Sunday, December 13, 2009

சிங்கை பதிவர்களின் மெக்ரிட்சி மலைக்காட்டு உலா!

திடீரென திட்டமிட்டாலும், மிகச்சிறப்பாக அமைந்த இந்த மலைக்காட்டு உலா மிக நல்ல அனுபவமாக அமைந்தது. மொத்தம் ஆறு சிங்கைபதிவர்கள் கலந்துகொண்டார்கள். ஜோசெப் பால்ராஜ், முகவை ராம், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், அன்புத்தம்பி டொன்லீ மற்றும் ரோஸ்விக் ஆகிய நான். என்னையும், வெற்றிக்கதிரவனையும் சிங்கை பதிவுலகத்தலைமை ஜோசப் தனது மகிழ்வுந்தில் ஏற்றிச்சென்று எங்கள் பயண சிரமங்களை வெகுவாகக் குறைத்துவிட்டார். செல்லும் வழியில் சில நொறுக்குத்தீனிகளையும் சில மெதுபான வகைகளையும் வாங்கிக்கொண்டு சென்றோம். அனைவரும் குறித்த நேரத்தில் மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பகுதியில் சந்தித்து எங்களது மலைக்காட்டு உலாவைத் தொடங்கினோம்.










மக்களே, மொத்த 11.5 கி.மீ. தூர மலைகாட்டு பயணம் இது... சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்களின் அடர்த்தியான காடுகள். அதன் ஊடே வளைந்து நெளிந்த பாதை. நடந்து போறதுக்கே அவ்வளவு அருமையாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்கள்... அந்த மலை பெண்டுகள்ள எங்க பெண்டு கழன்டுருச்சுப்பா... வெளில சிறிதளவு வெயில் கொடுமை இருந்தாலும் காட்டுக்குள்ள அது சுறுசுறுப்பா எங்களை மாதிரி வந்து சேரல. வழியில ஆங்கங்கே அமர்ந்து கொண்டுசென்ற மெது பானங்கங்களையும், நொறுக்குத்தீனிகளையும் வயித்துக்குள்ள அமுக்கிகிட்டு இன்னும் சுறுசுறுப்பா நடந்தோம்.








டொன்லீயை கட்டளைத்தளபதியாக செயல்படுமாறு எங்கள் தலைமை பணித்தது. ஆனால் அவர் எங்களை பின் புறமிருந்து இயக்கியது கடைசி மூன்று கி.மீ வரை மர்மமாகவே இருந்தது. :-) இவ்வளவு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏகப்பட்ட படிகளை மரத்தாலும் இரும்பாலும் மிகச்சிறப்பாக அமைத்திருந்தார்கள். பல இடங்களில் குறைந்தபட்சம் 50 படிகள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. இவ்வனப்பகுதியில் கூட பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர குப்பைகளை காண முடியவில்லை. சில இடங்களில் மிக செங்குத்தாக ஏறும்படியாகவும், இறங்கும்படியாகவும் அந்த பாதைகள் அமைந்துள்ளன. சரி பத்தி தூரம் சென்றவுடன் கிட்டத்தட்ட ஒரு 500 மீட்டர் அளவுக்கு தொங்குபாலம் அமைத்திருந்தார்கள். அதிலிருந்து கீழே பார்க்கும்போது செத்துப்போன எங்கள் அய்யா தெரிந்தார். (அப்பாடா ஒரு வழியா அவரையும் பார்த்தாச்சு).









சுற்றிலும் மலைப்பகுதி நடுவில் நீர்நிலை. மிக அருமையாக இருந்தது. நான்கு கி. மீ. முன்பாக ஒரு Golf மைதானம். நாங்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டு மகிழ்ச்சியா வந்துகொண்டிருந்தோம். அங்கு விளையாடியவர்களில் இருவர் எங்களை நோக்கி உஷ்ஷ்ஷ் என்று அமைதியாக இருக்குமாறு கூறினார்கள். இது என்ன மருத்துவமனையா? என்ன விளையாட்டுயா இது? ஒரு ஆளு ஓங்கி அடிக்கிற பந்தை எங்க விழுந்துருக்குனு எல்லோரும் சேர்ந்து போயி பாக்குறாய்ங்க...:-)) குழிய ரொம்ப தூரத்துல வச்சிக்கிட்டு விளையாடுறது நல்லாவா இருக்கு? ஆனா அந்த மைதானம் மிக மிக அழகு.









இப்பொழுதுதான் எங்கள் கட்டளைதளபதியின் சூட்சுமம் புரிந்தது. ஒரு குரங்கு கூட்டம் எங்களை எதிர்கொண்டு தாக்குதலுக்கு தயாராகி இருந்தது. அட பக்கிகளா எங்ககிட்ட எல்லா நொறுக்குத்தீனியும், மெதுபானமும் தீர்ந்து போன விஷயம் உங்களுக்குத் தெரியாம போச்சே... நாங்க கடமை வீரர்களா இந்த பகுதியில குப்பை போடாம... குப்பைத்தொட்டில போடுவோம்னு கொண்டுபோறத இப்படி புடுங்க வாறீங்களே... சரியான தருணத்தில் எங்கள் தலைமை ஒரு காலி போத்தலை சாதுர்யமா எதிரி படைக்கு கொடுத்து மொத்தக் குழுவும் தப்பியது.










இதன் பிறகு வெளியில் நடந்த சந்திப்பை அண்ணன் பிரபாகரின் இந்தப் பதிவில் படிக்கலாம். மனுஷன் வயசு ரொம்ப கம்மியா தான் தெரியுது. பதிவர் நாடோடி இலக்கியனும் உடன் இருந்தார். நான் அவரை சந்திப்பது இதுவே முதல் முறை. மிக சாந்தமாக இருக்கிறார். ஆனால் பதிவுல மட்டும் பட்டைய கிளப்புகிறார்.

அடுத்த பதிவர் சந்திப்பையும், இது போன்ற உலாக்களையும் தொடர்ந்து நடத்துமாறு அனைத்துப் பதிவர்களும் தலைமையை கேட்டுகொண்டது.





25 comments:

சி தயாளன் said...

:-) நல்லது...குறித்த நேரத்துக்கு யாரும் வரவில்லை . அரை மணி தாமதமாகத்தான் மற்றவர்கள் வந்து சேர்ந்தார்கள்..

கட்டளைத்தளபதி எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார். :-)

விரைவில் அடுத்த காட்டுலாவில் கலக்குவோம் :-)

அறிவிலி said...

//அடுத்த பதிவர் சந்திப்பையும், இது போன்ற உலாக்களையும் தொடர்ந்து நடத்துமாறு அனைத்துப் பதிவர்களும் தலைமையை கேட்டுகொண்டது. //

இந்த முறை வர இயலவில்லை. உங்கள் அனைவரையும் சந்திக்கும் நோக்கத்தில் அடுத்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று!

ஜெகதீசன் said...

:)))

கிளியனூர் இஸ்மத் said...

சுவாரஸ்யமான பதிவர் சந்திப்பு ....அந்தக் காடு சிங்கையா மலேசியாவா நீங்க சொல்லவில்லையே...மற்றபடி அருமை...

சிங்கை நாதன்/SingaiNathan said...

//சில மெதுபான வகைகளையும்//

சும்மா உண்மைய சொல்லுங்க மது பானம் தானே ?

அன்புடன்
சிங்கை நாதன்

கிளியனூர் இஸ்மத் said...

சிங்கை வந்தபோது பார்க்க தவற விட்ட இடம்...இதுக்காகவேண்டி இன்னொருமுறை வரனும்

ரோஸ்விக் said...

’டொன்’ லீ - கலக்கிடுவோம்...

ஆமா எதை எதுல கலக்குவோம்?? :-)


அறிவிலி - ஆமா தலை, உங்களையெல்லாம் பாக்கணும்ல... :-)


அத்திவெட்டி ஜோதிபாரதி - அண்ணே நீங்க வராம போய்டீங்களே... :-(


ஜெகதீசன் - எடுத்த போட்டவையெல்லாம் குடுக்காம...சிரிப்பான் வேற ...ம்க்கூம்...


கிளியனூர் இஸ்மத் - இது சிங்கையில் உள்ள மக்ரிட்சீ எனும் பகுதி. உண்மையிலே மிக சுவாரஸ்யமான பதிவர் சந்திப்பு தான். :-)


சிங்கை நாதன்/SingaiNathan - அண்ணே! நல்ல இருக்கீங்களா?

100Plus மெதுபானமா இல்ல மதுபானமானு எனக்குத் தெரியல அண்ணே! :-) இன்னும் நமக்கு விபரம் பத்தலையோ?? :-))
December 14, 2009 12:39 AM

சிவாஜி சங்கர் said...

//கீழே பார்க்கும்போது செத்துப்போன எங்கள் அய்யா தெரிந்தார்//

தல எங்க ஆயா தெரிஞ்ஜாங்களா??

ரோஸ்விக் said...

Sivaji Sankar - தல எங்க ஆயாவும், உங்க ஆயாவும் ஷாப்பிங் போயிட்டாங்களாம். :-)

சிவாஜி சங்கர் said...

ஹ..ஹ..ஹா...

Nan said...

போட்டோக்கள் அருமை பங்காளி ....

கலகலப்ரியா said...

nice pics...!

அப்பாவி முரு said...

//சிங்கை பதிவுலகத்தலைமை ஜோசப் //

அதையும், இதையும் சொல்லி அவரை ஏத்தி விட்டுறாதிங்கப்பு

ஸ்ரீராம். said...

புலி சிங்கம்லாம் கிடையாதா பாஸ்? என்ஜாய் பண்ணுங்க...

vasu balaji said...

ஆனாலும் பிரபாகர் இப்படி எல்லார்டையும் யூத்துன்னு சொல்ல சொல்றது நல்லால்ல. நல்ல படங்கள். நல்ல தொகுப்பு.

நாடோடி இலக்கியன் said...

மிஸ் பண்ணிட்டேனே நண்பா. அருமையான இடங்கள்.

ராஜேஷ் said...

அல்லா தலய்கும் வன்க்கம் பா நானும் சிங்கை தன் நம்ம வுட்டாண்டயும் வரது..
தாங்ஸ்பா.. வர்டா

ஜோசப் பால்ராஜ் said...

////சிங்கை பதிவுலகத்தலைமை ஜோசப் //

அதையும், இதையும் சொல்லி அவரை ஏத்தி விட்டுறாதிங்கப்பு //

கவலப்படாதிங்க முரு. அப்டியெல்லாம் ஒன்னும் ஆயிராது.

விக்டர் ,
இங்க தலையெல்லாம் யாரும் கிடையாது.

ப்ரியமுடன் வசந்த் said...

இடமெல்லாம் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு ரோஸ்விக்

பகிர்வுக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ரோஸ்விக்

பரவா இல்லையே

ஒரு பதிவர் சந்திப்ப - சுற்றுலாவாகவும் நடத்தியது நன்று

தலைமைக்கு வாழ்த்துகள்

கலந்து கொண்ட மகிழ்ந்த அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

புலவன் புலிகேசி said...

நல்ல அனுபவ பகிர்வு ரோஸ்விக்...ஆமாம் "மெதுபாணம்" மட்டும் தானா...மதுபாணம் இல்லையா?

ரோஸ்விக் said...

Nan - அந்த இடங்கள் உண்மையிலே மிக அருமை தான்.


கலகலப்ரியா - மிக்க நன்றி. உங்க அண்ணன் தான் முழுவதும் கலந்துகொள்ள இயலாமல் விட்டுவிட்டார். :-)


அப்பாவி முரு - அட நீங்க வந்து முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டிருந்தால் நீங்க தான் தலைவரு .... :-))


ஸ்ரீராம். - தல இப்பவெல்லாம் சிங்கப்பூர் பேருல மட்டும் தான் சிங்கம் இருக்கு. :-)


வானம்பாடிகள் - ஐய்யயோ நீங்க பின்னூட்டம் போடவருவீங்கங்கிரத மறந்துட்டு இந்த வரியா எழுதிபுட்டனே! :-)))


நாடோடி இலக்கியன் - ஆமா நண்பா நீங்க வாய்ப்பை இழந்துவிட்டீர்கள். ஆனா, நம்ம காவல்துறை மாதிரி சரியாக கடைசியில் வந்து முடித்துவைத்தீர்கள். :-)))))

ரோஸ்விக் said...

RAJESH - மன்னார்குடியாரே! வாங்க பழகலாம். உங்க பக்கமும் வந்துடுவோம். :-)


ஜோசப் பால்ராஜ் - அட எனக்கு நீங்க தல. உங்களுக்கு நான் தல. :-)
அண்ணன் கோவியார் வந்திருந்தா அவரு தல. உருட்டுரதுக்கு யாரு தலையாவது வேணாமா?? :-)))


பிரியமுடன்...வசந்த் - ஆமா வசந்த் மிக அருமையான இடம். நல்ல அனுபவம்.


cheena (சீனா) - மிக்க நன்றி ஐயா. உங்களுடைய பின்னூட்டம் ஒரு கடிதம் தரும் மகிழ்வைத்தரும். ஊருக்கு வரும்போது உங்களை சந்திக்க முயல்கிறேன். :-)


புலவன் புலிகேசி - நன்றி தல. காதக்குடுங்க மெதுவா சொல்றேன். :-) இதில் மதுபானம் அன்றைய தினத்தில் அருந்த யாருக்கும் விருப்பமில்லை.

பிரபாகர் said...

அய்யாவுகாக... நான் யூத் இல்ல, யூத் இல்ல...

ரோஸ்விக், அருமையா எழுதியிருக்கீங்க. அடுத்த சந்திப்பில் கண்டிப்பாய் முழுமையாய் கலந்து கொள்கிறேன்...

பிரபாகர்...