ஒரு காலத்துல மொபைல் சேவை வழங்குவதில் BPL நிறுவனம் முன்னணியில் இருந்தது. அப்பவெல்லாம், நமக்கு அழைப்புகள் வந்தாக்கூட அதற்கும் கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பழைய தொலைபேசி சந்தா முறைகளைப் போல, மாதம் குறைந்தபட்சம் இவ்வளவு கட்டாயக் கட்டணம், அதற்குமேல் நீங்கள் தொடுக்கும் அழைப்புகளுக்கும், எடுக்கும் அழைப்புகளுக்கும் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.
அப்போ இருந்த மொபைல்களுக்கெல்லாம் கொம்பு மாதிரி ஒரு பக்கம் மட்டும் ஆண்டனா நீட்டிகிட்டு இருக்கும். அதோட கனம் மட்டும் கால் கிலோவுக்கு மேல இருக்கும். இவ்வளவு பெரிய கனத்தையும் சட்டைப் பையில்தான் போட்டுக்கிட்டு நம்ம ஆளுக அலப்பறையக் கொடுப்பாங்க. அந்த ஆண்டனா கம்பி சட்டைக்கு வெளில தெரிஞ்சாத் தான் நம்மகிட்டயும் மொபைல் இருக்குனு நம்புவாங்க... இந்த சிம் கார்டு எல்லாம் இப்போ வாங்குற மாதிரி பொட்டி கடையில எல்லாம் வாங்க முடியாது. அவங்க அலுவலகத்துக்கு நேரடியா போயி, சிவப்பு சிவப்பா அழகா அங்க உங்காந்து இருக்குற புள்ளைக்கிட்ட நம்ம மொபைல குடுத்து, நீங்களே கழட்டி, சிம் கார்டை போட்டு செட் பண்ணி கொடுத்துருங்கன்னு ஒரு கூட்டமே காத்துகிடக்கும். அதுல அந்த புள்ளைகளையும் எப்படியாவது செட் பண்ணிரலாம்னு ஒரு கூட்டம் அடிக்கடி அங்க போகும்.
அந்த புள்ளைக அதுக்கு மேல... அந்த மொபைல் சேவை தருகிற கம்பெனியே அவங்கோட்டு மாதிரி ரொம்ப பிகு பண்ணுவாளுக. 1999 & 2000 -வது ஆண்டுகள்ல இந்த BPL நிறுவனத்துக்குப் போட்டியா Aircel நிறுவனம் களம் இறங்குச்சு. எங்க டவரு தமிழகத்துல 90 இடத்துல இருக்கு. அதுனால எந்த ஒரு பெரிய நகரத்துக்கு நீங்க போனாலும் எங்க டவரு கவரு ஆகும்னு அதிரடியா விளம்பரம் பண்ணினாங்க. என் நண்பர் ஒருத்தரு இந்த நிறுவனத்துல, மொபைல் சேவை வழங்குகிற பிரதிநிதியா வேலைக்கு சேர்ந்தாரு. அவருக்குப் பிரதி பிரதியா நிதி வந்துச்சோ இல்லையோ... அந்த ஏரியா முழுக்க அவருக்கு மவுசு கூடிருச்சு.
எவன் எவன் புதுசா மொபைல் வாங்கினானோ... அவன் மொபைல்ல நேரம் செட் பண்ணக்கூட இவருகிட்ட வருவாங்க... என் நண்பருக்கும் அவ்வளவா தெரியாது... எவன் எத கேட்டாலும், அண்ணே! நாளைக்கு ஆபீஸ்-க்கு வாங்க. சரி பண்ணிடலாம்னு... நிறுவன எம்.டி கணக்கா சொல்லிடுவாரு. கொஞ்ச நாள் கழிச்சு அந்த நண்பருக்கு அவரது நிறுவனமே ஒரு மொபைல கையில குடுத்துருச்சு.... அவரு அலும்பு தாங்கல... எவென் புதுசா கணைக்க்ஷன் வாங்குனாலும், அவனுக்கு அடுத்த நாள் போன் பண்ணி அண்ணே... உங்க நம்பரு ஆக்டிவேட்டு ஆயிடுச்சு. எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லுங்கன்னு... என்னமோ அந்த ஏரியா ரௌடி மாதிரி சொல்லுவாரு.
மற்ற நண்பர்கள் முன்னாடி இவரு எப்போதும் பிசியா இருக்குறமாதிரி செவாலியே அளவுக்கு நடிச்சுகிட்டு இருப்பாரு. இவருக்கு அவுட்கோயிங் ஃப்ரீன்னு காட்டுறதுக்காக... யாரு மொபைலுக்காவது கூப்பிட்டு, அண்ணே! எங்கே இருக்கிக-ன்னு கேப்பாரு. தப்பித் தவறி எதிர் பார்ட்டி... சொல்லுங்க நான் வீட்டுல தான் இருக்கேன்னு சொல்லிட்டா போதும்... இவரு கொஞ்சம் அதட்டலா... என்னாண்ணே! மொபைல வச்சுகிட்டு வீட்டுல இருக்கீகன்னு ஒரு பிட்டைப் போட்டு அவரை ஒட்டுமொத்தமா வீட்டை விட்டு விரட்டவோ அல்லது அவராகவே தெருவுக்கு வரவோ பெரும் முயற்சியை பண்ணிக்கிட்டு இருப்பாரு.
ஏரியா-ல யாரை பார்த்தாலும் வணக்கம்... கை குலுக்கல்... அப்பப்பா... தாங்கமுடியல. அப்படித் தான் ஒரு நாளு நம்ம ஆளு திருச்சி மெயின்காட்கேட்டுல இருந்து உறையூர் பக்கமா வண்டில போயிகிட்டு இருந்தாரு. எதுத்தாப்புல ஒருத்தரு, உறையூர் பக்கமா இருந்து அவரு வண்டில வந்துகிட்டு இருந்தாரு... அவரு வலதுபக்கமாத் திரும்பி தில்லைநகர் ஆர்ச்சுக்குள்ள போறதுக்காக, இண்டிகேட்டர் போடாம... வலது கையை நீட்டிகிட்டே வந்தாரு... நம்ம மொபைலு ஆப்பீசரு பழக்க தோஷத்துல... நமக்கு தான் கை கொடுக்க வர்றாருன்னு நினச்சு... வண்டிய ஸ்லோ பண்ணி அந்த ஆளு கையை எட்டி புடிக்க... அவரு நடு ரோட்டுல பப்பரப்பேன்னு விழுந்துட்டாரு.
நானும் சில நண்பர்களும் வேற வேற வண்டிகள்ள வந்துகிட்டு இருந்தவய்ங்க போயி விழுந்த ஆளை தூக்கிவிட்டோம். அவரு எங்க நண்பரை விட்ட டோசு... இன்னும் எங்க காதுக்குள்ள இருக்குதுன்னா பாருங்களே. நண்பர்கிட்ட ஏன்யா இப்படி செஞ்சே-னு காரணம் கேட்டதும்... அவரும் வெள்ளந்தியா அந்த காரணத்த சொல்ல... வயிறு வலிக்க நடு ரோட்டுல சிரிக்க வேண்டியதாப் போச்சு...
இதைப் போயி நம்ம கூட்டளிக ஏரியா-வுல சொல்ல... இன்னைக்கும் அவர் என்ன பண்ணினாலும் "இந்த ஏர்செல்காரன் அட்டூழியம் தாங்கலையப்பா"-னு சொல்றாங்க. ச்சே! வாங்குற சம்பளத்துக்கு எப்படியெல்லாம் நிர்வாகத்துக்கு பேர சம்பாதிச்சுக் கொடுக்குரானுகப்பா...
24 comments:
இந்த ரோஸ்விக் தொல்ல தாங்க முடியல....
ரொம்ப நல்லாருக்கு தம்பி! ஓட்டுக்கள அப்புறம் வீட்டுல போயி போடறேன்.
பிரபாகர்.
நன்றாக சிரித்தேன், நண்பா. ஒரு காலத்தில் பேஜர் மற்றும் செல் வச்சுக்கிட்டு நம்ம ஆளுக பண்ற அட்டுழியம் தாங்க முடியவில்லை. உங்களின் திருமணம் பற்றிய பழைய பதிவுகளையும் படித்தேன்.நல்ல பதிவுகள். மிக்க மகிழ்ச்சி.
தலைப்பு - mislead செய்கிறது. :-)
அசத்தல்:)). கீப் இட் அப்.
"அதுல அந்த புள்ளைகளையும் எப்படியாவது செட் பண்ணிரலாம்னு ஒரு கூட்டம் அடிக்கடி அங்க போகும்"
"நமக்கு தான் கை கொடுக்க வர்றாருன்னு நினச்சு... வண்டிய ஸ்லோ பண்ணி அந்த ஆளு கையை எட்டி புடிக்க... அவரு நடு ரோட்டுல பப்பரப்பேன்னு விழுந்துட்டாரு"
ஹா....ஹா...ஹா...
உண்மையாவே வாய்விட்டு சிரிச்சேன்.. வீட்டுல அம்மா என்னடான்னு பார்க்கிறாங்க... அது சரி.. "அந்த நண்பர்" நீங்களேவோண்ணு ஒரு சந்தேகம் :-)))
ஒட்டு போட்டுருங்க. போட்ட பிறகு வந்து பலசரக்கு சாமானை வீட்டுக்கு அனுப்புனோ... இலவச டிவி எப்ப கிடைக்கும்னோ கேக்கப்புடாது ஆமா... அப்புறம் பழக்கதோஷத்துல கேட்டுட்டேன்னு தலைய சொரியக் கூடாது.
அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்து வாழ்த்தியமைக்கு நன்றி. :-)
எப்பூடி.... இப்படியெல்லாம்..
:))
நான் அப்போ கல்லூரி மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த நண்பர்கள் எனக்கு லோக்கலில் அறிமுகமானவர்கள். அந்த கூட்டமே நகைச்சுவையின் ஊற்று போன்றது. இதுபோல தினம் தினம் சரவெடி தான். :-))
அந்த சிவப்பு புள்ளைகள சைட் அடிக்க ரெண்டு மூணு தடவை போயிருக்கேன். :-)))
அந்த ரேடியோ விட்ஜட் எப்படி சேர்க்கறதுங்க?? கொஞ்சம் சொல்வீங்களா??? ரொம்ப நல்லாயிருக்கு
ஓட்டு போட்டாச்சுங்க ...
எதுவும் கேட்க்கலை
தலையையும் சொறியளை
வாங்க அக்கா... நம்ம ஊர்ல இருந்து வந்து கேட்டுட்டீங்க. அப்பறம் சொல்லாம இருப்பமா?? :-))
இதை பத்தி இந்த பதிவுல(http://thisaikaati.blogspot.com/2009/10/songs.html ) சொல்லி இருக்கேன் பாருங்கக்கா. அப்புடியும் சந்தேகம்னா மெயில் அனுப்புங்க - thisaikaati@gmail.com
(அப்துல்லா அண்ணனோட உங்களை டிசம்பர் 31-ந்தேதி பார்த்தேன். அவசரமா நான் திரிஞ்சதால... உங்க கிட்ட பேச முடியல. மீண்டும் சந்திப்போம்)
//மற்ற நண்பர்கள் முன்னாடி இவரு எப்போதும் பிசியா இருக்குறமாதிரி செவாலியே அளவுக்கு நடிச்சுகிட்டு இருப்பாரு. இவருக்கு அவுட்கோயிங் ஃப்ரீன்னு காட்டுறதுக்காக... //
இந்த மாதிரி பந்தா பேர்வழிங்க நெறைய பேர நானும் பாத்துருக்கேன் தல...நல்ல நகைச்சுவை
வாங்குற சம்பளத்துக்கு எப்படியெல்லாம் நிர்வாகத்துக்கு பேர சம்பாதிச்சுக் கொடுக்குரானுகப்பா...
...............சிரிப்பா சிரிக்குது பொழப்பு. நல்லா நகைச்சுவையா எழுதி இருக்கீங்க.
பேர் சொல்ல ஒரு பிள்ளைன்னு சொல்றது மாறி ஏர்செல்-ல ஒரு அழைப்பாகி சிரிப்பா சிரிக்குது...
வாங்ற சம்பளத்துக்கு வஞ்சகம் பண்ணாம ’வாரி’ வழங்கிட்டீங்க
உண்மையிலே நான் அவன் இல்லைங்க. :-)
Post a Comment