Wednesday, October 13, 2010

சிங்கபூருக்கு வாரீயளா? - செலவில்லாம...

உலகம் முழுதும் பரவியிருக்கிற என் சொந்தக்காரய்ங்களா!!! நல்லாயிருக்கீகளா? உங்களையெல்லாம் பாக்கனும்னு எங்களுக்கு ஆசை. சிங்கபூர் வாரியளா?? வாய்ப்பை நாங்க தாரோம். வாகையை நீங்க சூடுங்க...


கொடுத்திருக்கிற மூனு பிரிவுல, எது பத்தி நிறைய இருக்கோ உங்க அறிவுல... அதை தெரிவு செய்யுங்க.

தலைப்பை தலைக்குள்ள வாங்கி... தலைக்குள்ள இருக்குறத கட்டுரையா தழைக்க வைங்க..
 
எதுவும் பதிவு பண்ணத் தேவையில்லை... பதிவரா மட்டுந்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல... யாருவேணும்னாலும் எழுதலாம்... ஆனால் தமிழ்-ல தான் இருக்கணும்.


தலைப்புல அரசியல் பிரிவு இருக்கும்... மணற்கேணி மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டிகளிலும் வெற்றியாளர்களை கவுரவிப்பதிலும் அரசியலால் பிரிவுகள் இருக்காது... பயப்புடாமா வாங்க...

அறிவுசார்ந்த உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் போட்டியைப் பத்தி சொல்லுங்க...


ஓட்டுக்கும் கூட்டுக்கும் இங்க வேலையில்லை...

கட்டுக்கதைகளை எழுதி எழுதி பழகினது போதும்... மொக்கையே போடாம சக்கையா கட்டுரைகளை தயார் பண்ணுங்க. போட்டில வென்று சிங்கபூர் கிளம்ப தயாராகுங்க...

விதிகளை தெரிஞ்சுக்கிரனுமா?? அட உங்க விதியை இல்லங்க... போட்டிகளுக்கான விதிமுறைகளை இங்க போயி பாருங்களேன்... நல்லா கொடுத்துருக்காங்க டீட்டெயிலு...

இன்னும் என்னா வெயிட்டிங்கு... நாளும் நேரமும் ரன்னிங்கு... எழுதி அனுப்புனாத் தானே கிடைக்கும் வின்னிங்கு... ரெடி ஜூட் மக்கா... ஜூட்...







31 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா நானும் வரேன். ஏதாச்சும் ப்ளாக் டிக்கெட் கிடைக்குமா.

போட்டியில் பங்குபெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

தகவலுக்கு நன்றி ரோஸ்விக். வெற்றி பெறுபவர்களுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

தகவலுக்கு நன்றி ரோஸ்விக்.

பட்டாபட்டி.. said...

@denim
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
//


அண்ணே.. தயவு செய்து..இவருக்கே சிங்கப்பூர் டிக்கெட் கொடுத்திடுங்க.. புண்ணியமா போகும்..
( பாவம்.. எல்லா ப்ளாக்ல போயி ஒரே மாறி..ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காரு..)


( Standard Template.. ஹி..ஹி..)

cheena (சீனா) said...

அன்பின் ரோஸ்விக்

அருமையான வாய்ப்பு -அழைப்பு - நழுவ விடாமல் பயன படுத்த அனைவரும் தயாராகுக -

பங்கெடுக்கப் போகும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

சங்கவி said...

பங்கெடுக்கும், வெற்றி பெற போகும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்....

தியாவின் பேனா said...

தகவலுக்கு நன்றி

Chitra said...

ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.... எப்படி இருக்கீங்க?

sweatha said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ரோஸ்விக் said...

பட்டா உங்க தாத்தாவை பத்தி எழுதி இருக்காங்க... :-)

http://vrinternationalists.wordpress.com/2010/10/14/gandhi-a-traitor/

ரோஸ்விக் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) - ப்ளாக்-ல டிக்கெட் ரெடி... டயர்ல வச்சு கட்டி இழுத்துட்டு வருவாங்க பரவாயில்லையா?? :-)

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நீங்களும் கலந்துக்கலாமே ஸ்ரீராம்...

ரோஸ்விக் said...

சே.குமார் - நீங்களும் முயற்சியுங்கள் குமார்...

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - பாவம் அவரு அவசரத்துல திரியிறாரு விட்ருயா... :-)
எதுவும் இரங்கல் பதிவா இருந்தால் கூட அவரு இதைத்தான் போடுவாரு போல... நானும் பல இடங்கள்ள பார்த்தேன்...

ரோஸ்விக் said...

cheena (சீனா) - எங்கள் சார்பா அனைவரையும் அழைப்பு விடுத்ததற்கு நன்றிகள் ஐயா... நீங்களும் தயாராவீர்கள் என நம்புகிறேன். :-)

ரோஸ்விக் said...

சங்கவி - மிக்க நன்றி சங்கவி.

ரோஸ்விக் said...

தியாவின் பேனா - மிக்க நன்றி தியா. உங்க பேனா கலந்துக்கிருதா?? :-)

ரோஸ்விக் said...

Chitra - நல்லா இருக்கேன் சித்ரா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
உங்க குடும்பத்தார் அனைவரும் நலமா? வெட்டிப்பேச்சு வெரைட்டியா போய்கிட்டு இருக்கு போல... :-)

ஜெரி ஈசானந்தன். said...

படு சோக்கா தான் எழுதியிருக்கீக ....மருதைக்கு வந்தீகலாமுல...நான் அப்ப சென்னைக்கு போயிருந்தேன்....அடுத்து வரப்ப மறக்காம கடுதாசி போடுங்கப்பு...

ரோஸ்விக் said...

ஆமா சார்... அது ஒரு மின்னல் வேக சந்திப்பா போயிடுச்சு... உங்களையும் சந்திக்க முடியல... நம்ம மக்களோட நிறைய நேரம் செலவழிக்க முடியல...
கண்டிப்பா அடுத்த தடவை சிந்திப்போம். இடையில் அழைக்கிறேன்..

மங்குனி அமைசர் said...

யோவ் ரோஸு , பிட்டு ஏதாவது இருந்தா குடுய்யா ? நீ ஒரு 50 மார்க்குக்கு பிட்டு குடு மீதிக்கு பட்டாபட்டிகிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்

கே.ஆர்.பி.செந்தில் said...

மணற்கேணி க்கு என் வாழ்த்துக்களும், பாராட்டும் ..

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்

பிரியமுடன் பிரபு said...

ULLEN AYYA

நாஞ்சில் மனோ said...

யோவ் சவுக்கு பாண்டி, எங்கேய்யா போயிருந்தீர் இவளவு நாளும்??

ரோஸ்விக் said...

மங்குனி அமைசர் - 50 மார்க்குக்கு உள்ள பிட்டை ஒரு டம்ளர் மோருக்கு, வெளியூர்க்காரன்கிட்ட வித்துட்டேன்யா...

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - நன்றி அண்ணே!

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் & பிரியமுடன் பிரபு - வாங்க சிங்கை சிங்கங்களா.... :-)

ரோஸ்விக் said...

நாஞ்சில் மனோ - வாங்கண்ணே! போட்டோவெல்லாம் வசந்த் அண்ட் கோ ஸ்டையில்ல இருக்கு... :-)
பதிவு எழுதாததுக்கு பல காரணங்கள். லீவு சொல்லிட்டு போற அளவுக்கு நம்ம இன்னும் வளரல... விருப்பமும் இல்ல. :-)))

விந்தைமனிதன் said...

ரைட்டு... கலந்துகிட்டு பரிச அள்ளிடுவோம்!

ஆமாம்.... கட்டுரையில தப்பும் தவறும் இருந்தா ஒரு அம்பது, நூற கொறச்சிகிட்டு பாக்கிய கொடுப்பியளா?!

Veliyoorkaran said...

@@@@ரோஸ்விக் said...
பட்டாபட்டி.. - பாவம் அவரு அவசரத்துல திரியிறாரு விட்ருயா... :-)
எதுவும் இரங்கல் பதிவா இருந்தால் கூட அவரு இதைத்தான் போடுவாரு..///


Ha..Haa....Marana kalaaai..! :)