Wednesday, October 27, 2010

ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?

நீ வாங்குன மார்க்குக்கு இஞ்சினியரிங் காலேஜ்-ல படிக்கனும்னா பொட்டி பொட்டியாப் பணங்கட்டனுமாம்... நம்மகிட்ட பொட்டி வாங்கவே பணமில்ல... வேறவழில்யில்ல, நமக்குத் தெரிஞ்ச காலேஜ்-ல சொல்லி ஏதாவது பி.எஸ்.சி-ல இடம் வாங்கித்தாறேன். "அதுலயாவது" நிறைய மார்க் எடுத்து உருப்புடப் பாருப்பானு பல வீடுகள்ல இந்த சங்கீதம் மே மாத இறுதில அரங்கேறும்.

பி.எஸ்.சி-னு முடிவானதுக்கப்புறம் படிச்ச பெரியவங்களோட கலந்தாலோசிச்சு மேத்ஸ் எடுக்கலாமா? ஃபிசிக்ஸ் எடுக்கலாமா? கெமிஸ்ட்ரி எடுக்கலாமான்னு? பலபேரு உயிரை எடுப்பாங்க. அதுல சில ஆளுக கெமிஸ்ட்ரி வேணாம் சார்... அவன் போயி ஆசிட்டுகள கலக்க வேண்டியிருக்கும். அது டேஞ்சரு. மேத்சும் வேணாம். அதைப் படிச்சா வாத்தியாரப் போறதுக்குத் தான் அதிக வாய்ப்பு .அதுனால, பேசாம ஃபிசிக்ஸ் படிக்க வைங்க. எதிர்காலத்துல சைண்டிஸ்டா போகலாம் (நம்ம லெவல் அவங்களுக்குத் தெரியல. பாவம் விட்டுருவோம்). இல்லைனா எம்.சி.ஏ படிக்கலாம். ஒன்னுமே முடியலைன்னா வாத்தியாராப் போகலாம்( வாத்தியார் வேலைக்கு தகுதி எப்புடி வச்சிருகாய்ங்க பாருங்க).- ன்னு சொல்லி ஒருவழியா தெளிவடைய(!?) வச்சிருவாங்க.

தம்பி நானும் விசாரிச்சிட்டேன். எம்.சி.ஏ படிச்சா டாக்டர் படிப்பு அளவுக்கு சம்பாரிக்கலாமாம். அதுனால ஒரு ஃசேப் சைடுக்கு பி.எஸ்.சி ஃபிசிக்ஸ் படி. அதுல நல்ல மார்க் எடுத்தீன்னா எம்.சி.ஏ படிச்சிட்டு வேலைக்கு போயி நல்லா சம்பாதிக்கலாம். கம்பியூட்டருக்கு நல்ல எதிர்காலம் இருக்காம்(அதுசரி, கம்பியூட்டரை வச்சு ஜோசியம் பார்த்த கோஷ்டிதானே நம்ம ஆளுங்க). அப்படி இப்படின்னு சொல்லி நமுக்கு புடிக்காத பாடமான ஃபிசிக்ஸ்-ல சேர்த்துவிட்டாங்க. என்ன சப்ஜெக்டுங்க அது... முதல் விதி, இரண்டாம் விதின்னு உயிரை எடுப்பானுங்க. நம்ம விதியையே நம்ம நொந்துகிட்டு இருக்கும்போது இதுல இவனுக விதி... என்ன பன்றது எல்லாம் "தல"விதி.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு உறுதியா நம்பி நல்ல மார்க் எடுத்து... எம்.சி.ஏ சீட்டும் வாங்கியாச்சு. அதை படிச்சு முடிச்சிட்டு ஒரு வழியா வேலைக்கும் சேர்ந்தாச்சு. இந்த வேலையில பிறப்பிக்கப்படுகிற லேங்குவாஜ்/டெக்னாலஜியை கணக்கெடுத்தா நம்ம மக்கள்தொகையை விட அதிகமா இருக்கும் போலங்க. பத்தாக்கொறைக்கு வெர்சன் வேற 1.0 , 2.0 -ன்னு. கருமம்டா சாமி. இந்தப் படிப்பை படிச்சவனுக்கெல்லாம் மூலம் நட்சத்திரமா இருக்கும் போல. எப்போதும் குடும்பத்தைப் பிரிஞ்சே இருப்பானுக. இந்த வேலை மூலம் ஆதி மூலம் முதல் பேதி "மூலம்" வரை நட்பாகக் கிடைக்கும். இதுல வேற இந்த ட்ரெய்னிங் அந்த ட்ரெய்னிங்-னு போட்டு உயிரை எடுப்பாணுக. நம்மெல்லாம் மத்தியான சோறு ஓசியாப் போடுற ட்ரெய்னிங் மட்டும்தான் கலந்துக்கிறது. நல்லா ட்ரெய்னிங் எடுத்து நிறைய சம்பாதிக்கிறது எடுத்துக்கு மனுஷன் வயிறார சாப்புடுறதுக்குத்தானே. அதுக்கு நேரடியாவே சாப்பாடு போடுற ட்ரெய்னிங்-ல கலந்துக்கிறது தானே புத்திசாலித்தனம்.


எப்பவாவது அதிசயமா ஒருவாரம், ரெண்டுவாரம் லீவு குடுப்பாணுக. சரி வீட்டுல போயி பெத்தவங்களோடவும், மத்தவங்களோடவும் சந்தோசமா இருந்துட்டு வரலாம்னு போனா.... அங்க சில கொடுமை "தலப்பா" (தலைப்பாகை) கட்டிக்கிட்டு ஆடும். கிராமப்புறம் வேற... நம்ம கூட வேற டெக்னாலஜி-ல வேலை பாக்குறவனுக்கே நம்ம என்ன வேலை பாக்குறம்னு புரியவைக்க முடியாது. இதுல இவங்களுக்கு புரியவைக்கனுமா... விளங்கிடும்...

அவங்க கேக்குற கேள்வியெல்லாம் எப்புடி இருக்கும் தெரியுமா...? கம்புட்டர் வேலை பாக்குறங்கிரியே உனக்கு கம்பியூட்டர் செய்யத் தெரியுமா? இந்த ஜோசியம் சொல்ற கம்பியூட்டர் உங்க கம்பெனில செய்யிறாங்களா? அது எவ்வளவு விலை இருக்கும்? இந்த கம்பியூட்டர் அப்புடி என்னதான் பண்ணும் அதைப்போயி இவ்வளவு விலை சொல்றானுக? புதுசா தொறந்த ராசி மளிகைக்கடையில கூட கம்பியூட்டர் பில்லிங் தான். அங்க நமக்கு தெரிஞ்ச பயதான் வேலை பாக்குறான். அவனுக்கு மூவாயிரம் சம்பளந்தான் தாராக. அவன் ரொம்ப நல்ல பையன். கைசுத்தமான ஆளு. கெட்டிக்காரன் கூட. நீ அவனுக்கு உன் கம்பெனில முப்பாதாயிரம் ரூவாய்க்கு வேலை வாங்கித்தரக்கூடாதா?

இதை பக்கத்துல இருக்குற இன்னொரு மங்குனி அமைச்சரு விளக்குவாரு... அட அப்புடி இல்ல மச்சான். வேறவேற கம்பெனில ஸ்க்ரூ, தகரம், கண்ணாடின்னு செஞ்சு வரும் அதை இவுகளை மாதிரி பெரிய கம்பெனில இருக்கவுக மாட்டி ஒக்குட்டு வியாபாரத்துக்கு அனுப்புவாக. (அப்புடித்தானே மருமயனே-ன்னு நம்மகிட்ட கேள்வி வேற). இல்ல நான் வேலைபாக்குறது ஒரு பேங்குக்கு அப்புடின்னு சொன்னா... அங்க உங்களுக்கு லோன் எல்லாம் தருவாய்ங்களா? அப்பா உனக்கு கம்பியூட்டர்ல கணக்கெழுதுற வேலையா? நீ பேசாம அங்கிட்டு இங்கிட்டு கெடந்து கஷ்டப்படுரதுக்கு உன் வேலைய நம்ம ஊரு இந்தியன் பேங்குக்கு மாத்திக்கிட்டு வந்துரலாமே... அங்ககூட மேனஜர் டேபிள்-ல ஒரு கம்பியூட்டர் பார்த்தேன் - அப்புடின்னு தாக்குவாய்ங்க பாருங்க... ரஷ்ய ராக்கேட்டேல்லாம் தோத்துப்போயிடும்.


இல்ல... அந்த பேங்குடைய வெப்சைட் இன்டர்நெட்-ல இருக்குறத பார்த்துக்கணும். அதை சில நேரம் மாத்தணும்... எல்லாத்தையும் ஆடோமெட் பண்ணனும்னு என்னென்னமோ விபரம் சொன்னாலும்... ம்ஹூம். என்னப்பா இன்டர்நெட் இருந்தா கெட்டுப் போயிருவானுகன்னு சொல்றாங்க...நீ அதுலே வேலை பாக்குறம்னு சொல்றே-ன்னு ஒன்னு விழும். இன்னொரு ராக்கெட்டு சீருனதைப்பாருங்க... ஏப்பா! உன் கம்பெனில கம்பியூட்டரை கொடுத்து வேலைபாக்க சொல்லி உனக்கு சம்பளம் கொடுக்குராணுக. அப்ப அவனுகளுக்கு செலவு போக என்னப்பா மிஞ்சும்? நம்ம ஊர்ல அந்த முருகேசன் பயலைப் பாரு நாலைஞ்சு கம்பியூட்டரை வச்சுக்கிட்டு சின்ன ஒரு இன்டர்நெட் கம்பெனி வச்சுகிட்டு... அங்க போயி அதுல வேலை பாக்குறவங்ககிட்ட ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூவாயின்னு டெக்னிக்கலா சம்பாரிக்கிராம்பா... (விளங்கிடும்)

அப்பவே புரிஞ்சுக்கணும் நமக்கு லீவு கொடுத்த மேனஜர் அவருகும்பிடுற குலதெய்வத்துக்கிட்ட சொல்லி, சனியனுக்கு சகல வசதியும் பண்ணிக்குடுத்து நம்ம கூட அனுப்பி வச்சிட்டார்னு. யாராவது புரிய வச்ச மாகாராசனுங்க, எப்புடின்னு சொல்லுங்கப்பா... இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு...
117 comments:

பட்டாபட்டி.. said...

ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?
//

ஏன் ?.. தூக்கிட்டானுகளா?..

இரு..பதிவ படிச்சுட்டு வரேன்..
( இப்படிக்கு..பதிவை படிக்காமலே..கமென்ஸ் போடும் சங்கம்..

தலைவர் : பிரபாகர்(?)
பொருளாளர் : பட்டாபட்டி )

அப்பாடா. கொத்துவிட்டாச்சு..

பட்டாபட்டி.. said...

அடச்சே.. வரவர என்னைய மாறியே புலம்ப ஆரம்பிச்சுட்டையா?..

ஆமா..நீதானே பட்டாபட்டி?...

Chitra said...

இண்டர்வியூவுக்கு தயாராகுறதை விட லீவுக்கு ரொம்ப உஷாரா தயாராக வேண்டியிருக்கு...


.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... அதான் ஒரு கலகலப்பான பதிவு எங்களுக்கு கிடைச்சுது..... நன்றிங்க.

பட்டாபட்டி.. said...

ஆமா .. தெரியாமத்தான் கேக்குறேன்.. அங்க ஒருத்தரு கவிதையா எழுதித்தள்ளாரு..

நீரு..பொலம்பல் பொலம்பித்தள்றீரு..
இது என்ன சிங்கை பதிவர்களின் தள்ளும்(?) வாரமா?

( நீ மட்டும் இதுக்கு பதில் சொல்லலே.. அண்ணன் பிரபாகரை கூ(தூக்)ட்டீட்டு வந்துடுவேன்..

பட்டாபட்டி.. said...

ரைட்டு..ரைட்டு..
விசிட்டர்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க.. போயிட்டு அப்பால வரேன்.. வரட்டா.....

பட்டாபட்டி.. said...

வெளியூரு.. இங்க பாரேன்.. பய ஒரேயடியா புலம்பிவெச்சிருக்கு...

பட்டாபட்டி.. said...

அட.. முதல் வடை எனக்குனு சொல்லாட்டி.. இழுத்துபோட்டு மிதிக்க ஒரு குரூப்பே அலையுமே..

வடை எனக்கு...
( நல்லாயிருக்கானு கருக்கல்ல போயி.. ஜோலிய முடிச்சுட்டு வந்து சொல்றேன்..)

Veliyoorkaran said...

ஊர்ல பத்து பதினைஞ்சு ப்ளாக் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோசமா எழுதறான்..ஒரே ஒரு ப்ளாக வெச்சுகிட்டு இவன் பொலம்பற பொலம்பு...அயோயோயோ....! :)

பட்டாபட்டி.. said...

ரே ஒரு ப்ளாக வெச்சுகிட்டு இவன் பொலம்பற பொலம்பு...அயோயோயோ....
//

ஒரு வேளை மணற்கேணி பட்டறையில தீட்டின வைரமா இருக்குமோ?

பட்டாபட்டி.. said...

சவுக்கு படித்துவிட்டீர்களா???
//


ஆச்சு..ஆச்சு... அப்புறம்?

ரோஸ்விக் said...

ஆஹா... இன்னைக்கு மூத்திர சந்துப்பக்கமா ஒதுங்கிட்டமோ... கும்ம ஆரம்பிச்சுட்டானுகளே!

வெளியூர்க்காரன் பதிவு போட வச்சிருந்த நக்கலைஎல்லாம் நாக்குலே வச்சுகிட்டு நம்மள அசிங்கப்படுத்திடுவானே!!!

Veliyoorkaran said...

திசைகாட்டியில் வெளியிடப்பட்ட இந்த பதிவின் பின்னூட்ட பகுதி ரெட்டைவால்சின் உத்தரவிற்கேற்ப பட்டாப்பட்டி மற்றும் வெளியூர்க்காரனின் கட்டுபாட்டிற்குள் வருகிறது...எப்போதும் போல தூக்க கலக்கத்தில் வந்து கலக்கிவிட்டீர்கள் திசைகாட்டி அருமையான பதிவு என்று பின்னூட்டமிடும் நண்பர்கள் தயவு செய்து அப்பாலிக்கா போய்விடுமாறு அன்புடன் எச்ச்சரிக்கபடுகிறார்கள்...இல்லாங்காட்டி ஓட ஓட இங்கயே வைத்து வெட்டி கொல்லபடுவார்கள் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்...!

யோவ் பட்டாப்பட்டி ஸ்டார்ட் மியுசிக்...! :)

ரோஸ்விக் said...

ஏப்பா வெளியூரு நீ எங்க இருக்க...? எங்கயும் வெளியூரு போயிட்டியா...? மணிரத்னம், ஷங்கர் படம் எடுத்தா மட்டும் விமர்சனம் போடுவியா?? இல்ல ஐஸ்வர்யா நடிச்சாத் தான் விமர்சனம் போடுவியா??

பட்டாபட்டி.. said...

வெளியூரு.. சீக்கிரம் வாய்யா.. இந்த ப்ளாக்க வெச்சு, மண்ற்கேணிய வளைச்சுப்போட்டுடலாமா?.. சும்மா பயப்படாதே.. நல்லா செக் பண்ணீட்டேன்.. இன்னும் யாருக்கும் பட்டா கொடுக்கலையாம்..

Veliyoorkaran said...

யோவ் பட்டாப்பட்டி ....அடுத்த கமெண்ட்ட எவன் போட்டாலும் கொல்றோம்...! கூப்புடுயா நம்ம குண்டர் படைய..! :)

எப்பாடி தம்பி ரோஸ்விக்கு ...போயிட்டு அப்பறமா வாய்யா..கத்தி கொஞ்சம் வேகமா வீசுற மூட்ல இருக்கோம்...சிக்கிராத.... :)

ரோஸ்விக் said...

எங்கிட்டோ ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இந்த ரெண்டு பக்கியும் இப்புடி பதிவை போட்டவுடனே வந்து சலங்கை காட்டி ஆடுதே... ஏன்னா பண்றதுன்னு தெரியலையே! அடப்பாவிகளா நீங்க ரெண்டுபேரும் ஒரே இடத்துலையேது வேலை பாக்குறீங்களா...?

Veliyoorkaran said...

யோவ் பட்டு...அது என்னய்யா மணற்கேணி...நம்மள மாதிரி படிச்சவங்க நடத்தற சங்கமா அது.?.நாம என் கல்கேனின்னு ஒன்னு ஆரம்பிக்க கூடாது...?
அதுல ஜெயிக்கிற வெண்ணைகள நாம இந்தியா கூட்டிட்டு போய் நாகபட்டினத்த சுத்தி காட்டுவோம்...என்னா சொல்ற...?

பட்டாபட்டி.. said...

Veliyoorkaran said...

யோவ் பட்டு...அது என்னய்யா மணற்கேணி...நம்மள மாதிரி படிச்சவங்க நடத்தற சங்கமா அது.?.நாம என் கல்கேனின்னு ஒன்னு ஆரம்பிக்க கூடாது...?
அதுல ஜெயிக்கிற வெண்ணைகள நாம இந்தியா கூட்டிட்டு போய் நாகபட்டினத்த சுத்தி காட்டுவோம்...என்னா சொல்ற...?

//

யோவ்.. இந்தியாவோட எக்கனாமிய நினைச்சு பார்த்திருந்தா.. இப்படி சொல்லமாட்ட...

பழைய பாரம்பரியத்தை விடக்கூடாது..

ரெண்டு மாட்டு வண்டிய பிடிச்சு.. ஜோகூர் கூட்டிக்கிட்டு போயி கம்பங்கூழு ஊத்தலாம்..
( ஆமா.. பழைய பாரம்பரியம்னு சொன்னா.. நார்வேகாரரு.. கட்டின வேட்டியோட சண்டைக்கு வருவாரே.
அவருக்கு மட்டும் மாட்டுவண்டில இடம் இல்லை.. யாராவது ரெக்கமண்ட்க்கு வந்தீங்க.. கத்திய திருப்பிடுவேன்.. சொல்லீட்டேன்)

பட்டாபட்டி.. said...

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 - கருத்தாய்வுப் போட்டி
//

இது நம்மோடதா?...

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி.. said...
யாராவது ரெக்கமண்ட்க்கு வந்தீங்க.. கத்திய திருப்பிடுவேன்.. சொல்லீட்டேன்)
////

இன்னிக்கு எவன் வந்தாலும் போடறோம்...! :)

எப்பா யாருப்பா அது அடுத்த கமென்ட் போடபோறது...சீக்கிரம் வாய்யா ராஜா...!

யோவ் பட்டாப்பட்டி..நான் முன்னாடி சொன்னதுதான்...எவனா இருந்தாலும் பார்க்காத...பொட்டுன்னு போட்ரு..பிரச்சன வந்தா அப்பறம் பார்த்துக்கலாம்... :)

மங்குனி அமைசர் said...

ஆமா நீங வேலையா பாத்துகிட்டு இருக்க ???? என்ன கொடுமை சார் இது ,...... ஆக்சுவலா உன் உணரத்தானே புலம்பி பதிவு போடணும் ???????

Veliyoorkaran said...

பட்டாபட்டி.. said...
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 - கருத்தாய்வுப் போட்டி
//
இது நம்மோடதா?...////


யோவ்..போன மாசம் இத வித்துட்டுதானையா எந்திரன் படத்துக்கு டிக்கட் எடுத்தோம்...! எல்லாத்தையும் மறந்துரு...! :)

பட்டாபட்டி.. said...

பக்கத்தில் நெருப்பென
பாரமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்..

//

மேல சொன்னது அண்ணன் பிரபாகரோட கவிதை..

அவருக்கு மணற்கேணி சார்ப்பா.. ”நான் குத்த வெச்சு உக்காந்திருக்கும், நினைவு பரிசை தரப்போறோம்..

வெளியூரு.. நீ தரயா.. இல்ல நானா?

பட்டாபட்டி.. said...

Blogger மங்குனி அமைசர் said...

ஆமா நீங வேலையா பாத்துகிட்டு இருக்க ???? என்ன கொடுமை சார் இது ,...... ஆக்சுவலா உன் உணரத்தானே புலம்பி பதிவு போடணும் ???????
//

வேலை விட்டு தூக்கிட்டானுக.. ஊ...ஊ...

Veliyoorkaran said...

@@@@மங்குனி அமைசர் said...
புலம்பி பதிவு போடணும் ???????////

இத்தன கேள்விகுறி போட்டு கமெண்ட் போடறவங்கேளோட பூசன புடிச்ச மூக்க வெட்டி பிரபாகர அண்ணனுக்கு அன்பு பரிசா குடுக்கறேன்னு எந்திரன் சாமிக்கு வேண்டிருக்கேன்..இந்த பயல ஆடாம புடி...கத்திக்கு வலிக்காம அறுத்துக்கறேன்...! :)

பட்டாபட்டி.. said...

யோவ்..போன மாசம் இத வித்துட்டுதானையா எந்திரன் படத்துக்கு டிக்கட் எடுத்தோம்...! எல்லாத்தையும் மறந்துரு...! :)
//

ஓ..அதுவா.. டாலர் பற்றாம..சீனச்சிகிட்ட வாங்கி டிக்கெட் எடுத்தமே.அதுவா.... பச்சிடி சாப்பிடாம.. மண்டையில ஒண்ணும் நிறக்கமாட்டீங்குது சார்...

பட்டாபட்டி.. said...

இந்த கமென்ஸ் மட்டும் டெலிட் ஆகட்டும்..

அப்புறம் அண்ணன் முன்னிலையில் ரோஸ்விக் பட்டாபட்டி உருவப்படும்.

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி.. said...
பக்கத்தில் நெருப்பென
பாரமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்..////

ஒவ்வொரு வரியையும் முத்து முத்தா எழுதிருக்காரு...ரசிச்சு எழுதிருக்காரு...வைரம் பாய்ந்த வரிகள்..காலத்தை வென்ற வரிகள் ..ஆனா பாருயா என்ன எழுதிருகாருன்னுதான் புரியல...நீதான் மிக பெரிய புலவராச்சே பட்டாப்பட்டி..என்ன சொல்ல வர்றாருன்னு படிச்சு பார்த்துட்டு சொல்லுவேன்..! :)

பட்டாபட்டி.. said...

விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
//

இது ரோஸ்விக்க பற்றீயதா?...

பட்டாபட்டி.. said...

பக்கத்தில் நெருப்பென
பாரமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்.
//

பட்டாப்பட்டி..என்ன சொல்ல வர்றாருன்னு படிச்சு பார்த்துட்டு சொல்லுவேன்..!
//

படிச்சவனை பார்த்து எப்படியா இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்?..

இரு ..இரு..

யாரோ சேக்கிழாராம்.. அவரோட பேரனை கூட்டிக்கிட்டு விளக்கசொல்றேன்....

Veliyoorkaran said...

@@@@ பட்டாபட்டி.. said...
அப்புறம் அண்ணன் முன்னிலையில் ரோஸ்விக் பட்டாபட்டி உருவப்படும்.///

என்னது பட்டாப்பட்டி ரோஸ்விக்கு போடுவாரா...சை...,
ரோஸ்விக்கு பட்டாப்பட்டி போடுவாரா.. ? யோவ் பட்டாப்பட்டி...வரவர ரொம்ப ரோலிங் ஆகுதே ஏன்யா...?

பட்டாபட்டி.. said...

இறையவனை வேண்டுகிறேன்.
//

ஒருவேளை.. பெருமாள் கோயில்ல.. உண்டக்கட்டி தீர்ந்து போனதை ..கவிதையில குத்திக்காண்பிக்கிறாரோ?...

மங்குனி அமைசர் said...

வெளியூரு எது சொன்னாலும் தெளிவா சொல்லுடா , ரொம்பா குழப்பமா இருக்கு

பட்டாபட்டி.. said...

எக்கணம் ஏங்குகிறேன்
//

இதுக்கு இந்த பதிவின் படைப்பாளி(?),.. தலைப்பிலேயே பதில் சொல்லீட்டாரு.. அப்பால.. அடுத்த வரி?....

பட்டாபட்டி.. said...

ஆமா...வெளியூரு.. கவிதைய.. கீழிருந்து படிக்கனுமா?.. இல்ல மேலிருந்தா?..

நான்பாட்டுக்கு ரிவர்ஸ் கியர்ல படிக்கிறேனே.. இன்னக்கு எனக்கு உண்டகட்டி கிடைக்குமா?

Veliyoorkaran said...

@@@@@பட்டாபட்டி.. said...
யாரோ சேக்கிழாராம்.. அவரோட பேரனை கூட்டிக்கிட்டு விளக்கசொல்றேன்....////

இதென்ன போங்கா இருக்கு..எழுதறது ஒரு ஆளு...விளக்கறது வேற ஒரு ஆளா..நான் ஒத்துக்க மாட்டேன்....! ஆகையால் பதினெட்டு பட்டி மக்களுக்கும் தெரிவப்பது என்னவென்றால்...இன்னும் பத்து நிமிஷத்தில் பிரபாகர் அண்ணேன் வந்து இந்த கவிதைக்கு விளக்கம் கொடுக்க பத்திரி ரைடு இல்லையென்றால் வேறு வழியில்லாமல் பிரபாகர் அண்ணனை போட்டு தள்ளும் அபாக்கிய சூழ்நிலைக்கு நாங்கள் ஆள்ளக்கபடுவோம் என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம்..! :)

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

எக்கணம் ஏங்குகிறேன்
//

இதுக்கு இந்த பதிவின் படைப்பாளி(?),.. தலைப்பிலேயே பதில் சொல்லீட்டாரு.. அப்பால.. அடுத்த வரி?....////

லாலாக்கு டோல் டப்பிம்மா

பட்டாபட்டி.. said...

சக்கரம்தான் வாழ்வுமது
//

இது ஏதோ மது..மாது-னு கவுச்சியா சொல்லியிருக்காரு....

மங்குனி அமைசர் said...

நாங்கள் ஆள்ளக்கபடுவோம் என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம்..! :)////

வேறு வழியே இல்லாததால் , நானும் இதை வழிமொழிகிறேன் ( ஆமா பிரபாகர் யாரு வெளியூரு ?)

பட்டாபட்டி.. said...

பாரமல் இருப்பாரும்

//

ஒருவேளை.. உம்...உம்... பார....பார......உம்

கண்டுபிடிச்சுட்டேன்... பாமரன் ..

அடப்பாவி.. கடைசியா ஆசானை போட்டு தள்ற அளவுக்கு போயிட்டாரு....

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

சக்கரம்தான் வாழ்வுமது
//

இது ஏதோ மது..மாது-னு கவுச்சியா சொல்லியிருக்காரு....////

சைடிச்ச பத்தி என்ன விளக்கம் கொடுத்திருக்காருன்னு பாரு

Veliyoorkaran said...

@@@மங்குனி அமைசர் said...
வெளியூரு எது சொன்னாலும் தெளிவா சொல்லுடா , ரொம்பா குழப்பமா இருக்கு
////

தெளிவா சொல்லிட்டா மட்டும் உங்களுக்கு புரிஞ்சு கிழிச்சிரும்...! (ஏண்டா லூசாடா நீ...நாங்க சொல்றது எங்களுக்கே பாதி நேரத்துல புரியாது...எங்ககிட்ட போய் டீடைல் கேக்குற...! யோவ் பட்டாப்பட்டி..மங்குனி எப்பதான்யா டெவலப் ஆவான்..) :)

பட்டாபட்டி.. said...

( ஆமா பிரபாகர் யாரு வெளியூரு ?)
//

மண்டையில போடு..
மண்டையில போடு..

பிரபாகரை பற்றி தெரியாம எதுக்குய்யா உயிரோட இருக்க?..

பட்டாபட்டி.. said...

பக்கத்தில் நெருப்பென
//


சிகரெட் பிடிப்பது.. அடுத்தவருக்கு கேடு.. அதைதான் சொல்லியிருக்காருனு நினைக்கேன்

ரோஸ்விக் said...

அடப்பாவிகளா கொஞ்சம் வேலையை பார்த்துட்டு வாரதுக்குள்ள என்னையும்... பிரபாகர் அண்ணனையும் நாசம் பண்ணிட்டீங்களே... இருங்கடா எல்லா கமெண்ட்டையும் தூக்குறேன்.

போயி அவரு பதுவுல கும்முங்கையா...

மங்குனி அமைசர் said...

புரியாது...எங்ககிட்ட போய் டீடைல் கேக்குற...! யோவ் பட்டாப்பட்டி..மங்குனி எப்பதான்யா டெவலப் ஆவான்..) :)/////

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , அனால் தர்மம் மீண்டும் வெல்லும் ,,,,................... இத தான சொல்ல வர்ற ???

பட்டாபட்டி.. said...

Blogger ரோஸ்விக் said...

அடப்பாவிகளா கொஞ்சம் வேலையை பார்த்துட்டு வாரதுக்குள்ள என்னையும்... பிரபாகர் அண்ணனையும் நாசம் பண்ணிட்டீங்களே... இருங்கடா எல்லா கமெண்ட்டையும் தூக்குறேன்.

போயி அவரு பதுவுல கும்முங்கையா..
//

நீ மட்டும் தூக்கு மகனே.. அம்மணமா...மணற்கேணில வந்து புகார் கொடுப்போம்...

Veliyoorkaran said...

@@@@@பட்டாபட்டி.. said...
கண்டுபிடிச்சுட்டேன்... பாமரன் ..
அடப்பாவி.. கடைசியா ஆசானை போட்டு தள்ற அளவுக்கு போயிட்டாரு..../////

ஆகா..என் அன்பு தலைவன்...எனதருமை சகோதரன்...பாமரன் பக்கங்களையே போட்டு தள்ற அளவுக்கு போய்ட்டார பிரபாகர் அண்ணேன்..ஒரு அன்பு தூணையே கவிதை எழுதி கலாய்க்கற அளவுக்கு இந்த பிரபகார் அண்ணன் பீசுக்கு துணிவு குடுத்து யார்...ஐயகோ...! பட்டாப்பட்டி...இந்த கொலை முயற்ச்சிய நாம தடுத்தே ஆகணும்...! எதாச்சும் பண்ணுயா...! :)

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

( ஆமா பிரபாகர் யாரு வெளியூரு ?)
//

மண்டையில போடு..
மண்டையில போடு..

பிரபாகரை பற்றி தெரியாம எதுக்குய்யா உயிரோட இருக்க?..////

அந்த கறிக்கடை வச்சு இருக்காரே பாய் , அவரா ????

மங்குனி அமைசர் said...

50

ரோஸ்விக் said...

தில் இருந்தா நீங்க ரெண்டு பேரும் உங்க காண்டாக்ட் டீடைல் குடுத்துட்டு பேசுங்கய்யா... பார்ப்போம்.

மங்குனி அமைசர் said...

எதாச்சும் பண்ணுயா...! :)/////

என்னடா இவன் அசிங்க அசிங்கமா பேசுறான்

மங்குனி அமைசர் said...

ரோஸ்விக் said...

தில் இருந்தா நீங்க ரெண்டு பேரும் உங்க காண்டாக்ட் டீடைல் குடுத்துட்டு பேசுங்கய்யா... பார்ப்போம்.////

யோவ் கட்காரரே சூட மூணு டீ போடு , தொழில கவனிக்கிறத விட்டு இடைல என்னா கேள்வி ????

பட்டாபட்டி.. said...

தில் இருந்தா நீங்க ரெண்டு பேரும் உங்க காண்டாக்ட் டீடைல் குடுத்துட்டு பேசுங்கய்யா... பார்ப்போம்.//


என்னாய்யா.. வரவர எங்க பதிவ படிக்கிறதில்லையா?..

24 மணி நேரம் டோல் பிரீ நம்பர் கொடுத்திருக்கேன் பாரு...

ஆமா..தில்-னா என்னாய்யா.. புச்சாயிருக்கு?...

Veliyoorkaran said...

@@@@ரோஸ்விக் said...
இருங்கடா எல்லா கமெண்ட்டையும் தூக்குறேன்.
போயி அவரு பதுவுல கும்முங்கையா...///

தம்பி ரோஸ்விக்கு...இதுல ஒரு கமென்ட் மிஸ் ஆனா மகனே இருக்குடி உனக்கு...நீ தூக்கு பார்ப்போம்...?

பட்டாபட்டி.. said...

போயி அவரு பதுவுல கும்முங்கையா...
//

அவருனா?.. எவரூ?....

கோவி கண்ணன் சிவனேனு வேலை செஞ்சிட்டு இருக்காரு.. இப்ப எதுக்கு அவரை இழுக்கிறே...

Veliyoorkaran said...

@@@@ மங்குனி அமைசர் said...
யோவ் கட்காரரே சூட மூணு டீ போடு , தொழில கவனிக்கிறத விட்டு இடைல என்னா கேள்வி ????////


ஹா ஹா ஹா (மங்குனி ஸ்பெசல்..) :)

பட்டாபட்டி.. said...

Blogger Veliyoorkaran said...

@@@@ரோஸ்விக் said...
இருங்கடா எல்லா கமெண்ட்டையும் தூக்குறேன்.
போயி அவரு பதுவுல கும்முங்கையா...///

தம்பி ரோஸ்விக்கு...இதுல ஒரு கமென்ட் மிஸ் ஆனா மகனே இருக்குடி உனக்கு...நீ தூக்கு பார்ப்போம்...?
//

இடமே எங்க கட்டுப்பாட்ல இருக்கு.. வந்து தூக்குவாராம்...

தூக்கு தொரை..அப்புறம் இருக்கு....

பட்டாபட்டி.. said...

இனமழித்து அக மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று
சிறப்புறுத்தும் தாய்நாட்டின்
சிறுமையால் நாணி
சிந்தை யெல்லாம் கொதிக்க
தமிழ் காக்கா தமிழிருக்க
தலை குனிந்து வெட்கி
என் செய்வேன் தமிழே...
என்னிய உறவே...
/

அடுத்ததுக்கு விளக்கஉறை... சாரிப்பா..ஆணுறைங்கிறமாறி சொல்லீட்டேன்.. இரு..சீக்கிரமா விளக்கறேன்

Veliyoorkaran said...

@@@@பட்டாபட்டி.. said...
கோவி கண்ணன் சிவனேனு வேலை செஞ்சிட்டு இருக்காரு.. இப்ப எதுக்கு அவரை இழுக்கிறே...///


என்னது ரோஸ்விக்கு கோவி கண்ணன் அண்ணன கலாய்க்கறானா...யோவ் பட்டாப்பட்டி..என்னால இத தாங்கிக்க முடியலையா...கோவி கண்ணன் அண்ணனுக்கு ஒரு பிரச்சனைனா வெளியூர்காரன் கொந்தளிச்சு தீக்குளிப்பாங்கறது தமிழ் பதிவுலகத்துக்கே தெரியும்..இது எப்டியா இந்த ரோஸ்விக் பயலுக்கு தெரியாம போச்சு...! :)

மங்குனி அமைசர் said...

இருங்க நான் போயி டீ சாப்ட்டு வர்றேன் , இந்த நாதாரி டீ தரமாட்ட்றான்

பட்டாபட்டி.. said...

இன்முகத்தில் வரவேற்று
//

ரோஸ்விக் ஊருக்கு போனபோ..ஏர்ஹோஸ்டல்..சிடுசிடுனு விழுந்தாங்களாம்,..

ஆனா அண்ணன் போகும்போது இன்முகமா வரவேற்றார்களாம்.. அதுதான் மேட்டரு...

பட்டாபட்டி.. said...

இது எப்டியா இந்த ரோஸ்விக் பயலுக்கு தெரியாம போச்சு...! :)
//

என்னமோ தில்..கில்னு சொல்றாப்புல....

ஒருவேளை பச்சிட நாக்குல படாமா சாப்பிட்டுருக்குமோ?

Veliyoorkaran said...

@@@@பட்டாபட்டி.. said...
இனமழித்து அக மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று
சிறப்புறுத்தும் தாய்நாட்டின்
சிறுமையால் நாணி
சிந்தை யெல்லாம் கொதிக்க
தமிழ் காக்கா தமிழிருக்க
தலை குனிந்து வெட்கி
என் செய்வேன் தமிழே...
என்னிய உறவே...///

யோவ் பட்டாப்பட்டி..ஒருவேளை தமிழ்ல பெரிய கட்டுரை எழுதி அத எண்ணெய் சட்டில மெளகு தூக்கலா போட்டு வறுத்து துண்டு துண்டாக்கி அத கவிதைங்கற பேர்ல போஸ்ட் பண்ணிருவாரோ...மல்லாக்க படுத்துக்கிட்டு படிச்சாலும் ஒன்னும் புரிய மாட்டேங்குதேயா...ஒரு வேலை நாம ரெண்டு பெரும் ஞான சூனியன்களோ..! :)

பட்டாபட்டி.. said...

சிந்தை யெல்லாம் கொதிக்க
//

சிங்கப்பூர்ல வெயிலாமாம்...

பட்டாபட்டி.. said...

ஒரு வேலை நாம ரெண்டு பெரும் ஞான சூனியன்களோ..! :)

//
சே..சே.. இருக்காது...
ரோஸ்விக்க பதில் சொல்லமாட்டீங்கிறான்.. அப்ப கண்டிப்பா.. யாருக்கும் புரிஞ்சிருக்காது..

சரி.. ஆசான் சாரை கேட்கலாமுனா.. அண்ணன் அவரையும் வகுந்தெடுத்துட்டார்..
இப்ப என்னா பண்ணாலாம்?..

பட்டாபட்டி.. said...

தமிழ் காக்கா தமிழிருக்க

//

இது ஸ்பெல்லிங் மிஸ்டுக்குபா..

தமிழ் காக்கா ஆய்..யிருக்க..னு படிங்க...

பட்டாபட்டி.. said...

என் செய்வேன் தமிழே...
//

அடப்பார்றா.. தமிழச்சிய இழுக்கிறாரு...

பட்டாபட்டி.. said...

என்னிய உறவே
//

எண்ணிய எண்ணியாங்க இருப்ப.. காய் இருக்க கனிகவந்தட்டு....

Veliyoorkaran said...

@@@@பட்டாபட்டி.. said...
சிந்தை யெல்லாம் கொதிக்க
//
சிங்கப்பூர்ல வெயிலாமாம்...///

ஆகா அருமையான கவிதை பட்டாப்பட்டி இது..நீ மேல சொல்லு.மேல சொல்லு...! முழு அர்த்தத்தையும் தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்..! :)

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி.. said...
என் செய்வேன் தமிழே...
//
அடப்பார்றா.. தமிழச்சிய இழுக்கிறாரு...//

ஹா..ஹா...பிரபாகர் அண்ணன்...நீங்க கவிதை எழுதி இனிமே நான் எங்கயாச்சும் பார்த்தேன்...அன்னிக்கு இருக்கு உங்களுக்கு...! :)

யோவ் பட்டாப்பட்டி..வேற யாராச்சும் நல்ல கவிங்கர்கள் இங்க இருக்காங்களான்னு பாரு... ? :)

பட்டாபட்டி.. said...

ஆகா அருமையான கவிதை பட்டாப்பட்டி இது..நீ மேல சொல்லு.மேல சொல்லு...! முழு அர்த்தத்தையும் தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்..! :)
//

தனி தனியா பிரிச்சு படிச்சா.. கவிதை சூப்பராயிருக்கு.. ஆனா சேர்ஹ்து படிச்சா.. ஏதோ செக்ஸ் கதைமாறி இருக்கும்...

இது புத்துகவிதைப்பா...

இப்ப பாரு.. சிங்கப்பூர்ல வெயிலாம்.. அதனால காண்டம் விற்கலையாம.

Veliyoorkaran said...

@ Pattapatti.

யோவ் பட்டாப்பட்டி....இங்குண குத்துனது போதும்யா..வா தெக்கால போய் யாராச்சும் ராவா சிக்குரான்கேளானு பார்ப்போம்....! :)

@To all..//

ராணுவ கட்டுப்பாடு விலக்கிகொள்ளபடுகிறது...! :)

பட்டாபட்டி.. said...

ஏனோ என்றும், இது வீணோ என்றும் எழுதாமல்...பெயருக்கும், பெருமைக்கும் எழுதாமல்...நாலு பேருக்கும் இந்த ஊருக்கும் எழுதுவோமென....என்னில் முளைத்தவைகளையும், புதைந்த்தவைகளையும் எழுதுகிறேன்.
//


ஓ...சரிதான்..

சரி..சரி எனக்கு மட்டும் சொல்லு.. என்னா முளைச்சது?


பதில் சரியா இருந்தா.. புடுங்குன இடத்தை, உனக்கே தானமா கொடுத்துட்டு போயிடரோம்...

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ கலக்கல் ரோஸ்வின்... தனியா உக்காந்து சிரிக்க சிரிச்சட்டு இருக்கேன்.

அதுல முருகேசன் மேட்டரு டாப்பு...:)))

பட்டாபட்டி.. said...

ஆமா.. பொழச்சுப்போ....

வார்த்தை said...

:)
ROFL

பட்டாபட்டி.. said...

அதுல முருகேசன் மேட்டரு டாப்பு...:)))
//

வெளியூரு.. என்னமோ ”வெடிகுண்டு முருகேசன்” மேட்டரு போல..
அது தெரியாம கும்மிட்டோம்...

சரி.. பீல் ஆகாதே... நமக்கு வன்முறைனாவே பிடிக்காதுனு எல்லோரும் தெரியும்.. போலாம் வா....

பட்டாபட்டி.. said...

.வா தெக்கால போய் யாராச்சும் ராவா சிக்குரான்கேளானு பார்ப்போம்....! :)
//

ஓ.. திசை காட்டில காட்டுற பீச்சாங்கை பக்கமா?.. இதோ வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதான் சிங்கைல காட்டுத் தீ பரவுச்சே. நம்ம பட்டாவ அதுல தூக்கி போட்டிருக்கலாமே.

கக்கு - மாணிக்கம் said...

அட மூதேவி, ஆட்டோ காரங்கிட்டே எக்மோர் சில்ரன்ஸ் ஹாஸ்பிடல் போட ன்னு சொல்லிட்டு கொஞ்சம் கண்ணு அசந்தா, கொண்டாந்து கீழ்பாக்கம் ஹாஸ்பிடல இறக்கி உட்டுன்னானே !

ஆஹா ......அத்து ஆரு? ...............................அண்ணாத்த பட்டாபட்டியரே , சொகமா இருக்கியளா?
என்ன ..இங்கன இருக்கீய? ......இவுகள்லாம் ஆரு? உங்க கூட்டாளிகளா?
அந்த தம்பி ...... பேரன்ன? ...ரோசுவிக்கு .....ஆ ....நல்லாதான் எளுதுது.

அத்து ஆரு? ..வெளியூரு கார தம்பியா? ..யேன் இப்டி மொறச்சி பாக்குது.

ஐயோ....... நா வாறன். நமக்கு அடி வாங்க தெம்பில்ல சாமிகளா.!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// ஆமா..நீதானே பட்டாபட்டி?./////

ஹா ஹா ஹா ...,யோவ் பட்டாபட்டி குசும்புயா உனக்கு ......,

ரோஸ்விக் said...

அட வெண்ணைகளா... ஒரு மீட்டிங் முடிஞ்சு சாப்பிட போயிட்டு வர்றதுக்குள்ள இப்புடி நாசம் பண்ணிட்டு போயிட்டீகளே. படவா ராஸ்கல்ஸ் கையில சிக்குனீங்க கைமா பண்ணிடுவேன் ஆமா.

யோவ் பட்டா... நீ என்ன கோனாரா...? தமிழ் உரையெல்லாம் எழுதுற? போயி ரெண்டு பேரும் அழிச்சுகிழிச்சு ரெண்டாங்கிளாஸ்ல இருந்து படிச்சுட்டு வாங்கையா...

ரோஸ்விக் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாததா போட்டுட்டு ஓடிட்டானுக... பன்னாடைங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த ஊர்க்காரப்பயலுக அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்ல போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா..என்ன கீழே ஒரே ரத்தககளரியாக் கெடக்கு, பாவிப்பயலுக வந்து சலங்கை கட்டி ஆடியிருக்கானுக!

நாகராஜசோழன் MA said...

சலங்கை கட்டி ஆடுன பட்டாப்பட்டியை வாழ்த்தி எனது முதல் பின்னூட்டமிடுகிறேன்.

நாகராஜசோழன் MA said...

//Veliyoorkaran said...

திசைகாட்டியில் வெளியிடப்பட்ட இந்த பதிவின் பின்னூட்ட பகுதி ரெட்டைவால்சின் உத்தரவிற்கேற்ப பட்டாப்பட்டி மற்றும் வெளியூர்க்காரனின் கட்டுபாட்டிற்குள் வருகிறது...எப்போதும் போல தூக்க கலக்கத்தில் வந்து கலக்கிவிட்டீர்கள் திசைகாட்டி அருமையான பதிவு என்று பின்னூட்டமிடும் நண்பர்கள் தயவு செய்து அப்பாலிக்கா போய்விடுமாறு அன்புடன் எச்ச்சரிக்கபடுகிறார்கள்...இல்லாங்காட்டி ஓட ஓட இங்கயே வைத்து வெட்டி கொல்லபடுவார்கள் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்...!//


ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ரோஸ்விக். (அய்யயோ என்னோட கமெண்ட் மேல இருக்கிற மாதிரியே இருக்கே!? )

பட்டாபட்டி.. said...

சலங்கை கட்டி ஆடுன பட்டாப்பட்டியை வாழ்த்தி எனது முதல் பின்னூட்டமிடுகிறேன்.
//

கேட்டுச்சா.. கேட்டுச்சா.. சலங்கை சத்தம் கேட்டுச்சா?

பட்டாபட்டி.. said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ரோஸ்விக். (அய்யயோ என்னோட கமெண்ட் மேல இருக்கிற மாதிரியே இருக்கே!? )
//

நாங்க இடத்தை காலி பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு..
இனிமேல ரெடிமேட் கமென்ஸ் போடலாம்..ஸ்மைலி போடலாம்..

ரோஸ்விக்க தூக்கி நிறுத்தி.. மஞ்சக்குளிப்பாட்டலாம்..எங்களுக்கும் மானம் ரோசம் இருக்குள்ள.. அதனால வரமாட்டோம்...

( ஆமாய்யா.. இன்னைக்குதான் ...)

பட்டாபட்டி.. said...

ஆஹா ......அத்து ஆரு? ...............................அண்ணாத்த பட்டாபட்டியரே , சொகமா இருக்கியளா?
என்ன ..இங்கன இருக்கீய? ......இவுகள்லாம் ஆரு? உங்க கூட்டாளிகளா?
அந்த தம்பி ...... பேரன்ன? ...ரோசுவிக்கு .....ஆ ....நல்லாதான் எளுதுது.

அத்து ஆரு? ..வெளியூரு கார தம்பியா? ..யேன் இப்டி மொறச்சி பாக்குது.

ஐயோ....... நா வாறன். நமக்கு அடி வாங்க தெம்பில்ல சாமிகளா.!!!!
//

வாங்க சார்.. சலங்கை கட்டி ரொம்ப நாளாச்சு.. அதனால.. சும்மா டமாசுக்கு கட்டி பார்த்தோம்.. மெயின் ஷோ சீக்கிரம் வரும்..ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

92 கமென்ஸ் வாங்கி இன்னும் அவுட்(?) ஆகாமல் இருக்கும் அண்ணன் ரோஸ்விக்கை , பிரபாகர் அண்ணன் சார்ப்பாக வாழ்த்துகிறோம்..

VISA said...

:)

வானம்பாடிகள் said...

நான் அட்டண்டன்ஸ் குடுத்துட்டு எஸ்ஸாயிக்கறேன். பட்டா செம ஃபார்ம்ல இருக்காப்ல. :)

பட்டாபட்டி.. said...

வானம்பாடிகள் said...

நான் அட்டண்டன்ஸ் குடுத்துட்டு எஸ்ஸாயிக்கறேன். பட்டா செம ஃபார்ம்ல இருக்காப்ல. :)
.//


சும்மா லந்துக்குண்ணே...ஹி..ஹி

Rajesh V Ravanappan said...

நாலு எஞ்சினியர் உருவாக்கறதுக்கு 40 பேர கஷ்டப்படுத்துற சிஸ்டம் நம்ம படிப்பு சிஸ்டம்... சூப்பர் ரா சொன்னீங்க அண்ணாச்சி..

ரோஸ்விக் said...

ஆஹா கூகுளே இவனுகளுக்கு இன்னைக்கு சலங்கை கட்டி விட்டிருக்கும் போலியே! இந்த ஆட்டம் ஆடிருக்காணுக. அடப்பாவிகளா...

ரோஸ்விக் said...

Chitra - நன்றி சித்ரா. நல்ல வேளை நீங்க இந்த சுனாமிகளுக்கு முன்னாடி வந்துட்டு போயிட்டீக. :-)

ரோஸ்விக் said...

நாஞ்சில் பிரதாப் - பிரதாப் அப்படி தனியா உக்காந்து சிரிச்சா மட்டும் போதாது. அந்த முருகேசன் மாதிரி பொழைக்கிறது எப்புடின்னு நம்மளும் பாக்கணும்... :-)))

ரோஸ்விக் said...

வார்த்தை - நன்றி வார்த்தை. என்னாண்ணே வார்த்தையே இல்லாம சிரிச்சுட்டு போயிடீக... :-)))

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - சாமி காட்டுத்தீ சிங்கையில இல்ல. இந்தோனேஷியாவுல... நாங்க நல்லாயிருக்காது புடிக்கலையா உனக்கு. :-)

இவனுகளே அந்த காட்டுத்தீயில இருந்து தப்பிச்சு வந்து தானே இந்த ஆட்டம் போட்டிருக்கானுக.

ரோஸ்விக் said...

கக்கு - மாணிக்கம் - அண்ணே இந்த மூணு(பட்டா, வெளியூரு, மங்குனி) ஆட்டோகாரனுகளுகிட்டையும் அட்ரசே சொல்லவேணாம். அவனுகளாவே நம்மள கீழ்ப்பாக்கத்துல சேர்த்துருவாணுக.

நீங்களாவது தப்பிச்சு ஓடிடுங்க. :-))

ரோஸ்விக் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி - ஆமாயா இந்த பட்டாபட்டிக்கு குசும்பு ரொம்ப சாஸ்தியாடிச்சு. இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாதான் நம்ம எல்லாருக்கும் நல்லது.

ரோஸ்விக் said...

பன்னிக்குட்டி ராம்சாமி - சூறாவளியா இருந்தவனுக இன்னைக்கு சுனாமியா மாறி என்னை நொங்கு எடுத்துட்டு போயிட்டானுக பாஸ்.

ரோஸ்விக் said...

நாகராஜசோழன் MA - ஆமா நீ நல்லவனா கெட்டவனா...? அல்வா குடுக்குற கெட்டப்புல வேற இருக்க... நம்பலாமாயா? :-))

ரோஸ்விக் said...

VISA - நன்றி விசா. :-)

ஆமா நீங்க எந்த நாட்டு விசா? ;-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - அண்ணே ஓடிடுங்க ஓடிடுங்க... அது கிழக்கு பக்கமா வருது.... ;-)

ரோஸ்விக் said...

Rajesh V Ravanappan - நம்ம சிஸ்டத்துல நிறைய மாத்தனும் அண்ணே! எல்லாரும் எதுல சீக்கிரம் பணம் சம்பாதிக்கலாம்னுதான் திரியிறோம். படிப்புகள்ள ஒரு சிலவற்றிற்கு மட்டும் நம்மளே உயர்ந்த மதிப்பு குடுத்துக்குறோம். அது நல்லதான்னு தெரியல...

Cable Sankar said...

படிக்கப் போனா கஷ்டப்பட்டு பாஸாவுறதும், லீவ் எடுக்கனுமின்னா பில்டப் செஞ்சு எடுக்கறதும் சகஜம்தானே ரோஸு..:))

பட்டாபட்டி.. said...

படிக்கப் போனா கஷ்டப்பட்டு பாஸாவுறதும், லீவ் எடுக்கனுமின்னா பில்டப் செஞ்சு எடுக்கறதும் சகஜம்தானே ரோஸு..:))
//

ரோஸ்விக்.. உன்னோட பெருமை தெரியாம ஏதோ ஒளரிட்டம்பா..

எந்திரன் எடுத்த கேபிளார்கிட்ட சொல்லி எனக்கு ஒரு வேஷம் வாங்கி கொடுயா.. ப்ளீஸ்யா..

( பார்த்தையா..நானு..இங்கிலீசு எல்லாம் பேசறேன்..)

சே.குமார் said...

கலகலப்பான பதிவு.

ரோஸ்விக் said...

பாரு கேபிளார் பதிவோட முதல் பாராவை மட்டும் படிச்சிட்டு ஓடிட்டாரு... :-)))

தலைவரே ரொம்ப பிசியோ???

ரோஸ்விக் said...

பட்டா - நீ எங்கயா இங்கிலீஸ் படிச்ச?? இவ்வளவு அருமையாப் பேசுற...

எந்திரனை கேபிளார்தான் எடுத்தார்ங்கிற ரகசியத்தை இப்படி பொதுவெளில போட்டு உடைக்கிற...

ரோஸ்விக் said...

நன்றி சே.குமார் அண்ணே. (இந்த பட்டா என்னாடான்னா நான் பொலம்பிருக்கேன்னு சொல்லிட்டாப்புள)

பிரியமுடன் பிரபு said...

நம்மகிட்ட பொட்டி வாங்கவே பணமில்ல... \
///

ha ha

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Sorry for late!

//ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்....?//

பின்னூட்டங்களை எல்லாம் படிச்சப்புறம்,
ஏன்டா இந்தப் பதிவப் போட்டோம்.....?னு பீல் பண்றீங்களோ?