Wednesday, January 20, 2010

அ(எ)ருமையாய் பிள்ளை வளர்க்கும் நாய்கள்

தலைப்பில் கடுங்கோபம் தெரிந்தால் என்னை மன்னிக்கவும்.

இப்பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் சம்பவம் உண்மை. எனவே இதில் வரும் வார்த்தைகளும், நிகழ்வுகளும் அப்படியே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை. அதை நயமாக செய்து வருபவர்கள் பல நாயகர்/நாயகிகளை உருவாக்கி வருகின்றனர். பிள்ளை வளர்ப்பு பற்றி பல புத்தகங்கள் தமிழில் உண்டு. அதில் ஒன்றன் தலைப்பே மிக அற்புதமாக இருக்கும். அதன் தலைப்பு என்ன தெரியுமா? - "குழந்தைகள் வெள்ளைக் காகிதம் போன்றவர்கள். அவர்கள் கசங்கும் முன்பே எழுதிவிடுங்கள்".

 
எனது முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டது போல, குழந்தைகளுக்குப் பாசம் காட்டுங்கள். செல்லம் காட்டாதீர்கள். தொட்டதெற்கெல்லாம் தண்டித்து வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கண்டித்து வளர்ப்பது மிக மிக அவசியம். உங்கள் கண்டிப்பில் உறுதியாக இருங்கள். பிள்ளைகள் தவறும்போது அன்பாக திருத்த முயலலாம். ஆனால், அந்த அன்பினால், அந்த தவறுகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

 
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் பிள்ளை வளர்ப்பு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது. இதைப் பகிர்வதால் பல பாதிப்புகள் தவிர்க்கப்படலாம் என்பதே என் நோக்கம். பல குடும்பங்களில் செய்யும் மற்றொரு மாபெரும் தவறு, தமக்கு தாமதாமாக குழந்தை பிறந்தது / ஒரே ஒரு ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக அவர்களை கண்டிப்பில்லாமல் வளர்ப்பது. இத்தகைய வளர்ப்பு முறைகள் அவர்கள் தவறான பாதையில் செல்லும்போது தடுக்காமல் போய்விடக்கூடும்.

 
நான் குறிப்பிட்ட அந்த குடும்பத்தில், தனது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்த்து வருவதோடு மட்டுமல்லாமல், தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவும் பெற்றோர்களே மறைமுகமாகக் கற்றுக் கொடுத்தும், அனுமதித்தும் விடுகிறார்கள். பிள்ளைகள் ஏதாவது செய்யும்போது, அவர்களை "நீ ஒன்னாம் நம்பர் லூசு டா" / "நீ ஒரு stupid" என்றோ அந்த தாயும், தகப்பனும் சொல்லி விடுகிறார்கள். இப்போது அந்த குழந்தைகள் எந்த கணத்திலும் தன் தாய் தந்தையிடம் மேற்சொன்ன வார்த்தைகளைக் கூறத் தயங்குவதில்லை.

 
அதே போல, குழந்தைகளிடம் "உங்க அப்பன் ஒரு லூசு டா. அந்த ஆளு எப்போதும் இப்படித் தான் பண்ணுவாரு" / "உங்க ஆத்தா ஒரு அறிவுகெட்டவ" என்றோ சொல்லாதீர்கள். இப்படி பேசும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தன் தாய் தந்தையருக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். இது நான் காணும் அந்த குடும்பத்தில் தினமும் அரங்கேறுகிறது. இதன் விளைவாக தாயோ, தந்தையோ தன் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் "தம்பி, எனக்கு குடிக்க தண்ணி எடுத்துகிட்டு வா" போன்ற சிறு உதவிகள் கூட மிக எளிதாக மறுக்கப்படுகின்றன.

 
இப்போதெல்லாம், பிள்ளைகள் பெரும்பாலான நேரங்களை தொலைகாட்சியின் முன்பு செலவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர் என்ற விஷயம் வருத்தமளிக்கக்கூடியது. இந்த வீட்டு குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் தகப்பனார், திடீரென்று தெய்வ பக்தி/பயம் அதிகமாகி, பல மணி நேரங்களை பூஜை அறையில் கழித்து வருகிறார். அவர் பூஜை செய்யும் நேரம் நடக்கும் கூத்துகளை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. பூஜை செய்யும் போதெல்லாம் மணி அடித்துக்கொண்டு செய்வார். அவரது பிள்ளைகள் சத்தம்போட்டு விளையாடிக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் எருமை, சத்தம் போடாம விளையாடு", மீண்டும் சில மணியாட்டல்கள்... சில ஜெபங்கள்... "டேய் நாயி, டிவி சவுண்டை கொறை" இவ்வாறு கூறிக்கொண்டே இருப்பார்.

 
இவர் திடீரென அக்கறை கொண்டு திட்டுவது போல இருக்கும். கொஞ்ச நேரம் கழித்து பிள்ளைகளை கட்டியணைத்து முத்தமிட்டு கொஞ்சி மகிழ்வார். இப்படி கண்ட கண்ட நேரங்களில் திட்டுவதைவிடுத்து, அவர்களுடன் ஓய்வாக இருக்கும் நேரத்தில், நல்ல புத்தி மதிகளை ஓரிருமுறை சொல்வது சிறந்தது என்பதை அவர் ஏனோ அறியவில்லை.

எவரேனும் இவரது குழந்தைகள் தவறுகள் செய்வதை சுட்டிக் காட்டினால், அவர்களை கண்டித்து திருத்த முயலாமல், "இவனுகளாவது பரவாயில்லை. இவனுக பெரியப்பா பசங்க எப்படியெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா" என்று அவரது பிள்ளைகளின் முன்னிலையிலேயே சில நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருப்பார். இச்செயல் தம் பிள்ளைகளை மேலும் தவறான வழிகளுக்கு இழுத்துச் செல்லும் என்பதை அறியாத இவரை நினைத்து பரிதாபம்தான் படமுடிகிறது.

 
இதுபோன்ற பல காரணங்களால் இவரது பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறி, குறைவான மதிப்பெண்களை எடுக்க ஆரம்பித்திருந்தனர். இவர்களது ஆசிரியை அந்த பசங்களிடம் ஏன் ஒழுங்காகப் படிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் மிகவும் நகைப்புக்குரியது. அது, "டீச்சர், எங்க அப்பா எப்போதும் சாமி கும்பிட்டுகிட்டே இருக்கதால, எங்களால படிக்க முடியலை(!?)". இந்தப் பெற்றோரும், பிள்ளைகளிடம் "உங்க ஆசிரியை என்ன சொன்னங்க" என்று கேட்பதற்கு பதிலாக, "உங்க ஆசிரியை என்ன சொன்னா?" என்று கேட்டால் எப்படி அவர்கள் பிறருக்கு மரியாதை தருவார்கள்?

கண்முன்னே இந்த வெள்ளைக் காகிதங்கள், வெற்றுக் குப்பைகளாய் கசக்கி எறியப்படுவதை பார்க்கும்போது நெஞ்சு தீப்பற்றிய பஞ்சாய்...




24 comments:

மதுரை சரவணன் said...

good. now days blam other will be fashion , and if the child did the same ,they appreciate it , without konwing the future of the child which spoil by them .

ப்ரியமுடன் வசந்த் said...

பாஸ் சின்ன வயசுல இருந்து நம்மல அப்பா அம்மா திட்டினாலும் நல்லதுக்க்த்தானே நம்மல உருவாக்குனவங்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா? எல்லா நேரம் திட்டுறதும் தப்புதான் எப்பவாது திட்டலாம் மகனை திட்டாத பெற்றோர் பெற்றோர் இல்லை பெற்றோர்ட்ட திட்டு வாங்காதவன் பையனில்ல

ஸ்ரீராம். said...

பதிவில் உங்களுக்கும், பின்னூட்டத்தில் வசந்துக்கும் என் ஓட்!

ஹேமா said...

பெற்றவர்கள் எங்கள் வழிகாட்டிகள்.
அவர்களின் பாதைவழி நடந்தபடியால்தான் இன்றும் வெள்ளைக்காரன் நடுவிலும் நாங்கள் நாங்களாய் வாழ்கிறோம்.எங்காவது ஒரு சில பெற்றோர்கள் விதிவிலக்கு பிள்ளைகள் சீர்கெடுவதற்கு.

Thenammai Lakshmanan said...

பெற்றோர் செய்யும் தவறுகளை நல்லா சுட்டிக் காட்டி இருக்கீங்க ரோஸ்விக்

புலவன் புலிகேசி said...

உண்மை தல...இந்த காலத்துல பெரும்பாலான குழந்தைகள் வேலைக்காரியிடம் வளர்கின்றன. அதனால் கூட பெற்றோர் மீதுபாசமில்லாமல் தவறான பாதைக்கு செலுத்தப் படுகின்றனர்..பிள்ளைகளை விடுத்து பணம் சம்பாதித்து என்ன பண்ண போறாங்கன்னு தெரியல

ரோஸ்விக் said...

Madurai Saravanan - Thanks for your arrival & comments. Keep Reading :-)

ரோஸ்விக் said...

பிரியமுடன்...வசந்த் - நன்றி நண்பா. திட்டுவதிலும், திட்டுவாங்குவதிலும் தவறு ஒன்றும் இல்லை. எந்த வார்த்தைகளை அவர்கள் உபயோகிக்கிறார்கள்... தனது கண்டிப்பில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதில் தான் வேறுபாடு. ஒருவேளை நான் சொல்ல முற்பட்டது இங்கு முழுமை அடையாமல் இருக்கலாம். ஒருமுறை ஒரு தவறு செய்யும்போது கண்டிக்க வேண்டும். அதே தவறு திரும்ப நடக்கும்போது கண்டிப்புடன் சிறிது திட்டும் இருக்கலாம். ஆனால் நாம் கூறும் வார்த்தைகளைத் தான் பிற்காலத்தில் அவர்களும் பயன்படுத்துவார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

நான் குறிப்பிட்ட பெற்றோர்கள், ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும்போது... ஒருமுறை "நாயே, எருமை" எனத் திட்டுவதும், அதே தவறை மற்றொருமுறை செய்யும்போது கட்டியணைத்து முத்தமிடுவதும் எவ்வளவு தூரம் அவர்கள் திருந்துவதற்கு உதவியாக இருக்க முடியும்??

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நன்றி தலைவா. வசனத்திற்கு பதிலும் சொல்லி இருக்கிறேன். சரியா என பாருங்கள்.

ரோஸ்விக் said...

ஹேமா - நன்றி ஹேமா. நல்ல பெற்றோர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பெற்றோருக்கு என் வணக்கங்கள்.

ரோஸ்விக் said...

thenammailakshmanan - நன்றி அக்கா. நீங்க ஒரு நல்ல தாயாக இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. :-)

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - எதிர்காலத்தில் நல்ல தகப்பனாக இருக்க நீங்கள் இப்போதிலிருந்து உருவாகிகொண்டிருக்கிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்க சொன்ன கருத்துக்களை வைத்து சில பல பதிவுகள் என்னிடமிருந்து வரும். :-)

நன்றி நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு

Paleo God said...

நல்ல பதிவு அறியாமலேயே விஷம் தூவுகிற செயல் இது..:(

எறும்பு said...

நல்ல பதிவு

:)

கிரி said...

ரோஸ்விக் பெற்றோர்கள் பற்றி நல்லா எழுதி இருக்கீங்க..

நானும் ஒரு தகப்பன் என்கிற முறையில் எனக்கும் பல அனுபவங்கள் கிடைக்குது.

குழந்தைகள் முன்னாடி பெற்றோர் சண்டை போடக்கூடாது, தவறான வார்த்தைகளை பிரயோகிக்ககூடாது, அதிக செல்லம் கொடுக்க கூடாது, அன்புடன் இருக்கணும் கண்டிப்பில்லாமல் போய் விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பு.. நல்ல பதிவு தான்...

கடைசியா என்ன சொல்ல வரீங்கனு புரியுது...
மக்கா.. ரோஸ்விக்-கு சீக்கரம் பொண்ணு பாருங்கோ......

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - நன்றி நண்பா.

ரோஸ்விக் said...

பலா பட்டறை - நன்றி சங்கர் ஜி. :-)


எறும்பு - நன்றி தலைவா.

ரோஸ்விக் said...

கிரி - நன்றி கிரி. வினய்-இன் அப்பா ரொம்ப நல்லவரு... :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - இங்க வந்துமா பட்டாபட்டியை கழட்டுருது.... :-)) இன்னொரு பொண்ணு பார்த்தா ஏற்கனவே பார்த்த பொண்ணு சும்மா விடுமா?? ;-)

நன்றி தலைவா.

பிரபாகர் said...

நல்லாருக்கு தம்பி!

என்ன இருந்தாலும், சிரிக்க சிரிக்க சொல்வர் பிறர், அழ அழச் சொல்வர் தமர்.

பிரபாகர்.

ரிஷபன் said...

விரிவாய் விளக்கியிருக்கிறீர்கள்.. நல்ல கருத்துகள்.

சாமக்கோடங்கி said...

அருமையான, நாட்டுக்கு இப்பொழுது மிகவும் தேவையான பதிவு..

நன்றி...