கடத்தி கொலை!
அன்றாட செய்திகள் கண்டு
அயற்சியாய் தானிருக்கிறது...
சந்ததி செய்த பிழைகளா? - இல்லை
தாய்தந்தையரின் சந்திப்பிழைகளா?
சிந்தை பிறழ்ந்தவர்களா? - இல்லை
சிதறிய விந்தில் பிறந்தவர்களா?
மிருக இனத்தின் பகுதியா? - இல்ல
மனித இனத்தின் விகுதியா?
விலங்குகள் கூட சீண்டுவதில்லை
தம்மின மாற்றான் குட்டிகளை
எவ்வெதிர்ப்புக்கேனும்...
காதலில் பிறந்தவர்களா? - இல்லை
கழுகு, பருந்துகளின் எச்சங்களில்
கருவுற்றவர்களா? - அவைகளுக்குத்தான்
குட்டி உண்ணும் பழக்கம்...
இவர்களுக்கும் ஆற்றறிவு
கணக்களவில் மட்டும்...
குலவாரிசுகளைக் குதறிய - இவர்கள்
குறியின் குறுக்குவெட்டுத்தோற்றம்
கண்காட்சியாகட்டும் காவல்துறையே!
பிறப்புறுப்பின் வழி பிறந்தவர்களா? - இல்லை
பிறிதொரு உறுப்பின் வழியோ?
கருவின் உதிரம் குடிக்கத்துடித்த சைக்கோ
கேட்டிருந்தால் பெற்றவளே அனுப்பியிருப்பாள்
மாதம் மூன்று நாட்கள் பார்சலாய்...
குரோதங்களைக்
குட்டிகளிடம் காட்டுமுனக்கு
மூளை எந்த மூலையிலிருக்கிறது? - உன்
விதைப்பையில் விந்துநீர்த்து
வெற்றுக்காற்று நிரம்ப்பட்டும்... - உன்
வீரமெல்லாம் அதைச்சுமக்கவே
விரையம் செய்யப்பட வேண்டும்...
42 comments:
soooooopparbbbbbbbbbbb
அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
படிக்க படிக்க உங்கள் உணர்வை உணரமுடிகிறது
பிறப்புறுப்பின் வழி பிறந்தவர்களா? - இல்லை
பிறிதொரு உறுப்பின் வழியோ?
ஒரு மனிதனின்/ குழந்தையின் குணா நலன்களை, அவர் வெளிவரும் உடல் உறுப்பின் வாசலா தீர்மானிக்கிறது.
சுக பிரசவம் மூலம் பிறக்கும் குழந்தைக்கும், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கும் குண நலன்களில் வேறுபாடு இருக்கிறதா.
பாலியல் தொழிலாளியின் மகன் என்பதே கேட்ட வார்த்தையா என்று ஆய்வு செய்ய வேண்டிய காலம் இது.
பிறப்பு மட்டுமே அல்லது வளர்ப்பு மட்டுமே ஒரு குழந்தையின் குணங்களை தீர்மானிப்பது இல்லை. (they say nurture 70%, nature 30%)
பாலியல் தொழிலாளியின் குழந்தைகள் எல்லாரும் தீய எண்ணங்களுடன் தான் இருப்பார்கள் என்று முடிவு செய்து விட முடியாது.
Excellent
ராம்ஜி...
நீங்கள் தர்க்க ரீதியான வாதத்தை முன் வைக்கிறீர்கள். உங்கள் வாதத்தில் உள்ள நியாயத்தை ஒப்புக் கொள்கிறேன். ரோச்விக் கக்குவது உணர்வு ரீதியான கோபக்கனல்களை. அதில் உள்ள நியாயத்தையும் நாம் மெச்ச வேண்டும் என நான் எண்ணுகிறேன்.
sari giri- agreed, u r right
அதைக் கோபமாகக் கேட்டிருக்கிறேன் இங்கே.
நேற்று கோவையைச் சார்ந்த ஒரு தொழிலதிபரின் மகளையும், மகனையும் கடத்திய அந்த மிருகத்துக்கான பதிவு இது. பாவம் அந்தப் பிஞ்சுக்குழந்தை இறந்து நீரில் மிதந்தது. இது போல பல செய்திகள் நாம் கேள்விப்பட்டதுண்டு... அந்த மிருகங்களுக்கான எனது கேள்விகளும், கோபங்களும் இந்தப்பதிவு.
உனக்கும் இன்னொருவனுக்கும் பிரச்சனையென்றால், அந்த பிரச்சனையை அவனுடன் மோதித்தீர்த்துவிடு... பாவம் அவர்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள்?
ரோஸ்விக் இது பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கலாம், சந்ததிகள் என்பவர்கள் யார், பாவமும் புண்ணியமும்(ஆன்மீகம் சொல்ற பாவமும் புண்ணியமும் அல்ல இது) எப்படி சந்ததிக்கு போகின்றது என்று ஆராய்ந்தால் இன்னும் புரியலாம்.... குழந்தைகள் கடத்தப்படுவது எளிதானது மட்டுமின்றி குழந்தைகள் கடத்தப்பட்டால் மீட்க என்ன விலையும் கொடுக்க தயாராக இருப்பார்கள் பெற்றோர்கள், ஏனெனில் அவர்கள் வெறும் குழந்தைகள் அல்ல, அந்த குழந்தைகள் தான் அவர்கள், அவர்களை அவர்களே மீட்கிறார்கள்... ஆண்குறியின் அரசியல் பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.... வாரிசுகளின் மீதான ஈர்ப்பு ஏன்? சரித்திர நாயகனாக வரவேண்டிய ஆட்களெல்லாம் வாரிசுகளால் சீப்பட்டு நாறிக்கிடக்கும் கருணாநிதிக்கு ஏனிந்த நிலைப்பாடு என்றால் மார்க்ஸ் பேசும் ஆண்குறி அரசியல் தான் காரணம்...
பணத்திற்காக குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் அளவுக்கு சூழல் இருக்கிறது என்றால் .. தேசம் தவறான பாதையல் செல்கிறது என்று அர்த்தம்..
அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
கருவின் உதிரம் குடிக்கத்துடித்த சைக்கோ
கேட்டிருந்தால் பெற்றவளே அனுப்பியிருப்பாள்
மாதம் மூன்று நாட்கள் பார்சலாய்...--//
உன் கோபத்தை இந்த வரிகளில் பார்த்தேன்...
அறச் சீற்றத்திற்கு தலை வணங்குகிறேன்.
அந்த செய்தி படித்தவுடன் மனதில் தோன்றியது அந்த குற்றவாளியை மிக கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே.அந்த தண்டணை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்பதே.
இந்த குற்றவாளிக்காக வழக்காட எந்த வழக்கறிஞரும் முனவர மாட்டோம் என தீர்மானம் இயற்றிய கோவை வழக்கறிஞர்க சங்கத்திற்கு என் வாழ்த்துக்கள்
உங்கள் பொதுவான கோபத்தைப் போலவே ராம்ஜியின் விமர்சனத்தை ரொம்பவே ரசித்தேன். யோசித்தேன்.
ஏறக்குறைய 6 கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் எத்தனை பத்திரிக்கைகள் உண்மை விசயங்களுக்கும், மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் விசயங்களையையும் பகிர்ந்து கொள்கின்றன என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி?
எத்தனை ஏமாற்றங்களை சமகால மனிதர்கள் தங்களின் அனுபவங்கள் வாயிலாக தருகிறார்களே அந்த அளவிற்கு பல நல்ல விசயங்களும் கண் எதிரே நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் அதில் பரபரப்பு இருப்பதில்லை. இதனாலலேயே நடிகை பாத்ரூம் போனது கூட இங்கு முக்கிய விவாதப் பொருளாக பார்க்கப்படுகின்றது.
கடத்தப்பட்ட குழந்தைகளுக்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் அத்தனையும் எந்த ஊடகத்திற்கு தேவையில்லாமல் போய்விடுகின்றது.
தமிழகச் சட்டம் ஒழுங்கின் உதாரணங்கள் இவை.
'பணத்திற்காக எதையும் செய்யலாம்' என்பதின் தாய்,
"பணத்தால் எதையும் செய்யலாம்" என ஆகிப்போன
சமீபத்திய சாபத்தால் தான். (காவல் நிலைய கற்பழிப்பு,
மந்திரி மகன் பாரில் பெண்களிடம் தகராறு, தினசரி செய்திகளாகி விட்டன.
பேய்கள் அரசாண்டால்......சுடுகாடுளில் தான் கொலு மண்டபம்.
பிஞ்சு மலர்களை கசக்க எப்படித்தான் மனது வருகிறதோ?
குலவாரிசுகளைக் குதறிய - இவர்கள்
குறியின் குறுக்குவெட்டுத்தோற்றம்
கண்காட்சியாகட்டும் காவல்துறையே!
----------------
நியாயமான கோபம்தான்...
ஆனாலும் மீண்டும் மீண்டும் சைக்கோத்தனங்கள் எழ என்ன காரணம் என வேரிலிருந்து அறியணும்...
நாடே திரும்பி பார்க்கிற அளவுக்கு அவனுக்கு கடுமையான தண்டனை குடுத்தால். இவ்வாரான செயில்கள் குறையும்.
ஓட விட்டு சுடனும் இது போன்ற நாய்களை
தண்டனைகள் கடுமை ஆக்கபடனும் அப்போ தான் கொஞ்சம் ஆவது இது போன்ற செயல்கள் குறையும்
கொடுமையான நிகழ்வின் மேலான கடுமையான நிலைபாடு .....
மிக ஆழ்ந்த உணர்வுகளால் நிறைந்த பதிவு ....
விருந்தாடிக்குப் பிறந்தவர்கள்..
உங்களது கருத்து சரியானதே..
//காதலில் பிறந்தவர்களா? - இல்லை
கழுகு, பருந்துகளின் எச்சங்களில்
கருவுற்றவர்களா?//
அருமையான வரிகள்...
காதலற்ற எந்த ஒன்றுமே.. ஏன்.. கொபமும் வெறுப்பும் கூட விலங்கினத்தின் வெளிப்பாடே..
வாழ்த்துக்கள்.
என்ன செய்ய
சிலருக்கு புத்தி அப்படி
நல்லாயிருக்கு வரிகள்
இவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறாய் ???
கோபம் நியாயமானது. வாழ்த்துக்கள்
கோபத்தையும் ஆற்றாமையையும் இப்படிதான் தீர்த்துக் கொள்ள முடியும் ரோஸ் விக்...இந்தச் செய்தி சூடு ஆறுவதற்குள்ளாகவே சென்னையில் ஒரு மாணவனை இரண்டு மெத்தப் படித்த இளைஞர்கள் கடத்தியதும் கோடி ரூபாய் கேட்டு மாட்டியதும் படித்திருப்பீர்கள். எங்கே போகிறது நாடு..ஏன் இவர்களுக்கு இப்படித் தோன்றுகிறது?
தலைப்பே டெரராக இருக்கே.
:)
Post a Comment