Sunday, January 31, 2010

தெரிந்துகொள்வோம் - 7

*&* சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

*&* நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

*&* ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

*&* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

*&* ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

*&* வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

*&* கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

*&* கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

*&* எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

*&* "O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

*&* பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

*&* 'பிட்யூட்டரி' கிளாண்ட்ஸ்க்குத்தான் 'மாஸ்டர் கிளாண்ட்ஸ்' என்று பெயர்.

*&* அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

*&* நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

*&* VOTE - Voice Of Taxpayers Everywhere.

*&* ஆப்பிரிக்காவில் "ஜெர்பா" என்னும் ஒருவகை எலிகள் தலையைத் திருப்பாமலே பின்னால் உள்ள பொருளைப் பார்க்கும். இது 10 அடி தூரம் தாவும் திறன் கொண்டது.

*&* ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.

*&* பறக்கும்போது ஒரு வினாடிக்கு 120 முறை சிறகுகளை அசைக்கும் ஈயைப் போன்ற ஒரு பூச்சியின் பெயர் "கிகாடாஸ்".

*&* ஓர் ஆப்பிள் துண்டிலுள்ள சக்தி சராசரியாக ஓர் ஆண் 35 நிமிடம் ஓடவும் அல்லது ஒரு பெண் 50 நிமிடம் ஓடவும் தேவையான சக்திக்கு நிகரானது.

*&* அசாமில் உள்ள காண்டாமிருகம் சரணாலயம் - "காசிரங்கா".

*&* இங்கிலாந்தில் உள்ள 'மான்கல்' என்ற பூனை இனத்திற்கு வாலே கிடையாது.

*&* மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

*&* அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்து பிறகு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் "வில்லியம் டாஃபட்".

*&* மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.

*&* உலகிலேயே மிகப்பெரிய பவளப்படிவுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள "தி கிரேட் பேரியர் ரீஃப்" ஆகும்.




42 comments:

Paleo God said...

அருமை ரோஸ்விக்..:))

க.பாலாசி said...

//*&* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.//

ஓ....

//*&* எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.//

//*&* மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.//

பயனுள்ள இடுகை... நிறைய புதிய விசயங்களை தெரிந்துகொண்டேன்... தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்...

vasu balaji said...

நல்லதகவல்.
க.பாலாசி said...
/பயனுள்ள இடுகை... நிறைய புதிய விசயங்களை தெரிந்துகொண்டேன்... தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.../

இவன் அழிம்பு தாங்கலயே.

ஸ்ரீராம். said...

தெரிந்து கொண்டோம்..

பிரபாகர் said...

எங்க தம்பி தகவல்கள புடிக்கிறீங்க? நிறையா புதுசா இருக்கு. அருமை.

பிரபாகர்.

பாலா said...

வளர்க.... வாழ்த்துக்கள்....

sathishsangkavi.blogspot.com said...

நல்லதகவல் தெரிந்து கொண்டோம்..

மாதேவி said...

சில தெரிந்தவை சில தெரியாதவை. தெரிந்துகொண்டேன்.

பத்மநாபன் said...

தகவல்கள் ஒவ்வொன்றும் அருமை .... எனக்கு மிக பிடித்த நிலா ...... வானம் பற்றிய தகவல்கள் இருந்தமை
குறித்து மிக மகிழ்ச்சி . ( என் வலைபூக்களையும் எட்டி பார்க்கலாம் ..கொஞ்சம் தத்தக்கா புத்தக்காதான் ,, இருந்தாலும் நடைவண்டியை தள்ளிவிட்டிட்டு போகலாம் )

அண்ணாமலையான் said...

புதிய தகவல்கள்.....

தமிழ் உதயம் said...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ரோஸ்விக்.

ஈரோடு கதிர் said...

நயம்மிகு தகவல்கள்

//O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்//

நானு...நானு

Chitra said...

தகவல்கள் அருமையாக இருந்தன.. இதுல, exams வச்சிர மாட்டீங்க தானே?

ஹேமா said...

அததனை விஷயங்களும் எனக்குப் புதிது.அறிந்துகொண்டேன்.
நன்றி ரோஸ்விக்.

புலவன் புலிகேசி said...

சூப்பர் தகவல்கள் ரோஸ்விக்

ரோஸ்விக் said...

ஷங்கர் - மிக்க நன்றி சங்கர் அண்ணா. :-))

ரோஸ்விக் said...

க.பாலாசி -
//*&* வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.//

ஓ....//


" ஓ" - என்ன பரட்டைத்தலை குரங்கோட இனிசியலா?? :-))

சும்மா தமாசு நண்பா. ரொம்ப நன்றி.

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - நன்றி பாலா அண்ணே. :-)

பாலாசி அவ்வளவு அழிம்பு பண்ட்ராப்புலையா ?? :-))) லூசுல விடுங்க. ஒரு நாளு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிக்கிருவோம்.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம் - நன்றி தல. "எங்கள்"-ல நிறைய படிக்க வேண்டிய பாக்கி இருக்குது. வந்துடுறேன். :-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - உஷ்ஷ்ஷ்.... நன்றி அண்ணே! :-)

ரோஸ்விக் said...

negamam - நன்றி பாலா. :-)

ரோஸ்விக் said...

Sangkavi - நன்றி சங்கர். :-)

ரோஸ்விக் said...

மாதேவி - நன்றி மாதவி. தெரியாததை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. :-)

ரோஸ்விக் said...

பத்மநாபன் - வருகைக்கு நன்றி.

தங்களின் பதிவைப் பார்த்தேன். வான்வெளி பற்றி நீங்கள் எழுதுவதிலிருந்தே தெரிகிறது... உங்களின் வானம், நிலா பற்றிய ரசனை. :-)

தொடர்ந்து எழுதுங்கள். நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்.

ரோஸ்விக் said...

அண்ணாமலையான் - மிக்க நன்றி அண்ணா!(மலை). :-))

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - மிக்க நன்றி அண்ணா. :-)

ரோஸ்விக் said...

ஈரோடு கதிர் - நன்றி கதிர். டொனேசன்லே இது தான் சிறந்தது. :-)

ரோஸ்விக் said...

Chitra - நன்றி சித்ரா. நான் டீச்சர் இல்ல :-))

So No Exam.

ரோஸ்விக் said...

ஹேமா - புதிய விஷயங்களை அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஹேமா. :-)

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - நன்றி புலவா... தங்களின் கற்பு குறித்த பதிவை படித்தேன். சில வேலைப்பளுவால் பின்னூட்டவில்லை. :-)

எம்.எம்.அப்துல்லா said...

என் அறிவு எந்த லட்சணத்துல இருக்குன்னு தெருஞ்சுக்கிட்டேன்

:))

சிவாஜி சங்கர் said...

ஓஓஓஓ அப்படியா??

Thenammai Lakshmanan said...

thanks for sharing Rosewick

டவுசர் பாண்டி said...

தல லேட்டா வந்ததுக்கு மன்சிடு பா !! ரொம்ப பேஜாரா பூடுது நம்ப நெலம அதாம்பா !!! இன்னா மேரி தகவலு எல்லாம் குத்து தூள் கெளப்பரீங்கோ !! சூப்பர் தல !!

ஜெட்லி... said...

நிறைய புது விசயங்கள்....நன்றி...
என் பொது அறிவு இன்னும் வளரும்னு நினைக்கிறேன்..

ரோஸ்விக் said...

எம்.எம்.அப்துல்லா - அண்ணே உங்களுக்கு இருக்குற அன்பு இதை சொல்லியிருக்கிற எழுத்துக்களுக்கு இருக்குமாண்ணே??

அதெல்லாம் அப்படித்தான்... லூஸ்ல விடுங்க. :-)))

ரோஸ்விக் said...

Sivaji Sankar - தம்பி நல்லா போடுரீயளே ஓ.... :-))

நன்றி ராசா...

ரோஸ்விக் said...

thenammailakshmanan - ரொம்ப நன்றிக்கா...
ஏதோ சொத்து பத்தைத்தான் குடுக்கமுடியல... இதையாவது share பண்ணிக்கலாம்னு தான்... :-)

ரோஸ்விக் said...

டவுசர் பாண்டி - இன்னா டவுசரு நீ... இது இன்னா கட்சி ஆபீசா... டெய்லி வந்து கோஷம் போட்டுட்டு போக... நீ இஷ்டப்பட்ட நேரம் வந்து படிச்சினு போ... இன்னா ஆயிடப்போவது... எல்லாம் இங்கதானே இருக்கப்போவுது... வாழ்க்கைப் பாரு நைய்னா... :-))

ரோஸ்விக் said...

ஜெட்லி - கற்றது கை மண் அளவு...
அதுல இது இன்னொரு பிடி மண் அவ்வளவுதான்... படிச்சுகிட்டே இருப்போம் தல...

ILLUMINATI said...

how was my post?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகவே..
கருத்துக்கள் சூப்பர்..
நல்லாயிருக்கு
பாக உந்தண்டி ,
சென்னாங்க இத்தாதி...
அச்சா போலதா ஹய்..

ஆகவே எனக்கு உடனடியாக $ 4000 மட்டும் கடனாக
கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்