Friday, May 14, 2010

விளம்பரங்கள் செய்யும் களேபரம்...!!!

விளம்பரங்கிறது ரொம்ப காலமா இருக்கிறது தான். ஆனா, இப்போ அதன் பரிணாமம் பிரமிக்கிற வகையில முன்னேறி இருக்கு. ஒரு விஷயத்தைக் கவனிச்சிங்களாண்ணே? முந்தியெல்லாம் விளம்பரம் வந்தா நம்மள்ல ரொம்பப் பேரு டிவி, ரேடியோவை அமத்திட்டு போய்கிட்டே இருப்போம். ஆனா, இப்போ அதுதான்ணே நல்லாயிருக்கு. ஒரு காலத்துல, நம்ம தூரதர்ஷன்-ல போடுற விளம்பரங்களைப் பார்த்தாலே ராவா சரக்கடிச்சா தொண்டை எப்படி எரியுமோ அது மாதிரி கடுப்பா இருக்கும். அதுனால, பல ஆளுங்க விளம்பர இடைவேளைகள்-ல பண்றதுக்காகவே சில பல வேலைகளை ஒதுக்கி வச்சிருப்பாய்ங்க...

இப்போ பாருங்க கிராபிக்ஸ் மற்றும் பல தொழில் நுட்பங்களாலையும், விளம்பரங்கள்ல வர்ற அழகு தேவதைகள், தேவன்கள் மற்று குழந்தைகளாலையும் விளம்பரங்கள் ரசிக்கிற மாதிரியா வெளிவருது. அட ஆமாண்ணே, விளம்பரங்களுக்கு ரசிகர்கள் இப்போ நிறையப் பேரு இருக்காங்க. என்னா ஒன்னு, சில ஆளுக அதுல வர்ற ஃபிகருக்கும், குழந்தைகளுக்கும் அல்லது கான்செப்ட்டுக்கும் ரசிகரா இருப்பாங்க. சில விளம்பரம் இருக்கும்... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுன்ணே. அவ்வளவு அருமையா எடுத்துருப்பாய்ங்க.

இன்னும் சில விளம்பரம் பார்த்தோம்னு வைங்க, அருமையா மியூசிக் போட்டு அசத்திருப்பாய்ங்க. ஊறுகாய் விளம்பரத்துல இருந்து உள்ளாடை விளம்பரம் வரை சூப்பரா தான்ணே இருக்குது. டிவி-ல வர்ற நிகழ்ச்சிகளை விட இந்த விளம்பரங்கள் தான் நல்லா இருக்குது. ஆனா என்னா, எல்லா விளம்பரத்துக்கும் சம்பந்தமே இல்லாட்டியும் ஒரு அழகான ஃபிகரை நடமாடவிட்டுருப்பாய்ங்க. அண்ணே, பெண்ணியம், பெண்களை அழகு பதுமைகளா மட்டுமே பயன்படுத்துறாங்க அப்புடின்னு பேசுறவங்களுக்கு இந்தப் பதிவுல இடம் இல்ல. நானே அந்த டவுசரை (எத்தனை நாளைக்குத் தான் முகமூடி-ன்னு எழுதுறது/) கழட்டி வச்சிட்டுத் தான் இதை எழுதுறேன். அவங்களை விளம்பரத்துல பயன்படுத்துறதை தவிர்க்கனும்னா சம்பந்தப்பட்ட அம்மணிகள் தான் முடிவு பண்ணனும்.

இந்த விளம்பரங்கள் மூலமா, பல ஜாலங்கள் பண்ணி நம்மை மயக்கி நம்மளையும் அந்தப் பொருளை பயன்படுத்த வைக்கிறது தான் அவங்களோட நோக்கம். ஆட்டா மாவுல இருந்து மூஞ்சில போடுற புட்டாமா(பவுடர்) வரைக்கும் இந்த வியாபார யுக்தியில வெற்றி பெற்றது தான். இவங்க பண்ணுற களேபரத்துல, அக்குள்ள ஆக்ஸ் ஸ்ப்ரே அடிச்சுகிட்டு எத்தனை பேருடா ம்ம்ம்-னு மயங்கி வாராளுகன்னு நம்ம இளசுக திரும்பி பாக்குதுங்க. சோப்பு, பேஸ்ட்டு, வீடு கழுவுற ஆசிட் இப்புடி எல்லா விளம்பரத்துலையும் காட்ற புழு நம்ம கண்ணு முன்னாடி அப்பப்ப வந்து பீதியை கிளப்பும். அந்த புழுவை இந்த சரக்குகளாலை தான் விரட்டி அடிக்க முடியும்னு நம்பி நம்மளும் வாங்குவோம்.


முக்கியமா இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்ம வீக் பாய்ண்ட்டை தெரிஞ்சுகிட்டு விளையாடுவாய்ங்க பாருங்க அது தாங்க டாப்பு. நம்ம ஊரு பொம்பளைப் புள்ளைகளும், விளம்பரத்துல காட்டுற க்ரீமுகளை அப்பிக்கிட்டு அப்புடியே மெதுவாத் தடவிப் பார்ப்பாங்க... உடனே ஒரு பறவையோட இறகு அவங்க மேனில சறுக்கி விளையாடுற சீன் ஞாபகம் வரும். அப்புறமா தண்ணில கழுவிப்பார்த்தா தான் உண்மைநிலை தெரியும். நம்ம பயபுள்ளைக 300 ரூபாய்க்கு ரேசர் செட்டு வாங்கி தாடியை சவரம் பண்ணிட்டு, ஒரு கண்ணு புருவத்தை உயர்த்தி கண்ணாடில அப்புடியும், இப்புடியுமா மூஞ்சியப் பாப்பாய்ங்க பாருங்க... அட அட அடா கண்ணாடிக்கே காதல் வந்துரும்ணே... 3 ரூபாய்க்கு வித்த பிளேடு-ல சவரம் பண்ணின மூஞ்சிக்கு இப்ப 300 ரூபாய்க்கு பிளேடு வாங்க வேண்டியது இருக்கேன்னு மனசு நினைக்குமா என்ன?

இன்னொன்னை கவனிச்சிங்களா? நவீன யுகத்துல எல்லா ஐட்டங்கள்-லையும் ஆம்பளைக்கு வேற, பொம்பளைக்கு வேறைய்ன்னு பிரிச்சு வச்சுடாய்ங்க. பழைய காலத்துல உடம்புக்கு, மூஞ்சிக்கு, தலைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து துவைக்கிற சவுக்காரக் கட்டிய போட்டுத் தேய்ச்சு குளிச்சிட்டு போய்கிட்டு இருந்தாய்ங்க. இப்ப பாருங்க, மூஞ்சிக்கு ஃபேஷ் வாஷ் லோஷன், உடம்புக்கு சோப்பு, சோப்பு போட்டு குளிச்சதுக்கு அப்புறம் பாடி லோஷன், தலைக்கு ஷாம்பு, அது முடிஞ்ச உடனே கண்டிஷனர்... சோப்பை உடம்புல போட்டு தேய்க்கிற பஞ்சு... அப்புடின்னு பாத் ரூமுக்குள்ளே அவங்க கடைச் சரக்கு எல்லாம் விளம்பரம் மூலமா கொண்டுவரப்படுது. இந்த மாதிரி ஐட்டங்களால இப்பவெல்லாம் பாத் ரூம்-ல நின்னு குளிக்கவே இடம் இல்லைண்ணே. இதுல வேற, சில அந்த துறையால் பரிந்துரைக்கப்பட்டது... அண்ணாத்துரையால் எடுத்துரைக்கப்பட்டதுன்னு நொனைநாட்டியம் வேற...


ஊருக்கு எங்கையாவது கிளம்பிப்போனா, முந்தியெல்லாம் சைடு ஜிப்புல இருந்த இந்த ஐட்டம் பூராம் இப்ப பெரிய ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆயிடுச்சுண்ணே... என்னாது ட்ரெஸ்ஸா??... போங்கண்ணே எந்த காலத்துல இருக்கீங்க... ஒரு ஜீன்ஸ், ஒரு டி-ஷர்ட்-ல தானே ஒரு மாசம் ஓடிகிட்டு இருக்கு. அதுக்கு சைடு ஜிப்பே ஜாஸ்தி-ண்ணே. விளம்பரத்துல வர்ற பொண்டாட்டி, குடும்பம், வீடு மாதிரி நமக்கும் அமையணும்னு கனவு வேற கண்டுக்கிட்டே இருப்போம். அவ்வளவு அழகா இருக்கும்ணே எல்லாம். இதைத் தான் அப்துல் கலாம் ஐயா சொல்லிருப்பாரோ...? இந்த மாதிரி விளம்பர யுக்திகளாலதான் நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்துச்சு. உஷாரா இருந்துக்கங்க அண்ணே... இந்தக் கலாச்சாரம் பல பேருடைய பர்சை பதம் பார்த்திருக்கு. பண சேமிப்பையெல்லாம் பஞ்சராக்கிருக்கு.

உள்ள விளம்பரம் பத்தாதுன்னு ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே. அவங்க படம் ஓடுதோ ஓடலையோ... இவனுக விளம்பரத்தை பாத்தீங்க உங்களுக்கு நிக்காம ஓடும். சூதானமா பொழைச்சுக்கங்க...




40 comments:

ப.கந்தசாமி said...

சில விளம்பரங்கள்லே என்ன சொல்ல வராங்கன்னே பிரியமாட்டேங்குதே, வயசுக்கோளாறோ? என்னுடைய வயசச்சொன்னேன்(76).

ILLUMINATI said...

அதிலயும் இந்த axe விளம்பரம் இருக்கே....அநாகரிகத்தின் உச்சக் கட்டம்...அட,இவனுங்க கொடுமைய விடுங்க.இப்ப சேனல் எல்லாம் ப்ரீயா வீட்டுக்கே பிட்டு படம் லைவ் டெலிகாஸ்ட் பன்றானுங்களே.என்ன கழுத,கேட்டா நியூஸ் அப்டிம்பானுங்க...நாம என்ன கேக்கணும்,பாக்கணும்னு இவனுங்க முடிவு பண்ணினா தான் சரியா இருக்குமாம்.நல்லா வருது வாயில...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

தேவையான பதிவு

அருமை

ஜெய்லானி said...

நடிக்க வருபவர்களை சொல்லனும்......பணம் குடுத்தால் என்ன.....வேனுமானாலும் செய்யலாமா ? என்ன .

நாடோடி said...

சில‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் ர‌சிக்கும் ப‌டியா எடுத்திருப்பாங்க‌.... இன்னும் சில‌ ஆபாச‌த்தின் உச்ச‌க‌ட்ட‌ம்..

ஈரோடு கதிர் said...

சூப்பர்...

அந்த கடைசி உள்குத்து... செம

மங்குனி அமைச்சர் said...

அதவிட காமடி என்னானா , டி.வீ விசன் கிளியரா தெரியும்ன்னு ஒரு விளம்பரம் வரும் , அதுதான் எப்படின்னு எனக்கு புரியவே இல்ல

Ahamed irshad said...

தெளிவான இடுகை... விளம்பரத்தின் வளர்ச்சி நம்மையெல்லாம் ஆச்சிரியப்படுத்துவது மட்டும் இல்லாமல் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது...

க.பாலாசி said...

//முக்கியமா இந்த விளம்பரங்கள் எல்லாம் நம்ம வீக் பாய்ண்ட்டை தெரிஞ்சுகிட்டு விளையாடுவாய்ங்க பாருங்க அது தாங்க டாப்பு.//

இதாங்க உண்மையே..... எப்டில்லாம் கண்டுபிடிக்கறாங்க பாருங்க..... இயல்பான எழுத்துநடையில அசத்தலான இடுகை.....

shortfilmindia.com said...

்நம்மூர்ல நிறைய பேரு விளம்பரம் உண்மைன்னு நம்புறவஙக..

கேபிள் சங்கர்

Unknown said...

முன்னெலாம் விளம்பரங்கள மட்டுமாவது பாப்பேன்,
இப்ப டிவி யா ஆள விட்ரு சாமியோ ..

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை. கடைசி பஞ்ச் கலக்கல் ரோஸ்விக்.

பிரபாகர் said...

சொல்லவே இல்லை! அருமை தம்பி! சரளமா சொல்லிட்டு கடையில கலக்கிட்டீங்க!

பிரபாகர்...

vasan said...

ஒரே ஆண்டில்,
ஐஸ்வ‌ர்யா உல‌க‌ அழ‌கி, இன்னும் ஒரு இந்திய‌ர்
யுனிவ‌ர்ச‌ல் அழ‌கி. சுமார் 15 ஆண்டுக‌ளுக்கு முன்பு நினைவிருக்கிறதா?
அத‌ற்குமுன்பு இந்திய‌ பொருள்க‌ள் தான் சின்ன‌ விள‌ம்ப‌ர‌மாய்(நிர்மா, லைபாய்,
விக்கோ ட‌ர்ம‌ரிக், லிரில், ல‌க்ஸ், டைனேரா சாலிடைர் டிவி போன்ற‌வை)
ம‌க்க‌ள்,ந‌ம்ம‌ ஊர்காரிங்க‌ உல‌க‌ அழ‌கி ஆயிட்டாங்க‌, ந‌ம்ம குழ‌ந்தைக‌ளும்
அப்ப‌டி ஆக‌ணும்னா அவுங்க‌ ப‌ய‌ன்ப‌டுத்துர‌, உடுத்துர‌த‌, அணியுர‌த‌ ம‌ட்டும்
வாங்க‌த் துவ‌ங்க‌, ஐஸ்வ‌ர்யா விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்ற எல்லாம் அதிக‌ விலைக்கு விற்ப‌னையான‌து.
அவுங்க‌ குடிக்கிற கோக், போடுற‌ ந‌கை, க‌டிகார‌ம் காருன்னு அந்நிய‌ பொருள்
ந‌ம்ம‌ நாட்டுப்பொருள்க‌ளை ம‌லிதான‌தாக‌ ஆக்கி, அவை உய‌ர்வென்ற‌ மாய‌ விள‌ம்ப‌ர‌ம்
செய்து, மார்கெட்டை வ‌ளைத்து, உள்நாட்டுப் பொருளை அழித்து த‌னித்து ஆட்சி செய்யு தொட‌ங்கிய‌து(கோக், பெப்ஸி போல‌). ந‌ம்ம‌ பொருளின் விற்ப‌னை இல்லாத‌தால்,
உற்ப‌த்தியாள‌ர், தொழிலாளி எல்லாம் க‌டையை
மூடிட்டு, அவ‌ங்க‌கிட்ட‌ ஸ்டாகிஸ்டு, கூலின்னு போக‌வேண்டிய‌துதானது.
(யூனிய‌ன், உரிமை,உற்ப‌த்தி, ஸ்டைர்க், உற்ப‌த்தி வ‌ள‌ம் எல்லாம் குளோஸ்)
பின்னோட்ட‌ம், ப‌திவாகிற‌ நிலை வ‌ந்த‌தால், நிலை கொள்கிறேன் இங்கே.

(இந்தியா இன்று வெளிநாட்டின‌ரின் முக்கிய‌ச்ச‌ந்தை. நோக்கியா, சோனி, சாம்ச‌ங்,
எல்ஜீ, ஹோண்டா, ஆடி, பென்ஸ், வால்வோ, ஹுண்டாய், மிட்சுபிசி, பிஎம்ட‌பியூ,
ஜானிவாக்க‌ர், ரெமிமார்டின், மால்ப்ரோ, பென்ஸ‌ன் ஹிட்சாஸ் இன்னும் .. இன்னும்..
இந்திய‌ அடையாள‌ங்க‌ள், ஆங்கிலேய‌ர் ஆட்சியில் இருந்த‌தை விட‌, அதிக‌மா ந‌ம்மால்
கேவ‌ல‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து ஆட்சியாள‌ர்க‌ளின் ஆசியோடு, அவ‌ர்க‌ளுக்கும‌ட்டும் ஆஸ்தியோடும்.)

வடுவூர் குமார் said...

என‌க்கு பிடித்த‌ விள‌ம்ப‌ர‌ம்
பரு- இர‌ண்டாவ‌து டிகாஷ‌ன் என்ப‌து உங்க‌ளுக்கு எப்ப‌வாது தெரிந்த‌தா?

ரோஸ்விக் said...

Dr.P.Kandaswamy - சில விளம்பரங்கள் அப்படித்தான்யா... பார்த்தாப் புரியாது... பார்க்கப் பார்க்கத் தான் புரியும். :-)
மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

ILLUMINATI - பார்த்து நண்பா "நல்லா வருது வாயில"-ங்கிறதுக்கும் ஒரு விளம்பரத்தைப் போட்டுற போறானுக. :-) நன்றி இலுமு.

ரோஸ்விக் said...

உலவு.காம் - நன்றி உலவு.

ரோஸ்விக் said...

ஜெய்லானி - எல்லாம் தெரிஞ்சுதான்... எல்லாம் தெரிய நடிக்கிறாங்க. பணம் முக்கியம்ல :-) நன்றி ஜெய்லானி.

ரோஸ்விக் said...

நாடோடி - நீங்க சொல்றது சரி தான் நண்பரே! நானும் சில விளம்பரங்களை ரசிச்சு பார்ப்பேன்.
மிக நன்றி. :-)

ரோஸ்விக் said...

ஈரோடு கதிர் - நன்றி கதிர். :-)

ரோஸ்விக் said...

மங்குனி அமைச்சர் - புரியக் கூடாதுன்னே சில விளம்பரம் போடுவாய்ங்க. ஒருவேளை இது அந்த ரகமோ மங்கு... :-)

ரோஸ்விக் said...

அஹமது இர்ஷாத் - நன்றி நண்பரே! இந்த வளர்ச்சி நல்லதுக்கா? கெட்டதுக்கா?? :-)

ரோஸ்விக் said...

க.பாலாசி - நன்றி பாலாசி. :-)

ரோஸ்விக் said...

shortfilmindia.com - ஆமாண்ணே! இல்லையினா சில பல கிரீம்கள் இன்னும் விற்பனை ஆகுமா??. நன்றி கேபிளார்.

ரோஸ்விக் said...

கே.ஆர்.பி.செந்தில் - ஓ! இந்த பதிவுல கடைசி பத்தில நான் சொன்ன டிவி-யை நீங்க ரொம்ப பார்த்து வெந்து போயி இருப்பீங்க போல தெரியுதே நண்பரே! சாகடிச்சுருவாய்ங்க நம்மள.
நன்றி நண்பா.

ரோஸ்விக் said...

செ.சரவணக்குமார் - நன்றி நண்பா! கடைசி பஞ்ச் - ;-)

ரோஸ்விக் said...

பிரபாகர் - அதுவா வருதுண்ணே! :-)
நன்றி.

ரோஸ்விக் said...

vasan - அருமையான பின்னூட்டம் சார். நம்ம மக்கள் இதையும் படிச்சு தெரிஞ்சுக்கிரனும். விபரமான உங்கள் பின்னூடத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
இந்த கோபம் பலருக்கும் மனதளவில் உண்டு சார்.

மிக மிக நன்றி. பின்னூட்டத்திலும் சிந்தனையை தூண்டியதற்கு.

ரோஸ்விக் said...

வடுவூர் குமார் - தெரியாது தலைவரே!
நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. நம்ம ரோஸ்விக்கா இது.. காமெடியெல்லாம் பண்றீர்..
கலக்கல்

Rettaival's Blog said...

ரோஸ்விக்கு...நாங்கெல்லாம் நெஸ்கஃபே விளம்பரத்துல வர்ற ஃபிகருக்காகவே காஃபி குடிச்சு பழகினவனுங்கய்யா...அப்புறம் டெய்ரிமில்க்...

என்ன பட்டாபட்டி...ரோஸ்விக்கு உண்மையிலேயே ரொம்ப நல்லவனோ!

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

பித்தனின் வாக்கு said...

Hai Rosewik how are you?. I came chennai and joined duty also. i am fine.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//புட்டாமா(பவுடர்)//

//சவுக்காரக் கட்டிய//

சின்ன வயசிலே கேள்விப்பட்ட வார்த்தைகள்.
ஞாபகமூடியதற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒரு டிவி நிறுவனம் கண்ட கண்ட கருமாந்திரத்தையும் கதையினு ஜோடிச்சு படம் எடுத்து இருபது நிமிஷத்து ஒரு தடவை விளம்பரப் படுத்துவாய்ங்க பாருங்க... ங்கொக்கா மக்கா... சாவடிச்சிருவாய்ங்கண்ணே.//

சரியாச் சொன்னீங்கண்ணே!
"அவனே என் மறுஅவனே" அப்படின்னு
ஒரு விளம்பரம் போடுறாய்ங்க் பாருங்க!
ஒவ்வொரு பத்து நிமிட இடைவேளியிலும்
ரெண்டு, ரெண்டு தடவைங்க!
முதல் சில தடவைகள் - விருப்பாயிருந்தது.
அப்புறம் சில தடவைகள் - சலிப்பாயிருந்தது.
அப்புறம் கொஞ்சம் தடவைகள்- அலுப்பாயிருந்தது.
அப்புறங்க - வெறுப்பாயிருக்குங்க.
அப்படியில்ல போட்டு அறுக்கிறானுங்க?
அட, இனிமே நான் பர்க்கவே மாட்டேனுங்க
அந்த 'தாஜ் 24 x 7' செய்திச் சேனலை!

ரோஸ்விக் said...

///பட்டாபட்டி.. said...
அட.. நம்ம ரோஸ்விக்கா இது.. காமெடியெல்லாம் பண்றீர்..
கலக்கல்
//

பட்டா அப்பப்ப அந்த காமெடியும் நடக்கும்.... :-)

ரோஸ்விக் said...

ரெட்டை நான் விளம்பர ரசிகன்... அதுல வர்ற ஆளுகளுக்கும் தான்... காஃபி, சாக்லேட்-லாம் அதைப் பாத்துக் கேட்டா... பேண்ட்-எய்ட் வாங்கி கொடுத்துட்டு... அதை யூஸ் பன்றமாதிரி மாதிரி பண்ணிவிட்டுருவாங்க... :-)))

ரோஸ்விக் said...

//Minmini said...
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..
//

எனக்கு கொடுத்த எம்.எல்.ஏ சீதையே வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்... :-)
(அவய்ங்க கேக்குற காசு கொடுக்கமுடியாம எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)

ரோஸ்விக் said...

நன்றி நிஜாமுதீன் அண்ணே! இவனுக விளம்பரத்தை போட்டு கடுப்பேத்தி விட்டுருவாய்ங்கண்ணே....