Monday, January 11, 2010

தெரிந்துகொள்வோம் - 6

*&* நேப்பாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு.

*&* தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.


*&* மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்".

*&* முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.

*&* முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை".


*&* பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.

*&* விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு.

*&* சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

*&* 13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.

*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

*&* நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.

*&* அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது.


*&* "அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.

*&* மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.

*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.

*&* முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள்.

*&* பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.

*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங்".

*&* "சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.

*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.

*&* பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து".

*&* நமது நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது.

*&* நமது இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.24 comments:

வானம்பாடிகள் said...

அருமையான தகவல்கள். நன்றி ரோஸ்விக்.

Chitra said...

முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை". ........... I think, you meant to say, the male sea horses take care of the eggs.
It is an interesting collection of facts. Good.

ஜெகதீசன் said...

ஆஹா!! ஓஹோ!!!! சூப்பர்!!!!!!

ஸ்ரீராம். said...

குரங்கிற்கு நிறங்களை அறியும் ஆற்றல் உண்டு என்பது ஆச்சர்யம்.

பிச்சைக்காரர்களுக்கு பென்ஷனா...அட அரசியலே...

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நன்றி பாலா அண்ணே!

ரோஸ்விக் said...

Chitra - நன்றி சித்ரா! நீங்க சொல்றது சரிதான்.

ரோஸ்விக் said...

ஜெகதீசன் - அப்பாடா.... அண்ணே ஸ்மைலி போடுறத விட்டுட்டு... பெரிய பெரிய வார்த்தைகளால பாராட்டிருக்காரு... :-) ரொம்ப நன்றி.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - ரொம்ப நன்றி நண்பரே.
வருங்காலத்துல நம்ம நாட்டுல... ஒட்டு வேணுங்கிற ஒரே காரணத்துக்காக வப்பாட்டிகளுக்கெல்லாம் பென்சன் கொடுத்தாலும் கொடுப்பாங்க. எதுவேன்னாலும் நடக்கலாம். :-)

பலா பட்டறை said...

பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை//

இது ஒண்ணுதாங்க உறுத்துது...
::))

பிரபாகர் said...

தம்பி தகவல்களை தந்து அசத்துறீங்க! அதிகமான விஷயங்க புதுசா இருக்கு. தகவல்களுக்கு நன்றி.

பிரபாகர்.

ஜெஸ்வந்தி said...

Interesting facts.

goma said...

அறிவுப்பெட்டகம் ஒன்றைத் திறந்தேன்...அத்தனையும் நான் இதுவரை அறியாத செய்தித் துணுக்குகள்
நன்றி.

கிரி said...

//13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா//

பல நாட்டு எல்லைகள் கபிளீகரம் செய்தத ஒரே நாடும் இவர்களாகத்தான் இருப்பார்கள்!

ரோஸ்விக் said...

பலா பட்டறை - நன்றி அண்ணே. ஒருவேளை அவங்க ராணுவ வீரர்களையும், அரசு ஊழியர்களையும் அப்படி சொல்லி இருப்பாங்களோ??

ரோஸ்விக் said...

பிரபாகர் - நன்றி அண்ணே. எல்லோரும் தெரிஞ்சுகிரட்டும்னு ஒரு நல்ல எண்ணம் தான்... :-)

ரோஸ்விக் said...

ஜெஸ்வந்தி - ரொம்ப நன்றிங்க. :-)

ரோஸ்விக் said...

goma - ரொம்ப நன்றி goma. தொடர்ந்து படியுங்க. நம்ம தளத்துல இது அடிக்கடி பதிவிடப்படும். :-)

ரோஸ்விக் said...

கிரி - எல்லையில்லா தேசமாக உருவாகுவோம்னு எதுவும் சபதம் எடுத்துருக்காங்களோ என்னமோ... :-)

நிஜமா நல்லவன் said...

thamizmanam

இடுகைத்தலைப்பு:
தெரிந்துகொள்வோம் - 6

உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

சன்னலை மூடு

நிஜமா நல்லவன் said...

/Your comment has been saved and will be visible after blog owner approval./


அண்ணே உங்க வீரத்துக்கு இதெல்லாம் இழுக்கு:)

நிஜமா நல்லவன் said...

/ கிரி said...

//13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா//

பல நாட்டு எல்லைகள் கபிளீகரம் செய்தத ஒரே நாடும் இவர்களாகத்தான் இருப்பார்கள்!/


ஹா...ஹா...ஹா...

நிஜமா நல்லவன் said...

/மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன./

அண்ணே...இதில எந்த வகை மூங்கிலில் புல்லாங்குழல் செய்யுறாங்க????

ரோஸ்விக் said...

நிஜமா நல்லவன் - ஆஹா... பாரதி அண்ணே வந்துட்டாருயா... :-))

அண்ணே! நானே இந்த அப்ரூவல் செட்டிங்கை மாத்திடனும்னு இருந்தேன். நீங்க சொன்ன உடனே வீரம் அதிகமாகி எடுத்துவிட்டு இந்த பதில் எழுதுகிறேன். :-)

புல்லாமூங்கில்-ங்கிற வகையில இருந்துண்ணே.... (இந்த பதிலா உண்மையின்னு நம்பீராதீங்க) நான் அப்பப்ப பொய்யும் சொல்லுவேன். ;-)

பட்டாபட்டி.. said...

சூப்பர்!!!!!!