Saturday, October 23, 2010

உள்குத்து கவிதைகள் - 8 - துறவிகள் ஸ்பெஷல்

மனிதம் வளர்க்க வேண்டியவர்கள்
மதம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பளிங்கு பங்களாவிலும்
பாதாளச் சாக்கடையின்
பாதச் சுவடுகள்
இருப்பது நிரூபனமாயின...
திரைகள் கிழிந்து
முகம் நிர்வாணமாயின...
உண்மை இறை தேடியவர்கள் - இன்று
உணர்ச்சியால் இரை தேடுகிறார்கள்...

உடை நிறம் மட்டுமே மாறியிருக்கிறது
காவியாகவோ, வெள்ளையாகவோ...
உங்கள் மனங்களிலிருந்து
அகலவில்லை ஒரு மாசும்...
துறந்தவர்கள் எல்லாம்
திறந்தே வைத்திருக்கிறார்கள்
தங்க(ள்) வாசலை...
எவளேனும் ஒருத்தியாய் வரும்வரை!

ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ
ஊருக்கு மட்டும் உபதேசம் - ஆனால்
எல்லாவளும் ஒருத்தியாய்
அவன் ஒருவனுக்கே என்ற நினைப்போடு...!

அனைத்தும் மறைக்க
வகை-தொகையாய் பூசை ஆண்டவனுக்கு...
நன்றி கெட்டவன் காட்டிக்கொடுத்துவிட்டான்
வருமான வரித்துறைக்கு...

நித்ய ஆனந்தமாய் வாழ
லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்...
புரிந்துகொண்டு - என்
அறைக்கதவை முழுத்தாழிட்டாள்
ஒரு உயர்தர பக்தை!

சர்ப்பம் தொழவும்...
கர்ப்பம் கலைக்கவும்...
துறவிகளுக்கு!



24 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நித்ய ஆனந்தமாய் வாழ
லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்...
புரிந்துகொண்டு - என்
அறைக்கதவை முழுத்தாழிட்டாள்
ஒரு உயர்தர பக்தை!
//

பக்தையா?..
இலக்கணப்பிழை..
பதிரை என்று இருக்கவேண்டும்...

( இதற்காக...எனக்கு மணற்கேணி பரிசு கொடுக்கவேண்டும் என் ஆசைப்பட்டால்.. எனது டோல் ப்ரீ நம்பருக்கு அழையுங்கள்..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் ஆபீஸ்ல இருந்து கமென்ஸ் போடுவதை யாருக்கும் சொல்லவேண்டாம்.. ஹி..ஹி

சிவாஜி சங்கர் said...

ஹை.. சிங்கம் கவிதை களம் இறங்கிருச்சி...
.
.
.
என்ன பண்றது அண்ணே., காவி கட்டுனாத்தான் கல்லா கட்டுது..!! ;)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பண்றது அண்ணே., காவி கட்டுனாத்தான் கல்லா கட்டுது..!! ;)
//

ஹா..ஹா.. அண்ணே.. காவிய கட்டிட்டு கதவ மூடினால்-னு சொல்லுங்ண்ணே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாப்பட்டி சாமியார் வாழ்க

Unknown said...

உள்குத்து... வெளிகுத்து!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாப்பட்டி சாமியார் வாழ்க
//

ஹா. ஹா....

எஸ்.கே said...

சாமியார் கவிஞர் வாழ்க! :-)

அன்பரசன் said...

உள்குத்து செம குத்து போங்க...

'பரிவை' சே.குமார் said...

//அனைத்தும் மறைக்க
வகை-தொகையாய் பூசை ஆண்டவனுக்கு...
நன்றி கெட்டவன் காட்டிக்கொடுத்துவிட்டான்
வருமான வரித்துறைக்கு...//

உள்குத்து ரொம்ப நல்லாயிருக்கு.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///சர்ப்பம் தொழவும்...
கர்ப்பம் கலைக்கவும்...
துறவிகளுக்கு //////

இந்த பத்திக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் தேவை ....,( ச்சே ...,மாமேதைய இருந்துகிட்டு இது கூட தெரியலை ...,)

இப்படிக்கு ,
மாமேதை பனங்காட்டுநரி

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////// திரைகள் கிழிந்து
முகம் நிர்வாணமாயின...
உண்மை இறை தேடியவர்கள் - இன்று
உணர்ச்சியால் இரை தேடுகிறார்கள்... /////

நல்லாயிருக்கு ரோஸ்விக் சார் ....,

இப்படிக்கு ,
மாமேதை பனங்காட்டுநரி

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - மணற்கேணி பரிசு டோல்ஃப்ரி அழைப்பை அட்டென்ட் செய்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது...

ரோஸ்விக் said...

//பட்டாபட்டி.. said...
நான் ஆபீஸ்ல இருந்து கமென்ஸ் போடுவதை யாருக்கும் சொல்லவேண்டாம்.. ஹி..ஹி//

பட்டு அரசியல்ல ஏற்கனவே குதிச்சிட்டதா மங்குனி அமைச்சர் சொன்னாரே! எதுயா நிஜம்?

ரோஸ்விக் said...

சிவாஜி சங்கர் - நானும் காவி கட்டி தொழில ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சிஷ்யரா வரமுடியுமா.... (வீடியோ கேமரா இல்லாம)

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - என்னய்யா கோஷம் போடுறதப் பார்த்தா வீடியோவோட அலையுற போல... :-)

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - நன்றிண்ணே. :-)

ரோஸ்விக் said...

எஸ்.கே - அண்ணே கவிஞர்-னு என்னைய ஏத்துக்கிட்டா... நான் சாமியாரா ஆயிடலாம்... தகுதி இருக்கு போல. :-)

ரோஸ்விக் said...

அன்பரசன் - நன்றி அன்பரசன் :-)

ரோஸ்விக் said...

சே.குமார் - நன்றி அண்ணே :-)
எப்போ ஊர்ப்பக்கம்?

ரோஸ்விக் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி - பேரே பட்டையக் கெளப்புதேய்யா.... :-)
சர்ப்பம் = பாம்பு
இப்போ புரிஞ்சிருக்குமே! :-))
நன்றி மாமேதை

Chitra said...

செம.... நல்லா எழுதி இருக்கீங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நித்ய ஆனந்தமாய் வாழ
லிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்...
புரிந்துகொண்டு - என்
அறைக்கதவை முழுத்தாழிட்டாள்
ஒரு உயர்தர பக்தை!///

நல்ல உயர்தரம்தான்!

ஜோதிஜி said...

அடுத்த கவிதையின் தலைப்பு

லிங்க பூஜையும் அவிழாத கோவணமும்.