கொடுத்திருக்கிற மூனு பிரிவுல, எது பத்தி நிறைய இருக்கோ உங்க அறிவுல... அதை தெரிவு செய்யுங்க.
தலைப்பை தலைக்குள்ள வாங்கி... தலைக்குள்ள இருக்குறத கட்டுரையா தழைக்க வைங்க..
எதுவும் பதிவு பண்ணத் தேவையில்லை... பதிவரா மட்டுந்தான் இருக்கணும்னு அவசியம் இல்ல... யாருவேணும்னாலும் எழுதலாம்... ஆனால் தமிழ்-ல தான் இருக்கணும்.
தலைப்புல அரசியல் பிரிவு இருக்கும்... மணற்கேணி மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் போட்டிகளிலும் வெற்றியாளர்களை கவுரவிப்பதிலும் அரசியலால் பிரிவுகள் இருக்காது... பயப்புடாமா வாங்க...
அறிவுசார்ந்த உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் போட்டியைப் பத்தி சொல்லுங்க...
ஓட்டுக்கும் கூட்டுக்கும் இங்க வேலையில்லை...
கட்டுக்கதைகளை எழுதி எழுதி பழகினது போதும்... மொக்கையே போடாம சக்கையா கட்டுரைகளை தயார் பண்ணுங்க. போட்டில வென்று சிங்கபூர் கிளம்ப தயாராகுங்க...
விதிகளை தெரிஞ்சுக்கிரனுமா?? அட உங்க விதியை இல்லங்க... போட்டிகளுக்கான விதிமுறைகளை இங்க போயி பாருங்களேன்... நல்லா கொடுத்துருக்காங்க டீட்டெயிலு...
இன்னும் என்னா வெயிட்டிங்கு... நாளும் நேரமும் ரன்னிங்கு... எழுதி அனுப்புனாத் தானே கிடைக்கும் வின்னிங்கு... ரெடி ஜூட் மக்கா... ஜூட்...
30 comments:
அண்ணா நானும் வரேன். ஏதாச்சும் ப்ளாக் டிக்கெட் கிடைக்குமா.
போட்டியில் பங்குபெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி ரோஸ்விக். வெற்றி பெறுபவர்களுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி ரோஸ்விக்.
@denim
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
//
அண்ணே.. தயவு செய்து..இவருக்கே சிங்கப்பூர் டிக்கெட் கொடுத்திடுங்க.. புண்ணியமா போகும்..
( பாவம்.. எல்லா ப்ளாக்ல போயி ஒரே மாறி..ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காரு..)
( Standard Template.. ஹி..ஹி..)
அன்பின் ரோஸ்விக்
அருமையான வாய்ப்பு -அழைப்பு - நழுவ விடாமல் பயன படுத்த அனைவரும் தயாராகுக -
பங்கெடுக்கப் போகும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பங்கெடுக்கும், வெற்றி பெற போகும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்....
தகவலுக்கு நன்றி
ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.... எப்படி இருக்கீங்க?
http://vrinternationalists.wordpress.com/2010/10/14/gandhi-a-traitor/
எதுவும் இரங்கல் பதிவா இருந்தால் கூட அவரு இதைத்தான் போடுவாரு போல... நானும் பல இடங்கள்ள பார்த்தேன்...
உங்க குடும்பத்தார் அனைவரும் நலமா? வெட்டிப்பேச்சு வெரைட்டியா போய்கிட்டு இருக்கு போல... :-)
படு சோக்கா தான் எழுதியிருக்கீக ....மருதைக்கு வந்தீகலாமுல...நான் அப்ப சென்னைக்கு போயிருந்தேன்....அடுத்து வரப்ப மறக்காம கடுதாசி போடுங்கப்பு...
கண்டிப்பா அடுத்த தடவை சிந்திப்போம். இடையில் அழைக்கிறேன்..
யோவ் ரோஸு , பிட்டு ஏதாவது இருந்தா குடுய்யா ? நீ ஒரு 50 மார்க்குக்கு பிட்டு குடு மீதிக்கு பட்டாபட்டிகிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்
மணற்கேணி க்கு என் வாழ்த்துக்களும், பாராட்டும் ..
வாழ்த்துக்கள்
ULLEN AYYA
யோவ் சவுக்கு பாண்டி, எங்கேய்யா போயிருந்தீர் இவளவு நாளும்??
பதிவு எழுதாததுக்கு பல காரணங்கள். லீவு சொல்லிட்டு போற அளவுக்கு நம்ம இன்னும் வளரல... விருப்பமும் இல்ல. :-)))
ரைட்டு... கலந்துகிட்டு பரிச அள்ளிடுவோம்!
ஆமாம்.... கட்டுரையில தப்பும் தவறும் இருந்தா ஒரு அம்பது, நூற கொறச்சிகிட்டு பாக்கிய கொடுப்பியளா?!
@@@@ரோஸ்விக் said...
பட்டாபட்டி.. - பாவம் அவரு அவசரத்துல திரியிறாரு விட்ருயா... :-)
எதுவும் இரங்கல் பதிவா இருந்தால் கூட அவரு இதைத்தான் போடுவாரு..///
Ha..Haa....Marana kalaaai..! :)
Post a Comment