Tuesday, April 20, 2010

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

(முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,

வணக்கம். நலம். நீங்களும் நலமாயிருப்பதாகவே தங்களின் பதிவின் மூலம் அறிய வருகிறேன்.

திருமதி. பார்வதி அம்மா அவர்களின் மருத்துவ உதவியினை வந்தாரை வரவேற்கும் தமிழகத்தின் வாயில் வரை கொண்டுவந்து, திருப்பியனுப்பி... வந்தாரை வாழவைக்கும் தமிழரின் மரபை ஒரு தமிழ் இனத்தை சேர்ந்த ஒரு முதியவருக்கு மறுத்ததில் நான் மனிதன் என்ற முறையில் சிறுமையாகவே கருதுகிறேன். இது பற்றி பல பதிவர்கள் தங்களது கருத்துக்களை ஆதரித்து பதிவு செய்துள்ளனர் உங்களைத் தவிர.

அவரை பிராபாகரனின் தாயாராகவோ, தமிழச்சியாகவோ கூட தாங்கள் கருத வேண்டாம். அவளை ஒரு வயது முதிர்ந்த, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பெண் என்பதாக தாங்களும் கருதுவீர்கள் என நினைக்கிறேன்.

மத்த தமிழனுக எல்லாம், இந்த அம்மாவை பிரபாகரன் அம்மாவாவே மட்டும் பார்ப்பானுங்க. அவருக்கு ஏதாவது ஒன்னுன்னா, உடனே கொந்தளிச்சுப் போயி தமிழகத்துல கலவரம் பண்ணி சுடுகாடா ஆக்கிடுவானுகன்னு நினைக்கிறீங்களா?? அட போங்க சார். அந்த அளவுக்கு நம்ம ஆளுங் கட்சித்தலைவர்களும் விட மாட்டானுக. எதிர்கட்சி ... ஓ அப்புடி ஒன்னு இருக்கான்னு தெரியலையே.. சரி அதை விடுங்க. இங்க நீங்க நினைக்கிற மாதிரி புலி ஆதரவு தலைவர்கள் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் தனித்தனி குழுவா செயல்பட்டு எப்பேர்ப்பட்ட போராட்டமா இருந்தாலும் ஆளுக்கொரு பக்கமா இழுத்து சொதப்பிருவாணுக சார். ஆளுங்கட்சிக்கு கவலையே இல்லை.

தமிழன் நண்டு மாதிரின்னு நம்மளே பெருமையா சொல்லிக்கிட்டு திரியிற கூட்டம் தானே சார் நம்ம... (நீங்களும் என்னோட சேர்ந்து இந்த கூட்டத்துல இருப்பீங்கன்னு நல்லாவே தெரியும்). இன்னொரு விஷயம், இதுவரை கலவரம் ஏற்படுத்துற மாதிரி நம்ம நாட்டுல பல கலகங்களை நம்ம கழகங்கள் உருவாக்கிடுச்சு சார். ஆனா அது எல்லாம் அவனுங்க நலனுக்கு செஞ்சுக்குருவானுகளே ஒழிய மக்களுக்கு பயன்படுற மாதிரி அல்லது நாட்டுக்கு விடிவு காலம் பொறக்குற மாதிரி உருப்படியா செஞ்சுரமாட்டாணுக. நம்ம மகா பொது ஜனங்களும் அவ்வளவு வொர்த் இல்ல சார் (ஆமா ஆமா நீங்களும், நானும் அங்க தான் இருக்கோம்).

ஏன் சார்... வீரமாக மரண மடல் எழுதி, இலங்கைப் பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது உடலை காணிக்கையா கொடுத்தானே சார் ஒருத்தன்... அவனை நம்ம கோழையின்னு சொல்ற கூட்டம் தான் சார் இந்த ஆறரைக் கோடி கூட்டம். அவன் என்ன லவ் பண்ணி அப்பனுக்கும், ஜாதி சண்டைகளுக்கும் பயந்தா சார் செத்தான்...?? சாகிறது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை தான். ஆனா அந்த சாவுக்கு நம்மள காவு கொடுக்குற துணிச்சல் நம்மள்ல எத்தனை பேருக்கு சார் வரும். அவன் என்ன சாகும்போது என்னை காப்பாத்துங்க காப்பத்துங்கன்னா செத்தான்?? அவன் எழுதுன கடிதத்தை படிச்சிட்டு எவ்வளவு பெரிய கலவரம் சார் வெடிச்சிடுச்சு நம்ம நாட்டுல?? ஓ இதுல கழகங்கள் கலந்துக்கிரலையில்ல... பாத்தீங்களா நம்ம ஆளுகளோட ஒற்றுமையும், வீரதீரச் செயல்களையும்...

அட போங்க சார்... நம்ம ஆளுங்க இது மாதிரி நடந்துக்கிதால, அவ்வளவு பக்குவப்பட்டவங்களா?? இல்ல பயந்தாங்கொள்ளிகலான்னு?? பல பேரு புரியாமத் திரியிராணுக. பாத்தீங்களா வழவழன்னு பேசி நானும் தமிழன்னு சரியா நிரூபிச்சிட்டேன். சரி சரி விஷயத்துக்கு வருவோம்... இந்த அம்மாவுக்கு இங்க சிகிச்சை அளித்தால் புலி ஆதரவு தலைவர்கள் பேட்டி கொடுப்பாங்கன்னு சொன்னீங்க... இன்னமுமா சார் நம்புறீங்க? இலங்கை சுற்றுலாவுக்கு இலவச டிக்கெட் அப்புடின்னு இனமானக் கம்பெனி ஒரு விளம்பரம் குடுத்தாப் போதும் சார். ஒரு விக்கெட் காலி. ஒரு தேர்தல் அறிவிப்பு வரட்டும் இன்னொரு டிக்கெட் காலி. அப்புறம் இந்த வைகோ... அவரு பேரை சுருக்குனதுனாலையோ என்னவோ அவர் அரசியல் வாழ்க்கையும் போச்சு சார்... (வைகோ சார் நீங்க திரும்ப கோபால்சாமின்னு வாங்க சார்).

அப்புறம் பிரபலமா / பிராபலமா யாரு சார் இருக்கா?


அந்த பார்வதி அம்மா நல்லாயிருக்கட்டும் சார். ஒருவேளை அவங்க உயிருக்கு இங்க இழப்பு நேர்ந்தால் கலவரம் வெடிக்கும்னா எதிர் பாக்குறீங்க?? அப்புடியே நடந்தாலும், இங்க உள்ள சில மூத்த தலைவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் கூட, நடக்குமே ஒரு வாரத்துக்கு கூத்து... அதை விட ரொம்ப கம்மியா இருக்கும் சார். அப்புடி அவங்க பன்ற கலகத்துக்கு என்னா பேரு சார் நீங்க வைப்பீங்க?? இன்னொன்னு என்னா சொன்னீங்க...? பாதுகாப்புக்குன்னு ஒரு தொகை செலவழிஞ்சிருக்கும்னா... அட போங்க சார்... சிமரன், சிநேகா, நமிதா (கடை) தொறப்புவிழவுக்கு நம்ம அரசாங்கம் செலவழிக்காமையா இருக்கு?? அப்புறம், நம்ம அமைச்சருங்க, கட்சிக்காரன் வீட்டு விஷேஷங்களுக்கு என் காசையும் பயன்படுத்தி வெய்யில்ல கொடுமையா பல கிலோமீட்டர்களுக்கு பாதுகாப்பு போட்டிருப்பானுகலே அதெயெல்லாம் நம்ம ஏன் சார் கண்டுக்கிறது இல்ல?? அவனுகளை அல்லைக்கைகள் தவிர எவனும் சீண்டுறது இல்ல?? அவனுகளுக்கு என்ன உயிர் பயமா?

ஒரு குத்துமதிப்பா யோசிச்சுப் பாருங்க... எதிர்கட்சிக்காரனுக வெட்டுனதுல செத்த கழகக் கோமான்களை விட, உள்கட்சிக்காரனுக வெட்டுக் குத்து தான் சார் அதிகம். அப்போக்கூட நம்ம அவங்க அராஜகத்தைப் பாத்துட்டு உச்சுக் கொட்டியோ, உச்சாப் போயோ நம்ம எதிர்ப்பைக் காட்டிக்கிட்டு இருக்கோம். ஆமா, பிராபகரன் செத்துட்டாரு, எரிச்சுட்டோம், உரிச்சிட்டோம்னு சொன்னானுகளே , அப்போ என்னா சார் இங்க நடந்துச்சு... என்ன தினசரிகளும், மற்ற பத்திரிக்கைகளும் அதிக அளவுல வித்துச்சு... அதைவிட என்னத்தை சார் நாங்க புடிங்கிட்டோம்?? பிரபாகரனை கண்ணுல காட்டாம எரிச்சதுல இவ்வளவு சந்தோசப்படுறீங்க... ஆமா, ஆமா அவருக்கிட்ட நாங்க பாக்க அப்புடி என்ன பெருசா இருக்கு?? பிரபலமே இல்லாத பல பன்னாடைகளுக்கு நினைவு மண்டபம் இருக்கும் பொது அவருக்கும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டுமே... உங்ககிட்ட எதுவும் பணம் கேட்டானுகன்னா சொல்லுங்க சார்... நான் அவனுகள செருப்பால அடிக்கிறேன்.

சரி உங்களுக்கு பிராபாகரன் பிரச்சனையா இல்ல அவரு ஆத்தா பிரச்சனையா?? இல்ல வெள்ளை வேட்டிக்குள்ள வெட்க, மானத்தை அடை காக்குற எங்க தலைவர்கள் பிரச்சனையா??

சூப்பர் சார்... நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை... நமது மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை.. சூப்பர்... சூப்பர். இருங்க இருங்க... ஆமா அப்புடிப் பாத்தா, நம்ம நாட்டுல நிறைய, நாட்டு நலனுக்கு பங்கம் விலைவிக்கிரமாதிரி இருக்குறதுங்களை என்ன சார் பண்ணலாம்? என்னது நான் சொல்லவா? அடப் போங்க சார் நான் உங்க பேரன் வயசுள்ளவன் சார். நீங்களே சொல்லிடுங்க...

கேட்க மறந்துட்டனே, நம்ம நாட்டுல முளையிலே கிள்ளி எரிஞ்ச விஷயம் நிறைய இருக்குல்ல... ஐய்யயோ கொஞ்சம் டயம் குடுங்க டிவி-ல ஒரு முக்கிய டான்சு ப்ரோக்ராமு இருக்குப் பாத்துட்டு வந்துடுறேன்.

மருத்துவ உதவி மறுக்கப்பட்டாலும் அது கொலை செய்வதற்கு சமம்னு என் மன சாட்சி சொல்லுது...? நம்ம ஊர்ல இருக்குற கருப்பு கோட்டு சட்டம் என்ன சார் சொல்லுது?? ஓ அதையும், தலைமைச் செயலகம் தான் சொல்லுமோ... நீதி மன்றம் இப்பவெல்லாம் பல நேரங்கள்ல சும்மா வாயசைக்குது சார்... டப்பிங் வேற யாரோ குடுக்குரானுகோ...

அப்புறம் இந்த தர்மத்துக்குப் பொறந்த சு.சாமி என்னமோ சொன்னுச்சாமே! இந்தியா ஒன்னும் தர்மசாலையில்லை-னு, அவங்க தர்ம ஆஸ்பத்திரிக்கு வரல சார். காசு குடுப்பாங்க... இவனுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு குடுக்குறாங்க பாருங்க... அது தான் தர்மத்துக்குப் பன்றது. நான் அந்த ஆளை பார்த்தா சொல்லிடுறேன். நீங்களும் பார்த்தா சொல்லிடுறீங்களா??

சரி சார். இந்த ஜென்மம் தான் எளவெடுத்த ஜென்மமாப் போச்சு... அடுத்த ஜென்மத்துலையாவாது இந்த கழகக் கம்பெனிகள்ல புள்ளையாப் பொறக்கனும்னு எனக்காக வேண்டிக்கங்க சார்.


குறிப்பு : அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.
தம் பெயரும் / தகப்பன் பெயரும் இல்லாத அனானிகளுக்கு ஏற்கனவே இங்கு வாய்ப்பு இல்ல. விரும்புபவர்கள் ஏதோ ஒரு பெயரை தாங்களுக்கு வைத்துக் கொண்டு... தகப்பன் பெயரில் என்னைப் போட்டுக்கொள்ளலாம். அட ஆமாங்க....

அன்புடன்,
ரோஸ்விக்.




107 comments:

settaikkaran said...

நீங்கள் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு, டோண்டு சாரோ அவரையொத்த கருத்துடையவர்களோ பதிலளிப்பார்கள் என்று நம்புகிறோம். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாதவர்கள், அடுத்து இது போன்ற சூழ்நிலைகளில் என்ன நிலையெடுப்பார்கள் என்பதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.

அருமையான, ஆத்திரத்தை இயன்றவரை அடக்கி எழுதப்பட்ட பதிவு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது..

அப்புறம் .. மறக்காம, பதில வாங்கனும் சொல்லிட்டேன்..

பதில வரலேனா.. எங்க வீட்ல, பதில் கொடுப்போம்..டீலா சார்?...

Paleo God said...

//பிரபாகரன் செத்துட்டாரு, எரிச்சுட்டோம், உரிச்சிட்டோம்னு சொன்னனுகலே, அப்போ என்னா சார் இங்க நடந்துச்சு.//


வியாபாரம்.!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

dondu(#11168674346665545885) said...

உள்ளே விடும் வரைக்கும்தான் கண்ட்ரோல், பிறகு தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான்.

நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.

அம்மாதிரி காம்ப்ளக்ஸ் எனக்கு முதலிலிருந்தே கிடையாது. புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.

நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.

என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

I am least bothered.
//

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டோமர் டோண்டு Vs சிங்கப்பூர் டோமர்ஸ்
கிழிப்பது தொடரும்.. வேதனையுடன்...



http://pattapatti.blogspot.com/2010/04/vs.html

பனிமலர் said...

http://panimalar.blogspot.com/2010/04/blog-post_20.html

http://panimalar.blogspot.com/2010/04/blog-post_3553.html

எங்கே பாக்கிட்த்தானத்தையும் மற்ற நாட்டவரிடமும் இந்த மாதிரி நடந்து காட்ட சொல்லுங்கள் பார்ப்போம் இந்த உண்மை தமிழர்களை.

பிரபாகர் said...

தம்பி வயசான கொஞ்சம் புத்தி மங்கும்னு சொல்லுன்வாங்க! இந்த அளவுக்கா? திருந்தாத ஜென்மங்கள்.. விட்டுத்தள்ளுங்க!

பிரபாகர்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Rosvic,

Worth illatha pannaadaikkellam pathivu pottu pirapalamaakki vidaatheenga!

Ada ponga Sir! Rompa mariyaathaiyaanathu!

athellaam thevaiyillai!

Joseph said...

ஒரு கம்ப்யூட்டரும், இணைய இணைப்பும் கிடைச்சா எவன் வேணும்ணாலும், என்ன வேணும்ணாலும் எழுதலாம்.

அவருக்குள்ள ஓடிக்கிட்டு இருக்க சாக்கடை அவரு கம்ப்யூட்டர் வழியா அவரு பதிவுல சிந்தியிருக்கு.

இதுக்கு மேல பொறுமையா எனக்கு கருத்து சொல்ல தெரியலை. உங்க அளவுக்கு பொறுமை இல்லை. அவரு போஸ்டல கமெண்ட் போட போயி,டைப் பண்ணிட்டு போஸ்ட் பண்ணாம வந்துட்டேன். ஏன்னா, எனக்குள்ள இருக்க மிருகம் தான் அங்க வெளில வந்து ஆடுது. என்ன செய்யிறது ஒரு சாக்கடையப் பார்த்து எல்லாம் நமக்குள்ள இருக்க மிருகத்த வெளில விட்டுட்டா அப்பறம் அந்த மிருகத்துக்கு தானே அவமானம்? அதான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் சொல்லலே.. வெளியூர்காரன்.. எனக்கு மட்டும் ரகசியமா சொன்னது..
நீங்களும்.. யாரிடமுன் சொல்லாதீங்க..ப்ளீஸ்....

//அந்த பாட்டி மிகபெரிய அளவுல தமிழகத்துல போராட்டம் பண்ண இருந்துச்சுயா...திருப்பி அனுபிட்டதால தமிழகம் இப்போ அமைதி பூங்காவா இருக்கு..இல்லாங்காட்டி என்னை ஆய்ருக்கும்...அவங்கள படுக்க வெச்சிருந்த பெட்டுக்கு கீழ அணு ஆயுதங்கள் இருந்தது சோனியா காந்திக்கும் நம்ம டோமர் டோண்டுவுக்கும் முன்னாடியே தெரியும்..அவங்கல்லாம் இணைந்து செயல்பட்டு இப்போ இந்தியாவையே ஒரு அணு ஆயுத தாக்குதல்லேந்து காப்பாத்திடாங்க..சும்மா..புரியாம பேசாதையா..!

//

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Could not find the possible script tags, you can only include BRPS client brps.js script once.
//

இதுவும் டோமர் சொன்னதா என தெளிவுப்படுத்தவும்.. நன்றி

vasu balaji said...

இதத்தான் செருப்பால அடிச்சி சடாரிசாத்தரதுன்னு சொல்லுவா:))

செ.சரவணக்குமார் said...

//இங்க உள்ள சில மூத்த தலைவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் கூட, நடக்குமே ஒரு வாரத்துக்கு கூத்து... //

மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பா. அருமையான பதிவு.

மணிஜி said...

//குறிப்பு : அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.
தம் பெயரும் / தகப்பன் பெயரும் இல்லாத அனானிகளுக்கு ஏற்கனவே இங்கு வாய்ப்பு இல்ல. விரும்புபவர்கள் ஏதோ ஒரு பெயரை தாங்களுக்கு வைத்துக் கொண்டு... தகப்பன் பெயரில் என்னைப் போட்டுக்கொள்ளலாம். அட ஆமாங்க//


நேர்மை..மற்றபடி உங்கள் கருத்துடன் உடன்படுகிறென்..

ரோகிணிசிவா said...

so beautifully,decently written - i felt so happy reading this ,though u have expressed u r condemn it has been delivered in a noble way , keep blogging

Unknown said...

பொறுமையாய் கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறீர்கள்.. நான் பதிவு போடாமல் அடக்கிக் கொண்டிருக்கிறேன்.

குறும்பன் said...

கிழவாடி மேல் இருந்த மரியாதை போயிடுச்சி.

ஈரோடு கதிர் said...

//மருத்துவ உதவி மறுக்கப்பட்டாலும் அது கொலை செய்வதற்கு சமம்னு என் மன சாட்சி சொல்லுது...? //

மனசாட்சியுள்ள வரி ரோஸ்விக்

ஹரீகா said...

சார் அசால்ட்டா எழுதி எங்கள் ராயல் சல்யூட்டை வாங்கி கொண்டீர்கள். அங்கே பட்டாபட்டி கிழி கிழி என்று கிழித்து தோரணம் கட்டிகொண்டிருக்கிறார். anyhow விடாதீங்க...

அன்புடன்
ஹரீகா

ஹரீகா said...

சார் அசால்ட்டா எழுதி எங்கள் ராயல் சல்யூட்டை வாங்கி கொண்டீர்கள். அங்கே பட்டாபட்டி கிழி கிழி என்று கிழித்து தோரணம் கட்டிகொண்டிருக்கிறார். anyhow விடாதீங்க...

அன்புடன்
ஹரீகா

sriram said...

அன்பின் ரோஸ்விக்..
பதிவின் சாராம்சம் குறித்து வேண்டியது சொல்லியாகிவிட்டது, உங்களுடன் முழுதும் உடன்படுகிறேன் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை...

பின்னூட்டத்தில் சொல்ல நினைத்தது..

1 . உங்களின் பொறுமைக்குத்தலை வணங்குகிறேன்.. வார்த்தைகளில் கண்ணியம் காத்தமைக்கு தனி வணக்கம்.. கருத்துக்கு எதிர்ப்பு சொல்ல நினைத்தால், கண்ணியமாக அதனை சொல்ல வேண்டும். இதை பல பதிவுகளில் சொல்லி வருகிறேன். அந்த வகையில் உங்க பதிவும் கதிரின் பதிவும் சரியாக இருந்தன..

சாரி பட்டாபட்டி... என்னதான் நீங்க சமாதானம் சொன்னாலும் உங்க பதிவின் வார்த்தைகளும், பின்னூட்டங்களும் “கண்ணியம்” என்ற சொல்லுக்கு அருகாமையில் கூட இல்லை - என்னுடைய பின்னூட்டத்துக்கு எவ்வளவு அழகா பதில் சொன்னீங்க - அதை பதிவு எழுதும் போதும் பயன் படுத்தி இருக்கலாமே?? ( என் கருத்தை சரியா புரிஞ்சிருப்பீங்கன்னு நம்பறேன்)

2 . எல்லா பிரிவுகளிளும் எல்லா விதமான மக்களும் இருக்கிறார்கள், டோண்டுவின் கருத்து எல்லா ஐயர் / ஐயங்கார்களின் கருத்து கிடையாது (பார்ப்பான்னு சொன்னா டிஷ்கஷனை வேறெங்கோ எடுத்துச் செல்ல பல பேர் காத்துக்கிட்டு இருக்காங்க) என்பதை புரிந்தமைக்கும், குறிப்பு எழுதியமைக்கும் நன்றி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மதார் said...

வஞ்சகப் புகழ்ச்சி அணி ஒன்று இலக்கியத்தில் வருமே , வரிக்கு வரி அதுதான் இருக்கு . நீங்க சொன்ன அத்தனையும் நிஜம் , சம்மந்தபட்டவங்களுக்கு புரியும் என்று நினைக்குறீங்க ? எருமைமாட்ட விட மோசமானவங்க .
அனானிக்கு நல்ல விளக்கம் இனியாவது திருந்தட்டும்

sekar said...

அண்ணே,
ஒரு வயசான அம்மாவை உள்ளே விடாட்டியும் விமான நிலையத்திலேயே கொஞ்சம் ஓய்வாவது எடுக்க செய்திருக்கலாம். போபோர்ஸ் ஊழலோ IPL ஊழலோ, மூணாவது நாலாவதுன்னு ஊர்லே உள்ளவனுக்கு பிறந்ததுக்கு எல்லாம் மந்திரி பதவி வங்கி கொடுத்து, ரயில் வராத தண்டவாளத்திலே படுத்து தமிழுக்காக போராடிஇருந்தாலாவது பரவாயில்லை... சும்மா மனிதபிமனத்தை நம்பி வந்தா.... நடக்கிற கதையா ..... எதோ புப்ளிசிட்டி பண்ணுவாங்கன்னு சொன்னாங்களே ... எப்படி ????? பீச்லே cooler வைத்து கால்மாட்டிலே பொண்டாட்டி தலை மாட்லே வைப்பாடின்னு காலையிலே சாப்பிட்டு வந்து உண்ணாவிரதமிருந்து மதியான சாப்பாட்டுக்குல்லே இலங்கையில் போரை நிறுத்தியது மாதிரியா ???? ரோசெவிக் அவர்களே, அந்த டம்மி பீசுக்கெல்லாம் மண்டைக்குலே என்ன இருக்குன்னு தெரியலே .... தமிழரிடம் இருந்த மிக பெரிய நல்ல குணமான "பிறர் துயர் கண்டு " ஐயோன்னு சொல்ற உணர்ச்சியும் போயிருச்சுன்னு நெனைக்கும பொது, வயசுக்கான மரியாதி கூட அந்த பீசுக்கு(பதிவர் பீசு மற்றும் மொதலை அமைச்சர் பீசு ) தர கூடாதுன்னு தோணுது....
எல்லாத்துக்கும் மேல ... காலை பேப்பர் பார்த்து தான் தெரியும் .... இல்லை நைட் 12 மணிக்கு தெரியும் என்று சொல்வதை பார்த்தால்... எல்லாரையும் க்கெனப்பயளுகன்னு நேனைகிரனுங்க போல ******** (சுத்தமான கெட்ட வார்த்தைகள் )

- Madurai Sekar

sekar said...

அண்ணே,
ஒரு வயசான அம்மாவை உள்ளே விடாட்டியும் விமான நிலையத்திலேயே கொஞ்சம் ஓய்வாவது எடுக்க செய்திருக்கலாம். போபோர்ஸ் ஊழலோ IPL ஊழலோ, மூணாவது நாலாவதுன்னு ஊர்லே உள்ளவனுக்கு பிறந்ததுக்கு எல்லாம் மந்திரி பதவி வங்கி கொடுத்து, ரயில் வராத தண்டவாளத்திலே படுத்து தமிழுக்காக போராடிஇருந்தாலாவது பரவாயில்லை... சும்மா மனிதபிமனத்தை நம்பி வந்தா.... நடக்கிற கதையா ..... எதோ புப்ளிசிட்டி பண்ணுவாங்கன்னு சொன்னாங்களே ... எப்படி ????? பீச்லே cooler வைத்து கால்மாட்டிலே பொண்டாட்டி தலை மாட்லே வைப்பாடின்னு காலையிலே சாப்பிட்டு வந்து உண்ணாவிரதமிருந்து மதியான சாப்பாட்டுக்குல்லே இலங்கையில் போரை நிறுத்தியது மாதிரியா ???? ரோசெவிக் அவர்களே, அந்த டம்மி பீசுக்கெல்லாம் மண்டைக்குலே என்ன இருக்குன்னு தெரியலே .... தமிழரிடம் இருந்த மிக பெரிய நல்ல குணமான "பிறர் துயர் கண்டு " ஐயோன்னு சொல்ற உணர்ச்சியும் போயிருச்சுன்னு நெனைக்கும பொது, வயசுக்கான மரியாதி கூட அந்த பீசுக்கு(பதிவர் பீசு மற்றும் மொதலை அமைச்சர் பீசு ) தர கூடாதுன்னு தோணுது....
எல்லாத்துக்கும் மேல ... காலை பேப்பர் பார்த்து தான் தெரியும் .... இல்லை நைட் 12 மணிக்கு தெரியும் என்று சொல்வதை பார்த்தால்... எல்லாரையும் க்கெனப்பயளுகன்னு நேனைகிரனுங்க போல ******** (சுத்தமான கெட்ட வார்த்தைகள் )

- Madurai Sekar

தெய்வசுகந்தி said...

அருமையா எழுதியிருக்கீங்க!!

Mahi_Granny said...

the way u expressed ur feeling is really the feeling of any good HUMAN BEING. thank you keep going

ப.கந்தசாமி said...

மனிதாபிமானம் அற்ற கேவலமான செயல். தமிழனுக்கு மானம்,ரோஷம், சூடு, சொரணை இவையெல்லாம் சினிமா வசனங்கள் மட்டுமே.

smart said...

உங்கள் கருத்தை முழுவதும் ஆதரிக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

நெப்போலியன் எசமான் படத்துல ஒரு வசனம் பேசுவார், அதைத்தான் அவர் செயல்படுத்துகிறார். இந்த சந்தர்பத்தை தனக்கான விளம்பரம் ஆக்கிக் கொள்ளும் சீப் உத்தி. ஆங்கிலத்தில் 'நொட்டோரியஸ்' என்கிற பதம் உண்டு, திருவாளர் அதற்கு முற்றிலும் பொருத்தமானவர்

பித்தனின் வாக்கு said...

தம்பி ரோஸ்விக், பிரபல மூத்த பதிவர்கள் கூட உணர்வின் மேல்பட்டு, தடுமாறி எழுதும்போது, நடு நிலையாக பொறுமையாக எழுதுகின்றாய். உன் பொறுப்புணர்ச்சி பாராட்டத்தக்கது. சு.சாமி விமர்சனம் குறித்து அவரை விமர்சிக்காமல்,அவரின் மொத்த இனத்தையும் சாக்கடையாய் விமர்சித்தார்கள். ஆனால் அதிலும் நீங்கள் பொறுப்பாய் எழுதுகின்றீர்கள். ஒரு சின்ன விஷயம் இந்த இடுகைக்குத் தொடர்புடைய இடுகைகள் என்பதில் டோண்டுவின் இடுகைக்கு தொடர் கொடுத்தால் அதையும் படித்துவிட்டு பின்னூட்டம் இடலாம். ஆனால் அதை ஏன் செய்யவில்லை. இந்த இடுகையின் மூலம் இல்லாது,அல்லது படிக்காது பின்னூட்டம் இட்டால் ஒரு தலைப்பட்சம் ஆகிவிடும். ஆதலால் போய் அதையும் படித்து விட்டு வருகின்றேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பித்தனின் வாக்கு said...
ஒரு சின்ன விஷயம் இந்த இடுகைக்குத் தொடர்புடைய இடுகைகள் என்பதில் டோண்டுவின் இடுகைக்கு தொடர் கொடுத்தால் அதையும் படித்துவிட்டு பின்னூட்டம் இடலாம். ஆனால் அதை ஏன் செய்யவில்லை. இந்த இடுகையின் மூலம் இல்லாது,அல்லது படிக்காது பின்னூட்டம் இட்டால் ஒரு தலைப்பட்சம் ஆகிவிடும்.
//


ஒருவேளை.. அது இடுக்கையில் சேராது என லிங்க் கொடுக்காமல் இருந்திருப்பார்..

நீங்க போயி படிச்சுட்டு..மெதுவா வாங்க.. அவசரமே இல்லை..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்க போயி படிச்சுட்டு..மெதுவா வாங்க.. அவசரமே இல்லை..
April 20, 2010 6:13 PM
//

ரோஸ்விக்.. Date & Time ஏதாவது பிரச்சனையா?...கண்ணக் கட்டுது.. அதுக்காகத்தான் சொன்னேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை ரோஸ்விக்!!

smart said...

நானும் எழுதியுள்ளேன்

'பரிவை' சே.குமார் said...

அருமை, ஆத்திரத்தை இயன்றவரை அடக்கி எழுதப்பட்ட பதிவு!

priyamudanprabu said...

ம்ம்

பரிமள ராசன் said...
This comment has been removed by a blog administrator.
Veliyoorkaran said...

@@@இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.///

வெளியேறுகிறான் வெளியூர்க்காரன்...!

Ravichandran Somu said...

Thambi,

Good post...Just ignore him.

VISA said...

:(

Anonymous said...

சும்மா கலக்கலா இருக்குதுங்க உங்க பதிவு.. இத கேட்டுட்டு இந்நேரம் அவன் தூக்குல தொங்கி இருக்கணும்

தமிழன்

ரோஸ்விக் said...

சேட்டைக்காரன் - மிக்க நன்றி நண்பரே!

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - ப.மு.க. காரன் எப்போதும் கோபப்படுவான் தெரியும்.

இருந்தாலும் நீ அதோட தலைவன் யா. கொஞ்சம் பொறுமையா இரு.

பதில் வராது. உங்க வீட்டுல விசேசம் வைங்க. ஆனால், டவுசரைக் கிழிக்கும் போது உரியவருடைய டவுசரை மட்டும் கிழிங்க மக்கா. அந்த சத்தம் இன்னும் சூப்பரா இருக்கும். :-)

ரோஸ்விக் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ - ரொம்ப நன்றி அண்ணே!

என்னா அடிக்கடி கெட்டப் மாறுது ?? :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - //
dondu(#11168674346665545885) said..
நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.

அம்மாதிரி காம்ப்ளக்ஸ் எனக்கு முதலிலிருந்தே கிடையாது. புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.

நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.

என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

I am least bothered.
//

எனக்கு மதிப்பு என்பதே இல்லை என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ரோஸ்விக் said...

பனிமலர் - தங்களின் பதிவிலும் நீங்கள் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. :-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - மிக்க நன்றி அண்ணே! :-)

ரோஸ்விக் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி - :-) வயதுக்கு மரியாதை. போகப்போக நம்மளும் தீவிரவாதம் பழ்கித்தான் ஆகனும் போல... :-))

ரோஸ்விக் said...

Joseph - ஆகா நானும் அங்க டைப் பண்ணிட்டு, வேண்டாம்-னு வந்த ஆளுதான். :-)

அப்புறம் தான் இந்தப் பதிவு.

மிக்க நன்றி ஜோசப் உங்க மிருகம் வெளிய வராததுக்கும். :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - ஓ அப்படியா விஷயம். எனக்கு இந்த அணு ஆயுதம் மேட்டர் தெரியாமப் போச்சே!

ஆமா இந்த வெளியூர்க்காரன எப்படியா புடிக்கலாம்??

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. -

//Could not find the possible script tags, you can only include BRPS client brps.js script once.
//

http://thisaikaati.blogspot.com - இதை மட்டும் அடிச்சா அப்படி வருதுயா... என்னா பண்றதுனு தெரியலை...:-)

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - //சடாரிசாத்தரதுன்னு சொல்லுவா//

அப்படினா என்னன்னு எனக்குத் தெரியாது அண்ணே! ஆனா முடிஞ்ச அளவு நல்ல புள்ளையா எழுதீட்டேன். :-)

ரோஸ்விக் said...

செ.சரவணக்குமார் - ரொம்ப நன்றி நண்பரே!

விடுமுறை கழிந்து சவூதி திரும்பி விட்டீர்கள் போல... கொஞ்சம் கடுப்பா இருக்குமே! :-)

ரோஸ்விக் said...

மணிஜீ...... - ரொம்ப நன்றி அண்ணே! எல்லோரையும் பொதுவா சொல்றதுல எனக்கு எல்லா நேரமும் உடன்பாடு இல்ல. :-)

ரோஸ்விக் said...

ரோகிணிசிவா Thanks my friend. :-) your happy reading gives me the proud. :-)

ரோஸ்விக் said...

முகிலன் - கோபத்தை அடக்கியதில் மகிழ்சி நண்பா! :-) பத்திரமாக வைத்திருங்கள். எதிர்கால அமைதிப் புரட்ச்சிகளுக்கு அது நீர் பூத்த நெருப்பாக தேவைப்படும்.

மிக்க நன்றி. :-)

ரோஸ்விக் said...

குறும்பன் - ரொம்ப நன்றி நண்பரே! அவரே சொல்லி இருக்காரே - என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

I am least bothered.

ரோஸ்விக் said...

ஈரோடு கதிர் - ரொம்ப நன்றி தலைவரே! :-)

தாங்களும் இது குறித்து எழுதியதில் மகிழ்ச்சி.

ரோஸ்விக் said...

HARIKA - ரொம்ப நன்றி ஹரீகா நீங்கள் அடித்த ராயல் சல்யூட்டுக்கும். :-)

ரோஸ்விக் said...

sriram - மிக்க நன்றி நண்பரே! தங்களின் ஆதங்கமும் நியாயமானது.

தாங்கள் எழுதிய நிர்வாகவியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னையும், என் நண்பர்கள் சிலரையும் கவர்ந்தவை. அதற்கு எனது பாராட்டுக்கள்.

தாங்களும் நல்ல மேனேஜராக செயல்பட்டு வருவதற்கு வாழ்த்துகள். :-)

ரோஸ்விக் said...

மதார் - மிக்க நன்றி மதார்.

ரோஸ்விக் said...

sekar - நம்ம முதல்வர் வர வர காமெடிப் பீசாகிக்கிட்டு வர்றாரு..

எல்லோரையும் கேனையன்கள்னு நினைச்சுகிட்டு இருக்காரு...

அதுக்கு ஒரு காலம் வராமையா போயிடும்??

ரோஸ்விக் said...

sekar - ரொம்ப நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

Deivasuganthi - ரொம்ப நன்றிங்க சுகந்தி. :-)

ரோஸ்விக் said...

Mahi_Granny - Thanks friend. :-)

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - ஆமாங்க ஐயா! பல விஷயங்கள் இப்போ சினிமா வசனங்கள்ல மட்டுமே இருக்கிறது.

நம்ம நாட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கிட்டே போகுது... வேதனையான விஷயம்.

மிக்க நன்றிங்க...

ரோஸ்விக் said...

smart - நன்றி smart.

அருள் said...

//நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.//இது டொண்டு//

மிஸ்டர் டோண்டு.

நீங்கள் நாட்டின் நலன் என்று சொல்வது "பார்ப்பானின் நலம்தான்".

தமிழின எதிர்ப்பு உங்கள் இரத்ததில் இருக்கிறது.

உங்கள் கூட்டத்தை தமிழ்நாட்டைவிட்டு விரட்டும் நாள்தான் தமிழனுக்கு சுதந்திரநாள்.

ரோஸ்விக் said...

கோவி.கண்ணன் - இவ்வளவு மோசமா நான் எதிர்பார்க்கலை அண்ணா...

மிக்க நன்றி. :-)

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - இப்போ இணைப்புக் கொடுத்துட்டேன் தலைவரே!

அதுக்குக் காரணம் கீழே பட்டாபட்டி சொன்னது தான். :-)

இப்போ, எதிர்காலத்தில் அங்கு சென்று மூலப்பதிவைப் படிக்க வசதியாக இருக்கும் என்பதால் கொடுத்துவிட்டேன்.

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - பட்டு நீ சொன்னது கரெக்ட்டுயா... :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. -
//ரோஸ்விக்.. Date & Time ஏதாவது பிரச்சனையா?...கண்ணக் கட்டுது.. அதுக்காகத்தான் சொன்னேன்..//

ஆமாயா! எந்த ஊரு நேரம்-னு தெரியல... குத்து மதிப்பா இருக்கு...

நான் நேரங்காலம் பாக்காம உழைக்கிறேனா, அதுனால கண்டுக்கிறது இல்ல :-)))))))))))))))

ரோஸ்விக் said...

சைவகொத்துப்பரோட்டா - நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

smart - நன்றி. விரைவில் வந்து படிக்கின்றேன்.

ரோஸ்விக் said...

Cable Sankar - :-)

ரோஸ்விக் said...

சே.குமார் - நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

பிரியமுடன் பிரபு - ம்ஹும்.... :-)

ரோஸ்விக் said...

Parimala - மன்னிக்கவும் பரிமளா! நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் தடை செய்யப் பட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதால் ஆட்டத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படுகிறீர்கள். :-)

மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

Veliyoorkaran - மன்னிக்கவும் நண்பரே!

எல்லோரையும் தாக்க வேண்டாமே! :-)

யாருக்கு அந்த ஜாதியின் பெயரால் திமிர் இருக்கிறதோ... அவர்களைக் கண்டால் சொல்லி அனுப்பவும். வெட்டருவாளுடன் காத்திருக்கிறேன்.

ரோஸ்விக் said...

ரவிச்சந்திரன் - Thanks Anna! :-)

Ignoring.... :-))

ரோஸ்விக் said...

VISA - :-)

ரோஸ்விக் said...

carthickeyan - பாவங்க அவரு நல்லா இருக்கட்டும் மனிதனாக...

ரோஸ்விக் said...

பின்னூட்டமிடாமல் ஒரே ஒரு எதிர் வாக்கு அளித்த அனானி நீர் நீடூழி வாழ்க. ஊமது கோத்திரம் வளர்க. கொஞ்சமாவது உமக்கு தைரியமும் வளர்க.... நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

ரோஸ் விக்....

டொண்டுவின் பதிவ படித்து நேரத்தை வீணாக்கிட்டிங்க.....

அவங்க எல்லாம் அப்படித்தான்.....

ILLUMINATI said...

ஆமா,இப்ப என்ன சொல்ல வர்றார் இவரு?கலவரம் வந்துரும்னா?அடப் போங்க பாஸ்.அதுக்கு ரோசம்னு ஒண்ணு இருக்கணும்.இப்போ போட்ற கழக அரிசி ல அத எல்லாம் நீக்கிட்டு தான் தர்றாங்க.

ஏன் ரோசு,தெரியாமக் கேக்குறேன்.பாராட்டு விழாவுக்கு ஆகாத செலவாய்யா ஒரு கெழவிய பாதுகாக்க ஆகி இருக்கும்?

// அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.
பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.//

பாராட்டுக்கள் ரோசு.....கண்ணியமாக எழுதி இருக்கிறீர்கள்.அது ஏனோ தெரியல.....நம்ம மக்கள் இன்னும் ஏனோ எல்லா விசயத்துக்கும் சாதிச் சாயம் பூசுரத விடல.அப்புறம் என்னத்த ஒற்றும, மன்னாங்கட்டின்னு கிட்டு? நாம எல்லாம் உருப்படற கேசு கெடயாது பிரதர்.அதான் கழகக்காரனுங்க எல்லாம் நம்ம வச்சு கண்ணாமூச்சி விளையாட்ரானுங்க.....

அருள் said...
This comment has been removed by a blog administrator.
மங்குனி அமைச்சர் said...

அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப கொண்டு வர ஒரு கேம் ஆடினான், அந்த வலைல நீங்க (பட்டா , ரெட்ட , வெளியூரு ,.........) எலாரும் மடிகிட்டிங்கடா

பனித்துளி சங்கர் said...

/////மங்குனி அமைச்சர் said...
அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப கொண்டு வர ஒரு கேம் ஆடினான், அந்த வலைல நீங்க (பட்டா , ரெட்ட , வெளியூரு ,.........) எலாரும் மடிகிட்டிங்கடா///////


மனிதாபிமானத்தை விற்று இதுபோன்ற வாடகை பாபுலாரிடிய வாங்கி அவர் என்ன கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கப்போகிறாரோ சரிதான் போங்க நண்பரே .

தமிழினத்தை அழிப்பதற்கு புதிதாய் யாரும் தேவை இல்லை . நாமே போதும் . உலகத்தில் இது போன்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் தரம் கேட்ட மனிதர்கள் நம்மை தவிர வேறு யாரும் இல்லை .

அதனால்தான் நமது உரிமைகளை பெறுவதற்குக்கூட கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை இன்னும் நம் தமிழகத்தில் .

முதலில் மனிதனாக வாழுங்கய்யா அதார்க்கு பின் பாபுலாரிடி ஆகலாம் .


மீண்டும் வருவேன் .

Unknown said...

நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..

(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது..)

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html

uma said...

இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."

இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .

இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .

தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .

உமா.கா ,திருவனந்தபுரம்

சத்ரியன் said...

இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது..

எனக்கும் இதே பிரச்சினைதான்.
என்ன பண்ணலாம்?

எட்வின் said...

இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது :( கண்டுக்காம இருக்கிறத தவிர

Guru.Radhakrishnan said...

thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.com

Guru.Radhakrishnan said...

thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.com

Guru.Radhakrishnan said...

thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.com

ரோஸ்விக் said...

Sangkavi - ஆமா தலைவரே! இவ்வளவு மட்டமா இருப்பாருன்னு எதிர்பார்க்கலை.

நன்றி.

ரோஸ்விக் said...

ILLUMINATI - நல்ல கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டம். நன்றி இலுமினாட்டி.

ரோஸ்விக் said...

அருள் - அருள் அண்ணே! மன்னிக்கவும். நல்ல கருத்துக்களும் உங்கள் பின்னூட்டத்தில் இருந்தது. சொன்ன சொல்லை நான் காப்பாற்ற வேண்டும். குறிப்பிட்ட நபரை சொல்லியோ, நிகழ்வுகளை மட்டும் உதாரணம் காண்பித்தோ தங்களது கருத்தை பதிவு செய்திருக்கலாம்.

பார்ப்பனர்களில் மிகச் சிலர் இருக்கிறார்கள் பார்ப்பனியம் இல்லாமல்... அவர்களையும் இது தாக்குவதாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களின் பின்னூட்டம் அழிக்கப்பட்டுள்ளது.

மன்னிக்கவும். :-)

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - அட அதுக்காக இப்புடியெல்லாம் பாப்புலராகலாமா மங்கு? :-)

கேவலமா இல்லை??

ரோஸ்விக் said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ -
//முதலில் மனிதனாக வாழுங்கய்யா அதார்க்கு பின் பாபுலாரிடி ஆகலாம் .//


இது நச்.... நன்றி சங்கர்.

ரோஸ்விக் said...

பரிதி நிலவன் - ஆஹா! ரௌடிக மட்டுமில்ல... போலிசும் ஜீப்புல ஏறித்தான்யா ஆகணும்.... :-)))

ஏய் போதும்பா இனிமே யாரும் ஏறாதீங்க... ஜீப்புல இடம் இல்ல... :-))))

நன்றி பரிதி.

ரோஸ்விக் said...

uma - நன்றி உமா.
இங்கு அவரை தமிழச்சியாகவோ, பிரபாகரன் தாயாகவோ மட்டுமே பார்க்கவேண்டியதில்லை என்பது என் கருத்து. எனது சாடல் டோண்டுவுக்கு மட்டுமல்ல... நம் அரசியல்வியாதிகளுக்கும், நம் நாட்டு மக்களுக்கும்.

பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து பார்ப்பனீயம்(சாதீயம்) பாராமல் மனிதம் பார்க்கும் அன்பு நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே உமா சொல்லியிருக்கும் கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்திவிடக் கூடாது.

அவர் பொதுவாக பார்ப்பனர்களை இழுக்காமல், சாதீயம் வைத்து சில நடந்த உண்மை சம்பவங்களை கூறியிருப்பதால் அனுமதிக்கிறேன்.

ரோஸ்விக் said...

சத்ரியன் - பொறுமை அப்பப்ப எனக்கும் எல்லை மீறும் நண்பா...

பச்சைத் தண்ணி குடிச்சா கோபம் அடங்கும்... பட்டை தண்ணி அடிச்சா கோபமும் குப்புன்னு ஏறும்... :-)))

நன்றி சத்ரியன்.

ரோஸ்விக் said...

எட்வின் - //இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது //

என்னவென்னாலும் சொல்லுங்க... அவரு கண்டுக்க மாட்டாரு... அவரே சொல்லிட்டருல ... (I am least bothered- னு)

ரோஸ்விக் said...

Maduraikkaran - வணக்கம் ஐயா...
என்ன பண்றது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிட்டான்... அதுனால நாங்க பேனா எடுத்து பெர்னாட்ஷா ஆகப் பாக்குறோம்.

இதே மாதிரிதாங்க வயசாகி வழுக்கை விழுந்தவங்க எல்லாம் முதல் அமைச்சர் ஆகிடுறாங்க...

நானும் மதுரைக்காரன் தான்.

Dr. Srjith. said...

அருமை நண்பரே வாழ்த்துகள்

சாமக்கோடங்கி said...

//இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது..

அப்புறம் .. மறக்காம, பதில வாங்கனும் சொல்லிட்டேன்..

பதில வரலேனா.. எங்க வீட்ல, பதில் கொடுப்போம்..டீலா சார்?...//

பட்டாபட்டி.. அதான் கடா வெட்டி பொங்கவும் வெச்சுடீங்களே....