Saturday, January 16, 2010

உள்குத்து கவிதைகள் - 5

ஆர்ப்பாட்டம்
கொள்கை(ளை) கூட்டத் தலைவர்
கொடநாட்டில் கொட்டம்
அடுத்தவேளை மட்டும்
அன்னதானத்திற்கு உத்திரவாதமளித்த
அமைச்சர் பெருமக்களுடன்
ஆயிரக் கணக்கானோர்
ஆங்காங்கே ஆர்ப்பாட்டம்!



முன்பதிவு
விருந்தினர் வருவதையறிந்து
அவருக்கு முன் விரைந்து
வெளிமுற்றத்திலமர்ந்து
மிஞ்சும் சோற்றுக்கு - கரைந்து
முன்பதிவு செய்கிறது...
காகம்!



கடை(ட்)சித் தொண்டர்
செயலற்ற தலைவர்
கட்சிக்கும், நாட்டுக்கும்
செய்யவில்லை ஒன்றும்...
ஏதோ மாநாடாம்
அழைக்கிறார்...
அலைகடலென திரண்டு வாரீர்
கழகச் "செயல்" வீரர்களே!



இளசுகள்
அங்கே தீ விபத்தாம்
ஓடி அணைக்கத் தோன்றவில்லை!
இங்கே மழைச் சாரல்
ஓரமாய் அணைத்துக்கொண்டே
இருக்கத் தோன்றுகிறது
காதலியின் அருகாமை...




7 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா என்னது இது , அனைச்சத்துக்கு அப்புறம் தான தீவிபத்து வந்தது. அதை எப்படி அனைப்பது. நல்ல கவிதைகள்.

அப்புறம் என்னது கொடனாடு கொண்டாட்டம் என்று. கொண்டாட்டம் ஆளுங்கட்சிக்குத்தான். எதிர்க்கட்சிக்கு இல்லை.
நன்றி ரோஸ்விக்.

Chitra said...

உள்குத்து கவிதைகள் - கும்மாங்குத்து டோய்

ஸ்ரீராம். said...

எல்லாமே கலக்கல்

புலவன் புலிகேசி said...

உள்குத்துன்னு சொல்லிட்டு வெளிய குத்திருக்கிங்க..சூப்பர் தல.

அண்ணாமலையான் said...

உள் குத்து நல்ல வெளி குத்தாவே இருக்குது.. வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

ஐந்தும் அருமை ரோஸ்விக்

ரோஸ்விக் said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் அன்பு நெஞ்சங்களே.