Wednesday, November 25, 2009

தெரிந்துகொள்வோம் - 5

*** உலகிலேயே தங்கத்தினால் செய்யப்பட்ட மிகப்பெரிய பொருள் எகிப்திய மன்னர் டூட்டன் ஹாமனுடைய சவப்பெட்டிதான். 1120 கிலோ எடையுள்ளது.*** நாம் ஒரு வாக்கியத்தை எழுதி முடித்ததும் வைக்கப்படும் முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவர் "ஆல்டஸ் மனுசியஸ்" எனும் அச்சகத் தொழிலாளி.

*** தொழுநோய் மனிதனைத் தவிர வேறு மிருகங்கள், பறவைகள் முதலியவைகளுக்கு வருவதில்லை.

*** கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் உலகின் மக்கள் தொகை இருபது கோடிதான்.

*** பலூனில் பரந்த முதல் இந்தியர் - ராமச்சந்திர சட்டர்ஜி.

*** உலக அழகிப் போட்டி 1951-ம் ஆண்டிலிருந்துதான் நடந்து வருகிறது.

*** 1216-ம் ஆண்டு ரோம் நகரில் 'சாண்டா சபினா' என்ற தோட்டத்தில் தான் இத்தாலியின் முதல் ஆரஞ்சு மரம் நடப்பட்டது.

*** உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை மைனஸ் 83.3 டிகிரி சென்டிகிரேட். அண்டார்டிக்காவில், 'வோஸ்டாக்' என்ற இடத்தில் ஏற்படுகிறது.


*** ஆஸ்திரேலியாவில் உள்ள 'பிரஷ் டர்க்கி' என்னும் ஒருவகைப் பறவையின் குஞ்சு மட்டும் முட்டையவிட்டு வெளியே வந்ததும் பறக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.

*** பெயரளவுக்குக் கூட ஆறு இல்லாத நாடு - லிபியா.

*** ஒரு பாறையின் வயதை அதில் உள்ள காரியத்தின் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது.

*** உடலில் ஹார்மோனைச் சுரக்காத உயிரினம் பாக்டீரியா.

*** இந்தியாவில் விளையாட்டுப் பொருள்கள் அதிகமாகத் தயாரிக்கப்படும் நகரம் ஜலந்தர்.

*** பிரபல வங்கக் கவிஞர் தாகூர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. அவர் மூவாயிரம் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

*** ரவீந்திரநாத் தாகூர் பாடல் வரியிலிருந்துதான் ரேடியோவில் பயன்படுத்தப்படும் 'ஆகாஷ்வாணி' என்ற சொல் எடுக்கப்பட்டது.

*** சுவிட்சர்லாந்தில் 1971 முதல் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

*** பல்லி நீர் அருந்தாது வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்.

*** அலகிலேயே பற்களைக் கொண்ட பறவை 'ஆர்க்கியோப் டெரிக்ஸ்'.

*** சந்திரனில் வாயு மண்டலம் கிடையாது. அதனால் எந்த ஒலியும் சந்திரனில் கேட்காது.
*** குட்டி போடும் பாம்பு 'ரஸ்ஸல் வைப்பர்' (விரியன்).*** பப்பாளியில் ஆண்மரம் காய்க்காது.

*** இறைச்சியைவிட வேர்க்கடலையில் புரதம் அதிகம்.

*** இந்தியாவின் தட்பவெப்ப நிலை, குறைந்தபட்சம் -45 டிகிரி செல்சியஸ். அதிகபட்சம் 56 டிகிரி செல்சியஸ்.

*** பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லைக் கோடு "டுராண்ட்".

*** சட்டக்கல்லூரி நிறுவப்படும் முன்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயிற்றுவிக்கப்பட்டது.

---> 0O0 <---

15 comments:

வானம்பாடிகள் said...

பயனுள்ள தொகுப்பு வழமைபோல். நன்றி ரோஸ்விக்.

Sivaji Sankar said...

Good Job Roswick...

புலவன் புலிகேசி said...

நல்ல பல விடயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது...நன்றி ரோஸ்விக்

அ. நம்பி said...

//சட்டக்கல்லூரி நிறுவப்படும் முன்பு சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டம் பயிற்றுவிக்கப்பட்டது.//

சட்டம் மட்டும்தானா? அடிதடி எல்லாம் அப்போது பாடத்திட்டத்தில் இல்லையா?

ஸ்ரீராம். said...

//பெயரளவுக்குக் கூட ஆறு இல்லாத நாடு - லிபியா//

ஐயையோ...அப்போ அஞ்சு வந்ததும் நேரா ஏழுக்குப் போய்டுவாங்களா?

//சந்திரனில் வாயு மண்டலம் கிடையாது. அதனால் எந்த ஒளியும் சந்திரனில் கேட்காது//

ஒலி?

கிரி said...

//பெயரளவுக்குக் கூட ஆறு இல்லாத நாடு - லிபியா//

காவேரி பிரச்சனை மாதிரி எதுவும் வராதுன்னு சொல்லுங்க :-)

ஈ ரா said...

நல்ல தகவல்கள் ரோச்விக்... பாராட்டுக்கள்

பின்னோக்கி said...

தெரிந்த தகவல்கள் சில, தெரியாதவை பல. நன்றாக இருந்தது. உபயோகமான பதிவு.

பின்னோக்கி said...

தெரிந்த தகவல்கள் சில, தெரியாதவை பல. நன்றாக இருந்தது. உபயோகமான பதிவு.

ரோஸ்விக் said...

வானம்பாடிகள் - மிக்க நன்றி
Sivaji Sankar - மிக்க நன்றி
புலவன் புலிகேசி - மிக்க நன்றி

அ. நம்பி - மிக்க நன்றி. இது புது பாடத்திட்டம் தலைவா...வாங்க நம்மளும் போயி படிச்சிட்டு வருவோம் :-))


ஸ்ரீராம். - மிக்க நன்றி.என்ன நக்கலு....சரியான் ஆளுதான் நீங்க...
//ஐயையோ...அப்போ அஞ்சு வந்ததும் நேரா ஏழுக்குப் போய்டுவாங்களா?//

(நடிகை)அஞ்சு வந்ததும் படப்பிடிப்பை ஆரம்பிச்சிடுவாங்க... :-)

ஒளி - ஒலி மாத்திட்டேன் நண்பா. சுட்டியமைக்கு நன்றி...


கிரி - மிக்க நன்றி. நிறைய அரசியல் வியாதிகளுக்கு அரசியல் பண்ண இது ஒரு காரணமா இருக்காது....நீதித்துறை இது சம்பத்தப்பட்ட ஒரே மாதிரியான தீர்ப்பை திரும்ப திரும்ப பல தடவை சொல்ல அவசியம் இருக்காது....:-)ஈ ரா - மிக்க நன்றி

பின்னோக்கி - மிக்க நன்றி

க.பாலாசி said...

பிரமிப்பான தகவல்கள்...தெரியப்படுத்தியமைக்கு நன்றி....தொடருங்கள்....

ஆ.ஞானசேகரன் said...

நன்றிப்பா...

Nan said...

பகிர்தலுக்கு நன்றி. தங்களின் மின்னஞ்சல் கொஞ்சம் தாருங்களேன் :)

ரோஸ்விக் said...

க.பாலாசி - கண்டிப்பாக தொடருகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.


ஆ.ஞானசேகரன் - வாங்க நண்பா! வருகைக்கு நன்றி.


Nan - வருகைக்கு நன்றி. நீங்கள் என்னை thisaikaati@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம்.

J.S.ஞானசேகர் said...

உலகிலேயே நீளமான பெயருள்ள நாடும் லிபியாதான்.