்கள் தன் ஜாதி சொந்த பந்தங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளில் இருந்தனர். இன்று தொலை தொடர்பு சாதனங்கள் பெருகி இருந்தாலும், சொந்த பந்த தொடர்புகள் குறைந்து தான் உள்ளனர். பணக்காரனாக வேண்டும் என்ற பந்தயத்தில், பந்தங்களை இழந்துகொண்டிருக்கிறோம். மனை மட்டும் பெரிதாகி மனங்கள் சிறுத்து போகி விட்டன.


இந்த பந்தங்களின் இடைவெளியை குறைக்க பல மேட்ரிமோனியல் இணையதளங்கள் உதவினாலும்.... இதன் பயன்பாடு அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரவில்லை. இதன் சில பாதகங்களால், பலரும் பயன்படுத்தவும் தயங்குகின்றனர். தரகர்களின் வாய் ஜாலங்களுக்கு பயந்தும் சிலர் திருமண நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.


ஜாதகம் சரியில்லை என்றோ, பொருத்தம் அமையவில்லை என்றோ, தோஷம் இருக்கிறது என்றோ கூறி பலரை முதிர் கன்னிகளாக ஆக்கிவைத்திருக்கும் நம் மத அமைப்புகளை என்னவென்று கூறுவது? இன்றைய இளைஞர்களில் பலருக்கும் இந்த ஜாதக அமைப்புகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் மனம் புண்படக்கூடாது என்றும்... சமுதாயத்தின்(சம்பந்திகளின்) வற்புறுத்தலுக்காகவும் தங்கள் திருமண நாளை தள்ளிபோட்டுகொண்டு புளுங்குகிரார்கள். இது அவசியமா என்று பலரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த வரிகளை நான் யாரையும் புண்படுத்த எழுதவில்லை. ஆணை பெண்ணுக்கும், பெண்ணை ஆணுக்கும் பிடித்து, குடுபத்தினர்கள் அனைவரும் திருப்தியாக இருந்தாலும், இந்த ஜாதகப் பொருத்தம் என்ற பொருத்தமில்லாத காரணத்தை கூறி அவர்களை முதிர்கன்னிகளாக/கணவான்களாக வாட்டிவதைப்பது சரியா?


பலரும் தங்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சரியாக அறியாமல் வரண் தேடுவதும், தாங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் குடும்ப அமைப்பு, அறிவு, படிப்பு, அழகு போன்றவற்றை முறையாக வரிசைப்படுத்தத்(Priorities) தெரியாமல் அனைத்திலும் முதன்மையான ஒரு (Ideal) துணையை தேடுவதும் சாத்தியத்தை, சாதனை அளவுக்கு உயர்த்திவிடுகிறது.
எதிர்ப்புகளில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளிலும் வளைந்துகொடுக்கும்(Flexibility) தன்மையுடன் இருந்தால், சூழ்நிலைகளை கையாளுவது மிக எளிதாக இருக்கும். முடிந்தவரை எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். திரைநட்சத்திர அழகிகளை திருமண பந்தத்தில் எதிர்பார்க்காதீர்கள். குறை சொல்ல முடியாத (முகத்) தோற்றம் இருந்தால் போதும் என தேடுங்கள்.


இப்ப என்ன அவசரம்... மெதுவா பண்ணிக்கலாம் என்று அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கவோ, உங்கள் தாயின் நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ அலட்சியம் செய்வீர்களா?? இதுவும் அது போன்றது தான் என எண்ணுவதில் என்ன தவறு இருக்கக்கூடும்? நான் இங்கு திருமண பந்தத்தில் உடன்படாதவர்களுக்கு சொல்லவில்லை. திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமே இது.


இன்னும் பலர் காதல் தோல்வி எனும் காரணம் சொல்லக்கூடும். அது தான் முடிவு தெரிந்து விட்டதே. இன்னும் என்ன தயக்கம்?? காதலில் தோற்றால் வாழ்வில் ஜெயிக்கக் கூடாதா?? காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. அது உங்களை விட்டு நீங்கியும் போகக்கூடும்... உங்கள் உள்ளேயே நீர்த்தும் போகக்கூடும். தோற்ற காதலுக்குப் பிறகு வரும் திருமண உறவை, உங்கள் காதலை வெளிப்படுத்தி வாழ்க்கையில் ஜெயிக்க கிடைத்த வாய்ப்பாக ஏன் எண்ணக்கூடாது?


இங்கு நம்மில் பலர் வாழ்கை துணையை தேடுவதை விடுத்து... சில நிறுவனங்கள் தேடுவது போல் (searching good resource with high salary) செய்து கொண்டிருக்கிறோம்.... இதுவும் திருமணம் தள்ளிப்போவதில் முக்கிய காரணம். இன்னும் சில வீடுகளில் வரன் பற்றிய போதிய விபரங்களை அறிந்துகொள்ளும் முயற்சியாக, நேர்முகத் தேர்வு போல் நடத்திக்கொள்கிறார்கள். சில அறிவு ஜீவி அண்ணன்கள் வரனின் பணி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்களையும் கேட்டுத் தொலைக்கிறார்கள்.வாழ்கையை திட்டமிடுங்கள் உங்கள் திருமணத்தோடும் சேர்த்தே.... வாழத்தானே வாழ்கை! வீழ்வதற்கு இல்லை!!
14 comments:

பிரியமுடன்...வசந்த் said...

மிக அழகாக அருமையா சொல்லியிருக்கீங்க ரோஸ்விக்...!

யாசவி said...

நல்ல அலசல்.

எல்லோரும் இதை உணரவேண்டும்

:)

பூங்குன்றன்.வே said...

நல்ல அலசலும்,அசத்தலும் !!!

Sivaji Sankar said...

ம்ம்ம்ம் சரிதான் தலைவரே... எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால்
ஏமாற்றமும் குறைவாக இருக்கும்.. ::))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

// உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கவோ, உங்கள் தாயின் நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ அலட்சியம் செய்வீர்களா?? //

கொடுமையான செய்தி., இருக்கிறார்கள் இரண்டாவதிற்கு மிக அதிகமாக..,

malar said...

//திரைநட்சத்திர அழகிகளை திருமண பந்தத்தில் எதிர்பார்க்காதீர்கள்.,,, இதை தான் எல்லோரும் செய்கிறார்கள்.

ரொம்ப நல்ல பதிவு .

க.பாலாசி said...

//பெற்றோர்கள் மனம் புண்படக்கூடாது என்றும்... சமுதாயத்தின்(சம்பந்திகளின்) வற்புறுத்தலுக்காகவும் தங்கள் திருமண நாளை தள்ளிபோட்டுகொண்டு புளுங்குகிரார்கள்.//

உண்மைதானுங்க.

நீங்கள் சொன்ன கருத்துக்களும், அதைசொல்லிய விதமும் மிக நன்று.

♠புதுவை சிவா♠ said...

நல்ல பதிவு ரோஸ்விக்

ஸ்ரீராம். said...

ஏதோ காரணங்களால் திருமணம் செய்ய முடியாமல் போன என் நண்பன் இன்னமும்தான் யோசித்துக் கொண்டிருக்கிறான்...முயற்சித்துக் கொண்டிருக்கிறான்..

tamiluthayam said...

சிலவற்றை வற்புறுத்தலாம். திருமணத்தை மட்டும் வற்புறுத்த முடியாது. எடுத்து சொல்லலாம். "சரியான" வயதில் திருமணம் செய்யா விடில் பிறகு எல்லாமே "தப்பாக" போகும்.

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் - அப்பா... இந்த மாப்புள உஷாராத் தான் இருக்காரு. சட்டு புட்டுன்னு முடிங்க தல... :-)


யாசவி - எல்லோரும் இதை உணரனும்னு எழுதியாச்சு... கொஞ்சப் பேராவது உணர்ந்திருப்பாங்கன்னு நம்புறேன். மிக்க நன்றி. :-)


பூங்குன்றன்.வே - மிக்க நன்றி தல. :-)


Sivaji Sankar - மிக்க நன்றி தல. ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க போல. நல்லது நடக்கட்டும்... :-)

ரோஸ்விக் said...

SUREஷ் (பழனியிலிருந்து) - அச்சச்சோ என்ன நண்பா சொல்றீங்க...

malar -
மிக நன்றி. பலரும் கனவுலகில பார்த்த தேவதைகளே தேடிகிட்டே.... இருக்காங்க... :-)))


க.பாலாசி - ரொம்ப நன்றி தல. ஏதோ நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்கு சொல்லுவோம். :-)


♠புதுவை சிவா♠ - நன்றிங்க சிவா. எல்லாருமே உங்க தளத்துல இருக்குற மாதிரி பொண்ணு வேணும்னு கேக்குறாங்க... :-))

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - ஆமா, அந்த குறிப்பிட்ட வயசுல கல்யாணம் பண்ணாம விட்டா... அப்பறம் ரொம்ப சிரமப்பட்டுத் தேடவேண்டியிருக்கும்... மிக்க நன்றி தல.


tamiluthayam - நீங்க சொல்றது சரிதான் அண்ணே. அந்த கல்யாணம் வேண்டாங்கிரதுலையும் சில பேறு உறுதியா இருக்க மாட்டாங்க... இப்ப என்ன அவசரம்னு தான் சொல்லுவாங்க. அதான் பிரச்சனையே... :-)

எல்லாம் தப்பா போறதுக்கு முன்னாடி பண்ண வேண்டிய காரியங்களைப் பண்ணிடுறது நல்லதுதானே...

ரிஷபன் said...

தெளிவான தேவையான சிந்தனை.. மனம் ஒத்துப் போனால் (திரு)மணம் ஒத்துப் போகும்..