Saturday, March 27, 2010

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 3

பாகம் -1 மற்றும் பாகம் - 2 - ஐப் படித்துவிட்டு வாருங்களேன்!



சில அதிர்ச்சிகரமான மற்றும் சுவாரஸ்யமான புள்ளி விபரங்களுடன் இந்த பதிவு...

அமெரிக்கர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் மாமிசம் உண்ணுவதைத் தவிர்த்தால், அமெரிக்க சாலையில் ஓடும் 8 மில்லியன் கார்களை ஒரு நாள் நிறுத்தியதற்கு சமம்.

உலகில் உள்ள அனைவரும் மாமிசம் உண்ணுவதைத் தவிர்த்தால், 80% உலக வெப்பமயமாதலுக்கான தீர்வு கிட்டிவிடும்.

உலக அளவில் உள்ள 750 மில்லியன் கார்கள் ஒரு வருடத்திற்கு சுமார் 2.25 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.

ஒட்டுமொத்த கார்பன்-டை-ஆக்சைடு வெளியீட்டில், 50% -க்கு மேல் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக மின் மற்றும் இதர சக்தி (Energy producers) உற்பத்தி தொழில்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

2000 ஆண்டிற்கு பிறகு வருடந்தோறும் சுமார் 7.3 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றன.

வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தால், உலகின் அனைத்து பனிப்பாறைகளும் உருகி கடல் நீர் மட்டத்தை வெகுவாக உயர்த்திவிடும்.

1970 -களில் உலகில் தோன்றிய வலுவான புயல்களின் எண்ணிக்கை, வருடத்திற்கு வெறும் 8 மட்டுமே. ஆனால், 2000-2004 ஆண்டுகளில், வருடத்திற்கு 18 வலுவான புயல்கள் இவ்வுலகைத் தாக்கியுள்ளன.

ஒரு மனிதன் ஒரு வருடம் முழுவதும் சைவ உணவுகளை மட்டும் உண்டு வந்தால், 3.267 Pounds கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடுவது குறைக்கப்படும். (இது ஒரு வருடம் முழுவதும் ஒரு மனிதன் டிவி, போன், வாஷிங் மெசின், மைக்ரோவேவ் ஓவன், டிவிடி பிளேயர், ரேடியோ, பேன், கணினி, பிரட்டோஸ்டர், ஹேர் ட்ரையர், பிரிண்டர், பிரிட்ஜ், காஃபி மெசின், கேஸ் ஸ்டவ் ஆகியவற்றை உபயோகிக்காததற்கு சமம்) + விலங்குகளுக்கு தானியமிட்டு மாமிசம் வளர்த்து, அந்த மாமிசத்தை உண்ணுவதற்குப் பதிலாக, தானியமாகவே மனிதன் சாப்பிட்டு வந்தால், உலகில் உள்ள 5 மனிதனுக்கு உணவளிக்க முடியும். + மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற 25 உயிர்கள் காக்கப்படும்.

இதே போல, ஒட்டு மொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையான 301 மில்லியன் மக்களும் 2/3 பங்கு மாமிசம் உண்ணுவதை தவிர்த்தால் = 655 பில்லியன் பவுண்டுகள் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது தவிர்க்கப்படுவதோடு + 1 பில்லியன் மக்களுக்கு பசி தீர்க்க முடியும் (இதுவே உலகின் உணவுப்பற்றாக்குறை. ஒட்டு மொத்த மானுடமும் உணவு பெரும்) + 5 பில்லியன் விலங்குகளின் வாழ்வு தவிர்க்கப்படும்.

வருடத்திற்கு 55 பில்லியன் விலங்குகள் உணவுக்காக மட்டுமே பலியிடப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 10 பில்லியன் விலங்குகள் உணவுக்காக வருடந்தோறும் கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் 300 மில்லியன் மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளும், 4 பில்லியன் கோழிகளும் உணவாக்கப்படுகின்றன. கனடாவில் மட்டும் 650 மில்லியன் விலங்குகள் வருடந்தோறும் உணவாக்கபடுகின்றன.

அறிவியலார்களின் கூற்றுப்படி, இந்த உலக வெப்பமயமாதல், இன்னும் 50 வருடங்களில், மக்கள் தொகையில் 150 மில்லியனை குறைத்துவிடும்.

அமெரிக்காவில் உள்ள மாமிசப் பிராணிகளுக்கு வழங்கப்படும் சோயா மற்றும் இதர தானியங்களை மட்டும் கொண்டு, உலகின் 20% (1.4 பில்லியன்) மக்களுக்கு உணவளிக்க முடியும்.

சைவ உணவு பழக்கவழக்கத்திற்கு மாறுவதன் மூலம், உலக வெப்பமயமாதலின் 80% தீரும். உலகின் அனைத்து பகுதிகளிலும் பசி என்ற ஒன்று இருக்காது. உலகில் 85% சோயாவும், 43% அரிசி, கோதுமை, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் உபரியாக இருக்கும். பெரும்பாலான காடுகள் பாதுகாக்கப்படும், விலங்குகளிடமிருந்து பரவும் 75% புதிய வகை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

கீழ்க் காணும் வழிகளில் நாம் நமது பங்கை செலுத்தலாமே!
1) இன்று முதல் மாமிச உணவுகளை உடனடியாக, வெகுவாகக் குறைத்தல் / தவிர்த்தல்.
2) சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின் சக்திகளை உற்பத்தி செய்து கொள்ளுதல்.
3) குண்டு பல்புகள் பயன்படுத்துவதற்குப் பதிலாக Fluorescent பல்புகளைப் பயன்படுத்துதல்.
4) அத்தியாவசியம் இல்லாமல் மின் சக்தியை வீணாக்குவதைத் தவிர்த்தல்.
5) குளிரூட்டிகளையும், குளிர் சாதனப் பெட்டிகளையும் மிகக் குறைவான அளவில் பயன்படுத்துதல்.
6) வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்.
முடிந்த அளவு மரம் நடுதல்.
7) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முடிந்த அளவு தவிர்த்தல். ஒவ்வொருவருக்கும் தனி வாகனம் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குழுவாக ஒரே வாகனத்தில் பயணித்தல்.
8) தேவை இல்லாத பயணங்களையும், ஊர் சுற்றுவதையும் தவிர்த்தல்.
9) பொது போக்குவரத்து வசதிகளையே முடிந்த அளவு பயன்படுத்துதல்.
10) Reduce, Reuse, Recycle. (நான் அலுவலகத்தில் நீர் அருந்துவதற்கு உள்ள use and throw cup ஒன்றை மட்டும் அந்த நாள் முழுவதும் பயன்படுத்துவேன். சிலர் ஏளனமாகப் பார்த்தாலும் நான் கவலை கொள்வதில்லை :-) )




22 comments:

Chitra said...

நான் சுத்த அசைவம். கஷ்டம் தான். முயற்சி பண்றேன்.

நாடோடி said...

ந‌ல்ல‌ புள்ளி விப‌ர‌ம் ந‌ண்பா? அருமையான‌ யோச‌னைக‌ள்..

ஜெய்லானி said...

முயற்சி பண்ணுவோம்.

Thenammai Lakshmanan said...

சித்து சொன்னது உண்மைதான் என்ன செய்வது அவ்வப்போது சாப்பிடுவேன் நான்... நிறுத்த வேண்டும்

மங்குனி அமைச்சர் said...

ரோஸு நிஜமாவே சூப்பர் யா

பித்தனின் வாக்கு said...

Well said i will also try this

Unknown said...

நல்ல விவரங்கள் நன்றி

யூர்கன் க்ருகியர் said...

பதிவு நன்று நண்பா ...
முடிந்தவரை முயலுவோம்.... மீறி போச்சுன்னா பின்னாட்களில் அவனவன் தலைவிதி எப்படியோ ? :-(

க.பாலாசி said...

அய்யோ.. அதுவும்கூடாதா.?? சரி..நமக்காக இல்லாட்டியும் நம்ம புள்ளகுட்டிக்காகவாச்சும் சாப்புடாமத்தான் இருப்பமே....

ஸ்ரீராம். said...

1) இன்று முதல் மாமிச உணவுகளை உடனடியாக, வெகுவாகக் குறைத்தல் / தவிர்த்தல்//

அப்பாடி...இதை நான் கடைப் பிடிக்க முடியும்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான சூப்பரான பகிர்வு,

உங்களுக்கு என் பக்கத்தில் அவார்டு கொடுத்து இருக்கிறேன் வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்,

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html

Jaleela Kamal said...

முதலில் இருந்தே காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கஷடமாக இருக்காது.

Sathish said...

நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்

http://moo-vie.blogspot.com - Movies in all Languages

http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website

http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)

http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websites

துபாய் ராஜா said...

அருமையான கருத்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்
//

இன்று முதல் குளிப்பதில்லை என சபதம் எடுக்கப்போறேன்..

சும்மா டமாசு..

நல்ல பதிவு.. மக்களை சென்றடையட்டும்.. நன்றி..

ஸ்ரீராம். said...

வலைப் பக்கத்தின் தோற்றம் - மாற்றப்பட்ட வடிவம் - நன்றாக இருக்கிறது

ரோஸ்விக் said...

மிக்க நன்றி Chitra

மிக்க நன்றி நாடோடி

மிக்க நன்றி ஜெய்லானி

மிக்க நன்றி thenammailakshmanan

மிக்க நன்றி மங்குனி அமைச்சர்

மிக்க நன்றி பித்தனின் வாக்கு

மிக்க நன்றி மேரிஜோசப்

மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்

மிக்க நன்றி க.பாலாசி

மிக்க நன்றி ஸ்ரீராம்.

மிக்க நன்றி Jaleela (அவ்வார்டுக்கு நன்றிக்கா... என்னக்கா அங்க வந்து பார்த்தா எனக்கு அவர்டையும் காணோம், கருவாடையும் காணோம்... :-)

மிக்க நன்றி துபாய் ராஜா

மிக்க நன்றி பட்டாபட்டி.. (நல்ல வேளை நான், இந்த நாதாரிய சந்திக்க இப்ப வாய்ப்பு இல்லை...)

மிக்க நன்றி ஸ்ரீராம். :-)

Vipasana said...

ரொம்ப அவசியமான பதிவு நண்பரே ... உங்களோட பத்து கட்டளைகள பெரும்பாலும் கடைபிடிச்சுக்கிட்டு தான் வர்றேன் ... சூழலியல் பத்தி பெரிய அளவில நடத்தப் படுற கருத்தரங்குகள விட தனி மனிதன் தான் அதிகம் செய்ய முடியும்னு தோணுது ..

நன்றி தோழரே உங்களோட வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும்

malarvizhi said...

நான் சுத்த அசைவம் ,என்ன பண்ணுவது.?முயற்சிக்கிறேன்.ஆனால் முடிந்தவரை தோட்டத்தில் நிறைய மரங்கள் வளர்கிறேன்.புவி வெப்பம் குறித்து நான் அறிந்த சில தகவல்களை என் வலைபக்கத்தில் கொடுத்துள்ளேன்.படிக்கவும்.நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் .பதிவு மிகவும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன்

Jaleela Kamal said...

சாரி, ரோஸ்விக் இப்ப தான் அந்த பதிவை போய் பார்த்தேன். தேர்வு செய்து வைத்திருந்ததில் உஙக்ள் பெயரை அதில் சொல்லவில்லை போல , இப்போது ஆட் பண்ணி விடுகிறேன்.
அதில் தொடர் பதிவு+அவார்டு போட்டதால் நிறைய தடவை எடிட் செய்ததில் ஹெச் டி எம் எல் எரரில் உங்கள் பெயர் விட்டுபோச்சு, இதோ இப்ப சேர்த்து விடுகிறேன்./

கோவி.கண்ணன் said...

//6) வாளியில் நீர் பிடித்து குளிப்பதற்கு பதிலாக, ஷவர் குளியல் செய்தல்.
முடிந்த அளவு மரம் நடுதல்.//

டவலை நனைத்து துடைத்துக் கொண்டால் தண்ணீர் இன்னும் மீச்சமாகும்.
:)