Thursday, December 3, 2009

உள்குத்து கவிதைகள் - 4

செம்மொழி மாநாடு

தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது - ஆனால்
தமிழைக் காக்க உலக செம்மொழி மாநாடு...
வீட்டை எரித்துவிட்டு
விறகைக் காப்பாற்றும்
வீர(ண)ர்கள்!...

ஊழல்

தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்... - இது பழமொழி
நிரூபித்து விட்டனர் - எம்
அரசியல் வியாதிகள்!
தொட்டில் குழந்தை திட்டம் முதல்
சுடுகாட்டு கூரை வரை....

பெண்

நான் அணிகிறேன்
இரு
உள்ளாடைகளும்...
இரு மேலாடைகளும்...
எதிர் வரும் ஆணின்
காமம் மறைக்க!

செருப்பு

அமைச்சரின் கூட்டத்தில்
நிருபர்களுக்கு செருப்பணிய தடை...
அடுத்தமுறை
அண்டர்வேரால் அடித்துப் பாருங்களேன்!
வெட்கங்கெட்ட அரசியலும்...
வெளங்காத காவல்துறையும்...

19 comments:

கலகலப்ரியா said...

நல்லாருக்கு..!

ஹேமா said...

முதல் கவிதை மனசைத் தொட்டது.

ஸ்ரீராம். said...

நல்லாருக்கு ரோஸ்விக்.

Subankan said...

நல்லாருக்கு!

Nan said...

நல்ல படைப்புகள். தங்களை ஆதங்கம் புரிகிறது.

நிகழ்காலத்தில்... said...

’சுருக்’ என மனதில் தைக்கும் கவிதைகள்

வாழ்த்துகள்

hamaragana said...

நண்பரே உலக தமிழ் மகாநாடு என்று வந்தவுடன் இதே வரிகளை பின்னூட்டமாக எளிதினேன் -ஐயோ அந்த அன்பர் கொடுத்த பதில் ஆகா மறக்க முடியுமா / தூங்கி கொண்டிருந்த மிருகத்தை எள்ளுpபி விட்டீர்கள் என்று ... இனி யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை .சபதம் எடுத்தேன் ....
இதே ஆட்கள் கும்பி கருகுது குடல் வேகுது குழு குழு ஊட்டி ஒரு கேடa என்று அடுக்கு மொழி பேசியவர்கள்தான் ..என்னை செய நம்ம தலை எழுத்து ஆ ன்னு பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்

angel said...

நான் அணிகிறேன்
இரு உள்ளாடைகளும்...
இரு மேலாடைகளும்...
எதிர் வரும் ஆணின்
காமம் மறைக்க!

very nice
u have made the truth in ur lines

பிரபாகர் said...

எளிமையாயும் நன்றாகவும் இருக்கிறது. முதல், முத்தாய்...

பிரபாகர்.

ரோஸ்விக் said...

கலகலப்ரியா - மிக நன்றி தோழி. சூடா படிச்சிட்டு ஸ்பீடா ஒட்டு போட்ட ஆளு நீங்க... :-)

ஹேமா - மிக நன்றி தோழி. எல்லாம் நம்ம ஆதங்கம்தான்.

ஸ்ரீராம் - வாங்க தல. மிக்க நன்றி தங்களின் தொடர் ஆதரவிற்கு.

Subankan - இளம் தம்பிக்கு என் நன்றிகள்.

Nan - வாங்க பங்காளி. என்னத்த சொல்ல....:-)

நிகழ்காலத்தில்... - மிக்க நன்றி நண்பரே!

hamaragana - அடுக்கு மொழி பேசியே நம்மை பிணங்களாக்கி அடுக்கியவர்கள் தான் நம் தலைவர்கள். நம்ம தலைஎழுத்தை எவனோ இடது கையாள கன்னாபின்னான்னு கிறுக்கிட்டான்...:-(

angelintotheheaven - ரொம்ப நன்றிமா கண்ணு. நீயும் நிறைய எழுது...எனது மனமார்ந்த வாழ்த்துகள். :-)

பிரபாகர் - வாங்க அண்ணா! மிக்க நன்றி. :-)

ஆ.ஞானசேகரன் said...

முதல் இரண்டும் உணர்வாக இருக்கு,.. கடைசி அருமை

சிவாஜி சங்கர் said...

அண்டர்வேருக்கு தடவருமா அண்ணாச்சி..!

கோவி.கண்ணன் said...

//செம்மொழி மாநாடு

தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது - ஆனால்
தமிழைக் காக்க உலக செம்மொழி மாநாடு...
வீட்டை எரித்துவிட்டு
விறகைக் காப்பாற்றும்
வீர(ண)ர்கள்!...
//

செம்மறி ஆடுகள் கலந்து கொள்ளும் மாநாடு என்று சொல்லலாம் !
:)

கிரி said...

விக்டர் கலக்குங்க.. இதே மாதிரி எனக்கு! புரியற மாதிரி கவிதை எழுதினா உங்களுக்கு புண்ணியமா போகும் :-)

ரோஸ்விக் said...

ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பரே!

Sivaji Sankar - சொல்ல முடியாது தல...சொன்னாலும் சொல்லுவாய்ங்க...:-)
நன்றி தல.

கோவி.கண்ணன் - மிக்க நன்றி அண்ணே. ஆமா செம்மறி ஆடுகள் கூட்டத்தை நம்பி தானே அவரு தொழில் நடத்திகிட்டு இருக்காரு. :-)

கிரி - நன்றி நண்பா. என்னத்தை எழுதுனாலும் எல்லாருக்கும் புரியனுமில்ல. :-)
அட எனக்கே எல்லாம் புரியனுமில்ல.... :-))
கவலைப் படாதீங்க புரியிற மாதிரியே எழுதுறேன்.

க.பாலாசி said...

//அமைச்சரின் கூட்டத்தில்
நிருபர்களுக்கு செருப்பணிய தடை...
அடுத்தமுறை
அண்டர்வேரால் அடித்துப் பாருங்களேன்!
வெட்கங்கெட்ட அரசியலும்...
வெளங்காத காவல்துறையும்...//

இது நெத்தியடி தலைவரே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஊழல்

தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்... - இது பழமொழி
நிரூபித்து விட்டனர் - எம்
அரசியல் வியாதிகள்!
தொட்டில் குழந்தை திட்டம் முதல்
சுடுகாட்டு கூரை வரை....//

அருமை!

தொடர்ந்து தோல் உரியுங்கள்!

ரோஸ்விக் said...

க.பாலாசி - எப்புடி அடிச்சாலும் திருந்த மாட்டங்கிராணுக தல. :-)
மிக்க நன்றி.

T.V.Radhakrishnan - நன்றிகள் அன்பரே.

அத்திவெட்டி ஜோதிபாரதி - நன்றி அண்ணாச்சி. உரிச்சிருவோம். :-)