Friday, March 5, 2010

(நா)மீறிப்போன மீடியாவின் மிடுக்கு...!

ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் இன்று ஆபாசங்களாலும், கவர்ச்சியாலும் கம்பீரமிழந்து அம்மணமாகவே நிற்கிறது. ஜனங்களையும், ஜனநாயகத்தையும் காக்க தம்மால் முடியும் என்ற கூற்றை இந்த ஊடகங்கள் பூடகமாகக் கூட நம்ப மறுக்கிறது. தன்னிலை மறக்கிறது. மூளை வளர்க்க உதவும் என்று ஒவ்வொரு வீட்டிலும் மூலைக் கல்லாக்கப்பட்ட ஊடகங்கள், இன்று தங்கள் கோரப் பற்களைக்காட்டி எங்களை சோரம் போகச் செய்கிறது.

தாய் தந்தைக்கு இடமில்லாத வீடுகள் கூட உண்டு. அனால், அங்கும் தொலைகாட்சிப்பெட்டிக்கு என்று ஒரு நிரந்தர இடம் உண்டு. அதுவும் அலங்கார மேஜைகளுடன். பலரின் வாழ்கை வண்ணங்கள் அவர்களின் தொலைகாட்சிப்பெட்டிக்குள் மட்டுமே. தொலைக்காட்சி காண தவம் கிடந்த நாங்கள்... இன்று தொலைகாட்சியின் முன்பே தவமாக. எங்கள் மனநிலையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மாற்றிக்கொள்கிறோம் மாயமாக. எதிர்த்து கேட்க உரமில்லாத எங்கள் மனதும் மக்கித்தான் போனது நம் மண்வளம் போல... உங்களின் வியாபார பணப் பயிர்களால்.

உங்கள் கடமை பணம் பண்ணுவது மட்டுமே. கண்ணியம் பெண்ணியம் போல பேச்சுகளில் மட்டும். கட்டுப்பாடு விதிக்க துப்பிலாத அரசும் வியாதி பிடித்து இன்று வீதிகளிலும்... ஜாதிகளிலும். பகுத்தறிவு பேசிய தலைவர்களும், தம் பணங்களை பாங்காக, பங்கு பகுப்பதிலும், பதுக்குவதிலும் தங்கள் அறிவை முதலீடு செய்துவிட்டனர். சைடு டிஷுக்கு வக்கில்லாத குடும்பங்கள் கூட உங்க டிஷுக்கு ஆசைப்பட்டு, வட்டிக்கு பணம் வாங்கி உங்கள் பெட்டிக்கு அனுப்பி விடுவர்.

பணத்தை படங்களாகத் தயாரித்து, பத்து நிமிடத்திற்கு ஒருமுறை நீங்கள் செய்யும் விளம்பரம், சினிமா பார்த்தே வளர்ந்தவர்களுக்குக் கூட இனிமா கொடுத்தது போல் ஆக்கிவிடுகிறது. உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் தொலைகாட்சி கண்டுபிடித்தவன் பித்து பிடித்து, அதன் டையோடு ஆணோடுகளை கட்டியணைத்தே மண்ணோடு மாண்டுபோவான். இதுவே சத்தியம். அவனுக்கும் அது சாத்தியம். படம் எடுத்து அதை செய்தியில் தொடுத்து பலரின் உயிரெடுக்கும் வித்தை உங்கள் ஊனோடு மட்டுமல்ல உதிரத்தோடும் பதியமிடப்பட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

பணம் வருகிறது என்றால் நீங்கள் லேகியம் விற்பவனையும் ஆதரிப்பீர்கள். கோமியம் விற்பவனையும் ஆதரிப்பீர்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை உங்கள் இதயம் இறந்துவிடும் போலும். அது உங்களை கைது செய்த நடவடிக்கையாயினும் சரி... நடிகையின் கவரேஜ் ஆயினாலும் சரி. பேருக்கு, பேரை தமிழில் வைத்துவிட்டு ஊருக்கு உறுப்பாட்டி காட்டும் உங்கள் விவசாயம் விண்ணைத் தாண்டியும் அருவடையாகிகொண்டே இருக்கிறது.

ஒழுக்க சீலரா நீங்கள் என்று எங்களில் யாரையும் வினவவும் வேண்டாம். உம்மாலும், எம்மாலும் கட்டப்பட்ட சமுதாயம் எமக்குச் செய்த சவரத்தால் ஒழுகித்தான் போய்கொண்டிருக்கிறது எங்கள் ஒழுக்கமும் கமுக்கமாய். வாழ்வில் காதல் வேண்டும், காமம் வேண்டும், கவர்ச்சி வேண்டும் இனிமையாய் கழிக்க. இந்த வேண்டும் என்ற வேண்டுதல்களில் முக்கி முக்கியே இனியும் முயலாதீர்கள் எங்களை இனி மையாய் கரைக்க. இதில் எல்லை அமைக்க முடியாத மானுடத்தின் இந்த தடுமாற்றம் உங்களின் நடமாட்டத்தை நடனமாட விட்டுக்கொண்டிருக்கிறது.

கத்திரிக்காய்க்கு இட்ட தடையை பத்திரிக்கைக்கு இடமுடியாதது ஜனநாயகத்தின் விரிசல். குமுதத்திலிருந்து வரும் கட்டுரைகள், அதன் பெயரில் உள்ள "மு"-வை மூழ்கி சாகடித்துவிட்டு (குமுதத்தில்-மு-வை நீக்கிவிட்டு படித்துப் பாருங்கள்), வெளியிடப்படுவது போல இருப்பது அனைவருக்கும் ஏமா(நா)ற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிக்கொண்டு காமெராக் கண்களையும் திறந்துவிட்டது ஒரு பத்திரிகை. முழுவதுமாகப் பார்க்கவேண்டுமா... காசு கொடு என்று கை நீட்டி மண்டியிடுகிறது. மீசைகளில் பணத்தாசைகள் மறைத்து வைக்கப்படுகிறது போலும். புலனாய்வுப் பத்திரிக்கைகள் பலரின் புலன்கள் வரை தன் பார்வைகளை பரப்பித் தான் வைத்திருக்கிறது. கிரைம் பத்திரிக்கைகள் எழுதும் பேனாக்களின் ரசம் முழுவதும் கிரிமினல்களின் வசமோ என்று கூட ஐயம் எழுகிறது.

ஊடகங்களே நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலுக்கும் சாட்சிகளாக உங்கள் மனசாட்சிகளை வையுங்கள். உங்கள் பேனா முட்களின் பரிணாமமும், பரிமாணமும் ரோஜாக்களாக இருக்கட்டும். களைக்கொல்லிகலாக இருக்க வேண்டிய நீங்கள் களைகளாகிப் போனது வருத்தம் தான். வருமானம் பற்றியே யோசிக்கும் நீங்கள் வரும் மானம் பற்றியும் யோசிக்கலாம் தானே. ஜனங்களின் நாயகர்கள் நீங்கள். அதை மறவாதீர்கள். வாழ்வில் நித்தமும் ஆனந்தம் வரலாம் போகலாம். அது நிலையல்ல... அதுவே உங்கள் தொழிலின் நிலையும் அல்ல. மனோரஞ்சிதமாக மணக்க வேண்டியவர்கள்.

மனதை திறந்து வைத்து எழுதுங்கள்... பிறரின் மானத்தை திறந்து வைத்து வேண்டாம். உங்கள் கதவுகளைத் திறங்கள் காற்று வரட்டும்... ஒரு போதும் உங்களைப் பற்றிய தூற்று வேண்டாம். இது தான் பலரின் கூற்று என்றும் நினைக்கிறேன்.

நின்று கொன்றது போதும்... இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள்...

62 comments:

தமிழ் உதயம் said...

பிறர் கெட்டு போவதை நினைத்து மகிழ கூடிய ஜென்மங்கள் அவர்கள்.

மீடியா தன் கற்பை இழந்து வெகு நாட்கள் ஆனதால், எல்லோரையும் தன் போல் ஆக்க நினைக்கிறது.

பட்டாபட்டி.. said...

சூப்பர்.. அருமையாக சொன்னீர்கள்..
படித்தவர்களுக்கு புரிகிறது..
ஆனால் அந்த பன்னா&^%களுக்கு...?

( சாரி சார்.. அந்த வார்த்தைகளை நீக்கிக்கொள்ள.. என்னுடையஅனுமதி
தேவையில்லை..)

VISA said...

மீடியா கற்பை இழந்துவிட்டதா....அப்படி எல்லாம் எழுதாதீர்கள். உடனே சன் டிவிக்கும் உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்று கூவ ஆரம்பித்துவிடுவார்கள்.
எனக்கு அப்படித்தான் பட்டம் கொடுத்தார்கள்.

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே ...

மைதீன் said...

"யோக்கியன் வாரான் சொம்பெடுத்து உள்ளவை"ன்ற கதையாருக்குது.நல்ல பதிவு .

பத்மநாபன் said...

ஒரு சீரழிவை தடுக்க அரசாங்கமோ அதன் சட்டமோ தயாராக இல்லாதபொழுது , ஓராயிரம் சீரழிவுகளை மக்கள் மனதில் திணிக்கும் ஊடகம். இதுவும் ஒருவகை மோசடி . போலி சமுக நச்சுகளை வேரோடு களைந்து எடுக்கவேண்டும். அதே சமயத்தில் அநாகரிக ஊடகங்களை அடையாளங்கண்டு ஒதுக்கவேண்டும் . யார் மக்கள் தான் ....

பத்மநாபன் said...

ஒரு சீரழிவை தடுக்க அரசாங்கமோ அதன் சட்டமோ தயாராக இல்லாதபொழுது , ஓராயிரம் சீரழிவுகளை மக்கள் மனதில் திணிக்கும் ஊடகம். இதுவும் ஒருவகை மோசடி . போலி சமுக நச்சுகளை வேரோடு களைந்து எடுக்கவேண்டும். அதே சமயத்தில் அநாகரிக ஊடகங்களை அடையாளங்கண்டு ஒதுக்கவேண்டும் . யார் மக்கள் தான் ....

நாடோடி said...

//மனதை திறந்து வைத்து எழுதுங்கள்... பிறரின் மானத்தை திறந்து வைத்து வேண்டாம்.//

ந‌ல்ல‌ வ‌ரிக‌ள்....எங்கே திருந்த‌ போகிறார்க‌ள்..எப்ப‌டியாவ‌து பிர‌ப‌ல‌ம் ஆக‌ வேண்டும்..என்ன‌ பொழ‌ப்புடா?.

பிரபாகர் said...

இது போன்ற ஆயிரம் செருப்படிகள் கொடுத்தாலும் அந்த ஈன நாய்களுக்கு உறைக்கப்போவதில்லை!

பிரபாகர்...

Chitra said...

ஊடகங்களே நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலுக்கும் சாட்சிகளாக உங்கள் மனசாட்சிகளை வையுங்கள். உங்கள் பேனா முட்களின் பரிணாமமும், பரிமாணமும் ரோஜாக்களாக இருக்கட்டும்.

.............. well-said!

நீச்சல்காரன் said...

உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்

சைவகொத்துப்பரோட்டா said...

//ஊடகங்களே நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலுக்கும் சாட்சிகளாக உங்கள் மனசாட்சிகளை வையுங்கள்.//


மனசாட்சி...... அப்படின்னு ஒன்னு இருந்தாதானே.

ஸ்ரீராம். said...

அருமை. மனதில் உள்ளது அப்படியே வார்த்தைகளில்...நியாயமான வெளிப்பாடு

ILLUMINATI said...

Friend, I have changed the comments settings as you said.I've lifted up the moderation. :)

sorry for taking to much time.Do visit often and comment please.

And regarding your post, it's nothing but music to deaf ears friend.Unless we decide to change ourselves and the society, nothing's gonna work.

thenammailakshmanan said...

முழுமையும் அருமையான இடுகை ரோஸ்விக்

ஜெய்லானி said...

ரோஸு இந்த பத்திரிக்க சொதந்திரம் ம்னா இன்னா நய்னா ? புடிச்சிருந்தா காசு பாக்ரது. யாராவது திட்டினா அவன் மேல கேசு போட்ரது இதுவா ??

Muthu said...

அருமையான பதிவு

Raajendran said...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் இந்த ஊடகங்கள்.ஆனால் பணனாயகத்தின் முதல் தூணாக மாறியதன் காரணம்.பணம்ம்ம்ம்.பணத்திற்காகவும் பதவிக்காகவும் பிணம்(ஈழத்தமிழர்கள்) தின்ற கழுகுகள்தானே இந்த கருணாநிதி குடும்பமும் ,சன் டிவி குடும்பமும், நக்கீரன் குடும்பமும். நண்பா உன் மொபைல் நம்பர் வேண்டும்.நான் விரைவில் சிங்கப்பூர் வருவேன்.இது தமிழனின் ஆதங்கம் அல்ல!-மனிதாபிமானமுள்ள மனிதனின் ஆதங்கம் மட்டுமல்ல!-ஜனநாயகத்தை
எதிர்பார்க்கும் ஒரு சாமானியனின் ஆதங்கம்.

ரோஸ்விக் said...

தமிழ் உதயம் - நன்றி சார். இந்த பத்திரிகைகள் தங்களின் பலம் அறியாமல் செயல்படுவது வருத்தம் தான்.

ரோஸ்விக் said...

பட்டாபட்டி.. - நன்றி பட்டு...

ப.மு.க-வின் சார்பில் அவர்களுக்கு ஆடை தானே போட்டு விட்டிருக்கீர்கள். நீக்க வேண்டிய அவசியம் இல்லை. :-)

(பொன்னாடை என்று கூட வைத்துக் கொள்ளலாம்)

ரோஸ்விக் said...

VISA - உண்மையை உலகம் அறியும்... உடன் பிறப்புகளும் அறியும்... நன்றி விசா.

ரோஸ்விக் said...

யூர்கன் க்ருகியர் - நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

மைதீன் - சீக்கிரம் சொம்ப எடுத்து உள்ள வைங்க. இல்லையினா அதுக்குள்ளையும் கேமெரா வச்சுடுவாங்க... :-)

நன்றி மைதீன்.

ரோஸ்விக் said...

பத்மநாபன் - ம்ம்ம்... நீங்கள் சொல்வதும் சரிதான். நன்றி நண்பரே!

ரோஸ்விக் said...

நாடோடி - வேறு வழிகளில் பிரபலம் ஆகட்டும்... பிறரின் பிரா பலம் வரை ஏன் செல்லுகிறார்கள்?

நன்றி நண்பரே! :-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - சரிதான்... அந்த நாய்கள் நல்ல விஷயங்களுக்கும் குறைத்தால் நல்லது. :-)

நன்றி அண்ணா.

ரோஸ்விக் said...

Chitra - நன்றி சித்ரா.

ரோஸ்விக் said...

நீச்சல்காரன் - வாங்க தல சேர்ந்து நீந்துவோம். :-) மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

சைவகொத்துப்பரோட்டா - பெரும்பாலும் முதலில் கொல்லப்படும் / முதலுக்காகக் கொல்லப்படும் சாட்சி - மனசாட்சி தானே.

நன்றி நண்பா.

ரோஸ்விக் said...

ஸ்ரீராம். - நன்றி எங்கள் ஸ்ரீராம். :-)

ரோஸ்விக் said...

ILLUMINATI - நன்றி இலுமு... அடிக்கடி வந்துருவோம். :-)

ரோஸ்விக் said...

thenammailakshmanan - நன்றி அக்கா... :-)

ரோஸ்விக் said...

ஜெய்லானி - கரீட்டா சொல்லிபுட்டே ஜெயிலு! :-)) (ஜெயிலா-நீ??) - அன்பின் நக்கல். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நன்றி நண்பா!

ரோஸ்விக் said...

Muthu - நன்றி முத்து! நீ ப. மு.க-வின் சொத்து...

ரோஸ்விக் said...

Raajendran - அண்ணே நீங்க நல்லவர்னு தெரியுது... ஆனால், எந்த ஊர்னு தெரியல... எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க அண்ணே! - thisaikaati@gmail.com

சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது... :-)

Muthu said...

ரோஸ்விக் said...
பட்டாபட்டி.. - நன்றி பட்டு...
ப.மு.க-வின் சார்பில் அவர்களுக்கு ஆடை தானே போட்டு விட்டிருக்கீர்கள். நீக்க வேண்டிய அவசியம் இல்லை. :-)
(பொன்னாடை என்று கூட வைத்துக் கொள்ளலாம்)/////


பொன்னாடையா இல்ல பண்ணாடையா.

Muthu said...

ரோஸ்விக் said...

Muthu - நன்றி முத்து! நீ ப. மு.க-வின் சொத்து...///


யோவ் பட்டு இப்பயாவது நான் யாருன்னு தெரியுதா

புலவன் புலிகேசி said...

//உங்கள் கடமை பணம் பண்ணுவது மட்டுமே. கண்ணியம் பெண்ணியம் போல பேச்சுகளில் மட்டும். கட்டுப்பாடு விதிக்க துப்பிலாத அரசும் வியாதி பிடித்து இன்று வீதிகளிலும்... ஜாதிகளிலும்.//

ரோஸ்விக் சரியான் சாட்டையடி..ஆனா இவனுங்கத் திருந்த மாட்டானுங்க தல

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மிக நல்லா எழுதி இருக்கீங்க ரோஸ்விக்.
--
பாருங்க இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சி நாங்கதான் வாங்கி கொடுத்தோம் என்று ஃப்ளாஷ் நியூஸ் காமிச்சாலும் காமிப்பானுங்க.!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்று ரோஸ்விக்..!

ஊடகங்கள் தங்களுடைய கடமையை மறந்து பணம் சம்பாதிக்கும் தொழிலாகத் தங்களை மாற்றிக் கொண்டு பல்லாண்டுகளாகிவிட்டது..!

இவர்களுக்கு ஒருபோதும் நித்தியைக் குற்றம் சொல்ல உரிமையும், அருகதையும் இல்லை..!

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..!

Robin said...

போலி சாமியாரை வெளிப்படுத்திய சன் டிவியை பாராட்டுகிறேன்.
இதைப் பின்பற்றி கிரிமினல்களை வெளிப்படுத்த அனைத்து ஊடகங்களும் முன்வரவேண்டும்.

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - நன்றி புலிகேசி... வருத்தம் தான். :-)

ரோஸ்விக் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ - நன்றி சங்கர் அண்ணே! இவனுக அழிம்பு தாங்கல அண்ணே...

ரோஸ்விக் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) - நன்றி அண்ணே! அருகதையோடு குற்றம் சுமத்த பெரும்பாலும் எவராலும் முடியாது.இதை பொது மக்களின் பார்வைக்கு வெளிக்கொணரத் தான் வேண்டும். ஆனால், அவர்கள் செய்த விதம் தான் அருவருக்க வைக்கிறது.

ரோஸ்விக் said...

Robin - வாங்க ராபின். தங்களின் கருத்துக்க்கு மிக்க நன்றி.

இந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும் தான். ஆனால், அதற்கென்று ஒரு வரைமுறை வேண்டாமா? கிரிமினல்களை ஊர் அறிய செய்ய வேண்டும் தான். இந்த விஷயத்திற்கு மட்டும் நான் ஊடகங்களை குற்றம் சுமத்தவில்லை. அவர்களின் பலம் மிகப் பெரியது. அதை அவர்கள் எப்படி, எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். நீங்கள் குறிப்பிடும் நிறுவனம் மட்டுமல்ல. எல்லோரையும் தான் குறிப்பிடுகிறேன்.

அதற்காக 20 நிமிடத்திற்கு ஒருமுறை வர்ணனையுடன் கூடிய வீடியோ காட்சிகளை காட்ட வேண்டுமா?? அது முழுவதும் வியாபார நோக்கமேயன்றி வேறு என்ன சொல்ல முடியும்?

முன்னோட்டம் இலவசம். முழுப்படம் - கட்டணம். இது என்ன வகை?

கிரிமினல்களை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு நான் உங்களைப்போல ஆதரவு தருகிறேன். திவாரி விஷயத்தில் வீடியோ காண்பிக்கப்பட்டதா?? தேவநாதன் விஷயத்தில் காண்பிக்கப் பட்டதா? அவர்களும் கிரிமினல்கள் தானே??

தியாவின் பேனா said...

ஆஹா....
அருமை

ILLUMINATI said...

Friend,could you send me your email id to illuminati.blog.in@gmail.com please?

Sivaji Sankar said...

//நின்று கொன்றது போதும்... இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள்...//
சரியா சொன்னேங்க.... இனியாவது திருந்துமா பாக்கலாம்...

seeprabagaran said...

போலிச்சாமியார்களை மட்டுமல்ல... போலி அரசியல்வாதிகளை, போலி ஊடகங்களை என சமூகத்தை சீரழிக்கும் அத்தனைப் போலிகளும் அம்பலப்படுத்த வேண்டியவைதான்.

ஆனால் சன் குழுமம் செய்வது பச்சை அயோக்கியத்தனம். நித்தியானந்தாவை அம்பலப்படுத்தவேண்டும் என்றால் அதுபற்றிய செய்தியை தொடர்ந்து வெளியிடலாம். தொடர் விசாரணை நடத்தி அது தொடர்ப்பான களப்பபணிகள் செய்து அவரை மேலும் மேலும் அம்பலப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தையும் செய்யலாம். அதை அனைவரும் பாராட்டவும் செய்வார்கள்...

ஆனால் சன் குழுமம் செய்தது என்ன ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உடலுறவு காட்சிகளை அரைமணிநேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து இரண்டுநாட்களுக்கு காட்டவேண்டிய அவசியம் என்ன?

இவர்களுடைய அத்துமீறலின் அடுத்த பரினாமமே இந்த பாலுறவு படங்களின் தொடர் ஒளிபரப்பு.

இன்றைக்கு இணையதளங்களிலும், கள்ளச்சந்தைகளிலும் எத்தனையோ நடிகைகளில் பாலுறவு படங்கள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கிக இவர்களே இவர்களுக்கு அஞ்சலில் அனுப்பி இவர்களின் ஊடங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருமானத்திதை மேலும் பெருக்கிக்கொள்ளலாம். அரசும், சட்டமும் வழக்கம்போல் ம... புடுங்கிக்கொண்டு இருக்கட்டும்...

மங்குனி அமைச்சர் said...

எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு வக்கிர புத்தி இருக்கு சார், அதுனால தான் அந்த நியூஸ் ஹிட் ஆச்சு , அவுங்க அத காசாக்குறாங்க . தவறுகள், போராட்டங்கள்(இப்ப எனக்கு தெரிந்து நியாயமான போராட்டங்கள் எதுவும் இல்லை ), குற்றங்கள் இந்த மாதிரி நியூஸ் தான் ஹிட்டாகுது

ஜோதிஜி said...

எல்லாவற்றையும் வளர்ப்பவர்கள் மக்களே. அவர்கள் ஜனநாயக கடமையை செய்கிறார்களோ இல்லையோ உங்கள் எழுத்துக்கு என் கடமையை செய்துள்ளேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். மிக அருமை ரோஸ்விக். மிக அருமையாக நிதானமாக யோசித்து எழுதப்பட்ட பண்புள்ள கட்டுரை இது.

ரோஸ்விக் said...

தியாவின் பேனா - நன்றி தியா. :-)

ரோஸ்விக் said...

Sivaji Sankar - நன்றி சிவாஜி :-)

ரோஸ்விக் said...

seeprabagaran -
//ஆனால் சன் குழுமம் செய்வது பச்சை அயோக்கியத்தனம். நித்தியானந்தாவை அம்பலப்படுத்தவேண்டும் என்றால் அதுபற்றிய செய்தியை தொடர்ந்து வெளியிடலாம். தொடர் விசாரணை நடத்தி அது தொடர்ப்பான களப்பபணிகள் செய்து அவரை மேலும் மேலும் அம்பலப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தையும் செய்யலாம். அதை அனைவரும் பாராட்டவும் செய்வார்கள்...//


நன்றி நண்பரே :-)

100% உண்மை. நானும் வழிமொழிகிறேன்.

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - நன்றி மங்குனியாரே...

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால், வியாபாரம் ஒன்றையே நோக்காகக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கைகள் எப்படி நான்காவது தூணாக முடியும்??

ரோஸ்விக் said...

ஜோதிஜி - மிக்க நன்றி ஜோதிஜி. தாங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றியதற்கும். :-)

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - நன்றி சுதாகர்ஜி.... :-)

Dr.P.Kandaswamy said...

ரொம்ப லேட்டாக வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வழி மறந்துவிட்டு கடைசியில் கூகுளாண்டவர் வழிகாட்ட வந்தேன்.

நல்ல முறையில் ஊடகங்களை சாடியிருக்கிறீர்கள்.

tan said...

sir,
what ever you said is true,
but business needs money,
lot of people depend on that,
simply if you have a free space to write, u cant say everything u like,
think of people who put lot of efforts in taking the video to show to outside world,
If u have time, use efficiently, dont waste time like this.

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - ஒருவழியா கண்டுபிடுச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி ஐயா. :-)

ரோஸ்விக் said...

tan - I appreciate the people effort and courage who took this video.

This fraud has to be punished. No doubt in that.

Here, I didn't mention only about this issue. only showing & selling this kind of video is not their business. They have more power. They should use them in proper way. They can work together with police and they can help them to find out all the truths. They should work on this till that person punished.

now there is no difference between this media and the websites those who selling scandal videos.

Thanks for your comment on this my dear friend.