Saturday, November 28, 2009

பெண்களின் (செல்லப்)பெயர்கள்

"pen names" -னு ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புனைப்பெயர்கள். அது நாமே நமக்கு இட்டுக்கொண்ட செல்லப் பெயர்களாகவும் இருக்கலாம். இந்தப் பதிவுல நம்ம பெண்(களின்) பெயர்களைப் பற்றி துவைப்போம்.(எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது) நம்ம ஊருகள்-ல நமக்குத் தெரிஞ்ச சில பெண் பெயர்களை கவனிச்சுப் பார்த்தா ஒரு விஷயம் தெரியவரும். அதாங்க பெயரை சுருக்கி கூப்பிடுறது.

இப்பவெல்லாம் பெயர்களை பெரும்பாலும் சின்னதாவே வைக்க எல்லாரும் விரும்புறாங்க. ஆனா, அந்த சின்ன பெயரையும் இன்னும் சுருக்கி கூப்பிடுறதுல பெண்கள் ஒரு படி ஆண்களை விட முன்னாடி தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். அந்த சுருங்கிய பெயர்கள் மிக செல்லமாகவும், அழகாகவும் இருக்கத் தானே செய்யுது. முந்தியெல்லாம் "அகிலாண்டேஸ்வரி"-னு பெயர் வைப்பாங்க. இப்ப 'அகிலா'-னு சுருக்கி வச்சாலுங்கூட இன்னும் அதை சுருக்கி அல்லது மாத்தி அகி / அகில்-னு கூப்பிடத்தான் நம்ம முயற்சி பண்றோம். இப்படிதாங்க "மகேஸ்வரி" இப்ப "மகி" ஆகிப்போச்சு.

ஆண்கள்லையும் பல பெயர்கள் இப்படித்தான் சுருங்கி போச்சு. "வெங்கடேஸ்வரன்" இப்பவெல்லாம் 'வெங்கட்' ஆக அதுவும் சுருங்கி 'வெங்கி' ஆகிப் போயிடிச்சு. "சத்யநாராயணன்" இப்ப 'சத்யா'-வாகிட்டாரு. பெரும்பாலும் ஆண்களோட பெயர்கள்ல உள்ள முதல் எழுத்தையும், தன் தகப்பன் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து ஆங்கிலத்திலோ, தமிழிலோ சுருக்கி கூப்பிடுவாங்க. உதாரணமா மு. க. (முத்து.கருப்பன்), J.P (Joseph. Paulraj)...இன்னும் பலப்பல... இப்படி அழைப்பதும் ஒரு வகையில கவர்ச்சிகரமாத்தான் இருக்குது.

எனக்குத் தெரிந்து கேரள கிறித்தவப்(பெரும்பாலும்) பெண்களுக்கு ரொம்ப சின்னப் பெயர்களாத் தான் வைக்கிறாங்க...ஆங்கிலத்துல அதிகபட்சமா நான்கு எழுத்துக்களும், தமிழ்-ல எழுதிப்பார்த்தா அதிகபட்சமா இரண்டெழுத்துக் கொண்டதாவும் தான் இருக்கும். உதாரணமா "மினி" (mini), "நினி" (nini)-னு இருக்கும். கேட்கவே என்னா இனிமையா இருக்குதுப்பா...:-) (நல்ல வேலை சனி-னு யாருக்கும் வைக்கலை :-))) )

இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியதா நிறைய இருக்கு...கீதா, கவிதா, சவிதா, சுகந்தி, லட்சுமி, ஹேமா, நித்தியா, சகிலா, பவித்ரா-னு கலக்கலா இருக்கும். ஆனாலும், இதையும் சுருக்கி கீத்து, கவி, சவி, சுகன், லட்சு, ஹேமு, நித்தி, சகி, பவி-னு கூப்பிடுறதுல தான் நம்ம மக்களுக்கு சுகமே. இது பத்தாதுன்னு வச்ச பேரை விட்டுபுட்டு இன்னும் வேற பேர்களை சொல்லி கூப்பிட்டு மகிழ்வாங்க நம்ம வீடுகள்ல. பப்பி, அம்மு...எனக்கு வேற எதுவும் ஞாபகம் இல்லப்பா...உங்களுக்கு தெரிஞ்சா பின்னூட்டத்துல தெரியப்படுதுங்கய்யா...:-)

சில வீடுகள்ல இன்னும் பெரிய கூத்தெல்லாம் நடக்கும். நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு விரும்பி அந்தப் பெயர்களை நமக்கு வைப்பாங்க. ஆனா, அந்தப் பெயர சொல்லி கூப்பிட்டா மரியாதை குறைவா நினச்சுகிட்டு வேற பெயரை சொல்லி கூப்பிடுவாங்க....உள்ள குழப்பம் பத்தாதுன்னு இது வேற. பாசக்கார பெத்தவங்களே! பெயரை சொல்லி கூப்பிடுற தைரியம் / மனப்பக்குவம் இருந்தா மட்டும் அந்த பெயர்களை புள்ளைங்களுக்கு வைங்க. அது மாதிரி, அந்த முன்னோர்களின் பெயர்கள் நம்ம புள்ளைங்க வாழுகிற காலக் கட்டத்துக்கு ஏற்ற மாதிரி இருக்குமான்னு யோசிச்சு வைங்க...சும்மா...நம்ம ஐயா பேரு "நஞ்சப்பரு", "சந்தோசம்" அதுனால உனக்கு இந்த பேரை வச்சம்னு சொன்னீங்கன்னா புள்ளைங்க உங்க மேல கொலைவெறி ஆகிடுவாங்க...உஷாரு...


முடிஞ்ச வரை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள்ள பேரு வைங்க...எதிர்காலத்துல எல்லாத்துக்கும் எளிதா இருக்கும். நமக்கு பிடித்த எல்லா பெயர்களையும் ஒரே புள்ளைக்கே வச்சு அழகு பாக்குறம்னு அவன அழ வச்சுப் பாக்காதீங்க. ஒருத்தருக்கு பேரு "அதிவீர ராம பாண்டிய சுந்தர பிறைசூடன்"-னு இருந்தா, அந்த பெயரை சில விண்ணப்பங்கள்-ல எழுதும் போது ஏதோ பக்கம் பக்கமா கட்டுரை எழுதற மாதிரி கஷ்டப்பட மாட்டாரு...? :-)



டிஸ்கி: இதுல வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை தான். இதுல உங்க பெயரும் இருந்தா மனசப் போட்டு குழப்பிக்காதீங்க...யாரையும் புண்படும் நோக்கத்துல எழுதலைப்பா மக்களே.




19 comments:

vasu balaji said...

நல்லாருக்கு ரோஸ்விக்.

/உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!/

நான் தவறாம வாரவன். இத பார்க்காம ஓட்டு போட்டுட்டனே. தப்பா=))

ரோஸ்விக் said...

பல சமயங்களில் நீங்க தான் என் பதிவின் முதல் பின்னூட்டி...:-)
இருந்தாலும் அந்த வாக்கியத்தை படிக்காமல் ஒட்டு போட்டது தவறு....எனவே நான் உங்களை சந்திக்கும்போது இதற்க்கு பிராயச்சித்தமாக எனக்கு முழுக்கோப்பை கோழி பிரியாணி வாங்கித் தரவும்...:-)))

ஆனா உங்களுக்கு ரொம்ப நக்கல் சாமி....:-)

புலவன் புலிகேசி said...

நல்லா இருந்துதுங்க..

ஆ.ஞானசேகரன் said...

நல்லா யோசித்து துவைத்துள்ளீர்கள் நண்பா,...

பித்தனின் வாக்கு said...

மண்ணாங்கட்டி, பிச்சை என்று பிள்ளை தங்காதவர்கள் பிள்ளை தங்குவதற்காக வைக்கும் பெயர்கள். நல்லா ஆராய்ச்சி தலைவா, அதும் பெண்ணுங்க பெயரை நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க. சரி இதுக்காக நம்ம பிளாக் பக்கம் வந்து விருது வாங்கிக்குங்க. நன்றி.

க.பாலாசி said...

பாலாசிங்கற மூணு எழுத்தையே சுருக்கி பாலான்னு என்னோட அலுவலகத்துல கூப்பிடுறாங்க. எங்கபோயி முட்டிக்கிறது. எதெதுல்லாம் கஞ்சனத்தனம் பண்ணணும்னு இல்லாமப்போச்சு...

நல்ல இடுகை....

ப்ரியமுடன் வசந்த் said...

விக்கு நல்லாதான இருந்தீங்க

-வசு

அகல்விளக்கு said...

நல்லா துவைச்சிருக்கீங்க நண்பரே..

Bavan said...

///"மினி" (mini), "நினி" (nini)-னு இருக்கும். கேட்கவே என்னா இனிமையா இருக்குதுப்பா...:-) (நல்ல வேலை சனி-னு யாருக்கும் வைக்கலை :-))) )///

ஹீ...ஹீ...ஹீ..

நல்லா இருக்கு ரோ..(நானும் உங்க பெயர சார்ட்டா சொன்னன்...ஹீ..ஹீ..)

ஸ்ரீராம். said...

நீரு (நீரஜா), நிரு (நிருபமா), சுஜா (சுஜாதா), ரமா, சுமி, ரோசி,ஜெசி, சசி, ...இன்னும் நிறைய இருக்கேங்க...

ரோஸ்விக் said...

புலவன் புலிகேசி - மிக்க நன்றி நண்பா!

ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பா!
உங்களையும் யாராவது ஞானம் / சேகர்-னு தான் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் :-)

க.பாலாசி - நன்றி நண்பா! நல்லவேளை க.பாலி-னு யாரும் கூப்பிடலை :-)) (தப்பா எடுத்துக்காதீங்க தலை)

பிரியமுடன்...வசந்த் - நன்றி நண்பா!
இப்பவும் நல்லத்தான் இருக்கேன் வசு. (நல்ல வேலை வசந்த்(து). யாரும் உங்களை வ-வை விட்டுபுட்டு கூப்பிடலை) :-)) (தமாசுக்கு பங்காளி).

அகல்விளக்கு - மிக்க நன்றி நண்பா! :-)

Bavan - நன்றி நண்பா (பவா)!

ஸ்ரீராம் - மிக்க நன்றி நண்பா!
இன்னும் ரொம்ப நிறையா இருக்கு தலை. பக்கம் பத்தாது...அடிசனல் சீட்டு வாங்கினா அடிக்க வந்துருவாங்க...:-))

ரோஸ்விக் said...

பித்தனின் வாக்கு - மிக்க நன்றி தலைவா. பொண்ணுங்க பெயரே மிகப் பிடிக்கும் படியாகத்தான் இருக்கும் :-)

தாங்கள் எனக்கு கொடுத்த விருதிற்கு மிக மிக நன்றிகள். அதுவும் அந்த விருதை எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்து வாங்கிக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

tamiluthayam said...

நல்ல சிந்தனையுடன் வந்த கட்டுரை.

தேவன் மாயம் said...

இதுபோல நம்ம தமிழ் பெண்களோட பெயர்களும் மிகச் சிறியதா நிறைய இருக்கு...கீதா, கவிதா, சவிதா, சுகந்தி, லட்சுமி, ஹேமா, நித்தியா, சகிலா, பவித்ரா-னு கலக்கலா இருக்கும். ஆனாலும், இதையும் சுருக்கி கீத்து, கவி, சவி, சுகன், லட்சு, ஹேமு, நித்தி, சகி, பவி-னு கூப்பிடுறதுல தான் நம்ம மக்களுக்கு சுகமே. //

நீங்கள் பனங்குடியா? இல்லை ...பக்கத்திலா?

கிரி said...

//நம்ம முன்னோர்கள் பேரை நமக்கு சூட்டி மகிழனும்னு விரும்பி அந்தப் பெயர்களை நமக்கு வைப்பாங்க. ஆனா, அந்தப் பெயர சொல்லி கூப்பிட்டா மரியாதை குறைவா நினச்சுகிட்டு வேற பெயரை சொல்லி கூப்பிடுவாங்க..//

எனக்கும் இதே பிரச்சனை :-))

//முடிஞ்ச வரை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளுக்குள்ள பேரு வைங்க..//

ரைட்டு!

cheena (சீனா) said...

அன்பின் ரோ

அருமையான இடுகை

செல்லப்பெயர்கள் தவிர்த்து சுருக்கப்பட்ட பெயர்கள் - பெயர் வைத்த நோக்கம் அடிபடுகிறதே

தவிர்க்க இயலாது

நல்வாழ்த்துகள் ரோ

விக்னேஷ்வரி said...

எத்தனை நாலு தான் அலசுவம்னு சொல்றது//
ச்சே, என்ன ஒரு சிந்தனைங்க.

ஹாஹாஹா... நல்லா நகைச்சுவையோட எழுதிருக்கீங்க ரோஸ்விக்.

ரோஸ்விக் said...

cheena (சீனா) - ஐயா, நீங்க நம்ம பகுதிக்கு வந்து பின்னூட்டமிட்டதில் மிக்க மகிழ்ச்சி. :-)

நீங்கள் கூறுவது மிகச் சரி.

சில பேறு அப்படித்தான் குதிரை-னு பெயரை வைத்துவிட்டு கழுதை-னு கூப்பிடுவாங்க :-)

ரோஸ்விக் said...

விக்னேஷ்வரி - வாங்க விக்கி! :-) மிக்க நன்றி.
உண்மையில் உங்களின் காதல் எழுத்துக்கு மூர்ச்சையாகி போனேன்.