Friday, April 9, 2010

சின்னப் பசங்க கெச வாலுங்க...

உங்க வீட்டுல சின்னக் குழந்தைங்க இருக்குறாங்களா சார்...? அப்ப நீங்க கொடுத்துவச்சவங்க தான் சார். அவங்க எப்போதுமே உங்களை பிசி-யா வச்சிருப்பாங்க சார். ஒரு வருஷம் வரை உங்கள கண் அசர விடமாட்டாங்க. அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, நீங்க அசந்தா உங்களை விடமாட்டாங்க. இத்துனூண்டு இருந்துகிட்டு அதுங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடியாது சார். பிறந்த உடனே, அதுகளோட கை கால்களை தொட்டுப் பாருங்க... வெல்வெட் துணியெல்லாம் அந்த மென்மைக்கு தூசுங்க... மூனு மாசம் கழிச்சு, அதுங்களுக்கு கொஞ்சங்கொஞ்சமா பார்வை தெரிய ஆரம்பிக்கும்போது அசையிற பொருள்களைப் பார்த்து சிரிக்குங்க பாருங்க... அட அட அடா... இந்த சமயத்துல அதுங்க முகத்த பாருங்க சூரியனோட வெளிச்சமும், சந்திரனோட குளிர்ச்சியையும் உணரலாம்ங்க.

இந்த குழந்தைங்க முன்னாடி, கலர் துணியையோ, கிலுகிலுப்பையோ ஆட்டிப்பாருங்க... நிலாவுக்கு ராக்கெட் விட்ட சந்தோசம் நமக்கு கிடைக்கும். இவங்க தவந்து போகும்போது போற வேகம் இருக்கே அப்பப்பா... என்னமோ மாவீரன் நெப்போலியனோட குதிரைப்படைக்கு தலைமை தாங்கிப் போறது மாதிரி போவாங்க... என்ன, சில நேரத்துல பசி அல்லது புரியாத காரணத்துக்காக நொய்யி நொய்யினு அழுகும்போது தான் கொஞ்சம் கடுப்பா இருக்கும். இத மட்டும் பழகீட்டிங்கன்னா உங்களுக்கு வருகிற பல் இளிப்பு தான் நீங்க போடுற எல்லா டிரெஸ்-க்கும் எடுப்பா இருக்கும். நானும் பார்த்துட்டேன். எனக்குத் தெரிஞ்ச வரை பெண் குழந்தைங்கன்னா பிடிவாதம் பிடிக்கும். ஆம்புளைப் பசங்கன்னா அநியாயத்துக்கு சேட்டை பண்ணும்.






உக்கார்ற வயசுல, முன்னாடியும் பின்னாடியும் ஆடிக்கிட்டே இருக்குங்களா... பயபுள்ளைக எங்கிட்டும் போயி மப்பை கிப்பை போட்டுட்டு வந்துருச்சுகளோன்னு நமக்கே சந்தேகம் வந்துரும். சொந்தக்காரங்க ஃபோன் பண்ணினா, முதல்ல இவங்களைப் பத்திதான் விசாரணை இருக்கும். எந்திருச்சு நடக்க ஆரம்பிச்சாங்கன்னு வையுங்க வீட்டுல அடுக்கி வச்சிருக்கிற காஸ்ட்லியான பொருள்களுக்கு ஆயுசு கம்மி-னு அர்த்தம். ஆனாலும், அவங்க தத்தி தத்தி நடககுறதப் பாக்குறதுக்கு நாம தவம் கிடைக்கணும் சார். அது ஒரு நாட்டியம் மாதிரி இருக்கும். இந்த கலையை சொல்லிக் கொடுக்க உலகத்துல எங்கையுமே பாடசாலை கிடையாதுங்க...






தப்புத்தப்பா வார்த்தைகள தன்னோட கொஞ்சல் மொழில பேசுறதக் கேட்குறதுக்காகவே நம்ம புதுப்புது வார்த்தைகள அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் போல இருக்கும். முழு நீல நகைச்சுவைப் படம் எடுத்து அதை நிறையப் பேரு பார்த்து சிரிக்கும்போது உங்களுக்கு ஏற்படுற சந்தோசத்தை விட, குழந்தைங்க கிட்ட "ம்ஹூம்... ம்ஹூம்... ம்ஹூம்... ப்ப்பே"-னு நம்ம சொல்லும்போது அதுங்க சிரிக்கிற சிரிப்பு பெரிய சந்தோசமா இருக்கும் பார்த்துருக்கீங்களா?? இந்த சிரிப்புகளுக்காகவே, நம்ம எவ்வளவு பெரிய பதவிகள்ல இருந்தாலும் நம்ம அவங்க முன்னாடி எத்தனை தடவை வேணும்னாலும் கோமாளி ஆகலாம்.

இந்த வாலுங்க, நம்ம சொல்ற வார்த்தைகள வேற நமக்கே திருப்பி சொல்லும் பாருங்க அதுவும் வேறொரு தேவைப்படும் நேரத்துல... அப்பவெல்லாம் பளிச்சுன்னு நாலு வைக்க முடியாது... ஹிஹிஹி-னு பல்லைத் தான் காட்டமுடியும். இதுல ஏய், ஏய்-னு நம்மள மிரட்டல் வேற பண்ணுவாங்க... நம்ம மாசச் சம்பளத்துல முக்கி முனங்கி ஒரு கேமரா மொபைல் வாங்கிருப்போம்... அந்த ஃபோனை இதுங்க பண்ணுகிற அதகளம் தாங்க முடியாது... எம் பொண்ணு ஒன்னுக்கு இருந்தே ரெண்டு மொபைல காலி பண்ணிடுச்சுன்னா பார்த்துக்கங்களே! இன்னும் ரெண்டு வயசு கூட ஆகல அதுக்குள்ளே, என் மொபைல், கேமரா, லேப்டாப் எல்லாம் அவங்க கண்ட்ரோல்ல... என்னத்தை சொல்றது.







இது பரவாயில்லங்க... என் நண்பனோட பையன் ஒருத்தன் இருக்கான்... அவன் உண்மையிலே டரியல் டக்ளசு தான் போல. ரெண்டு வயசு இப்பத் தாங்க ஆச்சு... அவன் பண்ணுகிற சேட்டை தாங்கலையாம்... என் நண்பனை பார்த்தாலும் பாவமா இருக்கு. ரொம்ப சேட்டை பண்ணுறான்னு கொஞ்சம் திட்டிட்டா போதும், டிவி ரிமோட், வீட்டு சாவி, இன்னும் சில முக்கியமான சில்லரைப் பொருட்கள் எல்லாம் எட்டாவது மாடியில இருந்து ஜன்னல் வழியா இவனால் தூக்கி எறியப்படும். இவன் தூக்கி எரிஞ்ச பொருள்களோட விபரம் வேணும்னா அவனுக்கு சாக்லேட் அல்லது வேற ஏதாவது ஸ்வீட் லஞ்சம் கொடுத்து அன்பா விசாரிச்சாத் தான் சொல்லுவான்.

இவன மிரட்டுறதுக்குன்னே ஒரு இருட்டு ரூமை காமிச்சு, தம்பி சேட்டை பண்ணினா அப்பா அங்க உன்னைய விட்டுருவேன்... சாரி சொல்லு... சாரி சொல்லுன்னு ரொம்ப நேரம் மிரட்டி/கொஞ்சி கேட்டாத் தான் அவரு சாரி சொல்லுவாரு. ஒரு முறை சமையற்கட்டுல நின்ன அவங்க அம்மாவக் கூப்பிட்டிருக்கான். இந்தா வாரேன்... வாரேன்-னு அவங்க நேரம் கடத்துனதுனால ஒரு ஆணியக் கையில எடுத்துக்கிட்டு 46 இன்ச் LCD TV ஸ்க்ரீன்ல கோடு போட்டுருவேன்னு மிரட்டுறான்... ஆத்தாடி... இன்னொரு கொடுமை என்னானா, அவங்க அம்மா சப்பாத்திக்கு பிசைஞ்சு வச்சிருந்த சப்பாத்தி மாவை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுற மாதிரி கேட்டு வாங்கிட்டு போயி, நண்பனோட லேப்டாப்-ல இருக்கிற USB Drive சொருகுகிற பகுதில பேப்பரை வச்சு அமுக்கி, அதுக்கு மேல இந்த சப்பாத்தி மாவை வச்சு சீல் பண்ணிட்டான் சார். இதே மாதிரி அந்த லேப்டாப்-ல இருந்த மூனு ஓட்டைய சீல் பண்ணிட்டான்...

என்னதான் சேட்டை பண்ணினாலும், இவங்களை கொஞ்சி விளையாடுறதுல பெத்தவங்களை விட ரொம்ப சந்தோசப்படுறவங்க தாத்தா பாட்டி தாங்க. புள்ளைங்களைப் பெத்து அவங்ககிட்ட விடுங்க... அந்தப் புள்ளைங்க எவ்வளவு நல்ல புள்ளையா வளருவாங்கன்னு பாருங்க. ABCD எல்லாம் எப்ப வேணும்னாலும் படிச்சுக்கிறலாம்ங்க. தாத்தா பாட்டிகிட்ட நிறைய நேரம் அவங்கள இருக்க விடுங்க... எவ்வளவு பக்குவமான புள்ளைங்களா வளருவாங்க தெரியுமா? நம்ம ஈகோ பிரச்சனைகளை மனசுல வைச்சுகிட்டு சிறு பிள்ளைங்களை தாத்தா பாட்டிகிட்ட போகவிடாமத் தடுத்துறாதீங்க... இழப்பு உங்க பிள்ளைகளுக்கும் தான். ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வயதானவங்களும் குழந்தை தாங்க. இந்த இருவேறுபட்ட தலைமுறை குழந்தைகளை ஒண்ணா விளையாடவிட்டு ஓரமா உக்காந்து அவங்க கொஞ்சல் மொழிகளையும், சந்தோசச் சிரிப்புகளையும் பாருங்க. அப்ப உங்க கண்ணுல வரும் பாருங்க கண்ணீர்த் துளி அது தாங்க ஆனந்தம். அது தாங்க நம்ம எல்லாருக்கும் வேணும்.




36 comments:

நாடோடி said...

உண்மையிலேயே ரெம்ப‌ ர‌சிச்சி ப‌டிச்ச‌ ப‌திவு..... குழ‌ந்தைக‌ளின் உல‌க‌ம் த‌னி உல‌க‌ம்...வாழ்த்துக்க‌ள் ந‌ன்ப‌ரே..

Balamurugan said...

//ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வயதானவங்களும் குழந்தை தாங்க. இந்த இருவேறுபட்ட தலைமுறை குழந்தைகளை ஒண்ணா விளையாடவிட்டு ஓரமா உக்காந்து அவங்க கொஞ்சல் மொழிகளையும், சந்தோசச் சிரிப்புகளையும் பாருங்க. அப்ப உங்க கண்ணுல வரும் பாருங்க கண்ணீர்த் துளி அது தாங்க ஆனந்தம். அது தாங்க நம்ம எல்லாருக்கும் வேணும்.//

மொத்த பதிவையும் ரசித்தேன். இருந்தாலும் மேற்குறிப்பிட்ட வரிகள் டச்சிங்.

மதார் said...

உங்கள் பதிவு படிக்கும்போதே நான் குழந்தையோடு கற்பனை உலகத்துக்கே போயிட்டேன் . குழந்தைங்க நம்ம உலகத்தையே மாத்திடுவாங்க . அத்தே அத்தே என்று கேட்க்கும்போதே என் அத்தனை கஷ்டமும் காணமல் போய்டும் .

சின்ன வயசுல இருந்தே மாமா ,அண்ணா குழந்தைகள் வளர்த்து பழகிட்டாலும் , இனி கல்யாண வாழ்க்கை சென்னைனு முடிவாயிட்டதால அத்தை, மாமா சென்னையில் இருக்குற மாதிரி ஒரு பையன்தான் வரணும்னு வேண்டுறோம் . என் பிரெண்ட்ஸ் எல்லாருக்குமே இந்த குழந்தை வளர்ப்புதான் பெரிய பிரச்சனையா இருக்கு , கல்யாணம் என்று சொன்னாலே அடுத்து யாரு கூட இருந்து குழந்தையை கவனிப்பாங்க ? நல்ல பையன் வரானோ இல்லியோ நல்ல மாமியார் கிடைக்கணும் இதான் இப்போதைய வேண்டுதல் .

Menaga Sathia said...

cute babies!!

தெய்வசுகந்தி said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க!!!

Chitra said...

ஒரு வருஷம் வரை உங்கள கண் அசர விடமாட்டாங்க. அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா, நீங்க அசந்தா உங்களை விடமாட்டாங்க.

..... same blood!
ha,ha,ha,ha....
குழந்தைகள் புகைப்படங்கள், அருமை. அழகு. கவிதை.
வாண்டுகளை பற்றிய பதிவு, மனதை வாரி கொண்டு போனது. :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. நல்ல இருக்கு. அதுவும் அந்த லேப்டாப் சீலிங் மேட்டர் தான் டாப்பு. உக்காந்து யோசிப்பாங்களோ குட்டிஸ்

மங்குனி அமைச்சர் said...

//USB Drive சொருகுகிற பகுதில பேப்பரை வச்சு அமுக்கி, அதுக்கு மேல இந்த சப்பாத்தி மாவை வச்சு சீல் பண்ணிட்டான் சார். இதே மாதிரி அந்த லேப்டாப்-ல இருந்த மூனு ஓட்டைய சீல் பண்ணிட்டான்...///



அது , பின்னே நாங்கெல்லாம் யாரு ?

கிரி said...

குழந்தைகள் என்றாலே அழகு தான் என்ன செய்தாலும்! எனக்கும் என் மகன் வரும் வரை குழந்தைகள் மீது அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை ..ஒருவேளை அவர்கள் செய்யும் சேட்டையால் கூட இருந்து இருக்கும்..தற்போது உடன் இருந்து பார்த்த பிறகு தான் ..நான் என் அக்கா பசங்க கிட்ட எல்லாம் எவ்வளோ மிஸ் செய்துள்ளேன் என்று புரிகிறது.

குழந்தைகள் உலகம் தனி உலகம்.

என் மகனை பற்றி எழுத நினைத்துள்ளேன்.... பார்ப்போம். ரோஸ்விக் படத்துல உங்க பொண்ணா! படங்கள் நல்லா இருக்கு..குறிப்பா அந்த துண்டு ;-)

Cable சங்கர் said...

வாழ்க்கையை எஞ்சாய் செய்யறீங்கன்னு சொல்லுங்க.. ரோஸ்விக்.. அருமையான பதிவு..

Test said...

அருமையான பதிவு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. உமக்கு கல்யாணம் ஆயிடுச்சா?..

சொல்லவேயில்ல..

ஹி..ஹி..
பதிவு அருமை..

பித்தனின் வாக்கு said...

நல்ல அருமையான பதிவு. என் நோக்கியா என்72 மொபைல் ஒன்றை எப்பவும் வாயில் வைத்து ஜொள்ளு ஊத்தியே ரிப்போர் ஆக்கினாள் என் அண்ணன் மகள். அவள் பிறந்த ஒரு வருடம் அற்புதமான வருடங்கள். நான் அவளுடன் இருக்கும் போதுதான் என்னை சிங்கைக்கு அனுப்பி விட்டார்கள். அப்போது ரொம்பவும் பாதிக்கப் பட்டேன். பதிவுலக வாழ்க்கைதான் ஆறுதலாக இருந்தது.

பிரபாகர் said...

தம்பி எல்லாம் சூப்பரா இருக்கு... நம்ம நண்பரோட பையன் இதுவரைக்கும் ஐந்து மொபைல தண்ணியில போட்டிருக்காரு, இதுல வீட்டுக்கு கெஸ்ட்டா வந்த ஒருத்தரோட போனும் அடக்கம்.

குழந்தை ரொம்ப க்யூட்டா இருக்கு...

பிரபாகர்...

vasu balaji said...

ஆஹா! Dolly செம க்யூட். கண்ணப் பார்த்தாலே தெரியுது:)). Nice writeup. I enjoyed it thoroughly

ILLUMINATI said...

Children are always little wonders my friend.....
Sorry for coming up late..... Take care.... :)

Rettaival's Blog said...

ரோஸ்விக்கு... அனுபவம் பலமா பேசிருக்கு போல! நீ போய் குழந்தை கிட்ட மாமிசம் சாப்பிடாத... ஒசோன் படலம்.. குளோபல் வார்மிங்னு பேசிருப்ப...மவனே அது உன்னைப் பாடாப் படுத்திருக்கும். ( Just kidding ... Beautiful article!)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ரோஸ்விக் said...

நாடோடி - மிக்க நன்றி ஸ்டீபன். :-)

ரோஸ்விக் said...

பாலமுருகன் - மிக்க நன்றி பாலமுருகன் :-)

ரோஸ்விக் said...

மதார் - நன்றி மதார். உங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள். :-)

ரோஸ்விக் said...

Mrs.Menagasathia - மிக்க நன்றிங்க. :-)

ரோஸ்விக் said...

Deivasuganthi - - மிக்க நன்றிங்க. :-)

ரோஸ்விக் said...

Chitra - காலை வாரினால் தான் தப்பு. மனதை வாரினால் நல்ல விஷயம் தான். :-)

ரொம்ப நன்றி சித்ரா உங்க வருகைக்கு.

ரோஸ்விக் said...

அப்பாவி தங்கமணி - ஆமாங்க... எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க... :-)

மிக்க நன்றி. :-)

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - மங்குனி அமைச்சரும் இப்புடியெல்லாம் செஞ்ச ஆளா இருப்பாரு போலியே!

மிக்க நன்றி மங்கு சார். :-)

ரோஸ்விக் said...

கிரி - விரைவில் எழுதுங்க கிரி.
வினய்-யின் வினைகளை தெரிந்துகொள்வோம். :-)

மிக்க நன்றி கிரி.

ரோஸ்விக் said...

Cable Sankar - மிக்க நன்றி அண்ணே! :-)

ரோஸ்விக் said...

Logan - மிக்க நன்றி லோகன் :-)

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - யோவ் சத்தமா சொல்லாதையா... ஒரு தடவை ஆயிடுச்சு... :-)))
மிக்க நன்றி பட்டு...

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - நன்றி அண்ணே! சீக்கிரமா செட்டில் ஆகுங்க... :-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - ஆத்தாடி அடுத்த வீட்டுக்கு கெஸ்டா போகும்போது கூட சூதானமா இருந்துக்கனும் போலையே! வாலுங்க ரொம்ப பேரு இருக்குறாங்க... :-)

ரொம்ப நன்றிண்ணே!

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - ரொம்ப நன்றி பாலா அண்ணே! சந்தோசமா இருக்கு. :-)

ரோஸ்விக் said...

ILLUMINATI - Thanks dude. :-)

ரோஸ்விக் said...

ரெட்டைவால் ' ஸ் - ஆஹா ரெட்டைவால் இருக்கான்னு தெரியாம எழுதிப்புட்டனோ?? :-) இது ரொம்ப பெரிய வால் ஆச்சே!

நல்ல வேளைய்யா... இன்னும் இந்த வாண்டுக நம்ம எழுதுற பதிவுகளைப் படிக்கிறது இல்ல... படிச்சா இதுங்க ஆட்டம் இன்னும் அதிகமா இருக்கும்.

நன்றி ரெட்டை. :-)

ஜெய்லானி said...

குழந்தைகள் வீட்டில் இருந்தாலே ஒரு சந்தோஷம் தான் . நமது கவலைகளுக்கு மருந்து மாதிரி. நல்ல பதிவு.